TN SSLC Result 2020 declared today
100 % students pass tamil nadu
தமிழ் நாடு அரசு தேர்வுத்துறை இயக்ககம் (The Directorate of Government exam) இன்று 10/8/2020 திங்கள்கிழமை காலை 9: 30 மணியளவில் கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
மாணவ, மாணவிகள் SSLC பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் படித்து விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப் பட்டுள்ளது.
தேர்வு கால அட்டவணை
கடந்த 2019 - 2020 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்குக் கால அட்டவணை (TIME TABLE) மார்ச் மாதம் 27 முதல் ஏப்ரல் மாதம் 13 வரை SSLC பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரனோவிற்காக பொதுஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைப்பதாகத்தமிழக அரசு வெளியிட்டச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
மீண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணையை ஜுன் மாதம் 1 முதல் ஜூன் மாதம் 12 வரை என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அப்பொழுது கொரனோவின் கோரத்தண்டவத்தால் ஒவ்வொரு நாளும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருந்தது. இதனால் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் கல்வியாளர்களின் ஆலோசனைபடி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மீண்டும் ஜுன் மாதம் 15 முதல் ஜுன் மாதம் 25 வரை என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் பலரும் கொரோனாவின் கோரத்தண்டவத்தை நினைத்து மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடு குறித்துக் கேள்வி எழுப்பினார். இதற்குச் சென்னை உயர் நீதிமன்றம் 9.30 இலட்சம் மாணவர்களின் பாதுகாப்பு முன் நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழக அரசு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்தத் தேர்வில் அனைவரும் தேர்ச்சி என தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்தார்.
SSLC தேர்வில் விண்ணப்பித்தவர்கள்
கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 9,39,829 மாணவ மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.
இதில் மாணவர்கள் 4,71,759 மற்றும் மாணவிகள் 4,68,070 ஆவார்கள். அனைவரும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
இதில் மாணவர்கள் 4,71,759 மற்றும் மாணவிகள் 4,68,070 ஆவார்கள். அனைவரும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
6235 மாற்றுத் திறனாளி மாணவர்கள் SSLC தேர்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விண்ணப்பித்து இருந்த மாற்றுத் திறனாளி மாணவர்கள் 6235 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
SSLC மதிப்பெண் கணக்கிடல்
கடந்த கல்வியாண்டில் நடத்த வேண்டிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரனோ விற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக ரத்து செய்யப்பட்டது.
மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகை சதவீத மதிப்பெண்களுடன் சேர்த்து மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.
காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் 80% மற்றும் வருகை நாள்கள் 20% மதிப்பெண் கொண்டு மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண் கணக்கிடலாம் வாங்க Read more
SSLC தேர்ச்சி மதிப்பெண்
இன்று வெளியிட்டுள்ள தேர்வு முடிவுகளில் பத்தாம் வகுப்பு பாடங்களில் தலா 35% (35/100) மதிப்பெண் பெற்றால் மட்டுமே தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் பாடத்தில் Theory Paper 20/75 மற்றும் Practical Paper 15/25 பெற்று இருந்தால் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் ஐந்து மாவட்டங்கள்
இன்று வெளியிட்டுள்ள தேர்வு முடிவுகளில் முதல் ஐந்து மாவட்டங்கள் தேர்ச்சி பெற்றவர்கள் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
1. கன்னியாகுமரி
2. திருநெல்வேலி
3. தூத்துக்குடி
4. ராமநாதபுரம்
5. சிவகங்கை
SSLC Result online பார்ப்பது எப்படி?
நீங்கள் mobile phone Google search சென்று tn results.nic. In என டைப் செய்து search கொடுக்கவும். இல்லாவிட்டால் இந்த லிங்கைத்தொட்டு நேரடியாகச் செல்லலாம்.
பின்னர் உங்கள் பதிவு எண் டைப் செய்து விடவும். அதற்குக் கீழே பிறந்த தேதி dd/mm/yyyy (உதரணமாக 06/06/2005) என்று டைப் செய்து கீழ் Result தொடுங்கள்.
உங்கள் SSLC Result screen தோன்றும் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.
மாணவர்கள் மதிப்பெண் சார்ந்த குறைகளைப் பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக ஆகஸ்ட் மாதம் 17 முதல் ஆகஸ்ட் மாதம் 25 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் பட்டியல் அந்தந்தப் பள்ளிகளில் ஆகஸ்ட் மாதம் 17 தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 21 தேதி வரை வழங்கப்படும். கொரோனா கட்டுபாடுடன் பெற்று கொள்ளலாம்.
ஏதேனும் சந்தேகம் இருந்தால் comments பதிவிடவும்.
No comments:
Post a Comment
Super useful ideas thank you reading