Friday 24 July 2020

தேர்வுக்குப் படித்தல் / reading for the exam

தேர்வுக்குப் படித்தல் / Reading for the exam 

தேர்வுக்குப்படித்தலின் முக்கியத்துவம் 

     மாணவச் செல்வங்களே நீங்கள் இருக்கும் பருவம் விடலைப் பருவம். இந்தப் பருவத்தில் தேர்வு என்பது ஒரு சுகமான அனுபவம் கிடையாது. தேர்வு என்பது உங்கள் மனதில் பெரும் சுமையாக இருக்கும்.
             ஆனால் ஒன்பதாம் வகுப்பு தொடங்கி பனிரெண்டாம் வகுப்புவரை நீங்கள் கடினமாக உழைத்து ஒழுங்காகப் படித்தால் மட்டுமே உங்கள் வாழ்க்கை என்றென்றும் பிரகாசமாக இருக்கும்.
அப்படி உங்கள் வாழ்க்கை உயர அந்தத் தேர்வுக்குப் படித்தல் எப்படிஎன தெரிந்து கொள்வது முக்கியம்.

படிக்க நல்ல நேரம் 

         படித்தப்பாடங்கள் மனதில் பதியும்படி படிக்க நல்ல நேரம் காலையில் எழுந்ததும் நான்கு மணி முதல் ஆறு மணி வரைப் படிக்கலாம். படிக்கும்போது மற்றவைகளைப் பற்றி நினைக்கக் கூடாது. காலையில் படிக்கும்போது பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று அவசர அவசரமாகப்படித்தால் மனதில் பதியாது.
         காலையில் படிக்கும்போது பள்ளிக்குச் செல்ல வேண்டுமென்ற டென்ஷன் இருக்கும்.  அதைவிடப் படிக்க நல்ல நேரம் என்று இரவு நேரத்தை மருத்துவர்கள்  பரிந்துரைச் செய்கிறார்கள். ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய பாடங்களை அரை வயிறு சாப்பிட பின் இரவில் படியுங்கள். இரவில் படிப்பது தான் சிறந்தது. 
    இரவில் பாடங்களைப் படிப்பதே நெடுநாள் ஞாபகம் வைத்துக் கொள்ள உதவுகிறது என்பது அறிவியல்பூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளது என்று மனநல மருத்துவர் கூறினார். 

படித்தல் கால அட்டவணை 

           ஒரு கால அட்டவணைப் போட்டுக் கொண்டு படியுங்கள். உங்கள் கால அட்டவணையில் விளையாட்டுக்கும், தொலைக்காட்சி பார்ப்பதற்கும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளலாம்.
              ஆனால் படிப்புக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் நிச்சயம் படிக்க வேண்டும். டாக்டராக வேண்டும்,  இன்ஜினியராக வேண்டும் என்று படிப்பதை விட 'சிறந்த மனிதனாக' வேண்டும் என்ற எண்ணத்தில் படியுங்கள்.
            படிக்கும் காலத்தில் கடினமான பாடப்பகுதியை அரை மணி நேரம் கூடுதலாகப் படிக்கும் நேரத்தை ஒதுக்கி விட வேண்டும். திரும்பத்திரும்பப் படிக்கும்போது உங்கள் மனதில் ஆழமாகப் பதியும். 
         தினமும் படிக்கும் நேரம் இரண்டு மணி நேரம் என ஒதுக்கிப்படித்தால் அது சனி, ஞாயிறு உட்பட எல்லாம் நாள்களுக்கும் படித்தல் கால அட்டவணையைத்தயார் செய்து கொள்ள வேண்டும்.

பெற்றோர்களின் வழிகாட்டல்

                மாணவர்கள் ஒழுங்காகப் படிக்கப் பெற்றவர்கள் துணை புரிய வேண்டும். எப்போதும் புத்தகத்தைப் 'படி படி' என்று பெற்றவர்கள் சொல்லிக்கொண்டு இருக்காமல் நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கக் குழந்தைகளை அனுமதிக்க வேண்டும். 
         தினமும் குழந்தைகள் படிப்பதை கவனிக்க வேண்டும். அவர்கள் படிக்கும்போது வாசிக்கச் சொல்லுதல். தேர்வு நேரத்தில் எழுதிப் பார்க்கச் சொல்லுதல். பெற்றோர்கள் குழந்தைகள் படிக்கும்போது அவர்களை  உற்சாகப்படுத்த வேண்டும். 

தினந்தோறும் படித்தல்

             நிறைய மதிப்பெண்கள் வாங்க வேண்டுமென்றால் வகுப்பில் ஆசிரியர் நடத்தும் படத்தைக் கவனமாகக் கேளுங்கள். வீட்டில் தினமும் பாடங்களைப் படியுங்கள். தேர்வைச் சிறந்த முறையில் எழுதலாமே. 
                       அதிக மார்க் பெற டியூஷன் தேவையேயில்லை. தேர்வுச்சிறப்பாக எழுத மொழித்திறமை உதவுகிறது. ஆகவே தமிழையும், ஆங்கிலத்தையும் நன்கு படியுங்கள். 
       படித்தல் கால அட்டவணைப்படி தினந்தோறும் படித்தல் தேர்வில் வெற்றி பெறலாம். 

அதிக மதிப்பெண்கள் பெற தேர்வில் பின்பற்ற வேண்டியவை 

          தேர்வு அறையில் தேர்வு நேரத்திற்கு முன்பாகச்சென்று விடுங்கள். முதலில் தெரிந்த வினாக்களுக்கு விடை எழுதுங்கள். விடைத்தாளில் அடித்தல் திருத்தல், கிறுக்குவதும் போன்றவை மிகத்தவறான செயல்களாகும். 
       தேர்வு எழுதுவதற்கு முன்பு நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது கையெழுத்து நன்றாகவும் அழகாகவும் இருக்கும்படி எழுத வேண்டும். விடை எழுதும்போது ஒரு பாயிண்ட் மறந்து விட்டால் பரவாயில்லை. அதை விட்டு விட்டு அடுத்த பாயிண்டுக்குச் செல்லுங்கள். ஒரு போதும் வினாவிற்கு சம்மந்தமில்லாத 'ஒரு பாயிண்டை' அங்கே எழுதி விடாதீர்கள். கேள்விக்குப்பதில் தெரியாவிட்டால் அக்கேள்வியை விட்டு விடுங்கள்.

தேர்வுமுடிவும் பிறர்மீது குறையும் 

       மாணவச் செல்வங்களே தேர்வில் அதிக மதிப்பெண் பெறாவிட்டால் அதற்குக் காரணம் நீங்கள் சரியாகப் படிக்காமல் தேர்வுக்குச் சென்றது தான். இந்த உண்மையை உணர்ந்து கொண்டு அடுத்த முறையாவது ஒழுங்காகப் படியுங்கள். அதை விட்டு விட்டு ஆசிரியர் சரியாகத்திருத்தவில்லை. ஒரு பாயிண்டில் மார்க் போய்விட்டது என்றெல்லாம் சாக்குப் போக்குகளைச் சொல்லாதீர்கள். 

தேர்வுக்குப்படித்தல் 


      தேர்வுக்குப் பாடங்களைப் படிக்கும்போது முழுவதும் முதலில் வாசித்தப் பின்பு சிறுசிறுப் பகுதிகளாக அந்தப் பாடத்தைப் பிரித்துப்படிக்க வேண்டும். பாடத்தைப் பிரித்துச் சிறு குறிப்புகள் எழுதி வைக்க வேண்டும். சிறு குறிப்புகளை மன வரைபடம்போல் தயாரித்துக் கொள்ள வேண்டும். இந்த மாதிரி செய்தால் சிறப்பாக மனதில் நினைவில் நிறுத்திக் கொள்ளலாம்.
இம்முறையில் படித்தால் படித்தப்பாடங்களை எப்போது வேண்டுமானாலும் நினைவில் கொண்டுவரலாம்.
       தேர்வு தயார் செய்யும்போது சூத்திரங்கள், இலக்கணம், grammar போன்றவற்றை பாடக்குறிப்பேட்டில் குறிப்பெடுத்து படிக்க வேண்டும். 

நண்பர்களைப் பின்பற்ற வேண்டாம். 

       ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட திறன்கள் உண்டு. போட்டித்தேர்வனாலும் சரி, கல்லூரி தேர்வனாலும் சரி, பள்ளித் தேர்வனாலும் சரி சகமாணவர்கள் படித்தலில் பின்பற்றும் முறையைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டாம். 
       அவர் படித்தல் திறன் வேறு உங்கள் படித்தல் திறன் வேறு. எனவே அவர் படிக்கும் முறையைப் பின்பற்ற வேண்டாம். 
     சிலருக்கு மனப்பாடம் செய்யும் கால அளவு குறைவாக இருக்கும். அவர் எளிதில் மனப்பாடம் செய்து விடுவார். மாணவ விடுதிகளில் சில நேரங்களில் இரவில் மாணவர்கள் தனியாகப் படித்து விட்டுப் பகலில் மற்றவர்களைப் படிக்க விடாமல் செய்வதுண்டு. 

மதிப்பெண் நிர்ணயத்துப் படித்தல் 

            நான் அரையாண்டுத் தேர்வில் ஆறுபதுசதவீதம் தான் வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் படிக்கக் கூடாது. அதை நினைத்துக் கொண்டு பாதி பாடங்களைப் படிக்காமல் ஒதுக்கி வைத்து விடுவது தவறு. எப்பொழுதும் நூறு சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என இலக்கு நிர்ணயத்துப் படிக்க வேண்டும். நாம் உயர்வான இலக்கை நிர்ணயம் செய்ய  Click here

படிக்கும் போது அமரும் முறை

            போட்டித்தேர்விற்குப் படிப்பவர்கள் படிக்கும்போது நல்ல காற்றோட்டமுள்ள வெளிச்சமான இடத்தில் அமர வேண்டும்.  நீங்கள் தினமும்  உறங்கும் அறையில் கட்டில் மேலே படித்தால் சிறிது நேரத்தில் உறக்கம் வந்து விடும். தேர்வுக்குப் படிக்கும்போது நேராக நிமிர்ந்து படிக்க வேண்டும்.
        தேர்வுக்குப் படித்தலில் மாணவர்கள் அமரும் முறையும் மிக முக்கியமானது.

தேர்வுக்குப் படித்தல் ஒரு வகை கலை

     சாதரணமாகப் படித்தல், தேர்வுக்குப் படித்தல் இரண்டிற்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது. சாதாரணமாகப் படித்தல் அதை மனதில் நிறுத்திப் பின் தேவையான நேரத்தில் வெளிக்கொணரத் தேவையில்லை. திட்டமிட்டு தேர்வுக்குப் படித்தால் வாழ்க்கை வளமாக அமையும். வருடம் முழுவதும் படித்த கருத்துக்களை மூன்று மணிநேரம் எழுத வேண்டும். அப்படிப்பட்ட தேர்வு மூலமாக அவரின் மேல் படிப்பு அல்லது வேலை ஆகியவற்றை எளிதில் அடையலாம். 
       தேர்வுக்குப் படித்தல் என்பது அற்புதமான ஒரு கலை. இந்தக்கலையை திட்டம் தீட்டிச் செய்தால் தேர்வு அறையில் குழப்பம் வராது. தேர்வுக்குப் படித்தல் தலைப்பில் பல விஷயங்கள் தெரிந்துக் கொண்டோம்.இன்னும் அதிக படிக்க Read more

1 comment:

Super useful ideas thank you reading