H

Sunday 21 June 2020

SSLC EXAM MARK CALCULATION 2020 (பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கிட )

SSLC Exam மதிப்பெண் எவ்வளவு எனத்தெரிந்து கொள்ள வேண்டும் என அனைவருக்கும் ஆவல் இருக்கும். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கணினி, அலைபேசி எல்லாரும் வைத்து இருக்கவில்லை, எனவே SSLC Exam result வெளியிடப்படும் தேதியன்று மாணவர் கூட்டம் பள்ளியில் அறிவுப் பலகையில் ஒட்டப்படும் மதிப்பெண் பட்டியலைப்பார்க்ககாத்திருக்கும்.
         சென்ற ஆண்டு SSLC Exam results மாணவர்கள் அலைபேசிக்கு குறுஞ்செய்தி  (massage) அனுப்பி வைக்கப்பட்டது. 
   
   SSLC  தேர்வில் இந்த ஆண்டு அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்த மாணவனின் மதிப்பெண் கணக்கிடும் முறைப்பற்றி இன்று தமிழக அரசு தேர்வுத்துறை இயக்குனர் அவர்கள் செயல்முறைகளை வெளியிட்டுள்ளார். SSLC தேர்வு ரத்து செய்யப்பட்டது, மாணவர்கள் தேர்ச்சி குறித்து தகவல்களை மேனிலைப் பள்ளி/உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குத்தகவல் தெரிவிக்க CEO அவர்களுக்குச்செயல் முறை அனுப்பி வைத்தார்.

மதிப்பெண் கணக்கிடும் முறை 

    அரசு தேர்வுத்துறை இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் படி பத்தாம் வகுப்பு பள்ளியில் படித்தவர்கள்  (தனித்தேர்வர்கள் தவிர) அனைவரும் தேர்ச்சி.காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீதமும்,மாணவர்களின் வருகை நாள்கள்  20  சதவீதம் எனக்கணக்கிட வேண்டும்.எவ்வளவு மதிப்பெண் பெற்று இருந்தாலும் தேர்ச்சி. 

   உதரணமாக ராஜா என்ற மாணவன் காலாண்டு தேர்வில் தமிழ் பாடத்தில்  57/100 மதிப்பெண் பெற்று உள்ளார். அதே மாணவன் அரையாண்டு தேர்வில்  63/100 மதிப்பெண் பெற்று உள்ளார் என்று எடுத்துக்கொள்ளவோம்.
     அவர் பெற்ற மொத்தமதிப்பெண்  57 + 63 = 120 /200
       SSLC பொதுத்தேர்வு பாட மதிப்பெண்  80 % எனில்  120 /200 × 80 = 48 மதிப்பெண் 
           அந்த மாணவனின் வருகை நாள்கள்  180 (சுமார்)
       பள்ளியின் மொத்தவேலை நாள்கள்   200  (சுமார்)
            SSLC  பொதுத்தேர்வு வருகை சதவீத மதிப்பெண் 20% எனில் 
180  / 200 ×20  = 18 மதிப்பெண் 
  இந்த ஆண்டு SSLC  பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் ராஜா பெற்ற மதிப்பெண் 
48 + 18 = 66 மதிப்பெண். 
         இதே ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத்திற்கு கணக்கிட்டு SSLC பொதுத்தேர்வு மொத்த மதிப்பெண்கள் எத்தனை எனத்தெரிந்து கொள்ளலாம். 
       வருகை நாள்களுக்குரிய மதிப்பெண் ஐந்து பாடத்திற்கும் ஒன்றாகத்தான் இருக்கும். 
      தமிழ் வருகை சதவீத மதிப்பெண்18           ஆங்கில வருகை சதவீத மதிப்பெண்18 
    கணித வருகை சதவீத மதிப்பெண்  18 அறிவியல் வருகை சதவீத மதிப்பெண்18 
சமூக அறிவியல் வருகை  மதிப்பெண் 18 என்று கணக்கிட வேண்டும்.                                              SSLC தேர்வில் மதிப்பெண் கணக்கிடும் முறை கற்றுக் கொண்டோம். பிறருக்கு கற்பிப்போம்.