தேர்தல் மிகவும் முக்கியமான பணி. இப்பணி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப் படுகிறார்கள்.தேர்தல் பணிக்கு செல்பவர்களுக்கு சில முக்கிய குறிப்புகள். இதை எவ்வாறு செய்வது என்று தெரிந்து கொண்டால் தேர்தல் பணியைச் சிறப்பாக செய்து முடிக்கலாம்.
வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பணி (PRO duty)
1-Pro dairy
2-form17c.
3- 16 points abserver report sheet.
4- visiter sheet.
5- pledge commencement of poll and after close the poll.
6- Mock poll certificate.
மேற்கண்ட ஆறு படிவங்களை மிகவும் கவனமாக வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பூர்த்தி செய்யவும்.
வாக்குச் சாவடி அலுவலர் 1 - PO 1 duty
1- elector identify is very important. தேர்தலில் வாக்களிக்க வரும் வாக்காளர் கீழ் கண்ட அடையாள அட்டை ஏதாவது ஒன்று எடுத்து வந்தால் மட்டுமே வாக்களிக்க விட வேண்டும். பூத் சிலிப் மட்டும் கொண்டு வந்தால் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது.
2.Marked copy of elecoral roll. ஆண்வாக்காளராக இருந்தால் வரிசை எண்ணை நீல மை பேனாவால் வட்டமிடவேண்டும். பெயரை அடிகோடிடவேண்டும்
3-பெண் வாக்காளராக இருந்தால் சிகப்பு மை பேனாவால் வரிசை எண்ணை மட்டும் சுழிக்க வேண்டும்
வாக்குச் சாவடி அலுவலர் 2 பணிகள் (PO 2 duty)
1- 17-A register.
3.வாக்காளரிடம் கையொப்பம் பெறவேண்டும்.
4- Voter slip இல் வரிசை எண்ணை குறித்து வாக்காளரின் இடதுகை ஆள் காட்டி விரலில் அழியா மை இடவேண்டும்.
Voter slip யை வாக்காளரிடம் கொடுக்கவும்.
வாக்குச் சாவடி அலுவலர் 3 பணிகள் (PO 3 duty)
வாக்காளர் கொண்டுவரும் Voter slip யை பெற்றுக்கொண்டு Control unit உள்ள Ballot பட்டனை அழுத்தவும். Voter slip ஐம்பது எண்ணிக்கை கொண்ட கட்டுகளாக கட்ட வேண்டும்.
பொதுவான குறிப்புகள் General instructions.
49 0 என்றால் வாக்காளர் கையில் மை வைத்தபிறகு யாருக்கும் வாக்களிமாட்டேன் என்று வாக்காளர் அறிவித்தால் வாக்காளரின் பெயருக்கு நேரில் உள்ள Remarks காலத்தில் 49 -0 என்று குறிப்பிடவேண்டும் refused the Vote என்று எழுத வேண்டும்.
49-M என்றால் வாக்களருக்கு மை வைத்தபிறகு Before enterd the vote he declared the symbol or candidate name சொன்னால் அந்தவாக்காளரை வாக்கு பதிவு எந்திரத்தில் வாக்களிக்க PRO வாக்குச் சாவடி தலைமை அலுவலர் அனுமதிக்ககூடாது. இந்நேர்வில் 17-A register ல் வாக்காளர் கையொப்பம் அடுத்து Remarks காலத்தில் 49-M என்று குறிப்பிடவேண்டும்.
1.Tendered votes ஆய்வுக்குரிய வாக்குகள்.
2.Challenged votes எதிர்க்கப்பட்ட வாக்குகள்.
3.Test votes.
4.proxy votes
மேற்கண்ட நிகழ்வுகள் Maximum நடக்கவாய்ப்பில்லை இருந்த போதிலும் ELECTION RULES தெரிந்து வைத்திருப்பது நமக்கு மிகவும் அவசியம்.
குறிப்பு
தேர்தல் முடிந்தவுடன் CONTROL UNIT OFF செய்யவேண்டும். VVPAT ல் BATTERY ஐ கழற்றி விட வேண்டும். மறவாதீர்கள்.
தேர்தல் பணிக்கு செல்லும்போது தேர்தல் பணி அலுவலர்கள் எடுத்துச் செல்ல வேண்டியவை:
உங்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் பணி ஆணை
ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை நகல்கள் (Optional)
ATM Card, பணியிடம் சார்ந்த அடையாள அட்டை
டார்ச் லைட்
செல்போன் சார்ஜர்
மாற்று உடை அனைத்திலும் 1 செட்
லுங்கி, துண்டுகள் 2, போர்வை 1
கொசுவர்த்தி சுருள்/ ஆல்அவுட்/ Odomos cream, தீப்பெட்டி
பேஸ்ட், டூத்பிரஷ், கண்ணாடி, சீப்பு, பவுடர், எண்ணை, ஷாம்பு, சோப்பு
தேர்தல் நாளான 6ஆம் தேதி இரவு வரை எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் (Optional)
பிஸ்கட் பாக்கெட், முறுக்கு உள்ளிட்ட சில நொறுக்கு தீனிகள், குளுக்கோஸ் (சர்க்கரை அதிகமாகவோ, குறைவாகவோ உள்ளவர்களுக்கு அவசரத்துக்கு உதவக்கூடும்)
ஒரு லிட்டர் அல்லது ஒன்றரை லிட்டர் காலி தண்ணீர் பாட்டில் 1 (குடிநீர் பிடித்து வைத்து பயன்படுத்தி கொள்ளலாம்)
மாஸ்க், சானிடைசர், கையுறை, hand wash (பணி செய்யும் இடத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது எனினும் நம்மிடம் ஒரு செட் வைத்திருத்தல் நலம்)
மேற்கண்டவை தவிர பொதுவான தலைவலி மாத்திரை, காய்ச்சல் மாத்திரை, வயிற்றுப் பிரச்சினை தொடர்பான மாத்திரைகள் அவசர பயன்பாட்டிற்காக ஒன்றிரண்டு கொண்டு செல்வது நல்லது.
ஒருநாள் பணிக்கு இத்தனை தேவையா என்ற கேள்வி எழுந்தாலும்...
இவைகளெல்லாம் இருந்தால் எப்படிப்பட்ட அசௌகரியமான சூழ்நிலைகளையும்...
மற்றவர்களை எதிர்பார்க்காமல் நாமே சமாளித்துக் கொள்ளலாம்.
அது மட்டுமின்றி...
ஒரு வாக்குச் சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஒவ்வொருவரும்...
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைத் தெளிவாக தெரிந்து கொள்வதுடன்...
மற்ற அனைவரது பணிகளும் என்னென்ன என்பதையும்...
இயந்திரங்களை இணைப்பது.. இயக்குவது, சீல் செய்வது உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளையும் ஓரளவேனும் அறிந்து வைத்திருப்பது.
குழுச் செயல்பாடு சிறப்புடன் அமைய மிக்க பயனுள்ளதாய் அமையும்
குறிப்பு: யாரிடமும் அரசியல் பேசாமல் இருப்பது நலம்
ஒரு சிறிய விழிப்புணர்வு.
அரசியல்கத்துகிலாம் வாங்க.
இனி வரும் நாட்களில் தேர்தல் முன்புவரை இரவு நேரங்களில் குறிப்பிட்ட நேரத்தில் அடிக்கடி மின்சாரம் தடைபடும் நம்ம மக்கள்தானேன்னு பேச்சு கொடுத்திராதீங்கள்.
வெளியே செல்லும் போது நம்ம முன்னோடிகளை பெரும்பாலும் தவிர்த்துவிடுங்கள்.
மிக கவனம் நேரிலேயே பேசுங்கள்.போனை தவிர்த்துவிடுங்கள் உலக உத்தமர்கள் நிறையநபர்கள் நாம் எதார்த்மாக பேசுவதைகூட ரெக்கார்டிங் செய்கிறார்கள்.
தேவையான அளவுபணத்தை மட்டும் கையில் வைத்திருங்கள்.
நமது தேர்தல் பணியில் கவனமாக இருங்கள் அசால்ட் வேண்டாம்.
சட்டவிதிகளை முறையாக பின்பற்றுங்கள்.
ஞாயிறு மாலை7மணிவரை கருத்துகளைபகிரலாம் அதற்கு பின் அட்மினுக்கு ஒத்துழைப்பது நம் கடமை.
அவசரத்திற்கு கூட அரசியல்வாதிகளின் வாகனத்தை பயன்படுத்தாதீர்கள்.
நம்முடன் தேர்தல்பணியாற்றுபவர்களிடம் ஏற்றதாழ்வு பார்க்கவேண்டாம் அவரும் நம் சகபணியாளரே.
தேர்தல்பணியில் வாகனம் இயக்கும்போது கூடுதல்கவனம் செலுத்தவும்.
தங்களது தேர்தல் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!
எவ்வித மனக்கசப்புக்கும் ஆளாகாமல் குழு ஒற்றுமையுடன் தேர்தல் பணி புரிவோம். தேர்தல் பணியை 100% எவ்வித இடையூறுமின்றி செய்வோம்
நல்வாழ்த்துக்கள். பணிசிறக்கட்டும் எப்பொழுதும் இறுதி வெற்றி நமதே!!
வாழ்க அரசுஊழியர் ஆசிரியர் ஒற்றுமை.
No comments:
Post a Comment
Super useful ideas thank you reading