காலையில் எழுந்ததும் நட இரவில் தூங்கும் முன் நட
நடை பயிற்சி
காலையில் எழுந்ததும் நட இரவில் தூங்கும் முன் நட என்பது மேற்கத்திய பழமொழி. நடைப்பயிற்சி (walking Practice) ஏன் செய்ய வேண்டும் என்று நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
நடைப்பயிற்சி செய்யும் போது நூற்றைம்பது கலோரிகள் பயன்படுத்தப்படும். இது மட்டுமல்லாமல் பல இரத்தம் நாளங்களில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் பல நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
காலையில் எழுந்ததும் நடக்க வேண்டும். இரவில் தூங்கும் முன் நடக்க வேண்டும் என்று நமக்குத் தெரியும். நகர்ப்புறங்களில் மாலை வேளையில் சாலையில் நடந்து சென்று வருபவர்களைப் பார்த்தீர்களா?
இரவு உணவு உண்டவுடனே உறங்கக் கூடாது. இரவு உணவு உண்பதற்கும் உறங்குவதற்கும் இடையில் சுமார் மூன்று மணி நேர இடைவெளி இருப்பது அவசியம். எதற்காக இந்த இடைவெளி என்று சிந்திப்போம்.
உணவு இடைவெளியும் செரிமானமும்
மனிதன் உறங்கும்போது மூளையும் ஓய்வெடுக்கத் தொடங்கி விடும். மூளை உறங்கி விடுவதால் மற்ற உள்ளுறுப்புகள் ஓய்வெடுக்க வேண்டும். இது இயற்கை நியதி. இரப்பையில் உணவு நிரம்பியவுடன் சீரணக்கருவிகள் ஓய்வெடுக்கச் தொடங்கினால் என்னாகும்.
தேவையான செரிமான நீர் சுரப்பது தடைபடுவதோடு வயிற்றில் அசீரணம் ஏற்படும். எனவே நாம் உண்ட உணவானது முழுமையாகச் செரிக்கமால் புளித்து நாற்றமெடுத்துப் போய்விடும்.
இந்தப் புளித்த உணவு காலை எழுந்திருக்கும் வரை இரைப்பையில் இருந்து ஒரு விதமான வாயுவை உற்பத்தி செய்யும்.
இந்த நஞ்சு வாயு இரத்தத்தில் கலந்து உடல் முமுவதும் பரவுகிறது.
நடை பயிற்சி இல்லாத நிலையில் ஏற்படும் விளைவுகள்
இரவு உணவு உண்ட உடனே தூங்கச் செல்பவர்களுக்கு மன, உடல் உபாதைகள் ஏற்படும். உடல் எடை அதிகரிக்கும்.
இவர்களால் அதிகாலையில் புத்துணர்ச்சியுடன் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முடியாது.
யோகா, தியானம் போன்ற மன அமைதிக்காகச் செய்யும் பயிற்சிகளில் நாட்டம் குறையும்.
உடலில் வளையும் தன்மை குறைந்து விடும். இதனால் இரத்த ஓட்டம் தடை படும்.
இரவில் சாப்பிட உடனே படுக்கைக்குச் செல்லும் பலருக்கும் தலைவலி, இடுப்பு வலி, முதுகு வலி, மூக்கடைப்பு, வாய் தூர்நாற்றம் போன்ற தொல்லைகளில் ஏதேனும் ஒன்று இருந்து கொண்டேஇருக்கும்.
நடைபயிற்சியின் நன்மைகள்
நடைப்பயிற்சி தினமும் காலை எழுந்ததும், இரவு தூங்கும் முன் செய்தால் உணவு செரிமானமாகி சுரப்பிகளின் செயல் திறன் அதிகரிக்கும். சர்க்கரை வியாதி தோற்றுவிக்கும் இன்சுலின் ஹார்மோனின் அளவை சமநிலையில் வைக்கும்.
உடலின் எடையை சரியான உயரத்துக்கு ஏற்ற அளவில் பராமரிக்க உதவும்.
உடலில் தேவையற்ற கொழுப்புகள் குறைந்து விடும். பசி உணர்வை தூண்டும். வயிற்றில் அளவோடு சாப்பிட வைக்கும்.
காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி செய்யும் போதுசிறிதளவு நீர் அருந்தி விட்டு நடந்தால் உடலின் நீர் சமநிலை ஏற்படும். தேவையற்ற அமில காரங்களும் வியர்வையாக வெளியேறும்.
தினந்தோறும் நடைபயிற்சி செய்வோம்.
நலமுடன் வாழ்வோம்.
No comments:
Post a Comment
Super useful ideas thank you reading