Tuesday 9 June 2020

தேர்வு கால உணவுகள் (Exam time food )

 தேர்வு கால உணவுகள் 

அம்மா உணவு 

                   தேர்விற்கு தயாராகும் மாணவச்செல்வங்கள் சுறுசுறுப்புடன் ஆரோக்கியத்துடன் இருக்க பலவிதமான சத்துக்கள் நிறைந்த உணவு தேவை. 
            உயிர் வாழ உணவு மிக முக்கியமான ஒன்று. 'ஆரோக்கியஉணவு என்றாலே நாம் அனைவரின் நினைவுக்கு வருவது வீட்டில் அம்மா சமைத்து கொடுக்கும் உணவு தான் '.                            தேர்வுக்கு தயாராகும் நேரத்தில் எந்தெந்த உணவை எந்தெந்த நேரத்தில் சாப்பிட வேண்டும். எந்தெந்த உணவை தவிர்ப்பது நல்லது.

உணவு உடல் நலம் 

                 "சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்" என்ற  பழமொழிக்கு ஏற்ப தேர்வு எழுத உடல் நலம் மிகவும் அவசியம்.
           இல்லையெனில் நன்றாக ஆண்டு  முழுவதும் படித்தும் தேர்வில் பங்கேற்க உடல்  தான்  ஒத்துழைக்குமா? . உடல் நலம் பாதிக்கப்பட்டால் மனநிலையில் மாற்றம் வருமே!
                                 தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் உடல் நலமும் மன நலமும் சிறப்பாக இருந்தால் தேர்வை சிரமம் இன்றி எதிர்கொள்ளலாம்.
             காலை உணவை தவிர்க்க கூடாது. இரவில் எட்டு மணிக்குள் இரவு உணவை சாப்பிட்டு வந்தால் உடல் நலத்திற்கு  நல்லது. இரவு--காலை உணவு இடைவேளை   12 மணி நேரம் இருக்கிறது எனவே காலை உணவை தவிர்க்காதே!
                காலையில் எழுந்ததும் காலை கடனை முடித்து சூடான சுவையான பால்குடிக்க வேண்டும். 
           காலை உணவாக ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம், புட்டு, கொழுக்கட்டை, மற்றும் பூரி கிழங்கு சாப்பிடலாம்.

பழங்கள்  

        உடல் சிறந்த முறையில் இயங்கவும், நோய்  தடுப்பாற்றல் மண்டலம் வலுப்படுத்தவும் உதவும்.
 
            பல்வேறு வகையான ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, கொய்யா, திராட்சை, சாத்துக்குடி, சப்போட்டா, நெல்லிக்காய், பேரிக்காய், பிளம்ஸ், மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் போன்ற பழங்கள் தினமும்  எடுத்துக் கொள்வது நல்லது. 
                        பருவ கால பழங்கள் தினமும் ஒன்றையாவது எடுத்து  கொள்வது நல்லது. பார்வை திறனை மேம்படுத்த வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்த பப்பாளி, மாம்பழம், எடுத்துக் கொள்ளவேண்டும். 


                           ஐஸ்கிரீம் செயற்கை குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். 

                 வெயில் காலத்தில் உடல் நீர் சமநிலை குறையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். தினசரி இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். 
                  இளநீர், பதநீர், மோர், பழச்சாறு மதியம் ஒரு மணிக்கு எடுத்துக் கொள்ளவேண்டும். நீர் சதவீதம் அதிகம் உள்ள தர்பூசணி, ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி பழச்சாறு அல்லது பழமாகக்கூட சாப்பிடலாம். 

பால்குடிக்க வேண்டும்

                                  தேர்வு எழுதும் சமயத்தில் மாணவர்களுக்கு கைவலி கழுத்து வலி, முதுகு வலி ஏற்படுவது வழக்கம். தொடர்ச்சியாக தேர்வு அறையில் முன்று மணி நேரம் அமர்ந்து தேர்வு எழுதும் போதுபதற்றம், உடல் சோர்வுஏற்படுகிறது. 

                       சில சமயங்களில் ஒரு சில மாணவர்களுக்கு கையில் நடுக்கம் வரும். இதை தவிர்க்க தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும்  200மி . லிட்டர் பாலை பருக வேண்டும். பால் அனைத்து சத்துக்கள் நிறைந்த முழு புரதம். கொழுப்புக் குறைக்கப்பட்ட பாலையும் குடிக்கலாம். 


                பர்கர், பிசா போன்ற துரித உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. உடனடி உணவாக உள்ள நூடுல்ஸ், பாஸ்தா, சூப் பொடி போன்றவை நீரில் கரைத்து அல்லது கலந்து குறைந்த அளவில் சமைத்து தயார் செய்யப்படும்.

                    இந்த உடனடியாக சமைக்கும் உணவை தவிர்க்க வேண்டும். தெருக்களில்   ஓரக்கடைகளில்  சுகாதார மற்ற முறையில் தயாரிக்கப்பட்ட துரித உணவை   உண்ணாமல் இருக்க வேண்டும். 

            அதற்கு பதிலாக வீட்டில் தயாரிக்கும் முறுக்கு, சீடை, அதிரசம், பணியாரம், கடலைப்பருப்பு மிட்டாய், எள் மிட்டாய், பொரிஉருண்டை, அவல் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.



             
 தேர்வுக்கு படிக்கும் நேரத்தில் kurkure Lays கொறிப்பது சரியா? பாக்கெட்டில் அடைக்க பட்ட உணவில் நிறமும் மணமும் பெற செயற்கை வேதிப் பொருட்கள் கலந்து உள்ளது.                        

                       இந்த உணவு வகைகளை அதிகம் உண்ணக்கூடாது. தரமான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து  உண்ணலாம் . 



2 comments:

Super useful ideas thank you reading