வாக்காளர் பட்டியலில் வரிசை எண், பாகம் எண் பார்ப்பது எப்படி?
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை ஒவ்வொரு தேர்தலிலும் சரிபார்க்க வேண்டும். உங்கள் கையில் வாக்காளர் அடையாள அட்டை (voters id) இருந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களித்து விட முடியாது. உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும். இதை எவ்வாறு சரிபார்ப்பது?
ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு ஜனவரி மாதம் இருபத்தைந்தாம் நாள் தேசிய வாக்காளர் தினம் அனுசரித்து வருகிறது. அன்று புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதில் இறந்தவர்களின் பெயர் நீக்கப்பட்டு இருக்கும். புதியதாக திருமணம் செய்து கொண்டு இந்த ஊரில் வசிப்போர் பெயர் சேர்க்கப்பட்டு இருக்கும்.
VOTERS HELPLINE APP
வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதையும் பாகம், வரிசை எண் முதலியவற்றை எளிதாகப் பார்க்க Google Play store சென்று voters helpline app என்று search கொடுத்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
அல்லது https://play.google.com/store/apps/details?id=com.eci.citizen இந்த link CLICK செய்து நேரடியாக download செய்யலாம். இந்த voters helpline app open செய்து search results உங்கள் epic number (வாக்காளர் அடையாள அட்டை எண்) உள்ளீடு செய்தால் உங்கள் பெயர், பாகம் எண், வரிசை எண், முகவரி போன்ற அனைத்து விபரங்களும் இடம் பெற்றுள்ளது.
தேர்தல் ஆணையம் இணையத்தில் பார்ப்பது எப்படி?
அதில் முதலில் voters name search என்று இருக்கும் அதற்கு கீழே epic number search என்று இருக்கும் அதைத் தொட்டால் உங்கள் epic number, select state name, capture code enter என்று இருக்கும். அதற்கு கீழே search கொடுத்தால் உங்கள் பெயர், தந்தை பெயர், முகவரி வரும். அதை தொட்டால் pdf வடிவில் download செய்யலாம். இதில் வாக்காளர் பாகம் எண், வரிசை எண் தேர்தல் நாள் முதலியவற்றை எளிதாகப் பார்க்கலாம்.
No comments:
Post a Comment
Super useful ideas thank you reading