Sunday 26 July 2020

EIA Draft 2020 / August 11

   Environmental impact Assessment Draft 2020

EIA ACT 



        EIA  என்பதன் விரிவாக்கம் Environmental impact assessment.  1986 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் போபல் நகரில் விஷ வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால் பலர் தூங்கிய நிலையிலே இறந்து விட்டார்கள். இது போன்ற தவறு இனிமேல் நடக்கக் கூடாது என்று மத்திய அரசு  1986  ஆம் ஆண்டு EIA Act  கொண்டு வந்ததது.
       இந்தச் சட்டம் தொழிற்சாலைத் தொடக்கம், இயற்கை சூழல் பாதுகாப்பு. இப்படி பல அம்சங்களைக் கொண்டுள்ளது. தற்சமயம் இந்திய அரசாங்கம் EIA Draft 2020 அறிவித்துள்ளது. 

EIA Act அம்சங்கள் 

     ஒரு கம்பெனி தொடங்க தேவையான அனுமதியை அளிக்க உறுதிச் செய்யும். கம்பெனி தொடங்குவதால் எவ்வளவு மண் சுரண்டப்படும்? மலைப்பகுதி எவ்வளவு குடையப்படும்? எத்தனை மரங்கள் வெட்டப்படும்? எவ்விதமான பயன்கள் கிடைக்கும் என்று ஆராய்ந்து அனுமதி அளிப்பது EIA  சட்டமாகும்.  
           1986  ஆம் ஆண்டு முதல் இன்றுவரை நடைமுறையில் உள்ளது. 

அமெரிக்கா நிறுவனம் கருத்துக் கணிப்பு 

       அமெரிக்காவில் உள்ள கிளைமட்சென்டர் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு இந்தியா பற்றிய கருத்துக் கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
                  அதில்  2050 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் பாதிப்பகுதி நீரில் மூழ்கிப்பரிதாபம் உள்ளது என்று கூறியுள்ளது. 
       இதற்கு முக்கிய காரணம் வீட்டில் பயன்படுத்தும் பிரிட்ஜ், ஏசி, கார், தொழிற்சாலை போன்றவைகளிலிருந்து வெளியேறும்  நச்சு வாயுக்களால் ஆர்டிக் பனிப்பாறைகள் உருகி கடலின் நீர் மட்டம் உயரும் அபாயம் உள்ளது என்றும் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

பொருளாதரத்தை மேம்படுத்துதல் 

       இந்த ஆண்டு (2020) தொடக்கம் முதலே கொரோனாவின் கோரத்தண்டவத்தால் இந்தியா பொருளாதரம் சரிவைக் கண்டது. உலக நாடுகளின் பொருளாதரமும் கூடப்பத்து ஆண்டுகள் பின்னோக்கி சரிவைக் கண்டது.
      இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஒவ்வொரு நாடும் தன்னுடைய நாட்டில் வேலை வாய்ப்புகளைப் பெருக்குதல், பொருளாதரத்தை மேம்படுத்துவது குறித்து பல சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்தியாவும் EIA Act சில திருத்தங்களைக் கொண்டு (EIA Draft 2020) வருவதற்கு நம்மிடம் கருத்துக்கள் கேட்டு உள்ளது. 

சீனா நாட்டில் தொழிற்சாலை 

     சீனா நாட்டில் தொழிற்சாலைச் தொடங்குவது மிக எளிது. தொழிற்சாலை தொடங்குவது தொடர்பானச் சட்டம் முதலாளிகளை ஈர்க்கும் வகையில் உள்ளது. எனவே தான் உலகில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகள் சீனாவில் தொடங்க முதலாளிகள் முன் வந்தனர். 
     அதுபோல இந்தியா அரசாங்கம் தொழிற்சாலை தொடங்க தேவையான EIA Draft 2020 திருத்தம்  அறிவிக்க உள்ளது. 

EIA Draft 2020 

      Environmental Impact Assessment சட்டத்தில் தொழிற்சாலை தொடங்குவது குறித்த தகவல்கள் அடங்கும். தொழிற்சாலை கட்டினால் எவ்வளவு பரப்பு பயன்படுத்த வேண்டும்? கனிம வளங்களை எவ்வளவு எடுக்க வேண்டும். ஊரில் உள்ள மக்களுக்குப் பிரச்சனை வருமா? இந்தத்தொழிற்சாலை கட்டினால் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்? தொழிற்சாலை கழிவுகளை அகற்றும் முறை குறித்து விளக்கம். எத்தனை மரங்கள் வெட்டப்படும்? எத்தனை ஏக்கர் விவசாய நிலங்கள் தொழிற்சாலை கட்டப் பயன் படுத்தப்படுகிறது?
       தொழிற்சாலை அமைக்க அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் மூப்பது நாட்களில் கருத்துக்கள் தெரிவிக்கலாம். இது போன்ற பல அம்சங்கள் கொண்டுள்ளது. இது கடல் அளவுக்குச்செய்திகள் உள்ளது. இது EIA Act 1986 ஆம் ஆண்டுச்சட்டம். 
       ஆனால் புதிய சட்டம் EIA Draft 2020 திருத்தம் செய்யக்கருத்துக்கள் நம்மிடம் மத்திய அரசு கேட்டுள்ளது. 
      EIA draft 2020 தொழிற்சாலை தொடங்க முதலாளிகள் இருபது நாள்களில் அந்தப் பகுதியில் உள்ள மக்களிடம் கருத்து கேட்டுத் தொடங்கலாம். 
      தொழிற்சாலைப் பற்றி கருத்து சொல்ல நூறு கிலோமீட்டர் பகுதியில் உள்ளவர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. 
      தேசிய பாதுகாப்பு தொழிற்சாலை தொடர்பாக கருத்துக்கள் கேள்வி கேட்க முடியாது. 
     தொழிற்சாலை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வரும் இயற்கை பாதுகாப்பு சான்றிதழ் இனி  வருடம் ஒரு முறை சமர்ப்பித்தால் போதும். 
      இது குறித்து கருத்துக்கள் தெரிவிக்க இந்திய அரசு ஆகஸ்ட் மாதம்  11 தேதி வரை காலம் நிர்ணயம் செய்துள்ளது. உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். 
     இந்தச் செய்தியை அனைவருக்கும் பகிருங்கள். மேலே உள்ள வீடியோவில் mail address உள்ளது. 

2 comments:

Super useful ideas thank you reading