H
Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

Wednesday 22 July 2020

ஆடி அமாவாசை / Aadi amavasai

 இந்த bag first quality  60%  தள்ளுபடி விலையில் கிடைக்கும். இந்தப் படத்தைத் தொட்டு வாங்கலாம்.

Thursday 18 June 2020

பிரதோஷம் Pradosha manthiram tamil

பிரதோஷம் என்றாலே சிவ வழிபாடு செய்தல் எனப்படும். தோஷம்என்றால் குற்றம்.பிரதோஷம் என்றால் தம் குற்றங்களை நீக்கி கொள்ளஉகந்த நேரம். 
      பிரதோஷம் இருபது வகை உள்ளது. அதைப் பற்றி தனி பதிவாக படிக்கலாம். பிரதோஷம் வழிபாடு சிவ ஆலயங்களில் மாலை வேளையில் 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் நடைபெறும். எல்லா பிரதோஷம் சிறப்பாக நடைபெற்றாலும் சனிக்கிழமை யன்று வரும்  சனி பிரதோஷம் மிகச்சிறப்பாக நடைபெறும். சனிப்பிரதோஷம் மஹா பிரதோஷம் என அழைக்கப்படுகிறது. இந்த பிரதோஷத்தில் சிவன் கோயிலில் மக்கள் கூட்டம் அலை மோதும். 
வாழ்க்கையில் வெற்றி பெற அனுதினமும் கூற மந்திரம் ஒன்று. அது சிவ மந்திரம். 
ஓம் நமசிவாய வாழ்க! வாழ்க! 
ஓம் சச்சிதானந்தம் வாழ்க! வாழ்க! 
ஓம் சற்குருநாதர் வாழ்க! வாழ்க! 
இம்மந்திரம் சொல்லச்சொல்ல மனம் அலை பாயாமல் அமைதி பெறும். மனம் ஒருமுகப்படுத்தி வேலையை வேகமாக செய்து விடலாம். பிரதோஷத்தில் சிவனுக்கும் நந்திக்கு ஒரே நேரத்தில் அபிஷேகம் செய்வார்கள். பிரதோஷம் பற்றிய கதை உங்களுக்குத் தெரியுமா? 
பிரதோஷம் உருவான கதை உங்களுக்குத் தெரியும் என நம்புகிறேன். இருப்பினும் சுருக்கமாக கதையை எழுதிவிடுகிறேன்.
அமிர்தம் கிடைக்க பாற்கடலைக் கடைய வாசுகி என்ற பாம்பு வலிபொறுக்கமல் தன் விஷத்தைக் கக்கிவிட்டது. இதைக் கண்டு தேவர்களும், அசுரர்கள் சிவனிடம் வேண்ட சிவன் விஷத்தை உண்டால் அவர் கழுத்துப் பகுதி நீலநிறமாக மாறியது. இதனால் ஆலவிடக்கண்டன் என்றும் அழைப்பார்கள். 
        தேவர்களின் குறைகளை நிவர்த்தி செய்த நேரம் பிரதோஷம் ஆகும். பிரதோஷத்தில் நந்திக்கு தான் பூஜை நடக்கும் என்று நான் முன்பு நம்பினேன். ஆனால் ஒரு முறை பிரதோஷத்தில் கோயிலுக்கு சென்று பார்த்தேன், சிவன்,நந்தி இருவருக்கும் பூஜை நடந்தது                            
                  பிரதோஷத்தில் கோயிலுக்குச் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்று சொல்வார்கள் சைவ பெரியோர். பிரதோஷத்தில் கோயிலுக்கு செல்ல வாய்ப்பு இருந்தால் கோயிலுக்குச்செல்லுங்கள். இல்லை என்றால் வீட்டில் இருந்தபடியே அல்லது பணியில் இருந்தபடியே சிவனின் மந்திரம் சொல்ல நல்ல பலன் கிடைக்கும். 
                 நந்தீஸ்வரர் பெருமை 
 நந்தி எம் பெருமான் தன்னை நாடொறும் வணங்கு வோர்க்குப்!
புத்தியில் ஞானம் சேரும்! பொலிவுறு செல்வம் கூடும்! 
சிந்தையில் அமைதி தோன்றும்! சிறப்புறுமக்கள் சேர்வர்!
இந்திர போகம் கிட்டும்! இணையிலா வாழ்வு தானே!
   பொதுவாக கோயிலுக்கு செல்லும் போதுவெறும் கையுடன் போகவேண்டாம் என்பார்கள். பழம், பூ, கற்பூரம், தேங்காய், தீப எண்ணெய், நெய்,வெற்றிலை, பாக்கு, சந்தனம், குங்குமம், சர்க்கரை, பால்,தயிர்,தேன், இளநீர், பட்டாடை போன்றவை கொண்டு செல்வது வழக்கம். இதை பிரதோஷத்தில் கோயிலுக்கு எடுத்துச்சென்றால் என்னபலன் கிடைக்கும் என பார்ப்போம்.
           தெய்வத்தின் தரிசனம் கிடைக்க மலர்களையும், வேளாண்மையில் விளைச்சல் பெருக பழங்களையும், எதிர்ப்பு மறைய சர்க்கரையும், சிறப்பான சக்தி பெற சந்தனமும், இனிய சாரீரம் கிடைக்க தேனையும், பலவளமும் உண்டாக தயிரும், முக்திபேறு கிடைக்க நெய்யையும், நோய் தீர பாலையும் கொடுத்து கடவுளை வேண்டிக் கொள்ளலாம். 
  இன்று பிரதோஷம் இன்றைய நாளில் சிவனை நினைப்பது, நமசிவாய சொல்லுவது நாம் செய்த புண்ணியம். 
நலம் பெருக்கும் நந்தீஸ்வரர் 
சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி! 
சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி! 
கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி! 
பள்ளியறை பக்கத்தில் இருக்கும் நந்தி! 
பார்வதியின் சொற்கேட்டுச் சிரிக்கும் நந்தி!
நல்லதொரு ரகசியத்தை காக்கும் நந்தி!
நாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்தி! 
செங்கரும்பு உணவு மாலை அணியும் நந்தி!
சிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி!மங்களங்கள்அனைத்தையுமே கொடுக்கும்நந்தி!
மனிதர்களின் துயர் போக்கவந்த நந்தி!
அருகம்புல் மலையையும் அணியும் நந்தி!
அரியதொரு வில்வமுமே ஏற்ற நந்தி!
வருங்காலம் நலமடைய வைக்கும் நந்தி!
வணங்குகிறோம் எமைக்காக்க வருக நந்தி!
பிரதோஷகாலத்தில் பேசும் நந்தி!
பேரருளை மாந்தர்க்கு வழங்கும் நந்தி!
வரலாறு படைத்து வரும் வல்ல நந்தி! 
வறுமையினை எந்நாளும் அகற்றும் நந்தி!
கெட்டகனா அத்தனையும் மாற்றும் நந்தி!
கீர்த்தியுடன் குலம் காக்கும் இனிய நந்தி!
வெற்றி வரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி!
விதியினைத்தான் மாற்றிடவே விரையும் நந்தி!
வேந்தர் நகர் நெய்யினிலேகுளிக்கும் நந்தி!
வியக்கவைக்கும் தஞ்சாவூர் பெரிய நந்தி!
சேர்ந்த திருப்புங்கூரில் சாய்ந்த நந்தி!
செவிசாய்த்து அருள் கொடுக்கும் செல்வ நந்தி!
கும்பிட்ட பக்தர்துயர் நீக்கும் நந்தி!
குடம்குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி!
பொன்பொருளை வழங்கிடவே வந்த நந்தி!
புகழ்விக்க எம்மில்லம் வருக நந்தி!
பிரதோஷகாலத்தில் வலம் வரும் முறை:
                       பிரதோஷம் காலத்தில் வலம் வரும் முறையை சோமசூக்தப்பிரதட்சணம் 
என்று கூறியுள்ளார்கள். 
முதலில் நந்திக்கு பின்னால் இருந்து சிவனை வழிபட்டு நந்தீஸ்வரரை வணங்கி விட்டு நடந்து சண்டேஸ்வரர் சன்னதி வழிபட்டு திரும்ப வந்தபாதை வழியே சென்று தட்சணாமூர்த்தி வழியே ஜல துர்க்கையை வழிபடவும். பின்னர் சென்ற பாதையில் திரும்ப சண்டேஸ்வரர் சன்னதி வந்து வழிபடவும்.  இதேபோல் சண்டேஸ்வர் 
சன்னதி மூன்று முறை வந்து நிறைவாக நந்தி பின் நின்று சிவபெருமானையும், நந்தியையும் வழிபட வேண்டும். இந்த முறை தேவர்களுக்கும்.அசுரர்களுக்கும் ஆலவிடம் துன்பம் தரும் போதுஇவ்வாறு வலம் வந்தாக முன்னோர்கள் கூறியுள்ளார்கள். 
நந்தீஸ்வரா எங்கள் நந்தீஸ்வரா, 
நலம் தந்து எனைக்காக்கும் நந்தீஸ்வரா!
பிரதோஷகாலத்தில் வழிபடுங்கள் 
வாழ்வில் எல்லா வளமும் பெறுங்கள். 

Monday 15 June 2020

வள்ளலார் கதை / Vallalar story

            வள்ளலார் கதை/ Vallalar story

                  "அருட்பெருஞ்ஜோதி தனிபெறும் கருணை" என்ற வாசகத்தை உலக அறிய செய்த உத்தமர் வள்ளலார் வாழ்ந்தக் காலத்தில் நடந்தச் சம்பவம்பற்றி 'வள்ளலார் கதை' என்ற தலைப்பில் வாசகர்களுக்குப்பதிவு செய்வதில் எனக்கு மற்ற மகிழ்ச்சி. இது என் மனம் கவர்ந்த பதிவு.

திருடனுக்கு கடுக்கன் கொடுத்தவர்:

                         திருடனை நாம் பார்த்தாலே முதலில் பயம் வந்து விடும். கைகள் உதறும். கால்கள் இழுத்து தள்ளும். என்ன செய்வது என்று யோசிக்க மூளை சிறிது நேரம் தடுமாறும். திருடன் நம்மைக்கத்தி வைத்துக் குத்தி விடுவனோ, என்ற பயமும் பற்றி விடும். 
                                             அப்படி  இருக்க திருடனுக்குக் கடுக்கன் கழற்றி கொடுத்தவர் யார்? திருடனுக்கும்  திருந்த வழிச்சொல்லி திருடனைத்திருத்தியவர் யார்? யோசியுங்கள் நண்பர்களே,
                                  முன்பு ஒரு காலத்தில் நடந்தச் சம்பவத்தைக் கதை வடிவில் உங்களுக்காகப் பதிவு செய்துள்ளேன்.

வள்ளலாரை மனிதன் என்று சொன்னவன்:

          தெருவில் போவோர் வருவோரை யெல்லம். அதோ போகிறது கழுதை, இதோ வருகிறது நாய் என்று வந்த படியெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தான் ஒரு பித்தன்.
           அந்த வழியாக ராமலிங்க அடிகளார் என்ற வள்ளலார் வந்துக் கொண்டிருந்தார். 
அதைக் கண்ட சிலர் அவர்மீது அக்கறைக் கொண்டு, "சுவாமி! அந்தப்பக்கம் போகாதீங்க...!அங்கு இருக்கிற பித்தன் ஒருவன் போவோர் வருவோரை வாய்க்கு வந்தபடி பேசித்திட்டிக் கொண்டிருக்கிறான். "உங்களையும் என்று சொல்லித்தடுக்கப் பார்த்தனர். 
                                                    என்னை எப்படி வேண்டுமானாலும்  திட்டட்டும். அதைப் பற்றி எனக்குக்கவலை இல்லை. என்மீது அக்கறை கொண்ட நீங்களும் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிக் கொண்டு தொடர்ந்து நடந்தார். 
                         வள்ளலாரைப் பார்த்தவுடன், "இதோவருகிறார் மனிதன் " என்றுச் சொன்ன பித்தன் திண்ணையிலிருந்து எழுந்து நிர்வாணத்துடன் ஓட ஆயத்தமானான். 
வள்ளலார் அவனுக்கு ஒரு துணியைக் கொடுத்து உடுத்திக் கொண்டு போகும்படி செய்தார். 

வள்ளலாரும் திருடனும்:

            அப்படிப்பட்ட வள்ளலார் ஒரு நாள் இரவு. திருவொற்றியூரில் உள்ள கோவில். திண்ணையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். ஒரேபக்கத்தில் ஒருக்களித்துப்படுத்திருந்தால் ஒரு பக்கக் காதில் அணிந்திருந்த கடுக்கன் மின்னிக் கொண்டிருந்தது. 
                  அந்த வழியே வந்த திருடனுக்கு 'அது' பளிச்சென்று தெரிந்தது. அக்கடுக்கனைக் கழற்றினான். அதை வள்ளலார் உணர்ந்தார். ஆனால் கத்தவோ, கதறவோ, எதிர்ப்புக்குரல் கொடுக்கவோ இல்லை, அமைதியாயிருந்தார். 
              "நம்மை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் திருப்பிக்காட்ட வேண்டும்" என்று இயேசு பிரான் சொன்னது போன்று.
ஒரு கடுக்கனைக் கழற்றியத் திருடனுக்கு மறுக் கடுக்கனையும் கழற்றிக் கொடுக்க வேண்டும் என்ற பாணியில் திரும்பி மறு புறத்தில் ஒருக்களித்துப்படுத்தார். 

திருடனைத்திருத்திய வள்ளலார்:

                  திருடன்  யோசிக்க ஆரம்பித்தான். சாதாரண மனிதனாக இருந்தால் இந்நேரம் 'திருடன், திருடன்' எனக் கத்தி ஊரைக் கூட்டி நம்மைப் பிடிக்கச் செய்து அடி உதைகளைக் கொடுக்கச் செய்திருப்பாரே.  இவரோஒரு கடுக்கனுக்குப்பதிலாக இரு கடுக்கன்களையும் கழற்றிக் கொடுத்த தெய்வம். 
               இத்தகைய தெய்வத்திடம் மன்னிப்பு கேட்பதேயன்றி, வேறு வழியில்லை என்று மனம் திருந்தினான். சுவாமி, வயிற்றுப் பிழைப்புக்காக வேண்டிச் செய்து விட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் என்று சொல்லிக் காலில் விழுந்தான். 
           

      வள்ளலார் திருடனுக்குச் சொன்ன உபதேசம்:

             

                     எழுந்திரு தம்பி! நீ ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். பெண்ணாசை, மண்ணாசை, பொருளாசை வென்ற துறவிக்குப்பொன்னாசை எதற்கு?  பொன்நகைகளுக்கு பதிலாகப் புன்னகை மட்டும் தானே தேவை! என்பதனை புரிய வைத்தவன் நீ ஆதலால் இந்தக் கடுக்கனையும்நீயே எடுத்துக்கொள் என்றால் வள்ளலார். 

வள்ளலாரும்  கர்ணனின் கொடை:

                 இருந்தவைகளையெல்லாம் அள்ளி அள்ளிக்கொடுத்த வள்ளல் கர்ணன் கடைசியில் குண்டலங்களையும் கொடுத்ததுபோல வள்ளலாரும் கடுக்கன்களையும் கழற்றிக் கொடுத்தார். "எதைக்கொண்டு வந்தோம் இழப்பதற்கு நீ எதை இழந்தாலும் இன்னும் எதிர் காலம் இருக்கிறது." என்றத் தன்னம்பிக்கை உடன் வேறு பதிவில் சந்திப்போம்!!!
       வள்ளலார் பற்றிப் படிக்க இதைத் தொட்டுப்படிக்கலாம்
     
 இந்தப்படத்தின் மீது தொட்டுச்சரிபார்க்கலாம்.