H
Showing posts with label Confidence is life. Show all posts
Showing posts with label Confidence is life. Show all posts

Wednesday 21 October 2020

Confident in any situation/எப்பொழுதும் தன்னம்பிக்கை உடன் இருக்க வேண்டுமா?

   தன்னம்பிக்கை உடன்  வாழ

         நாம் ஒவ்வொரு நாளும் postive ஆக இருக்க வேண்டும் என்றும் confident ஆக இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறோம். ஆனால் நம் confident level ஏதோ காரணத்தால்  குறைந்துவிட்டதாக எண்ணுகிறோம். Confident ஆக, postive ஆக நாம் எப்படி இருப்பது பற்றி தெரிந்து கொள்வோம்.


ஏன் confident ஆக இருக்க வேண்டும் 

           நீங்களும் நானும் confident ஆக இருக்க கூடாது என்று நினைப்போமா? கல்வி,அறிவு இவற்றால் சாதித்தவையை விட தன் தன்னம்பிக்கையால் சாதித்தவைகள் தான் அதிகம். 
       கூச்சம் கொண்டவர்கள் பலரிடம் பேசவும் சந்தேகம் கேட்கக் கூட தயங்குவதால் அதைச் செய்ய முடியும் என்ற நேர்மறையான எண்ணங்கள் மனதில் தோன்றுவது இல்லை. இதனால் பல செயல் செய்யும் தன்னம்பிக்கை தோன்றுவது இல்லை. 

        நம்மில் பலர் வங்கியில் கடன் பெற சந்தேகங்கள் இருந்தாலும் மேலாளரை அணுகி பேச தயக்கம் இருக்கும். தனது அக்கவுண்டில் பணம் பிடித்தாலும் கூட customers care தொடர்பு கொண்டு பேச தயக்கம் காட்டுவதும் தன் மீது தன்னம்பிக்கை இல்லாதது தான் காரணம். 

தவறுகளும் self confident 

           வாழ்க்கை வாழும் போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் போது நம் confident level குறைகிறது. தப்பு செய்வது மனித இயல்பு. நாம் ஒவ்வொரு நாளும் செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சியிலும் அறிவு அனுபவம் வாய்ந்த பலரும் தவறு செய்த செய்தியைப் படித்து வருகிறோம்.

      அவர் தவறு செய்வதற்கு முக்கிய காரணம் அவரின் mind setup தான். 
    தவறு செய்தல் இயற்கையின் நியதி. தவற்றை சரி செய்ய confident உங்களுக்கு உதவும். 

கௌரவம்தனித்தன்மை

             Confident level சரிசெய்ய உங்களைப் பற்றிய image குறைத்துக் கொள்ளவேண்டாம். சமுதாயத்தில் தனக்கு தேவையான அளவு மதிப்பு இவ்வளவு தான் என புரிந்து கொள்ளவேண்டும். 
      உதரணமாக மாதம் பத்தாயிரம் ரூபாய் ஊதியம் பெறும் கூலித் தொழிலாளியை சமுதாயம் இப்படி தான் நடத்தும். 
     மாதம் 25,000 ஊதியம் பெற்று வரும் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் நல்ல வேலை, படிப்புக்கு தகுந்த மரியாதை கிடைக்கும். 
      அதே சமயம் மாதம்  100000 ஊதியம் பெறும் Doctor, Engineer, Police station head officer, special officer இவரின் self image தன்னை அனைவரும் மதிக்க வேண்டும். சமுதாயத்தில் தனக்கு அதிக அளவில் முக்கியத்துவம், மதிப்பு, மரியாதை தர வேண்டும் என்று நினைப்பார்கள். அதில் தவறு ஒன்றும் இல்லை. 

       ஆனால் சில நேரங்களில் மரியாதை குறைவாக இருக்கும் போது நம் confident level குறைந்து விடும். அவர் மீது குற்றம் பார்க்க வேண்டாம். நாம் வேலையை மட்டும் செய்தால் confident level கூடும். 
       புதிய செயல்களைச் செய்யும் போது நம் self image குறைந்து விடும். நாம் தவறாகச் செய்து விடுவோமா என்ற பயம் தோன்றும். 
     நிறைய செயல்களைச் செய்ய வேண்டும் என்று நினைத்தால் நேர்மறையான எண்ணங்கள் மனதில் தோன்றும் வெற்றி கிடைக்கும். 
       தன்னம்பிக்கை வளர்க்கும் பல புத்தகங்கள் படிங்க, postive thought உள்ள படங்களைப் பார்த்தால் நம்முடைய confident level increase ஆகும், உங்கள் மனமும் அமைதி அடையும். 

Friday 17 July 2020

விதியை வெல்வது எப்படி? / vithiyai velvathu Eppadi

            விதியை வெல்வது எப்படி?

விதி - விளக்கம்:

        நான் தார் சாலையில் நடந்துச் செல்லும் போது மழை பெய்வது விதி. மழையில் நான் நனைத்து விடாமல் இருப்பதற்காகக் குடை பிடிப்பது மதிவிதி  என்ற வார்த்தை தெருக்களில் நடந்து செல்லும்போது நம்காதில் விழும். 

                 என் தலைவிதி இவன் பிறந்து கொடுமைசெய்கிறான். விதி, தலைவிதி எல்லாம் நம்மக்கள் தமக்குச்  சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வார்த்தைகள். விதியை வெல்வது எப்படி? என்று படிக்கலாம் வாங்க. 

வாகன விபத்தும் விதியும்:

          எனக்குத் தெரிந்த நண்பர் சென்னை யிலிருந்து வாரம் ஒரு முறை வேலைக்குச் சென்று விட்டுக் காரில் மதுரைக்குத் திரும்புவார். இரவில் கண்களில் தூக்கம் தழுவ வண்டி ஓட்டுவது சிரமம். எனவே அவருக்குத் தூக்கம் வருவதுபோல் உணர்ந்தால் உடனே சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி விட்டு இரண்டு மணி நேரம் தூங்குவார். பின்னர் உடல் புத்துணர்ச்சி கிடைக்கும். இப்படி கார் ஓட்டிவது அவருடைய பழக்கம். இதனால் அவருக்கு விபத்து ஏற்பட்டதே கிடையாது. 
       ஆனால் இன்று நடக்கும் பெரும்பாலான விபத்துகள் கார் ஓட்டிகள் கவனக்குறைவும், இரவு தூக்கம் இல்லாமல் ஓட்டுவது தான். இதை மக்கள் ராமசாமிக்கு விதி சரியில்லை விபத்தில் பலியானார். இன்று குடித்து விட்டு வாகனம் ஓட்ட விபத்து ஏற்படுகிறது. இப்படி  கவனக் குறைவால் ஏற்படும் விபத்தை விதியின் மீது பழிபோடுவார். விதியை வெல்ல கவனமாகக் காரை ஓட்டலாமே. 

விதியும் பெண் பார்த்தலும்:

        இன்று மாப்பிள்ளைக்குப்பெண் பார்க்கப் போகும்போது பெண்ணின் சிவந்த நிறத்தைப் பார்த்து மாப்பிள்ளை மயங்கிறான். மாப்பிள்ளை வீட்டார் பெண்ணின் நகை, பணம், சிவந்த நிறம் போன்றவற்றைப் பார்த்து மாப்பிள்ளைக்கு  மணம் முடித்து வைக்கிறார். பெண்ணின் குணத்தைப் பார்க்காமல் முடிந்த மணம் இருமணங்கள் இணையாமல் போகிறது. ஒவ்வொரு இரவும் என் விதி உன்னைக் கல்யாணம் செய்து கொண்டேன் என்று புலம்புகிறார்கள். 
        அவன் விதி இவளைக் கட்டனும் என்று இருக்கு. பெண் பார்க்கும்போது அவனுக்கு ஏற்ற ஜோடியைத் தேர்வு செய்திருக்க வேண்டும். அதைவிட்டு விட்டு வாழ்நாளில் விதியைச் சொல்வதால் என்ன லாபம்? அவன் விதியை வெல்ல பொருத்தமான பெண்ணைத் தேர்வு செய்தல் வேண்டும். 

விதியும் சொல்புத்தி சுயபுத்தியும்:

          சிலர் பேசும்போது அவனுக்குச் சொல் புத்தியுமில்லை, சுய புத்தியுமில்லை என்று சொல்வார். சுய புத்தி என்பது இதைச் செய்தால் நல்லது என்று சுயமாகச் சிந்தித்து செயல்படுவது. சொல் புத்தி என்பது பிறர் சொல்வதைக் கேட்டு நடப்பது.
       சிலர் உடனே அவர் இஷ்டப்படி எதையும் செய்யும் தன்மையைக் கண்டு இவன் புத்தியை விதி கெடுத்து விட்டது என்று சொல்வார்கள்.
விதியை வெல்ல பெற்றவர்கள் குழந்தை களுக்கு அறிவுரை வழங்கலாம்.

விதி மனைவி பேச்சைக்கேட்டல்

     ஒரு வீட்டில் இருக்கும் ஆண் குழந்தை சிறு வயதிலிருந்தே அம்மா சொல்வதைக் கேட்டு நடந்து வருவான். திருமணம் முடிந்த பின்னர் சில நேரங்களில் மனைவி சொல்வதைக் கேட்டு வேலை செய்வான். இதைப்பார்த்த மகனின் அம்மாவிற்கு கோபம்வரும்.
                         நேற்று வந்தவள் என் மகனை மாற்றி விட்டாளே என்ற கோபம்வரும். விதி அவள் பக்கம் வேலைச் செய்கிறது என்று புலம்புவார். நல்லது யார் சொன்னாலும் கேட்டு நடப்பான் என் பிள்ளை என்று விதியை வெல்ல வேண்டும். 

பணமும் விதியும் 

       பெரியவர்கள் கடைக்குச்செல்லும் வழியில் கைத்தவறி பணத்தைக் கிழே போட்டு விடுவார்கள். உடனே என் விதி இன்று பணத்தை தொலைக்க வேண்டியுள்ளது என்று அடிக்கடி சொல்வார்கள்.
       ஒரு சில வீடுகளில் சின்னக் குழந்தைக்கு கொலுசுப்போட்டு இருப்பார்கள். அந்தக் கொலுசு விளையாடும்போது தொலை விடுகிறது. இதற்கும் விதியைதான் சொல்வார்கள். நம் விதி கொலுசு தொலையனுமென்று இருந்தால் அது தான் நடக்கும். அதற்கு ஒரு படி மேலே போய் தலைக்கு வந்தது தலைபகையோடு போய் விட்டது. கொலுசுயோடு மட்டும் போய்ச்சு என மனதைத் தேற்றிக் கொள்வார்கள். 
       இந்த இரண்டு செயல்களில் உள்ள விதியை வெல்ல கவனமாக இருங்கள். 

தேர்வில் விதியை வெல்ல 

        பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் தேர்வு நேரத்தில் சரியாகப்  படிக்காமல் இருந்து கொண்டுத் தேர்வில் தேர்ச்சி பெறவிட்டால் அவன் விதி எத்தனை முறை எழுதினாலும் தேறவில்லை. அவன் தலையில் படிப்பு ஏறாது என்று இருந்தால் யாராலும் மாற்ற முடியாது எனக் கூறுவார்கள். விதியை வெல்ல உங்களால் வெல்ல முடியும்.
        பள்ளியில் சேர்ந்த நாள் முதல் ஒவ்வொரு நாளும் ஆசிரியர் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடங்களைப் படித்தும் வீட்டுப்பாடம் எழுதியும் வந்தால் தேர்வில் வெற்றி பெறலாம். விதியையும் வெல்லலாம். 

விபத்தில் காயமடைந்தவரின் விதி

     ஒருவருக்கு கார் விபத்து ஏற்பட்டு கால் உடைந்து விட்டது. இதனால் அவர் மனமுடைந்து விட்டார். அவரைப் பார்க்க வந்தவர்கள் அவருடைய கால் இனித்தேறாது என்று எதிர்மறையாகப் பேசுவார்கள்.
      கால் உடைந்தவரின் மனக்காயத்தை போக்க விதியால் தான் நடந்து என்று சொல்லி அவரின் மனதை தேற்றலாம். நடந்த விதியை வெல்ல அவர் மனதில் ஊக்கப்படுத்த வேண்டும். 

விதியை வெல்வது எப்படி?

         தலைவிதி என்ற விதியை மனமென்னும் மதியால் வெல்ல முடியும். விதியை வெல்வது எப்படி? என்று மேலே படித்துத் தெரிந்து கொண்டிருப்பீர் என நம்புகிறேன்.
          விதியென்னும் பிணிக்கு மதியென்னும் மருந்து போதும். மனதில் உறுதி கொண்டு விதியை வெல்வோம். மேலு‌ம் பல அறியத் தகவல்களைப் படிக்க Read more
 இந்தப் படத்தைத் தொட்டுப்படிங்கபிடித்தால் தள்ளுபடி விலையில் வாாங்கி மகிழுங்கள்.

Sunday 12 July 2020

Appreciate your child to boost their self - esteem / குழந்தைகளைப் பாராட்டுங்கள்.

            Appreciate your child 

குழந்தைகளைப் பாராட்டுங்கள் 

    பாராட்டு, பாராட்டுப்பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம். அதைப்படிக்க இதைத்தொட்டுப் படிக்கலாம் https://pandiarajan1988143.blogspot.com/2020/07/appreciation-to-say.html  

பாராட்டும் குழந்தை 

         பாராட்டிச்சீராட்டி வளரும் குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வளரும். 'அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவுவதில்லை' என்ற பழமொழி பள்ளிகள், வீடுகள் என்று அனைத்து மட்டத்திலும் ஊடுருவிப்பேசப்படுகிறது.                                  இப்பழமொழி தவறாகப்புரிந்து கொள்ளப்பட்டது. அடித்தலை தமது திறமையாக எண்ணிக் கொள்வோரால் பரப்பப்பட்டது தான். 
         இந்தப் பழமொழி உண்மையான அர்த்தம் கட்டங்களை அமைத்திட அஸ்திவாரம் என்னும் அடி உதவுவது போல, நிற்கவும் நடக்கவும் பாதம் என்னும் அடி உதவுவது போல என்பதுதான். 

அடிக்கப்பட்ட குழந்தை     

      சுதந்திரமாக உலாவித்திரிந்த குரங்கைப் பிடித்து அறையில் பூட்டிவிட்டால் கலாட்டா செய்யும். பாத்திரத்தில் நீரை விட்டு மூடியால் மூடிக்கொதிக்க வைக்கும் போதுஒரு கட்டத்தில் மேலே தள்ளும் நீராவி. இது போலதான் அடித்து அடக்கப்படும் குழந்தைகளின் நிலையும். அந்த அடிக்கும் நேரத்தில் அடங்கிவிடுவார்.ஆனால் மீறுவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருப்பார்.

 குழந்தைகளை அடிப்பது ஏன்? 

      படிக்க வைப்பதற்காகத் தன் குழந்தைகளை அடிக்கும் பெற்றவர்களையும் தமது மாணவ மணிகளை அடிக்கும் ஆசிரியர்களையும் நாம் பார்த்திருக்கிறோம். தாம் அடிப்பதற்கு காரணம் குழந்தைகளைத் திருத்தத்தான் என்று சொல்லிக்கொள்வர்கள். 
                    இது ஒருபுறமிருக்க உளவியல் நிபுணர்கள் கருத்து தாம் குழந்தையை விட மேலானவர்களாக, பெரியோராகக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் தான் அவர்கள் அடிப்பதற்கு காரணம்.
          அதிகாரம் செலுத்த வேண்டுமென்ற எண்ணம் சிறு வயதிலேயே மனிதனுக்குள் புகுந்து விடுகிறது. அதிகாரம் செலுத்த இவர்கள் அடியைத்தேர்வு செய்கின்றனர். இதுதான் குழந்தைகளை அடிக்க வைக்கிறது. 

உள்ளத்தை வளர்க்கும் உற்சாக டானிக் 

        வாழ்வில் தம்மை தட்டிக்கொடுப்ப வரையும், பாராட்டுபவரையும் எவரும் எப்போதும் மறப்பதில்லை. இதை இன்று நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அதுபோல் தம்மைப் பாராட்டுபவர் மீது தனி மரியாதை உண்டு. பாராட்டும் குணம் பெற்ற மனிதன் சமுதாயத்தில் மதிக்கப்படுகிறார் இதை நம் பார்க்கலாம்.
       பாராட்டு பெற வேண்டுமென விரும்புவது மனித மனம் மட்டுமல்ல.

பாராட்டுப் பெற்ற நாய்

              ஐந்தறிவு பெற்ற நாய்க்குட்டி கூட நம் தடவிக் கொடுத்தால் நம்மை எங்குபார்த்தாலும் ஓடி வந்து காலை நக்கும். நம்மைச் சுற்றி வாலாட்டி வரும். நம் பாராட்டு நாயை உற்சாகப்படுத்தி உள்ளது. 
       பக்கத்து வீட்டில் வளரும் கிளியை இரண்டு நாட்கள் தடவிக் கொடுத்தால்போதும். மூன்றாவது நாள் நீங்கள் செல்லும்போது உங்களைப் பார்த்ததும் துள்ளி தலையைக் கூண்டைவிட்டு வெளியே நீட்டிக்குதிப்பது நாம் நடைமுறையில் பார்க்கலாம். 
                         இந்தத்தடவி கொடுப்பதற்கும் பாராட்டுவதற்கும் அவ்வளவு சக்தி உள்ளது. இந்தச்சக்தி தரும் செயலை எங்கும் பயன்படுத்த வேண்டும். குறிப்பாகக் குழந்தைகளிடம் பயன் படுத்த வேண்டும். 

குழந்தை வளர்ப்பு பாராட்டு

                         குழந்தைகளைப் பாராட்டுவது அவர்களின் ஆளுமையை வளர்க்கும்.  ஆளுமையை வளர்க்கும் அற்புத டானிக் பாராட்டு தான். 
              குழந்தை வளர்ப்பதில் நம்மில் பலர் பெரிய தவறுகளைச் செய்து வருகின்றோம். விளையாடி வீடு திரும்பும் குழந்தையின் ஆடை அழுக்காக இருந்தால் அவர்களைத் திட்டுகிறோம் அல்லது அடிக்கிறோம். 
                           இப்படி செய்வதை விட்டு விட்டுக்குழந்தையின் தோலைத்தட்டி அட பரவாயில்லையே! நேற்றைவிட இன்று ஆடையில் அழுக்கு குறைவாக உள்ளதே. என்னுடைய செல்லம் தான் கெட்டிக்காரன். நாளைப் பார்ப்போம் அழுக்கு குறைவாக இருக்கும் என்று சொல்லிப்பாருங்கள்                              குழந்தையிடம் நீங்கள் விரும்பும் மாற்றத்தைப் பார்க்கலாம். என்னுடைய செல்லம் கெட்டிக்காரப்பிள்ளை என்ற பாராட்டு குழந்தைகளின் உள்ளத்தை வளர்க்கும் உற்சாக டானிக். 

பாராட்டு குழந்தைகளைச் சிந்திக்க தூண்டும்:

    குழந்தைகளிடம் இயல்பாக இருக்கக் கூடியது இரண்டு குறும்பு, சேட்டை. இன்று பெரியவர்களாக இருக்கும் நாம் கூட அன்று இதைத்தான் செய்திருப்போம்.                                                    குழந்தைகளுக்குப் பிடித்தமான துறைகளைக் கண்டறிந்து நீ பெரிய டாக்டர் ஆவாய், நீதிபதி ஆவாய், இஞ்சினியர் ஆவாய், ஓவியர் ஆவாய் ஆனால் ஒரு குறை. 

   குழந்தைகளை வீட்டில் பாராட்டு                                                                                                                                   

                   இப்படிசண்டை போட்டுக் கொண்டிருந்தால் நீ விரும்புவது போல் வரமுடியாதே என்று கவலைப்படுவதுபோல் சொல்லி பாருங்கள். உடனே குழந்தைகள் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள். நம்விருப்பம் போல் நடக்கத் தொடங்குவார்கள். 

           பள்ளியில் பாராட்டுங்கள் 

         பள்ளியில் மாணவர்கள் செய்து வரும் வீட்டுப்பாடங்களைப் பார்த்து very good, excellent, Good, super, beautiful hand writting, wonderful பாராட்டினால் அவர்கள் இன்னும் நாளைச் சிறப்பாகச் செய்து வரச் சிந்திப்பார்கள். இது நேர்மறையான சிந்தனை. 

         பள்ளியில் பேசக்கூடாது 

          அதற்கு மாறாக உனக்குப்  படிப்பு சுட்டுப்போட்டலும் வராது. உன்னிடம் நல்ல பண்புகள் கொஞ்சம்கூட இல்லை. உன்னால் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்று சொல்லி வளரும் குழந்தைகளுக்கு எதிர்மறையான மனப்பான்மை வளரும்.

 சித்திக்கத்தூண்டும் பாராட்டு                            

              நேற்றைய விட இன்று நன்றாக வாசிக்கிறாய், மற்றவனை விட அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளாய் என்று பாராட்டப் படும் குழந்தைகள் மேலே உள்ளவர்களை விட நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் வளர் கிறார்கள் என்பது உண்மை. பாராட்டுக்கள் குழந்தைகளைச் சிந்திக்க தூண்டுகிறது. 
        நாய்க்குட்டியும் கிளியும் கூடத்தட்டிக் கொடுப்பது பாராட்டு என்னும் உற்சாக டானிக் குடிக்க விரும்பும்போது குழந்தைகள் மட்டும் விரும்பாமல் இருப்பார்களா என்ன?

  பாராட்டு தன்னம்பிக்கை 

          பாராட்டு என்பது தன்னம்பிக்கை என்ற பயிரை வளரச் செய்யும் உயிர் உரம் என்பது உளவியல் நிபுணர்களின் கருத்து. பாராட்டப்படாது இகழப்படும் குழந்தைகளின் மனதில் தாழ்வு மனப்பான்மை கூடுகட்டி வாழ்ந்துவிடும். 
                        விரைவில் பெருகி நோய் கிருமிகள்போல் உடலையும் உள்ளத்தையும் உரு குலைத்து குழந்தையின் எதிர்காலம் இருண்ட காலமாகிவிடும். 
          தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்தால் தோல்வியாளர் என்ற பெயருடனே வாழ்க்கை நடத்துவார்.

ஆசிரியரின் பாராட்டு 

                          பள்ளியில் படிக்கும் மாணவ மணிகளைப் பாராட்டும் போது ஆசிரியர்கள் smart, great answer, well done,  you're super, wow! Good, Brilliant என்ற வார்த்தையைப் பயன்படுத்தி பாராட்டினால் ஆசிரியரை மாணவன் மறக்கமாட்டான். அவர் நடத்தும் பாடங்கள்மீது ஆர்வம் ஏற்பட்டு உற்சாகமாகப் படிப்பான். 

 அலுவலகத்தில் பாராட்டு 

       அலுவலகத்தில் உயர் அதிகாரி அல்லது சக ஊழியர்களிடையே ஒருவர் செய்யும் வேலையைப் பார்த்து Amazing Effort, you're sharp, creat Discovery, thanks for caring, super job, you make me smile என்ற வார்த்தையைச் சொல்லிப்பாருங்கள். அவர் இன்னும் சுறுசுறுப்பாகவும், சிறப்பாகவும் வேலையில் ஆர்வத்துடன் செயல்படுவார்.

Appreciate your child unlimited 


      பெற்றோர்களும், பெரியவர்களும் இனியாவது இலவசமாக வழங்கப்படும் உற்சாக டானிக் பாராட்டினை குழந்தைகளுக்கு
கணக்கின்றி வாரி வழங்குங்கள். குழந்தைகளின் (self esteem) தன் மதிப்பீடு boost பாராட்டு தான். 
                      பாராட்டுங்கள்! 
குழந்தைகளை அளவின்றி பாராட்டுங்கள்!!

பாராட்டுப்பெற தள்ளுபடி விலையில் 

  இது போன்ற கருத்துக்கள் புத்தக வடிவில் படிக்க இதைத்தொட்டுCheck it
 இந்தப் புத்தகத்தைத் தொட்டுப்படிக்கலாம். 

Saturday 11 July 2020

Appreciation To Say / பாராட்டு! பாராட்டு!!

Appreciation To say/ பாராட்டு! பாராட்டு!!

      இயற்கையின் பாராட்டு

       அது அந்த வானமும் அதில் மின்னும் நட்சத்திரங்களும் எவ்வளவு அழகாக இருக்கின்றன என்று  வியந்தார் ஒருவர். பார்த்து ரசிப்பதற்கு யாருமே இல்லா விட்டாலும்கூட, வானம் இப்படி அழகாகத்தான் இருக்கும் என்றார் மற்றொருவர்.                                                 உண்மைதான், நகரங்களை விட கிராமப்புறங்களில் மனிதனால் மாசுபடாத காற்று, அழுக்குப்படாத பகுதிகளில் வானம் மிகவும் அழகாகத்தான் இருக்கிறது. 
          இந்த இயற்கை அழகு நம் பாராட்டை எதிர்பார்த்துக் காத்திருக்காமல் இயங்கும். பாராட்டுப்பாராட்டு யாரைப் பாராட்டுவது பற்றிப் பார்ப்போம். 

     குற்றால அருவி பாராட்டு 

      குற்றால அருவியில் குளித்திருக்கிறீர்களா!
தண்ணீர் மேலிருந்து நம்மீது மோதும்போது, அவ்வளவு சுகமாக இருக்கும். ஆனால் குளித்து ரசிப்பதற்கு யாருமே இல்லாத இரவு நேரங்களில் குற்றால அருவியில் அதே வேகத்துடன் தான் தண்ணீர் கொட்டிக்கொண்டு இருக்கும். இவையெல்லாம் இயற்கை நியதி.                      அங்கீகாரத்துக்கும் பாராட்டுக்கும் காத்திராமல் எப்போதும் தன் இயல்பிலேயே இயங்கிக் கொண்டிருக்கும். 

    மனித மனநிலை பாராட்டு 

           மனித மனநிலை இதற்கு ஒத்துவராது. மனிதனுக்கு அங்கீகாரம் தேவைப்படுகிறது. பாராட்டு தேவைப்படுகிறது. 'நம்மால் இதைச்செய்யமுடியும்' என்ற நம்பிக்கையை  அவனுக்குத் தருவது அடுத்தவர்களிடம் கிடைக்கும் அங்கீகாரமும் பாராட்டும்தான். 

 சாப்பாடு பாராட்டு 

            'சமையல் நன்றாக இருந்தது' என்று சாப்பிட்டவுடன் பாராட்டுவது சமைத்தவருக்கு எவ்வளவு மகிழ்ச்சியைத் தரும். விருந்துக்குச் சென்ற வீட்டில் கூட, ஊர்க்கதையெல்லாம் பேசுகிறோம். ஆனால் 'சாப்பாடு பிரமாதம்' என்று சொல்ல மறந்துவிடுகிறோம். அல்லது சொல்லக்கூச்சப்பட்டுக்கொண்டு கிளம்பி விடுகிறோம்.

 குழந்தைகள்  பாராட்டு 

     பேரக்குழந்தையுடன் பந்து விளையாடிக் கொண்டிருக்கும் தாத்தா, 'அடடே, எவ்வளவு தூரம் நீ பந்தை எறிகிறாய், தாத்தாவால் பந்தைப் பிடிக்க முடியவில்லை. நீயே பந்தைப் போடு பார்க்கலாம் என்று சொல்லும்போதுதான் குழந்தை கூட இன்னும் உற்சாகமாக விளையாடுகிறது. தாத்தாவையே தோற்கடித்த மகிழ்ச்சியில் குழந்தை  துள்ளிக் குதிக்கும். 
இப்படி பாராட்டு பெற்று வளரும் குழந்தைதான் தன்னம்பிக்கை பெறுகிறது.

கவிஞரின் பாராட்டு 

      ஒரு கவிஞர் எதையும் நயமாகச் சொல்வதில் வல்லவர். நண்பர் ஒருவர் நிறைய வகை வகையான உணவுகளுடன் கவிஞருக்கு ஒரு நாள் விருந்து கொடுத்தார். 'இவ்வளவு உணவு வகைகளும் பிரமாதமாக ஏற்பாடு செய்து விட்டு ஒரேயொரு குறை வைத்து விட்டீர்களே'என்றார் கவிஞர். என்ன?என்ன?என்ன குறை என்று பதறிவிட்டார் அவர் நண்பர். எல்லாம் சரிதான்,'எப்படியாவது எனக்கு இன்னுமொரு வயிறும் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தால்,இன்னும் சாப்பிட்டிருப்பேன்'
என்றார். 

பாராட்டுதல் கலை

     பாராட்டுவது ஒரு கலை.கேட்பவர்களுக்கு அது உயிர்ப்புச் சக்தியைத்தரும். திட்டுவதையே கலையாக வைத்துக்கொண்டு திட்டுபவர்களும் உண்டு. 
     மனைவி ஒரு நாள் ஆம்லெட் செய்து வைத்தாள். 'இன்று அவித்த முட்டை சாப்பிட நினைத்தேன், நீயேன் ஆம்லெட் செய்தாய்?' என்று திட்டினான் கணவன். மறுநாள் மனைவி முட்டையை அவித்து வைத்தாள்.
       "இன்று நான் ஆம்லெட்டைச் சாப்பிட ஆசையுடன் வந்தேன். உன்னை யார் முட்டையை அவிக்கச் சொன்னது? என்று படபடவென்றுக் கத்தினான். எதற்கு வம்பு என்று மறுநாள் ஒரு முட்டையை அவித்தும், இன்னொரு முட்டையை ஆம்லெட் செய்தும் வைத்தாள் மனைவி. இன்று பாராட்டு கிடைக்குமென்று நம்பினாள். யார் உன்னை இப்படி செய்யச்சொன்னது? அவிக்க வேண்டிய முட்டையை ஆம்லெட் செய்திருக்கிறாய். ஆம்லெட் செய்ய வேண்டிய முட்டையை அவித்திருக்கிறாய். உன்னையெல்லாம் திருத்தவே முடியாது என்று அதற்கும் கணவன் கத்தினான். 

வாழ்வில் பாராட்டு 

     அடுத்தவரின் பாராட்டினை எதிர்பாராமல் செய்வதே உயர்ந்த பணி என்பது உண்மைதான். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் சின்னச் சின்னப்பாராட்டுகளும், நன்றிகளும் தேவைப்படவே செய்கின்றன. அடுத்தவர் நம்மைப் பாராட்டும்போது மகிழ்ச்சியை நாம், கண்டிப்பாக அந்த மகிழ்ச்சியைஅடுத்தவருக்குத்
தரக் கடமைப்பட்டுள்ளோம். 

 தன்னை பாராட்ட

      தன்னைப் பிறர் பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் மட்டுமே சிலர் ஒவ்வொரு காரியத்தையும் செய்து கொண்டிருப்பார்கள். பேச ஆரம்பித்தால் தன்னைப்பற்றியும், தன் திறமையைப் பற்றியும், தனது சாதனையைப் பற்றியுமே அளந்து கொண்டிருப்பார்கள். ஒரு மணி நேரம் கழித்து, ரொம்ப நேரம் நானே பேசிக்கிட்டு இருக்கேன். சரி நீங்கள் எதும் பேசவில்லையே, சொல்லுங்கள். என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்பார்கள். 
         இவர்களையெல்லாம் உங்கள் மனதில் ஒரு ஒரத்தில் கட்டம் கட்டி வைத்துவிடுங்கள். அவர்களைப் பற்றி இங்கே பேச்சேயில்லை. 

சின்ன சின்ன பாராட்டு 

              தகுதியானவர்களுக்குச் சொல்லும் சின்ன சின்னப்பாராட்டுகள், அவர்களின் தகுதியை இன்னும் மேம்படுத்தும். 
      குடிக்கத் தண்ணீர் கொண்டுவந்தவருக்குச் சொல்லும் நன்றியிலிருந்து ஓட்டலில் சாப்பிடுவதற்கு உடனே கொண்டு வந்த பணியாளருக்குச் சொல்லும் நன்றிவரை, இந்த ரகம் பாராட்டு தான். 
      உள்ளே நுழையக்கதவைத் திறந்துவிடும் பியூனுக்குச் சொல்லும் நன்றி, கேட்டவுடன் விவரங்களை எடுத்துச் சொல்லும் உதவியாளருக்குச் சொல்லும் பாராட்டு, சொன்ன வேலையைத் திறமையுடன் முடித்த பணியாளருக்குச் சொல்லும் பாராட்டு, உதவும் நண்பனுக்கு மனமுவந்து சொல்லும்நன்றி. இவையெல்லாம் மந்திர சக்தி வாய்ந்தவை. 
     தகுதியானவர்களைப் பாராட்ட வேண்டிய தன் அவசியத்தைப் பாரதி"வீரர்களைப் பாராட்டாத நாட்டில் வீரர்கள் உருவாக வாய்ப்பில்லை" என பாராட்டுத்தேவை என்றார்.

பாராட்டு தரும் சக்தி 

      உண்மையான பாராட்டு மிகப்பெரிய உந்து சக்தி. பாராட்டுபவர், பாராட்டப்படுபவர் இருவரிடமும் உண்மை இருக்க வேண்டும். பாராட்டில் பொய் இருக்க கூடாது. யாரை எப்பொழுது பாராட்ட வேண்டுமோ அப்போது பாராட்டுவது தான் சிறந்தது. நான் சொல்வதைச்சரியா? எனப்பார்க்க தொடுங்கRead more
      முகத்துக்கு நேராகப் புகழ்ந்து தள்ளும் நண்பனை நம்ப கூடாது. உண்மையான நட்பு, அடுத்தவரிடம்தான் பாராட்டிப் பேசும். 

யார் யாரை பாராட்ட வேண்டும் 

       ஆசிரியரிடம் எப்போதும் நன்றி பாராட்ட வேண்டும். அன்புள்ள மனைவியிடம் தனித்திருக்கும்போது பாராட்டிப் பேச வேண்டும். தனது பிள்ளைகளைப் பற்றிப்பெருமை, மனதில் வைத்துப் பாராட்ட வேண்டும். பணியாளரை வேலை முடிந்தவுடன் பாராட்ட  வேண்டும். 
      இந்தப்பட்டியலைத் தருவது நானல்ல, ஔவையார் தான். இதோ ஔவையின் பாட்டு வரிகள். 
       நேசனைக் காணாவிடத்தில் 
                  நெஞ்சாரவே துதித்தல்,
        ஆசானை எவ்விடத்தும் அப்படியே -
        வாச மனையாளைப் பஞ்சணையில்,                   மைந்தர் தம்மை நெஞ்சில், 
         வினையாளை வேலைமுடி வில்! 
     பாராட்டுவதற்குச் சொற்கள் வேண்டுமென்ப தில்லை. புன்னகையில் கூடப்பாராட்டலாம். அதற்கு இதயத்திலிருந்து சிரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

        
பாராட்டு புத்தகம் தள்ளுபடி விலையில் 

இது போன்ற பல அரியக்கருத்துகள் நிறைந்தப்புத்தகம் கீழே உள்ளது. https://amzn.to/3gMBZZ4இதைத்தொட்டுப் படிக்கலாம். பிடித்தால் வாங்கிக் கொள்ளுங்கள். 


இந்த புத்தகத்தின் மீது தொட்டால் புத்தகம் பற்றியக்கருத்துகள் வரும். தேவைப்பட்டால் வாங்கலாம். இல்லையென்றால் வெளியே வந்து விடலாம். 

Sunday 21 June 2020

நம்பிக்கை தான் வாழ்க்கை / Confidence is life

     " மற்றவர்களை நம்பும் அளவுக்கு உன்னையே நீ நம்பு" நம்பிக்கை என்பது பிறரை மட்டும் நம்புவது இல்லை. முதலில் நம்மை நாமே நம்ப வேண்டும். அப்பொழுது தான் பிறர் நம்மீது நம்பிக்கை வைப்பார்கள். நம்முடைய  அடுத்த நொடி வாழ்க்கை என்பது நம் நம்பிக்கையில்  தான் பிறக்கிறது . எப்படி இருந்தாலும் நம்பிக்கை தான் வாழ்க்கை. இதை பற்றிய ஒரு கதை. 
      துறவி ஒருவர் ஆற்றங்கரை ஓரத்தில் வாழ்ந்து வந்தார். அவருக்கு தண்ணீர் மீது நடந்து சாதனை புரிய வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. அதற்காக நாற்பது ஆண்டுகளாக வழிபாடு, மந்திரம் என முயற்சி செய்து கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார். 
       துறவி  விஷ்ணு பக்தர் என்பதால் அசைவ உணவுகளைத்தவிர்த்து மற்ற சைவ உணவு வகைகளை உண்டு வந்தார். அதன் பிறகு சில ஆண்டுகளாக பால் மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டார். 
         அவருக்கு ஆற்றின் மறுகரையில் வாழும் சிறுமி தினமும் பால் கொண்டு வந்து கொடுத்துக்கொண்டிருந்தாள்.அந்த காலம் மழை காலமாக இருந்தது. வானமும் கருமேகங்களால் சூழ்ந்து இருந்தது. 
        ஒரு நாள் அந்த சிறுமியின் தாய், "மகளே,  வானம் மப்பும், மந்தாரமுமாக இருக்கிறது. கனமழை வந்தால் ஆற்றைக்கடந்து போவது சிரமாக இருக்கும். எனவே நாளைக்கு பால் கொண்டு வர முடியாது என்று துறவியிடம் சொல்லிவிடு" என்று கூறி அன்றைய பாலைக் கொடுத்துமகளை அனுப்பி வைத்தார். 
          அந்தச் சிறுமி தாய் சொன்ன வார்த்தையை நினைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள். சிறுமி தன் தாய் சொன்ன வார்த்தையை அப்படியே அந்த துறவியிடம் கூறினாள். அவரோ " குழந்தாய், ஆற்று வெள்ளத்தைப் பார்த்து நீ கவலைப்படாதே! கண்களை மூடிக் கொண்டு நான் கூறும் மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே நட, ஆற்று நீர் மீது நீ கடந்து வரலாம் " என்று கூறி விட்டு அவளுக்கு மந்திரத்தைப் போதித்தார். 
      
           மறுநாள் மாலை வேளை பால் கொண்டு செல்ல சிறுமி தயார் நிலையில் நின்றாள். அப்பொழுது தீடீரென மின்னல் வெட்டியது, இடி இடித்துக் கொண்டு மழைக்கொட்டியது.சிறிது நேரத்தில் மழை குறைய சிறுமி பால் கொடுக்க தயாரானாள். மழைக்காரணமாக ஆற்றில் தண்ணீர் வர ஆரம்பித்தது. இதனால் சிறுமியின் தாய், இன்று போகவேண்டாம் என்று தடுத்தாள். "அம்மா! ஆற்று நீரைக் கடக்கும் மந்திரத்தை துறவி எனக்கு சொல்லிக் கொடுத்துள்ளார்.  நீங்கள் கவலைப்பட வேண்டாம் " என்று கூறி விட்டு நடக்க ஆரம்பித்தாள். 
        ஆற்றங்கரை வந்தடைந்த சிறுமி கண்களை மூடிக் கொண்டு மந்திரத்தைக் கூறிக் கொண்டு ஆற்று நீர் மேல் நடக்க ஆரம்பித்தாள். அக்கரையில் இருந்த துறவியிடம் பாலைக் கொடுத்தாள். துறவிக்கு ஒரே வியப்பு கண்கள் பார்ப்பது கனவா?, உண்மையா? என்று உற்றுப்பார்த்தார். அதிசயத்தைப் பார்த்தார். மீண்டும் சிறுமி பாலைக் கொடுத்து விட்டு கண்களை மூடிக் கொண்டு ஆற்று நீர் மீது நடந்து வீட்டிற்கு சென்றாள். 
        துறவி நினைத்தார். இதற்காகத்தானே நாற்பது வருடங்களாக முயற்சி செய்தேன். நம் கூறியதைக் கேட்ட அச்சிறுமி நடந்தாளே. நாமும் நடப்போம் என்று ஆற்றிலே கால் வைத்தார். அப்படியே தடுமாறி விழுந்தார். ஏன் என்று யோசியுங்கள்.
     ஏனிந்த நிலை? துறவி கூறிய வார்த்தை     களில் சிறுமி நம்பிக்கை வைத்தாள். 
ஆதலால் ஆற்றை அவள் எளிதாகக் கடந்தாள். ஆனால் துறவிக்கு அவர் மீது முதலில் நம்பிக்கை இல்லை. பிறகு அவர் கற்ற மந்திரத்தின் மீதும் நம்பிக்கை இல்லை. நம்பிக்கை இல்லாத எந்தச் செயலும் முழுமை பெறாது. "உன்னை விட யாரையும் குறைத்து எடைப்போட்டு விடாதே! " துறவி சிறுமியைக் குறைவாக மதிப்பிட்டார். ஆனால் சிறுமி செயலைச்செய்து காண்பித்தாள். 

          டால்ஸ்டாய் "நம்பிக்கையே வாழ்க்கையை இயக்கும் சக்தி "என்றார்.  சாதனையாளர்கள் நாளை சாதனை படைப்பேன் என்ற நம்பிக்கையால் தானே சாதனைகளைப் படைத்தார்கள். ஆனால் கண்களை மூடிக் கொண்டு ஆற்றில் இறங்க வேண்டாம். பெற்றவர்கள் மீது நம் நம்பிக்கையை கண் மூடித்தனமாக வைக்கலாம். ஏனெனில் அவர்கள் நம் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். 
         கணவன் மனைவி மீதும், மனைவி கணவன் மீது நம்பிக்கை வைத்தால் இல்லறம் இனிக்கும். பெற்றோர்கள் குழந்தை மீதும், குழந்தைகள் பெற்றோர் மீதும்  நம்பிக்கை வைத்தால் தான் குடும்பம் பல்கலைக்கழகமாக மாறும். 
   நம்பிக்கை வை ! நம்பு !!
நம்பிக்கை தான் வாழ்க்கை !!!

Wednesday 17 June 2020

மாணவர் வளர்ச்சி ஆசிரியர் கையில்!!

"எந்தத்தொழிலும் இழிவல்ல. செய்யும் தொழிலே தெய்வம்", என்று நினைக்க வேண்டும். எந்தத் துறையில் அல்லது தொழிலில் ஈடுபட்டாலும் அந்த துறையை அல்லது தொழிலை நாம் கௌவரப்படுத்த வேண்டும். அந்தத்தொழிலில் மாறி வரும் நவீன உலகிற்கேற்ப புதுமைகளைப் புகுத்த வேண்டும். 
              
அந்தத் தொழிலை மேன்மை அடையச் செய்ய தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.திறமையை வளர்த்துக் கொள்ள தேவையான பயிற்சி, ஆலோசனை, தொழில் தொடர்பான நூல்களைப்படித்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். 
"முடியும் என்றால் முயற்சி செய், 
முடியாது என்றால் பயிற்சி செய் ". 

நாம் செய்யும் தொழிலுக்கு தேவையான குணநலன்களை, திறமைகளையும் வளர்த்துக்கொண்டால், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பிறர் உங்களிடம் இருந்து செயலைச் செய்யும் வழிமுறைகளை கேட்பார்கள். 

அதிலும் ஆசிரியர் பணி அறப்பணி, அற்புதமான பணி. வருங்கால இளைஞர்களை வார்த்தெடுக்கின்ற சமூகப் பணி. 

'ஆசிரியர் பணி அறப்பணி, 

அதற்கே உன்னை அப்பணி '

ஆசிரியர் பணியில் தன்னை முழுவதும் அர்ப்பணித்துப்பணியாற்றிய ஆசிரியப்பெருமக்கள் பலர் அன்று முதல் இன்று வரை  உள்ளனர். 

தத்துவ மேதை டாக்டர் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் இந்திய தத்துவம் குறித்து 

சிறந்த நூல் தீட்டும் படி வழி காட்டியவர் அவரது ஆசான் பேராசிரியர். முயர்ஹெட்  (Prof. Muirhead ) என்பவர் தான்.

மாவீரன் அலெக்ஸாண்டரை உருவாக்கியதில் ஆசிரியர் அரிஸ்டாட்டிலுக்கு மகத்தான பங்கு உண்டு. பல துறைகளிலும் அறிவு பல்கிப் பெருக வேண்டும் என்ற ஆவல் மிகுந்த அலெக்ஸாண்டருக்கு, அந்த ஆவலைப் பூர்த்தி செய்தவர், அரிஸ்டாட்டில் என்ற தத்துவ மேதை தான். அரிஸ்டாட்டில் ஆசிரியரிடம் பற்று கொண்டு அவர் கருத்துக்கள் பின்பற்றி உலகம் போற்றும் மாவீரனாக திகழ்ந்தவர் அலெக்ஸாண்டர். 
அலெக்ஸாண்டர் போருக்குப்போகும் போது
அரிஸ்டாட்டில் விளக்க உரை எழுதிய இலியத் என்ற காவியத்தைக் கையோடு எடுத்துச்சென்று கண்ணயரும் போது படிப்பாராம். 
"உன்கடமையைச் செய், உனக்கு வேண்டியவைத்தவறாது கிடைக்கும்."
என்ற வரிகள்  நம்மை மேலும் சிறப்பாக பணியாற்ற ஊக்குவிக்கும். 
என்சரிதம் என்ற தலைப்பில் சுயசரிதை எழுதிய உ.வே.சா .வின் ஆசிரியர் தியாகராசசெட்டியார். தியாகராசசெட்டியார் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர். ஆசான் தியாகராசசெட்டியார் வரலாற்றை மாணவர் உ. வே.சா எழுதியுள்ளார், எனில் அந்த ஆசான் எந்த அளவு மாணவர் மனதில் பதிந்துள்ளார் என்பதைப் புரிந்துக்கொள்ள முடிகிறது. 
எல்லாரும் பார்த்து ரசிக்கும் மலர் போல வாழக் கற்றுக்கொள். என்ற வரிகளை மனதில் வைத்துக்கொண்டு செய்யும் தொழிலை சிறப்பாகச் செய்யுங்கள். 
"புகழ் என்பது நம் செயல்களின் எதிரொலி"
நாம் பிறரால் புகழப்பட வேண்டும் என்றால் செய்யும் தொழிலை சிறப்பாக செய்ய வேண்டும். 
திறமையும் பண்பும் நிறைந்த ஆசிரியர்களால் தான் மாணவர்கள் வளர்ந்து முன்னேறுவார்கள்.
சமூக அக்கறையுடனும், ஈடுபட்டுடனும், ஆர்வமுடன் பணியாற்றும் ஆசிரியர்கள் தான் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும். 
மாணவர்கள் முன்னேற்றம் ஒன்றையே மனதில் வைத்திருக்கும் ஆசிரியர்களால் தான் இந்தச் சமூகம் மேன்மை அடையும். 
மாணவர் வளர்ச்சி ஆசிரியர் கையிலே. 
என்பது உங்களுக்கு புரிகிறதா? 



Sunday 14 June 2020

உண்மை சம்பவம். Real event

   "அனுபவமே சிறந்த ஆசிரியர் " என்பது பழமொழி. இன்று சிறந்த ஆசிரியராக பணியாற்ற அனுபவம் பெற வேண்டும். என்பது புது மொழி.பள்ளி வாழ்வின் அனுபவம் பேசுகிறது இதோ.
              பள்ளியில் மதிய உணவு இடைவேளையைக்குறிக்கும் மணி ஒலித்தது. மாணவ, மாணவிகள் தத்தமது வகுப்பறைகளில் இருந்து வேகமாக மதிய உணவு வாங்க உற்சாகத்துடன் ஓடி வந்தனர். 
           
மதிய உணவைப் பெறவதற்காக மாணவர்களுக்கு என்று தனி வரிசையும், மாணவிகளுக்கென்று தனி வரிசையும் இருந்தது. 
ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் முருகன் தனது புத்தகப்பையிலிருந்து உணவுத் தட்டை எடுத்து கையில் வைத்து தட்டிய படியே, வேகமாக வரிசையில் நின்றிருந்த மாணவர்களை தாண்டி சென்றான் 
முறை மீறிய அவனது செயலைக் கண்டு வரிசையில் நின்றிருந்த மாணவர்கள் சத்தம் போட்டு பின்னே வாடா முருகா என கத்தினார். 
  வகுப்புத் தலைவன் ராமு, முருகன் அருகில் சென்று, நீ செய்வது முறையல்ல, வரிசையில் உனக்குரிய இடத்தில் வந்து நில் எனக் கூறினான். அப்படியே நின்று இருந்ததால், அவன் கையைப் பிடித்து இழுக்க, எவரும் எதிர்பாரதாவிதத்தில் ஓங்கி பலமாக ராமுவைமுகத்தில் அடித்தான். 



'அம்மா...' என்று அலறியபடி ராமு தரையில் மயங்கி விழுந்தான். அவன் மூக்கில் ரத்தம் வழிந்தது. அதைப்பார்த்த சக மாணவர்கள் கூச்சலிட, பால முருகனும், கண்ணனும் ஆசிரியர் அறைக்கு ஓடினர். 
பதற்றத்துடன் அங்கு வந்த வகுப்பு ஆசிரியர் ராமச்சந்திரன், ராமுவுக்கு முதலுதவி செய்ய ஏற்பாடு செய்தார். இங்கு நிலவிய பரபரப்பான சூழ்நிலையை பயன்படுத்தி முருகன் ஓடி விட்டான். 
அவனை பிடித்து வர,ஆசிரியர் சக மாணவர்களை முருகன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்று கூறினார். இந்த செய்தி தலைமை ஆசிரியர் பரமசிவம் அவர்களிடம் வகுப்பு ஆசிரியர் ராமச்சந்திரன் தெரிவித்தார். 
உடனே கோபம் வந்து அலுவலக உதவியாளரை அழைத்து முருகன் வீட்டுக்குசென்று அவனை அழைத்து வர சொன்னார். 
முருகன், ஒரு வித்தியாசமான மாணவன். பயங்கரமான சேட்டை செய்வான். படிப்பு என்றாலே அவனுக்கு வேப்பிலை போல் கசக்கும்.
வகுப்பிலேயே அவன் தான் உயரமானவன். வகுப்பில் இருப்பவர்கள் அனைவருமே அவனுக்கு விரோதிகள் தான். 
அவசரத்தில் காரியம் செய்வதும், ஆத்திரத்தில் கை ஓங்குவதும் அவன் பிறவி குணம் என வகுப்பு ஆசிரியர் அடிக்கினார். 
  
"உண்மையை சொல்வதற்கு நினைவாற்றல் தேவையில்லை".என்பது போல மனதில் உள்ளதைக்கொட்டித் தீர்த்தார். 
வகுப்பாசிரியர்,முருகன் பற்றி தலைமை ஆசிரியரிடம் கூறினார். இந்தச்சமயத்தில் அங்கு உதவியாளர் வந்து   ஐயா, முருகன் வீட்டில் யாரும் இல்லை, பக்கத்து வீட்டில் இருந்தவர்களிடம் முருகன் பெற்றோரைநாளை பள்ளிக்கு உங்களை பார்க்க வர வேண்டும் என நீங்கள் சொன்னதாகச்சொன்னேன் . 
மற்ற பாட ஆசிரியர்களிடம் முருகன் பற்றி விசாரிக்க அவன் சேட்டை செய்வான், வீட்டுப்பாடம் முறையாகச் செய்யமாட்டான்என்று கூறினார்கள். 
முருகனை இனிமேலும் பள்ளியில் வைத்திருப்பது எவ்வித நியாயமும் இல்லை சார்  என்று வகுப்பு ஆசிரியர் மீண்டும் கூறினார். முரட்டுத்தனமும், ஒழுங்கீனமும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறன...என மற்ற பாட ஆசிரியர்கள் கூறினார்கள். 
தலைமை ஆசிரியர் பரமசிவத்திற்கு இவர்கள் சொல்லச்சொல்ல கோபம்தலைக்கு ஏறுவது போல் இருந்தது.
இனிமேலும் முருகனைப் பள்ளியில் நீடிக்க விடுவது சரியில்லை என முடிவு செய்தார். 
சரி ராமச்சந்திரன். ..நீங்கள் சொல்வதில் எனக்கும் உடன்பாடு இருக்கிறது. நாளை கல்வி அதிகாரி இங்கு வர இருக்கிறார். அவரிடம் கலந்து பேசி அவனை பள்ளியை விட்டு நீக்கி விடலாம், என்று தலைமை ஆசிரியர் கூற திருப்தி அடைந்து எழுந்து சென்றார் ராமசந்திரன். 
அடுத்த நாள் காலை வழிபாட்டு கூட்டம் தொடங்கும் போதே கல்வி அதிகாரி  வந்தார். காலை வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டு, பள்ளி வளாகத்தைச் சுற்றி பார்த்தார். வளாகம் தூய்மையாக இருப்பதை கண்டு பாராட்டினார். பின்னர் அலுவலகம் வந்து பதிவேட்டில் கையெழுத்து இட்டார். 
பள்ளியின் வளர்ச்சி பற்றி தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார். அவர் ஒவ்வொன்றாக சொல்லி இறுதியில் முருகனின் பிரச்சினையைப் பேச தொடங்கினார்.
மாணவன் முருகனிடம் இருக்கும் கெட்ட குணங்கள் , திருட்டுப் பழக்கம் ஆகியவை குறித்து வரிசையாய் எடுத்துச் சொன்னார் தலைமை ஆசிரியர். 
இனியும் முருகன் பள்ளியில் வைத்து இருப்பது ஆபத்து சார் என்றார். அனைத்தையும் பொறுமையாய் கேட்டு கொண்ட கல்வி துறை அதிகாரி, உங்கள் ஆதங்கமும், கோரிக்கையும் எனக்கு புரிகிறது என்றார். இருந்தாலும் ...
ஏதோசொல்லவர்றீங்க...ஆனால் என்ன சார்? ஏதும் புரியாமல் கேட்க.
   உங்களை ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே? 
  கேளுங்க சார் ...
முருகனை அவனுடைய தவறுகளுக்குக்காகக் கண்டித்திருக்கிறீர்கள் சரி. அவன் ஒழுங்கு படவில்லை. அதற்காக அவனைப் பள்ளியில்இருந்து விரட்டுவது தான் ஒரே வழியா? தவறானவழியில் செல்லும் மாணவனை; திருத்துவது என்று ஒன்று இருக்கிறதே. அதை முயற்சித்துப்பார்த்ததாகவே தெரியவில்லை! 
நெற்றி பொட்டில் அறைந்தாற் போல் இருந்தது தலைமை ஆசிரியருக்கு. ஆம், நாம் அவனைக் கண்டித்திருக்கிறோம். பயமுறுத்தியிருக்கிறோம். தண்டனை கொடுத்திருக்கிறோம். ஆனால் அவனைத் திருத்த எந்த முயற்சியும் செய்யவில்லையே முதன் முறையாக தன்னை நினைத்து வெட்கப்பட்டுக்கொண்டார்.
நினைத்துப்பாருங்கள் பரமசிவம், நம்முடைய வாகனம் பழுதடைந்தால் அதைச்சரி செய்து ஓட்டத்தானே முயற்சி செய்கிறோம் .அதை 
உடனே நம்மிடமிருந்து தொலைத்துவிட வேண்டும் என நினைப்பது இல்லை. சாதாரண வாகனத்தில் காட்டும் இந்த அணுகுமுறையை, அறியாத வயதில் இருக்கும் ஒரு மாணவனிடம் ஏன் காட்டக்கூடாது? 
எதிர்காலச்சிற்பிகளை உருவாக்குவதாக கூறும் கல்வி நிறுவனமே இதை போன்ற மாணவர்களைத் திருத்த முயற்சி செய்யாமல் வெளியேற்றினால், இந்த சமுதாயத்தில் யார் அக்கறை கொள்ளப்போகிறார்கள்? 
இயல்பிலேயே நல்ல குணம் இல்லாத ஒருவனை அனைவரும் புறகணித்தால், அவன் ஒரு சமூக விரோதியாகத்தானே உருவான் .?என உணர்ச்சிகள் பொங்க பேசினார் . 
அலுவலகத்தில் கோப்புகள் உடனே காலத்தைக் கழிக்கும் ஓர் அதிகாரி மனதில் எழுந்த இந்த சிந்தனை, முப்பது ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் இருந்த நமக்கு தோன்றவில்லை. ஆசிரியர் பணியில் இன்னும் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது, அவர் பல்வேறு பள்ளியில் பெற்ற அனுபவம் நமக்கு வழிகாட்டியது. முருகனை என்பொறுப்பில் எடுத்து அவனிடம் இருக்கும் பிற திறமைகள் மூலம் திருத்துவேன். 
இங்கு அனுபவம் பேசுகிறது . . . 

Friday 12 June 2020

விதியை மதியால் வெல்ல முடியும் / vithiyai mathiyal vella mudiyum

     விதியை மதியால் வெல்ல முடியும் / vithiyai mathiyal vella mudiyum

                    "நேற்றைய விட இன்று வளர்ந்தோம் என்ற நம்பிக்கையே வெற்றி". விதி எனக்குச்சதி செய்து விட்டது எனப் புலம்பிக் கொண்டே இருப்பவர்கள் பலரையும் நாம் பார்த்து இருக்கிறோம். என் தலை விதி இப்படி இருக்கு. அவன் விதி அதனால் தான் பொட்டுனு போனான். அவன் தலை விதி அவனைப்பிடித்து ஆட்டி வைக்கிறது.

 விதியின் மீது பழி :                 

               எல்லாம் விதிப்படி தான் நடக்கும் என்று நினைத்து வாழ்க்கை நடத்துபவர்கள் பலர். என் தலை விதி என்று சோகப்பட்டு முயற்சி செய்யாமல் முடங்கிக் கிடக்கின்றனர் பலர். சோம்பலில் வாழ விதியின் பழி போடுகிறார்கள்.

        விதி வலியதா? மதி வலியதா? 

                                                                                                                      விதி என்ன அவ்வளவு வலிமையானதா?  அதை வெல்ல முடியாதா? என்று கேட்டால், விதியை நிச்சயம் வெல்ல முடியும். அது மட்டுமல்ல அவ்விதியை நமக்குச் சதமாக மாற்ற முடியும். விதியை  மதியால்வெல்லும் வழிகள் இதோ

                                               விதியை மதியால் வெல்லும் வழிகள்                          

                விதியை வெல்ல முதல் வழி விடாமுயற்சி. அந்த விடாமுயற்சியும் தொடர் பயிற்சியும் விதியைவெல்ல முடியும்.                               விடாமுயற்சி  விதியைவிட வலியது என வள்ளுவர் கூறியுள்ளார். மிகச்சரியான முயற்சியால் அவ்விதியையும் வெல்ல முடியும் என்று திருக்குறளில் எழுதி வைத்து விட்டார். முயற்சி திருவினையாகும், முயற்சி மெய் வருத்தக்கூலி தரும் போன்ற வரிகள் நமக்குத்தெரியும்.

            விதியை வெல்லும் வண்டு                       

               மலர்த்தோட்டத்தில் தேனெடுக்க நுழைந்த வண்டு, ஒவ்வொரு மலராக உறிஞ்சிப்பார்த்தபோது, பாதி மலர்த் தோட்டமே தேனற்று மலர்ந்து இருந்தது. வண்டு சோர்ந்ததா? ஓய்ந்ததா? சொந்தஊரில் தோட்டமில்லை என்றாலும், பக்கத்து ஊருக்குப்பறந்து சென்று தேன் எடுக்கும். 
                            தேன் எடுக்க முன்னூறு மலர்களை உறிஞ்சி, முப்பது சதவீதத்தை உண்டு, எழுபது சதவீதத்தைத் தேன் கூட்டில் சேமித்து வைக்கும். 
                                      இது உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும், சேமிப்புக்கு உதாரணமாகும். நம் உச்சியைப் பிடித்து உலுக்குகிறது அல்லவா.

             விதியை மதியால் வென்ற மனிதர்கள் 

                  
                 திக்கு வாயாகவும்  ஊமையாகவும் பிறந்த பல்கிவாலா, விதியை எண்ணி நோகாமல் முயன்று முயற்சிகள் பல செய்து மிகச்சிறந்த சட்ட மேதையாக விளங்கினார்.                                             அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கன் முதல் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் வரை தங்களின் ஆக்கப்பூர்வமான முயற்சி களால் விதியை வெற்றி சாதனை படைத்தனர்.           முதல் அடி தோல்வியா? புன்னகைசெய்   மூன்றாவது அடி தோல்வியா?               கலகலவெனச்சிரி                                
                  முப்பதாம் அடி தோல்வியா?                   நிமிர்ந்து நில் !                                                                                         ஏன் என்றால் நீ முதல் முறை வென்றவனைவிட சிறந்தவன். முப்பத்து முறை முயற்சி செய்தவன் நீ மிகச்சிறந்தவன்.மனவலிமைஇல்லாதவர் களும், உழைக்காமல் சோம்பலில் மடிபவர்களும் தான் விதியைக் குறை கூறுவார்கள்.    

     ஆறுதலுக்காக விதி


                 இயலாமையை மறைக்க விதி  என்று கூறிவருகின்றனர். தோல்வியை மறைப்பதற்காக மன ஆறுதல் பெற உருவாக்கப்பட்டது தான் இந்த 'விதி' என்ற  வார்த்தை.                                                                                            தன்னுடைய விதியைப்பற்றி தினமும் குறைச்சொல்லி காலம் கடத்தினால் மோசமான வாழ்க்கையை  வாழ வேண்டி வரும். நாம் ஒரு காரியத்தில் வெற்றியடைய, தோல்வியடைய விதி காரணம் அன்று. 
               

          விதியை வெல்லும் எண்ணங்கள் 

                உன்னுடைய எண்ணங்கள் தான் வெற்றி பெற தூண்டும். நமது மனநிலை பொறுத்துதான் அமையும் என்பார்கள் பெரியவர்கள். நமது மனநிலைக்கு ஏற்றபடி தான் விதியின் செயல்பாடுகள் இருக்கும். ஒருவரின் விதிக்கு அவரே எஜமான். 
  " எத்தனை உயரம்  இமயமலை அதில் இன்னொரு சிகரம் உனது தலை " என்ற கவிஞரின்   மந்திர வரிகள் விதியை வெல்லும் டானிக். 
             உறங்குபவனைக் கண்டு துடிதுடித்து; எழாததால் அடித்துக் கொண்டது  கடிகாரம் !!

           விதியை  மதியால் வென்ற சார்லி சாப்ளின்         

                          சப்பைக் கால்களுடன் பிறந்த சார்லி சாப்ளின் தன் விதியை நொந்து வீட்டிலிருக்கவில்லை. விதியையே தனக்கு சாதகமாக்கி வாழ்வின் லட்சியத்திற்கு ஏணிப்படிகளாக மாற்றிக்கொண்டு, பலராலும்  கேலியாகப் பேசப்பட்ட தன்னுடைய நடையினாலேயே உலகின் மிகச்சிறந்த நடிகராகப் புகழ் பெற்றார். விதியை தன்னுடைய மதியால் வென்றவர் இவரே.

           விதியை வெல்லும் உயிரினங்கள் 

             ஆறறிவுக்குக் குறைந்த உயிர்கள் கூட இயற்கை விதியை எதிர்த்துப் போராடுகிறது. பறவைகள் கூடுகட்டி வாழ்வதும், எலிகள் வலை தோன்றிக் கொள்வதும், கரையான்கள்  புற்று அமைப்பதும்  இயற்கை விதியை வென்ற செயல் அல்லவா. 
                         இதைவிட பல கருத்துகளைத் தெரிந்து கொள்ளஇதைத்தொட்டுப்படியுங்கள். 

                      விதியென்று இருந்திருந்தால் மனிதன் இன்று வரை ஆதிமனிதனாகவே வாழ்ந்து கொண்டிருப்பான். இத்தகைய அறிவியல் ஆராய்ச்சி எப்படி தோன்றி யிருக்கும். எனவே இனி மேல் விதியின் மீது பழிப்போட்டு காலத்தை வீணாக்குவதை விடுங்கள். 
                      

   விதியை மதியால் வெல்லும் வெற்றி வரிகள்

      இருட்டிலும் ஒளி இருக்கும்
விதியிலும் வழி கிடைக்கும். 
விண்மீன்கள் இருட்டில் வழிகாட்டும். 
விடாமுயற்சி விதியை வெல்லும். 
விதியைச்சவாலாக ஏற்போம் !!
சாதனைகள் பல படைப்போம்  !!
                                   ந்தப்புத்தகத்தில் பல அற்புதமான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளது. 
    வாங்கி படிங்க விதியை வெல்லுங்கள்.













Thursday 11 June 2020

பிரச்சனை ஏற்பட Problem reasons

          பிரச்சனை  ஏற்பட

வாழ்க்கையில் பிரச்சனை 

               என்னுடைய வாழ்க்கை முழுவதும் பிரச்சனை. நின்றால் பிரச்சனை, நடந்தால் பிரச்சனை, உட்கார்ந்தால் பிரச்சனை எங்கும் பிரச்சனை எதிலும் பிரச்சனை எனக்கு மட்டும் தான் பிரச்சனை எனப்பலரும் நினைத்துக் கொண்டு உள்ளார்கள். இது தவறான முடிவு.                           முதலில் இதைத்தூக்கி எறிந்து விட்டு பிரச்சனைகள் ஏன் ஏற்படுகிறது என்று யோசிப்போம். பிரச்சனைகளின் கூட்டு உருவம் தான் வாழ்க்கையா? அல்லது வாழ்க்கை பிரச்சனைகளின் தொகுப்பா?  இந்தக்கேள்விக்கு பதில் தேட கேள்வியே சிக்கலாக இருக்கே. 

மனித பிறப்பில் பிரச்சனை 

          நம்மில் பலர் உலகில் மனித  பிறப்பே  ஒரு பிரச்சனைதான், ஒரு சிக்கல் தானா என நினைக்கிறார்கள். 
        "கடவுளே ! மறுபடியும் என்னைப் பூமியில் பிறக்க வைத்தால் இந்த மனித பிறவியாக  மட்டும் பிறக்க வைக்காதே. இந்தப்பிறவியில் பட்ட கஷ்டம் போதும்  இனியும் தாங்க முடியாது. "என்று பல முறைச்சொல்வதும் உண்டு 
                    மனிதன் குழந்தையாகப்பிறக்கிறான். இது ஒரு சாதாரண நிகழ்ச்சி. அவன் குழந்தையாகப்பிறந்து தவழ்ந்து நடந்து மகிழ்ச்சியாக இருக்கிறான். அவன் செய்யும் செயலைப் பார்ப்பவர்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள். 
              அப்படி என்றால் எப்போது அவன் பிரச்சனையைச்சந்திக்கிறான். அவன் உலகத்தைப்புரிந்து கொள்ளும் போதும், வளரும் போதும் பிரச்சனையைச்சந்திக்கிறான். சந்தித்து ஆக வேண்டும் என நிர்பந்தம் ஏற்படுகிறது. 

பிரச்சனையை  தீர்க்க 

               பிரச்சனையை ஒதுக்கி வைத்து விட்டு அதைக்கண்டு கொள்ளாமல் மனிதன் வளர முடியுமா?  அப்படி வருபவன் அரை மனிதனாகத்தான் இருக்க முடியும். 
                 மனிதன் மற்ற எல்லா பிராணிகள் போலவேதான் பிறக்கிறான். ஆனால் மற்ற பிராணிகள் வாழ்க்கை நடத்த மனிதன் அளவு சிரமமும் சிக்கலும் படுவதில்லை. எந்த இடத்தில் இருந்தாலும் சில மணிநேரத்தில் அதைத்தன் இருப்பிடத்தைப் போலவேதான் நினைகிறது(மனிதன் தன்னோடுவளர்க்கும் பிராணிகள் தவிர)
               ஒரு காட்டிலிருந்து மற்றொரு  காட்டிற்கு பிராணிகள் தூக்கி சென்று விட்டனர். சில மணிநேரம் அலைந்து திரிந்து பின்பு பசித்த நேரத்தில் சாப்பிட்டது, தூக்கம் வருகிற போது  தூங்கியது , இனப்பெருக்கம் செய்ய ஒன்று கூடியது, இப்படி வாழ்க்கை கழித்தது. 
              அது போல மனிதனை காட்டில் விட்டால் என்னதான் நடக்கும் யோசிங்கள் நண்பர்களே, பழக்கமான இடம் இல்லாமல் பதறுவான், என்னால் இப்படியொரு கணம் கூட இருக்க முடியாது.
            நடுகாட்டில் நின்று கொண்டு ஆவி பறக்கும் காப்பியை எண்ணி ஏங்குவான்; சுடச்சுட தோசையை நினைத்துக் கண்ணீர் விடுவான் ; இட்லி சாம்பார் இல்லையா எப்படி காலைப்பொழுதுபோகும் ; வெங்காய சாம்பார், வெண்டைக்காய் பொறியல், வாசனை தூக்கும்  மட்டண் ,சிக்கன் சேர்ந்த அரிசி சாதம் நினைத்து நினைத்து உருகி விடுவான். 
                 
       அவன் முன் கடந்த வாழ்க்கை பற்றியே பேசிக் கொண்டு இருப்பதால் என்னலாபம். மற்ற பிராணிகள் இடம் இல்லாதது ஒன்று மனிதனிடம் உள்ளது. அது பகுத்தறிவு, பகுத்தறியும் சக்தி, சிந்தனை செய்யும் மனம். 
          மனிதனின் பிரச்சனைகள் அவன் பகுத்தறியும் தன்மையால் தான் ஏற்படுகிறது. யார் ஒருவர் சிந்திக்கும் திறன் படைத்த பேரறிஞராக விளங்குகிறானோ அவர் தான் அதிகம் கஷ்டம் அடைகிறான்.
         ஆனால் மனிதனாக பிறந்து சந்தர்ப்ப வசத்தாலோ வேறு எப்படியோ  பித்தனாகி  விட்ட ஒருவனை பாருங்கள். அவன் சிந்திக்கும் திறனற்ற அந்தப் பைத்தியம் மகிழ்ச்சியுடன் காலம் கடத்துவான். 
                    பகுத்தறிவுடன் பிறந்தால் பல பிரச்சினைகள் சந்திக்கிறான் என்பதை உணருகிற போது, மனிதப்பிறவியை விட மற்ற பிறவி நல்லது என்று நினைப்பது இயல்பு. 
                 மனிதன் தன்னுடைய பகுத்தறிவை கோணல்வழியில் அன்றி நேர் வழியில் செலுத்தி உலகத்தைப் புரிந்து கொள்ளும் போதுதான் மனிதன் மனிதனாக மாறுகிறார். 
                காட்டில் விடப்பட்ட பிராணிகள் பகுத்தறிவு பெற்று குழப்பம் அடையாமல் பலவிதமான சிக்கலையும் மனதில் போட்டுக்குழப்பி வாழ்க்கையை சிக்கலாக்கி அவதியுறாமல் காலம் கடத்தும். அது போல்மனிதன் நேரடி செயல் செய்தல் பிரச்சனை ஏற்படாது.
                ஒருவர் இடம் மற்றொருவர் பற்றிக் குறை கூற பிரச்சனை ஏற்படும். குறை கூறி என்ன  பயன் ? நேரம் தான் விரயம். 
                நாம் பார்க்கும் அனைவரையும் சந்தேகத்துடன்  பார்த்தால் பிரச்சனை தான். 
              பொருட்கள் வாங்கி வீட்டிற்குள் வரும் முன் அந்தப்பொருட்கள் மீது அவநம்பிக்கை வந்தால் வீட்டில் சென்று பரிசோதிக்கும் வரை மனம் டக் டக் என அடிக்கும்.இது பொருட்கள் மீது வைத்த அவ நம்பிக்கையால் வந்தது.
                நாம் பிறரிடம் உதவி எதிர்பார்த்தாலும் அவருக்கும் நம் உதவ ரெடியாக இருக்க வேண்டும். சுயநலமின்றி வாழுகிற போது பிரச்சனைகள் ஏற்படா. 
              பிறர் மீது பொறாமை கொண்டு பழிவாங்கத்துடித்தால் முதலில் நமக்கு நிம்மதி கெட்டு பிரச்சனை ஏற்படும். 
தன்னை பற்றி அறிமுகமற்ற, தன் மீது அக்கறை அற்ற எவரிடமும் சொல்வது பிரச்சனை ஏற்படுத்தும். எனவே யாரிடமும் எதுவும் சொல்லதே. 
உன்னை விடக்குறைத்து யாரையும் எடை போட்டுவிடாதே !!!
   மற்றவர்களை நம்பும் அளவுக்கு      உன்னையே நீ நம்பு  !!!