H
Showing posts with label Examination. Show all posts
Showing posts with label Examination. Show all posts

Wednesday 13 January 2021

NMMS Exam question paper and answer

    NMMS Exam question Paper 2018 and answer 

      

NMMS Exam 2018 question paper download link CLICK HERE 

NMMS Exam 2018 Question with answer key mathematics download link CLICK HERE 

Monday 10 August 2020

TN SSLC Result 2020 declared today

 TN SSLC Result 2020 declared today

100 % students pass tamil nadu 

      தமிழ் நாடு அரசு தேர்வுத்துறை இயக்ககம்  (The Directorate of Government exam) இன்று 10/8/2020 திங்கள்கிழமை  காலை  9: 30 மணியளவில் கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
                      மாணவ, மாணவிகள் SSLC பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
     பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் படித்து விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப் பட்டுள்ளது. 

தேர்வு கால அட்டவணை 

     கடந்த  2019 - 2020 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்குக் கால அட்டவணை (TIME TABLE)  மார்ச் மாதம்  27 முதல் ஏப்ரல் மாதம்  13 வரை SSLC பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 
      இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரனோவிற்காக பொதுஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைப்பதாகத்தமிழக அரசு வெளியிட்டச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
       மீண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணையை ஜுன் மாதம் 1 முதல் ஜூன் மாதம்  12 வரை என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அப்பொழுது கொரனோவின் கோரத்தண்டவத்தால் ஒவ்வொரு நாளும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருந்தது. இதனால் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் கல்வியாளர்களின் ஆலோசனைபடி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. 
        பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மீண்டும் ஜுன் மாதம்  15 முதல் ஜுன் மாதம் 25 வரை என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் பலரும் கொரோனாவின் கோரத்தண்டவத்தை நினைத்து மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடு குறித்துக் கேள்வி எழுப்பினார். இதற்குச் சென்னை உயர் நீதிமன்றம்  9.30 இலட்சம் மாணவர்களின் பாதுகாப்பு முன் நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
       இதையடுத்து தமிழக அரசு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்தத் தேர்வில் அனைவரும் தேர்ச்சி என தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்தார். 

SSLC தேர்வில் விண்ணப்பித்தவர்கள் 

        கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு  9,39,829 மாணவ மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.
               இதில் மாணவர்கள்  4,71,759 மற்றும் மாணவிகள்  4,68,070  ஆவார்கள். அனைவரும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

6235  மாற்றுத் திறனாளி  மாணவர்கள் SSLC தேர்ச்சி 

        பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விண்ணப்பித்து இருந்த மாற்றுத் திறனாளி மாணவர்கள்  6235  பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

SSLC மதிப்பெண் கணக்கிடல்

         கடந்த கல்வியாண்டில் நடத்த வேண்டிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரனோ விற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக ரத்து செய்யப்பட்டது. 
        மாணவர்கள்  காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகை சதவீத மதிப்பெண்களுடன் சேர்த்து மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. 
      காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள்  80% மற்றும் வருகை நாள்கள்  20% மதிப்பெண் கொண்டு மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது. 
     மதிப்பெண் கணக்கிடலாம் வாங்க Read more

SSLC தேர்ச்சி மதிப்பெண் 

          இன்று வெளியிட்டுள்ள தேர்வு முடிவுகளில் பத்தாம் வகுப்பு பாடங்களில் தலா 35% (35/100) மதிப்பெண் பெற்றால் மட்டுமே தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. 
        அறிவியல் பாடத்தில் Theory Paper  20/75 மற்றும் Practical Paper 15/25 பெற்று இருந்தால் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் ஐந்து மாவட்டங்கள்

      இன்று வெளியிட்டுள்ள தேர்வு முடிவுகளில் முதல் ஐந்து மாவட்டங்கள் தேர்ச்சி பெற்றவர்கள் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. 
  1. கன்னியாகுமரி 
  2. திருநெல்வேலி 
  3. தூத்துக்குடி 
  4. ராமநாதபுரம் 
  5. சிவகங்கை 

SSLC Result online பார்ப்பது எப்படி? 

        நீங்கள் mobile phone Google search சென்று tn results.nic. In என டைப் செய்து search கொடுக்கவும். இல்லாவிட்டால் இந்த லிங்கைத்தொட்டு நேரடியாகச் செல்லலாம். 
              அதற்குப்பின் SSLC Result March 2020 என இருக்கும். அதைத் தொட
வேண்டும்.
        பின்னர் உங்கள் பதிவு எண் டைப் செய்து விடவு‌ம். அதற்குக் கீழே பிறந்த தேதி  dd/mm/yyyy (உதரணமாக  06/06/2005) என்று டைப் செய்து கீழ் Result தொடுங்கள். 
       உங்கள் SSLC Result screen தோன்றும் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.
      மாணவர்கள் மதிப்பெண் சார்ந்த குறைகளைப் பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக ஆகஸ்ட் மாதம் 17 முதல் ஆகஸ்ட் மாதம் 25 தேதி வரை விண்ணப்பிக்கலாம். 
     மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் பட்டியல் அந்தந்தப் பள்ளிகளில் ஆகஸ்ட் மாதம்  17 தேதி முதல் ஆகஸ்ட் மாதம்  21 தேதி வரை வழங்கப்படும். கொரோனா கட்டுபாடுடன் பெற்று கொள்ளலாம்.
      ஏதேனும் சந்தேகம் இருந்தால் comments பதிவிடவும்.
     

Monday 13 July 2020

CBSE Results 12th standard

        CBSE Result

CBSC 12th results news

                Cbse result இன்று  13/07/2020 வெளியிடப்படும் என்று மாண்புமிகு மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் 
Dear Students, Parents and Teachers!@cbseindia29  has announced the results of Class XII and can be accessed at //t.co/kCxMPkzfEf.
We congratulate you all for making this possible. I reiterate, Student’s health & quality education are our priority.
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) July 13, 2020

CBSC குழுவின் பரிந்துரை 

                   இந்த ஆண்டு கொரோனா பொது முடக்கத்தால் பல்வேறு தேர்வுகள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு,  பொது போக்குவரத்து ரத்து போன்ற காரணங்களால் Cbse கல்வி வாரியம் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் ஜூலை மாதம்  பதினைந்தாம் தேதிவரை நடைபெறும் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. 
     பன்னிரெண்டாம் வகுப்பு நிலுவையில் நடைபெறாமல் இருந்த தேfர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்த ரத்து செய்யப்பட்ட Cbse பாடங்களில் மாணவர்களின் செயல்பாடுகள் அடிப்படையில் மதிப்பெண் வழங்க Cbse குழு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த Cbse குழுவின் பரிந்துரைகளை ஏற்று இன்று cbse results வெளியிடப்பட்டது.

CBSE result இணையதளத்தில் பார்ப்பது எப்படி? 

        அனைவரும் கையிலும் இன்று smartphone இருக்கிறது. Browser Google சென்று cbse results nic என டைப் செய்து உள்ளே செல்லலாம். அல்லது இதைத் http://cbse.nic.in/#  தொட்டுநேரடியாக cbse home page செல்லலாம்.
            Check results cbse என்பதை தொடலாம். இப்போது உங்கள் பதிவு எண் அல்லது வரிசை எண்  (roll number) பிற கேட்கப்படும் விவரங்களை   டைப் செய்து சமர்ப்பிக்க (submit) செய்து விடுங்கள். உங்கள் cbse 12th results screen வரும். 
                          மேலு‌ம் இது உங்களுக்குத் தேவைப்படும் எனவே மேல் மூலையில் உள்ள print தொட்டுநேரடியாகப் பிரிண்ட் செய்து கொள்ளலாம். 

Cbse results overall ratio 

    மேலு‌ம் பல விவரங்களைத் தெரிந்து கொள்ளஇதைத்தொட்டுப் படிங்க Read more
      Cbse  12th result மாணவர்களைவிட மாணவிகள் அதிக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். ஒட்டு மொத்ததேர்ச்சி சதவீதம் கடந்தாண்டு விட 5.38 % உயர்ந்து  88.78% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு  2019 results 83.4%.
        முதலிடம் திருவனந்தபுரம் மாவட்டம்  97.67% பெற்றுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் பெங்களூரு மாவட்டம்  97.05% பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாகச் சென்னை மாவட்டம்  96.17% பெற்றுள்ளது. 
      மாணவர்கள்  86.19% மாணவிகள்  92.15% தேர்ச்சி பெற்று உள்ளனர் என்று cbse board அறிவித்துள்ளது. 90 சதவீத மதிப்பெண்கள் மேல்  1.57 இலட்சம் பெற்றுள்ளார். 95  சதவீத மதிப்பெண்கள்மேல்    38,686 மாணவச் செல்வங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். அனைவரும் நல்வாழ்த்துக்கள்.                      உயர்கல்வியில் சாதனைப் படைக்க என் வாழ்த்துகள்.

CBSC book தள்ளுபடி விலையில் 

https://amzn.to/2DEOyYf check it  இதைத் தொட்டுநேரடியாகப் படிக்கலாம். 

 இந்தப் புத்தகத்தின் மீது தொட்டுநேரடியாகப் படிக்கலாம். பிடித்தால் வாங்கிக் கொள்ளலாம். 

Sunday 21 June 2020

SSLC EXAM MARK CALCULATION 2020 (பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கிட )

SSLC Exam மதிப்பெண் எவ்வளவு எனத்தெரிந்து கொள்ள வேண்டும் என அனைவருக்கும் ஆவல் இருக்கும். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கணினி, அலைபேசி எல்லாரும் வைத்து இருக்கவில்லை, எனவே SSLC Exam result வெளியிடப்படும் தேதியன்று மாணவர் கூட்டம் பள்ளியில் அறிவுப் பலகையில் ஒட்டப்படும் மதிப்பெண் பட்டியலைப்பார்க்ககாத்திருக்கும்.
         சென்ற ஆண்டு SSLC Exam results மாணவர்கள் அலைபேசிக்கு குறுஞ்செய்தி  (massage) அனுப்பி வைக்கப்பட்டது. 
   
   SSLC  தேர்வில் இந்த ஆண்டு அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்த மாணவனின் மதிப்பெண் கணக்கிடும் முறைப்பற்றி இன்று தமிழக அரசு தேர்வுத்துறை இயக்குனர் அவர்கள் செயல்முறைகளை வெளியிட்டுள்ளார். SSLC தேர்வு ரத்து செய்யப்பட்டது, மாணவர்கள் தேர்ச்சி குறித்து தகவல்களை மேனிலைப் பள்ளி/உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குத்தகவல் தெரிவிக்க CEO அவர்களுக்குச்செயல் முறை அனுப்பி வைத்தார்.

மதிப்பெண் கணக்கிடும் முறை 

    அரசு தேர்வுத்துறை இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் படி பத்தாம் வகுப்பு பள்ளியில் படித்தவர்கள்  (தனித்தேர்வர்கள் தவிர) அனைவரும் தேர்ச்சி.காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீதமும்,மாணவர்களின் வருகை நாள்கள்  20  சதவீதம் எனக்கணக்கிட வேண்டும்.எவ்வளவு மதிப்பெண் பெற்று இருந்தாலும் தேர்ச்சி. 

   உதரணமாக ராஜா என்ற மாணவன் காலாண்டு தேர்வில் தமிழ் பாடத்தில்  57/100 மதிப்பெண் பெற்று உள்ளார். அதே மாணவன் அரையாண்டு தேர்வில்  63/100 மதிப்பெண் பெற்று உள்ளார் என்று எடுத்துக்கொள்ளவோம்.
     அவர் பெற்ற மொத்தமதிப்பெண்  57 + 63 = 120 /200
       SSLC பொதுத்தேர்வு பாட மதிப்பெண்  80 % எனில்  120 /200 × 80 = 48 மதிப்பெண் 
           அந்த மாணவனின் வருகை நாள்கள்  180 (சுமார்)
       பள்ளியின் மொத்தவேலை நாள்கள்   200  (சுமார்)
            SSLC  பொதுத்தேர்வு வருகை சதவீத மதிப்பெண் 20% எனில் 
180  / 200 ×20  = 18 மதிப்பெண் 
  இந்த ஆண்டு SSLC  பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் ராஜா பெற்ற மதிப்பெண் 
48 + 18 = 66 மதிப்பெண். 
         இதே ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத்திற்கு கணக்கிட்டு SSLC பொதுத்தேர்வு மொத்த மதிப்பெண்கள் எத்தனை எனத்தெரிந்து கொள்ளலாம். 
       வருகை நாள்களுக்குரிய மதிப்பெண் ஐந்து பாடத்திற்கும் ஒன்றாகத்தான் இருக்கும். 
      தமிழ் வருகை சதவீத மதிப்பெண்18           ஆங்கில வருகை சதவீத மதிப்பெண்18 
    கணித வருகை சதவீத மதிப்பெண்  18 அறிவியல் வருகை சதவீத மதிப்பெண்18 
சமூக அறிவியல் வருகை  மதிப்பெண் 18 என்று கணக்கிட வேண்டும்.                                              SSLC தேர்வில் மதிப்பெண் கணக்கிடும் முறை கற்றுக் கொண்டோம். பிறருக்கு கற்பிப்போம். 

Tuesday 9 June 2020

தேர்வு கால உணவுகள் (Exam time food )

 தேர்வு கால உணவுகள் 

அம்மா உணவு 

                   தேர்விற்கு தயாராகும் மாணவச்செல்வங்கள் சுறுசுறுப்புடன் ஆரோக்கியத்துடன் இருக்க பலவிதமான சத்துக்கள் நிறைந்த உணவு தேவை. 
            உயிர் வாழ உணவு மிக முக்கியமான ஒன்று. 'ஆரோக்கியஉணவு என்றாலே நாம் அனைவரின் நினைவுக்கு வருவது வீட்டில் அம்மா சமைத்து கொடுக்கும் உணவு தான் '.                            தேர்வுக்கு தயாராகும் நேரத்தில் எந்தெந்த உணவை எந்தெந்த நேரத்தில் சாப்பிட வேண்டும். எந்தெந்த உணவை தவிர்ப்பது நல்லது.

உணவு உடல் நலம் 

                 "சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்" என்ற  பழமொழிக்கு ஏற்ப தேர்வு எழுத உடல் நலம் மிகவும் அவசியம்.
           இல்லையெனில் நன்றாக ஆண்டு  முழுவதும் படித்தும் தேர்வில் பங்கேற்க உடல்  தான்  ஒத்துழைக்குமா? . உடல் நலம் பாதிக்கப்பட்டால் மனநிலையில் மாற்றம் வருமே!
                                 தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் உடல் நலமும் மன நலமும் சிறப்பாக இருந்தால் தேர்வை சிரமம் இன்றி எதிர்கொள்ளலாம்.
             காலை உணவை தவிர்க்க கூடாது. இரவில் எட்டு மணிக்குள் இரவு உணவை சாப்பிட்டு வந்தால் உடல் நலத்திற்கு  நல்லது. இரவு--காலை உணவு இடைவேளை   12 மணி நேரம் இருக்கிறது எனவே காலை உணவை தவிர்க்காதே!
                காலையில் எழுந்ததும் காலை கடனை முடித்து சூடான சுவையான பால்குடிக்க வேண்டும். 
           காலை உணவாக ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம், புட்டு, கொழுக்கட்டை, மற்றும் பூரி கிழங்கு சாப்பிடலாம்.

பழங்கள்  

        உடல் சிறந்த முறையில் இயங்கவும், நோய்  தடுப்பாற்றல் மண்டலம் வலுப்படுத்தவும் உதவும்.
 
            பல்வேறு வகையான ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, கொய்யா, திராட்சை, சாத்துக்குடி, சப்போட்டா, நெல்லிக்காய், பேரிக்காய், பிளம்ஸ், மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் போன்ற பழங்கள் தினமும்  எடுத்துக் கொள்வது நல்லது. 
                        பருவ கால பழங்கள் தினமும் ஒன்றையாவது எடுத்து  கொள்வது நல்லது. பார்வை திறனை மேம்படுத்த வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்த பப்பாளி, மாம்பழம், எடுத்துக் கொள்ளவேண்டும். 


                           ஐஸ்கிரீம் செயற்கை குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். 

                 வெயில் காலத்தில் உடல் நீர் சமநிலை குறையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். தினசரி இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். 
                  இளநீர், பதநீர், மோர், பழச்சாறு மதியம் ஒரு மணிக்கு எடுத்துக் கொள்ளவேண்டும். நீர் சதவீதம் அதிகம் உள்ள தர்பூசணி, ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி பழச்சாறு அல்லது பழமாகக்கூட சாப்பிடலாம். 

பால்குடிக்க வேண்டும்

                                  தேர்வு எழுதும் சமயத்தில் மாணவர்களுக்கு கைவலி கழுத்து வலி, முதுகு வலி ஏற்படுவது வழக்கம். தொடர்ச்சியாக தேர்வு அறையில் முன்று மணி நேரம் அமர்ந்து தேர்வு எழுதும் போதுபதற்றம், உடல் சோர்வுஏற்படுகிறது. 

                       சில சமயங்களில் ஒரு சில மாணவர்களுக்கு கையில் நடுக்கம் வரும். இதை தவிர்க்க தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும்  200மி . லிட்டர் பாலை பருக வேண்டும். பால் அனைத்து சத்துக்கள் நிறைந்த முழு புரதம். கொழுப்புக் குறைக்கப்பட்ட பாலையும் குடிக்கலாம். 


                பர்கர், பிசா போன்ற துரித உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. உடனடி உணவாக உள்ள நூடுல்ஸ், பாஸ்தா, சூப் பொடி போன்றவை நீரில் கரைத்து அல்லது கலந்து குறைந்த அளவில் சமைத்து தயார் செய்யப்படும்.

                    இந்த உடனடியாக சமைக்கும் உணவை தவிர்க்க வேண்டும். தெருக்களில்   ஓரக்கடைகளில்  சுகாதார மற்ற முறையில் தயாரிக்கப்பட்ட துரித உணவை   உண்ணாமல் இருக்க வேண்டும். 

            அதற்கு பதிலாக வீட்டில் தயாரிக்கும் முறுக்கு, சீடை, அதிரசம், பணியாரம், கடலைப்பருப்பு மிட்டாய், எள் மிட்டாய், பொரிஉருண்டை, அவல் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.



             
 தேர்வுக்கு படிக்கும் நேரத்தில் kurkure Lays கொறிப்பது சரியா? பாக்கெட்டில் அடைக்க பட்ட உணவில் நிறமும் மணமும் பெற செயற்கை வேதிப் பொருட்கள் கலந்து உள்ளது.                        

                       இந்த உணவு வகைகளை அதிகம் உண்ணக்கூடாது. தரமான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து  உண்ணலாம் .