Friday 17 July 2020

விதியை வெல்வது எப்படி? / vithiyai velvathu Eppadi

            விதியை வெல்வது எப்படி?

விதி - விளக்கம்:

        நான் தார் சாலையில் நடந்துச் செல்லும் போது மழை பெய்வது விதி. மழையில் நான் நனைத்து விடாமல் இருப்பதற்காகக் குடை பிடிப்பது மதிவிதி  என்ற வார்த்தை தெருக்களில் நடந்து செல்லும்போது நம்காதில் விழும். 

                 என் தலைவிதி இவன் பிறந்து கொடுமைசெய்கிறான். விதி, தலைவிதி எல்லாம் நம்மக்கள் தமக்குச்  சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வார்த்தைகள். விதியை வெல்வது எப்படி? என்று படிக்கலாம் வாங்க. 

வாகன விபத்தும் விதியும்:

          எனக்குத் தெரிந்த நண்பர் சென்னை யிலிருந்து வாரம் ஒரு முறை வேலைக்குச் சென்று விட்டுக் காரில் மதுரைக்குத் திரும்புவார். இரவில் கண்களில் தூக்கம் தழுவ வண்டி ஓட்டுவது சிரமம். எனவே அவருக்குத் தூக்கம் வருவதுபோல் உணர்ந்தால் உடனே சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி விட்டு இரண்டு மணி நேரம் தூங்குவார். பின்னர் உடல் புத்துணர்ச்சி கிடைக்கும். இப்படி கார் ஓட்டிவது அவருடைய பழக்கம். இதனால் அவருக்கு விபத்து ஏற்பட்டதே கிடையாது. 
       ஆனால் இன்று நடக்கும் பெரும்பாலான விபத்துகள் கார் ஓட்டிகள் கவனக்குறைவும், இரவு தூக்கம் இல்லாமல் ஓட்டுவது தான். இதை மக்கள் ராமசாமிக்கு விதி சரியில்லை விபத்தில் பலியானார். இன்று குடித்து விட்டு வாகனம் ஓட்ட விபத்து ஏற்படுகிறது. இப்படி  கவனக் குறைவால் ஏற்படும் விபத்தை விதியின் மீது பழிபோடுவார். விதியை வெல்ல கவனமாகக் காரை ஓட்டலாமே. 

விதியும் பெண் பார்த்தலும்:

        இன்று மாப்பிள்ளைக்குப்பெண் பார்க்கப் போகும்போது பெண்ணின் சிவந்த நிறத்தைப் பார்த்து மாப்பிள்ளை மயங்கிறான். மாப்பிள்ளை வீட்டார் பெண்ணின் நகை, பணம், சிவந்த நிறம் போன்றவற்றைப் பார்த்து மாப்பிள்ளைக்கு  மணம் முடித்து வைக்கிறார். பெண்ணின் குணத்தைப் பார்க்காமல் முடிந்த மணம் இருமணங்கள் இணையாமல் போகிறது. ஒவ்வொரு இரவும் என் விதி உன்னைக் கல்யாணம் செய்து கொண்டேன் என்று புலம்புகிறார்கள். 
        அவன் விதி இவளைக் கட்டனும் என்று இருக்கு. பெண் பார்க்கும்போது அவனுக்கு ஏற்ற ஜோடியைத் தேர்வு செய்திருக்க வேண்டும். அதைவிட்டு விட்டு வாழ்நாளில் விதியைச் சொல்வதால் என்ன லாபம்? அவன் விதியை வெல்ல பொருத்தமான பெண்ணைத் தேர்வு செய்தல் வேண்டும். 

விதியும் சொல்புத்தி சுயபுத்தியும்:

          சிலர் பேசும்போது அவனுக்குச் சொல் புத்தியுமில்லை, சுய புத்தியுமில்லை என்று சொல்வார். சுய புத்தி என்பது இதைச் செய்தால் நல்லது என்று சுயமாகச் சிந்தித்து செயல்படுவது. சொல் புத்தி என்பது பிறர் சொல்வதைக் கேட்டு நடப்பது.
       சிலர் உடனே அவர் இஷ்டப்படி எதையும் செய்யும் தன்மையைக் கண்டு இவன் புத்தியை விதி கெடுத்து விட்டது என்று சொல்வார்கள்.
விதியை வெல்ல பெற்றவர்கள் குழந்தை களுக்கு அறிவுரை வழங்கலாம்.

விதி மனைவி பேச்சைக்கேட்டல்

     ஒரு வீட்டில் இருக்கும் ஆண் குழந்தை சிறு வயதிலிருந்தே அம்மா சொல்வதைக் கேட்டு நடந்து வருவான். திருமணம் முடிந்த பின்னர் சில நேரங்களில் மனைவி சொல்வதைக் கேட்டு வேலை செய்வான். இதைப்பார்த்த மகனின் அம்மாவிற்கு கோபம்வரும்.
                         நேற்று வந்தவள் என் மகனை மாற்றி விட்டாளே என்ற கோபம்வரும். விதி அவள் பக்கம் வேலைச் செய்கிறது என்று புலம்புவார். நல்லது யார் சொன்னாலும் கேட்டு நடப்பான் என் பிள்ளை என்று விதியை வெல்ல வேண்டும். 

பணமும் விதியும் 

       பெரியவர்கள் கடைக்குச்செல்லும் வழியில் கைத்தவறி பணத்தைக் கிழே போட்டு விடுவார்கள். உடனே என் விதி இன்று பணத்தை தொலைக்க வேண்டியுள்ளது என்று அடிக்கடி சொல்வார்கள்.
       ஒரு சில வீடுகளில் சின்னக் குழந்தைக்கு கொலுசுப்போட்டு இருப்பார்கள். அந்தக் கொலுசு விளையாடும்போது தொலை விடுகிறது. இதற்கும் விதியைதான் சொல்வார்கள். நம் விதி கொலுசு தொலையனுமென்று இருந்தால் அது தான் நடக்கும். அதற்கு ஒரு படி மேலே போய் தலைக்கு வந்தது தலைபகையோடு போய் விட்டது. கொலுசுயோடு மட்டும் போய்ச்சு என மனதைத் தேற்றிக் கொள்வார்கள். 
       இந்த இரண்டு செயல்களில் உள்ள விதியை வெல்ல கவனமாக இருங்கள். 

தேர்வில் விதியை வெல்ல 

        பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் தேர்வு நேரத்தில் சரியாகப்  படிக்காமல் இருந்து கொண்டுத் தேர்வில் தேர்ச்சி பெறவிட்டால் அவன் விதி எத்தனை முறை எழுதினாலும் தேறவில்லை. அவன் தலையில் படிப்பு ஏறாது என்று இருந்தால் யாராலும் மாற்ற முடியாது எனக் கூறுவார்கள். விதியை வெல்ல உங்களால் வெல்ல முடியும்.
        பள்ளியில் சேர்ந்த நாள் முதல் ஒவ்வொரு நாளும் ஆசிரியர் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடங்களைப் படித்தும் வீட்டுப்பாடம் எழுதியும் வந்தால் தேர்வில் வெற்றி பெறலாம். விதியையும் வெல்லலாம். 

விபத்தில் காயமடைந்தவரின் விதி

     ஒருவருக்கு கார் விபத்து ஏற்பட்டு கால் உடைந்து விட்டது. இதனால் அவர் மனமுடைந்து விட்டார். அவரைப் பார்க்க வந்தவர்கள் அவருடைய கால் இனித்தேறாது என்று எதிர்மறையாகப் பேசுவார்கள்.
      கால் உடைந்தவரின் மனக்காயத்தை போக்க விதியால் தான் நடந்து என்று சொல்லி அவரின் மனதை தேற்றலாம். நடந்த விதியை வெல்ல அவர் மனதில் ஊக்கப்படுத்த வேண்டும். 

விதியை வெல்வது எப்படி?

         தலைவிதி என்ற விதியை மனமென்னும் மதியால் வெல்ல முடியும். விதியை வெல்வது எப்படி? என்று மேலே படித்துத் தெரிந்து கொண்டிருப்பீர் என நம்புகிறேன்.
          விதியென்னும் பிணிக்கு மதியென்னும் மருந்து போதும். மனதில் உறுதி கொண்டு விதியை வெல்வோம். மேலு‌ம் பல அறியத் தகவல்களைப் படிக்க Read more
 இந்தப் படத்தைத் தொட்டுப்படிங்கபிடித்தால் தள்ளுபடி விலையில் வாாங்கி மகிழுங்கள்.

No comments:

Post a Comment

Super useful ideas thank you reading