Monday 6 July 2020

Goal setting

         Goal setting 

Goal setting அவசியம் 

            Goal setting எப்படிச்செய்ய வேண்டும். Goal என்றால் என்னவென்று முதலில் தெரிந்து கொண்டால் தான் Goal setting செய்ய முடியும். ஆண்களுக்கு New bike வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள்.பெண்கள் நிறைய நகைகள் எடுக்க வேண்டும் நினைப்பார்கள். குடும்பத்தலைவருக்கு அழகான வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்கள் நினைத்தது நடக்க Goal setting அவசியம். Goal setting செய்வது எப்படி என்று இந்தப்பதிவில் படிக்கலாம்.
                         
           

     Goal 

       Goal என்றால் தமிழில் இலக்கு என்று பொருள். இலக்கு என்பது நம் வாழ்க்கை எதையாவது ஒன்றைச் சாதிப்பது. 
                    மாணவர் பருவத்தில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற இலக்கை எட்டி அடைவது. 

போட்டித்தேர்வின் goal setting 

          TNPSC, TRB, TET, UPSC போன்ற போட்டித்தேர்வில் இந்த ஆண்டின் இறுதியில் வெற்றிப்பெற்று வேலைக்குச்செல்வேனென்று GOAL Setting செய்வது. 
             தமிழ் நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலைக்காவலர் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் உடல் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றும் Police  பணியில் சேர்வதற்கான Goal setting செய்வது போன்றவை தான் Goal. 
      இலக்கை (Goal)அடைந்தால் மனதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வாழ்வில் ஒரு சாதனைப்படைத்தது போல் நம் மனம் மகிழும். சரியானப்பாதையில் சென்றால் நீங்கள் அடைய வேண்டிய இடத்தை அடைய முடியும்.

Goal setting செய்வது எப்படி 

                    மனதில் தோன்றும் ஆசைகள் இலக்குகள் ஆகாது. Goal setting செய்வது எப்படி? Goal setting சரியாகச் செய்துவிட்டால் முழுமையாக வெற்றி பெற்று விடலாம்.  
             
                              மற்றவர்களைத்திருப்திப்படுத்த வேண்டும் என்றும்,அவர் சொல்லினார் இவர் சொல்லினார் என்றும், மற்றவர்கள் செய்கிறார்கள் நாமும் செய்ய வேண்டும் என்றும், உலகத்திற்கு proof செய்ய வேண்டும் என்றும் Goal setting செய்தால் வாழ்க்கையில் வரும் கஷ்டங்கள் அந்த Goal யை விட்டு வெளியே தள்ளிவிடும். 

BIG GOAL SETTING 

          Goal setting செய்யும்போது big goal setting இருக்க வேண்டும். 30,00,000 லட்சத்தில் இரண்டு மாடி வீடு கட்டுவேன். 20,00,000 லட்சத்துக்குக்கார் வாங்க வேண்டும்.    
     ஐந்து ஆண்டுகளில் தொழிலில் பத்து லட்சம் ரூபாய் நிதி செய்து தொழிலை மேம்படுத்துவது, நம்மிடம் இருக்கும் கடனை ஓராண்டில் திருப்பி செலுத்துவது, பள்ளி மாணவர்கள் எனில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 க்கு 400 மேல் மதிப்பெண் பெறுதல், ஆசிரியர் எனில் இந்த ஆறு மாத காலத்தில் தங்களிடம் பயிலும் மாணவர்கள் நூறு சதவீதம் வாசிப்புத்திறன் மேம்படுத்த வேண்டும் என்று Goal setting செய்யலாம்.

      உங்கள் goal setting உங்களை motivation செய்து உயிர்ப்பிக்க வேண்டும். வெறியோடு வேலை செய்ய உங்களை எது தூண்டுகிறதோ அது தான் சரியான Goal setting. நாம் வாங்கிய கடனை நாம்தான் திருப்பிச்செலுத்த வேண்டும். நாம் அடைய வேண்டிய இலக்கை எட்ட நாம்தான் Goal setting செய்ய வேண்டும். யாரும் நம் இலக்கை அடைய goal setting செய்து தரமாட்டார்கள்

Smart Goal setting:

            உங்களுக்கு அதிகம் பிடிச்ச விஷயம் என்ன? உங்களுக்குச்சந்தோக்ஷம் தரக்கூடிய விஷயங்கள் என்னவென்று முடிவு செய்து கொள்ளுங்கள். அந்தச்சந்தோக்ஷத்துடன் அந்த இலக்கை அடைவது எப்படி என்று யோசிங்கள். 
உதரணமாக உங்களுக்குக்கிரிக்கெட்  விளையாட்டுப்பிடிக்கும் எனில் அதில் விளையாட்டு முறைகள் TV யில் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள். நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுங்கள். டெஸ்ட் மேட்ச் வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். 
         சிலருக்கு நாடகம் பார்க்க விரும்பினால் அதைக் கொண்டேGoal setting செய்ய வேண்டும். நாடகத்தின் கதை எழுதலாம். வசனம் எழுதலாம். இயக்குநர் எப்படி ஆவது என்று இணையதளத்தில் சென்று பார்க்கலாம். Photo graphics, vedio editing போன்றவை செய்யலாம். நடிக்கும் பயிற்சி எடுத்துக் கொண்டு நடிகர் ஆகலாம். இப்படி நமக்குப் பிடித்த விஷயத்தைக் கொண்டு Goal setting செய்தால் அந்த Goal மிக விரைவில் அடையலாம்.

      Smart goal setting என்பது மிக விரைவாக இலக்கை அடைய உதவும் காரணிகள். 
    S- specific 
     M- Measurable 
       A - Attainable 
        R - Relevant 
          T- Time bound 

Specific - குறிப்பிட்ட 

         Goal setting specific ஆக எதைச்செய்ய வேண்டும் என முடிவு செய்யுங்கள். உலகில் ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். அவரவருக்கு ஆயிரம் இலக்குகள் இருக்கும். உங்களுக்கு என்னஇலக்கு என்பதைக் குறிப்பிட்டு Goal setting செய்ய வேண்டும். 

Measurable -  அளவிடத்தக்க

          நாம் செய்யும் Goal setting இலக்கை அளவிடத்தக்கதாக இருக்க வேண்டும். அந்த இலக்கு எவ்வளவு முடிந்திருக்கிறது. இலக்கு எவ்வளவு முடிக்க வேண்டும் என்று அளவிடத்தக்க இருத்தல் வேண்டும். 
உதாரணமாக இந்த மாதத்தில் நம் தொழில் கிடைத்த வருவாய் இருபதாயிரம் ரூபாய். இதே போல பத்து மாதங்களில் இரண்டு லட்சம் ரூபாய் சேமித்து தொழிலை மேம்படுத்த வேண்டும் என்று அளவிடத்தக்கதாக இருந்தால் வேண்டும். 
        பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் இந்த வாரத்தில் செய்யுள் பகுதியில் மொழிவாழ்த்துப் படித்து முடித்தேன். அடுத்த மாதத்தில் திருக்குறளில் வினா விடை படித்துவிட வேண்டுமென இலக்கு அளவிடத்தக்கதாக Goal setting இருக்க வேண்டும்.

Attainable அடையக்கூடியது

           Goal setting அடையக்கூடியதாகவும், சாதிக்க வல்லதாகவும் இருக்க வேண்டும். உதாரணமாகச்சூரியனில் இறங்கி ஆராய்ச்சி செய்வது போன்றவை அடையக்கூடிய Goal setting அல்ல. நான் ஒரு மாதத்தில் உயரமாக வளர்ந்து விடுவேன் போன்ற Goal setting அடையக்கூடியதல்ல, பயனற்றது.இது  அர்த்தமற்ற goal setting ஆகும்.எது உங்களால்
முடியும். நடைமுறை சாத்தியமான Goal setting செய்வது மிகச்சிறந்தது.

 Relevant முடித்துக்காட்டக்கூடியது

         Goal setting முடித்துக்காட்டக்கூடியதாக இருக்க வேண்டும். நான் இரண்டு மாதத்தில் இருபது லட்சத்தில் கார்EML LOAN இல்லாமல் வாங்கிவிடுவேன். இது போன்ற Goal setting செய்ய கூடாது. நாம் வாங்கும் இருபதாயிரம் ஊதியத்தில்  குடும்பச்செலவு போகக்கொஞ்சம் கொஞ்சமாகச் சேமித்து ஐந்தாண்டு அல்லது பத்தாண்டுகளில் கார் வாங்க முடியும்.
          Spoken English course கற்றுக் கொண்டப்பின் ஆங்கிலத்தில் பேசும்திறன் வளரும். இதன் முடிவைதாமே உணரலாம். பள்ளி இறுதி ஆண்டுத்தேர்வில் இத்தனை மதிப்பெண் பெற வேண்டும் என்று Goal setting செய்து அந்த மதிப்பெண் பெற்று விடலாம். இது போன்ற goal setting முடித்துக்காட்டக் கூடியது.

Time bound காலம் வரையறைக்குள்

       Goal setting காலவரையறைக்குள் இருக்க வேண்டும். அதாவது இத்தனை நாள்களில் அல்லது இத்தனை வாரங்களில் அல்லது இத்தனை மாதங்களில் இந்த இலக்கை அடைய goal setting செய்ய வேண்டும். உதாரணமாகப் பள்ளி மாணவர்கள் மேமாதம் முப்பது நாள்களில் computer course இல் painting, power point, slide show போன்ற goal setting செய்து இலக்கை அடையலாம். Financial Goals setting செய்யும்போது பத்தாண்டுகளில் தொழிலில் மேம்படுத்துவது போன்றவை காலவரையறைக்குள் இருக்கும்.

Three type Goal setting 

         "சிந்தனையில் தெளிவிருந்தால் திறந்த மனம் இருக்கும்;திறந்த மனமிருந்தால் இலக்குகள் நிர்ணயிக்கும்;முழு முயற்சி இருந்தால் வெற்றிகள் கண்டிப்பாக்கிடைக்கும்; வெற்றிக்கிடைத்தால் உங்கள் வாழ்க்கை உயரும். எத்தனை வகையான இலக்குகளையும் மூன்று வகையான இலக்காகப் பிரித்து Goal setting செய்துவிடலாம்.

 Short term goal setting          

         போட்டித்தேர்வில் இத்தாண்டில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை அடைய goal setting தினமும் இரண்டு மணி நேரம்படிப்பது,  நல்ல சத்தான உணவுகள் சாப்பிடுவது, உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்வது சிறு தேர்வுகளின் வினாக்களுக்குத்தாமே விடை காண முயற்சி செய்வது போன்ற சிறு இலக்குகளை அடைய Short term goal setting உதவும். ஒரு மாதம் முதல் மூன்று மாதங்களுக்கு Short goal setting செய்து கொள்வது நல்லது.

Mid term goal setting

       Mid term goal setting மூன்று மாதங்கள் முதல் மூன்று வருடம் வரை திட்டமிட்டுக் கொள்ளலாம். இதில் காலாண்டுத்தேர்வு, அரையாண்டுத்தேர்வில் பங்கேற்று நினைத்த மதிப்பெண் பெறுதல். வீடு கட்டுவதற்கு தேவையான பணத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியைச்சேமித்திருத்தல். கார் வாங்கத் தேவையான பணம், எப்படி வாங்குவது EMIயா ரொக்கபணமா என முடிவு செய்தல். இந்த mid term goal setting சரியான இலக்கை நோக்கிதான் செல்கிறோமா? என்று நமக்குநாமே சோதித்தறிய உதவும்.

Long term goal setting:

        வாழ்க்கை உச்சியை அடைய long term goal setting உதவும். Long term goal setting மூன்று ஆண்டுகள் முதல் இருபது ஆண்டுகள் வரை நிர்ணயம் செய்ய வேண்டும்.நான் படித்து மருத்துவர் ஆவது, ஐந்து ஆண்டுகளில் வீடு வாங்குவது, பத்தாண்டுகளில் தொழிலதிபர் ஆவது போன்றவை long term goal setting ஆகும்.

  Goal setting தேவைகள்:

             ஒவ்வொரு மனிதனின் இலக்கு மாறுகிறது. அதுபோல் அவர்களின் goal setting மாறும். ஆயிரம் இலக்குகள்  இருப்பினும் இன்றைய மனிதனின் முக்கிய இலக்கு நல்ல வசதியான வீடு, மகன்கள் /மகள்களுக்கு நல்ல கல்வி தருவது, அவர்களைப் படிக்க வைத்து மருத்துவராகவோ பொறியியல் வல்லுநராகவோ, ஆசிரியராகவோ, செவிலியராகவோ அரசு வேலை கிடைக்க வேண்டியத்தகுதியை வளர்த்து அரசு வேலையில் அமரச்செய்தல்.
இதை அடைந்தால் அடுத்து கார் வாங்கி செட்டிலாகி விட வேண்டும் என்று Goal setting இருக்கும்.

                             Goal setting செய்தால்  வாழ்வில் முன்னேற்றம் இருக்கும். உங்கள் personal value improve செய்யனும். Goal setting உங்கள் தொலைநோக்குபபார்வையாக இருக்கண்டும். 

Goal setting செய்தபின் 

         Goal setting செய்துவிட்டு பின்பு யார் சொன்னாலும் கேட்காமல் இலக்கை நோக்கி கடிவாளம் கட்டியக்குதிரை போல் முன்னேறுங்கள். Goal setting செய்தபின் பணம் இருக்காது, சாப்பாடு போட ஆள் இல்லாதது போல் தோன்றும். சாப்பிட்டயா? எனக் கேட்க ஆள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. கைதட்ட ஆள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுங்கள்.

மார்ட்டின் லூதர் Goal setting

      மார்ட்டின் லூதர் சொன்ன மகத்தான கருத்துக்கள் இதோ உங்கள் பார்வைக்கு "உங்களால் பறக்க முடியவில்லையென்றால் ஓடுங்கள், ஓட முடியவில்லையென்றால் நடந்து வாருங்கள். நடக்க இயலாது எனில் தவழ்ந்து வாங்க, எப்படியாவது இலக்கை நோக்கி goal setting செய்து முன்னேறுங்கள்.
       இன்னும் இதைவிட பல அரிய தகவல்கள் இதைத் தொட்டுப்படிக்கலாம். Read more
        goal settting செய்து இலக்கை அடைய வாழ்த்துக்கள். 

No comments:

Post a Comment

Super useful ideas thank you reading