H

Wednesday 29 July 2020

கடையேழு வள்ளல்கள் / Top seven vallal

  கடையேழு வள்ளல்கள் /  Top seven vallal

வள்ளல்கள் வரலாறு

      பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழர்களின் கல்வி நிலைமை,  வாழ்க்கை முறை, தமிழ் புலவர்களின் நிலை, மன்னர்களின் ஆட்சி முறையை அறிய செய்வது சங்க நூல்கள் தான். சங்க நூல்களில் சிறந்தது புறநானூறு. இந்தப் புறநானூற்றில் கடையேழு வள்ளல்கள் பற்றிய தகவல் உள்ளது. கடையேழு வள்ளல்கள் பற்றி படிக்கலாம்.

கடையேழு வள்ளல் - பேகன்

         பழநி என்று அழைக்கப்படும் ஆவிநன் குடியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டவன் பேகன். மயிலுக்குத் தன் ஆடையைப் போர்த்தியவன்.
         கபிலர், பரணர், பெருங்குன்னூர் கிழார், அரிசில் கிழார் போன்றப் புலவர்களை ஆதரித்தவன்.

கடையேழு வள்ளல் - நள்ளி 

        மதுரைக்குத் தெற்கே உள்ள தோட்டி மலைப்பகுதியான கண்டீர நாட்டின் அரசன். கண்டீரக்கோ என்று நள்ளியை அழைப்பார்கள். வன்பரணர் பெருந்தலைச் சாத்தன் போன்ற புலவர்களால் போற்றப்பட்டவன்.

கடையேழு வள்ளல் - ஓரி

      கொல்லிமலையை ஆண்ட அரசன் தான் ஓரி. கொல்லிமலை அரசன், வல்வில் ஓரி என்றும் அழைக்கப்பட்டார். தான் எய்த ஒரே அம்பில் யானை, புலி, மான், பன்றி மற்றும் உடும்பை மாய்த்தவன். கபிலர், பரணர், கழைதின் யானையார், நல்லர்நத்தத்தனார் பெருஞ்சித்திரனார், போன்றோரால் பாராட்டப்பட்டவன்.

கடையேழு வள்ளல் - காரி

       திருக்கோவிலுரைத் தலைமையாகக் கொண்டு ஆட்சி செய்தவன் காரி. வட வண்ணக்கன் பெருஞ்சாத்தனார், நப்பகலையாரல் போன்ற புலவர்களால் பாடப் பெற்றவன். 
              இதற்கு முன்பு திருக்கோவிலுர் விழுப்புரம் மாவட்டத்தில்இருந்து வந்தது. தற்சமயம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது.

கடையேழு வள்ளல் - ஆய்

     பொதியமலைப் பகுதி ஆண்டவன் ஆய். ஆய் ஆண்டிரன் வேள்ஆய் எனப்போற்றப்பட்டவன். முட மோசியார், ஒடைக்கிழார் போன்றப் புலவர்களை ஆதரித்தவன்.

கடையேழு வள்ளல் - அதியமான் 

       அதியமான் தருமபுரி  (தகடூர்) பகுதியை ஆண்டவன்.  இந்தப்பகுதி முன்பு சேலம் மாவட்டத்துடன் இணைந்து இருந்தது.
        அதியமான் ஆட்சியில் குதிரை மலை சிறந்து விளங்கியது. அஞ்சி என அழைக்கப்பட்டவன். அதியமான் தன் தாய் மொழியாகிய தமிழ் மீதும் அம்மொழிப்புலமை உடைய புலவரிடத்தும் நிறைந்த மதிப்பு கொண்டிருந்தான்.
              அதியமான் ஒரு நாள் வேட்டைக்குச் சென்றான். அங்கு ஒரு மலையின் பிளவில் கரு நெல்லிக்கனி ஒன்றைக் கண்டான். அக்கனி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதை உண்டவர் நெடுநாள் நோயின்றி வாழலாம். அதியமான் அக்கனியை அரிதின் முயன்று பறித்தான். அந்தக் கனியை எடுத்துக் கொண்டு இல்லம் திரும்பினான்.
        தனது இருப்பிடம் சென்று இந்தக் கனியை யாருக்கு வழங்குவது எனச் சிந்தித்தான். ஔவையார் இந்தக் கனியை உண்டு நீண்ட நாள் இருப்பின் என்னைப் போன்ற அரசர்களை நன்முறையில் நடத்துவார்.
                     ஆதலால் நெல்லிக்கனியின் பெருமையைக் கூறினால் அக்கனியை உண்ணமாட்டார் என உணர்ந்து  அற்புத நெல்லிக்கனியை ஔவைக்கு வழங்கியவன் அதியமான். ஔவைக்கு அரிய நெல்லிக்கனி கொடுத்த அதியமான் என எல்லோராலும் அறியப்பட்டவர்.

கடையேழு வள்ளல் - பாரி

     பிரான்மலை  (பறம்புமலை) பகுதியை ஆண்டவன். பறம்பு நாடு பாண்டிய நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ளது. இந்த மலையில் சந்தனம், வேங்கை மரங்கள் மிகுந்தன. ஆகவே வாழ்ந்த மக்கள் விறகுக்காகச் சந்தனக் கட்டைகளைப் பயன்படுத்தினார்கள்.
       வள்ளல் பாரிக்கு அங்கவை, சங்கவை என இரு மகள்கள் இருந்தார்கள். அவர்கள் இருவரும் தமிழில் கவி பாடும் புலமை பெற்று இருந்தார்கள். கனகத்தின் நடுவிலே முல்லைக்கொடி பற்றற்று அசைவதைக் கண்டு மனம் தாங்கமல் முல்லைக்குத் தேர் ஈந்தவன். கபிலர் என்ற புலவரிடம் மிகுந்த நட்புக் கொண்டவர். பாரி வள்ளல் வாழ்வில் நடந்த சுவையான தகவல்கள் படிக்கRead more
     

No comments:

Post a Comment

Super useful ideas thank you reading