H

Sunday 14 June 2020

உண்மை சம்பவம். Real event

   "அனுபவமே சிறந்த ஆசிரியர் " என்பது பழமொழி. இன்று சிறந்த ஆசிரியராக பணியாற்ற அனுபவம் பெற வேண்டும். என்பது புது மொழி.பள்ளி வாழ்வின் அனுபவம் பேசுகிறது இதோ.
              பள்ளியில் மதிய உணவு இடைவேளையைக்குறிக்கும் மணி ஒலித்தது. மாணவ, மாணவிகள் தத்தமது வகுப்பறைகளில் இருந்து வேகமாக மதிய உணவு வாங்க உற்சாகத்துடன் ஓடி வந்தனர். 
           
மதிய உணவைப் பெறவதற்காக மாணவர்களுக்கு என்று தனி வரிசையும், மாணவிகளுக்கென்று தனி வரிசையும் இருந்தது. 
ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் முருகன் தனது புத்தகப்பையிலிருந்து உணவுத் தட்டை எடுத்து கையில் வைத்து தட்டிய படியே, வேகமாக வரிசையில் நின்றிருந்த மாணவர்களை தாண்டி சென்றான் 
முறை மீறிய அவனது செயலைக் கண்டு வரிசையில் நின்றிருந்த மாணவர்கள் சத்தம் போட்டு பின்னே வாடா முருகா என கத்தினார். 
  வகுப்புத் தலைவன் ராமு, முருகன் அருகில் சென்று, நீ செய்வது முறையல்ல, வரிசையில் உனக்குரிய இடத்தில் வந்து நில் எனக் கூறினான். அப்படியே நின்று இருந்ததால், அவன் கையைப் பிடித்து இழுக்க, எவரும் எதிர்பாரதாவிதத்தில் ஓங்கி பலமாக ராமுவைமுகத்தில் அடித்தான். 



'அம்மா...' என்று அலறியபடி ராமு தரையில் மயங்கி விழுந்தான். அவன் மூக்கில் ரத்தம் வழிந்தது. அதைப்பார்த்த சக மாணவர்கள் கூச்சலிட, பால முருகனும், கண்ணனும் ஆசிரியர் அறைக்கு ஓடினர். 
பதற்றத்துடன் அங்கு வந்த வகுப்பு ஆசிரியர் ராமச்சந்திரன், ராமுவுக்கு முதலுதவி செய்ய ஏற்பாடு செய்தார். இங்கு நிலவிய பரபரப்பான சூழ்நிலையை பயன்படுத்தி முருகன் ஓடி விட்டான். 
அவனை பிடித்து வர,ஆசிரியர் சக மாணவர்களை முருகன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்று கூறினார். இந்த செய்தி தலைமை ஆசிரியர் பரமசிவம் அவர்களிடம் வகுப்பு ஆசிரியர் ராமச்சந்திரன் தெரிவித்தார். 
உடனே கோபம் வந்து அலுவலக உதவியாளரை அழைத்து முருகன் வீட்டுக்குசென்று அவனை அழைத்து வர சொன்னார். 
முருகன், ஒரு வித்தியாசமான மாணவன். பயங்கரமான சேட்டை செய்வான். படிப்பு என்றாலே அவனுக்கு வேப்பிலை போல் கசக்கும்.
வகுப்பிலேயே அவன் தான் உயரமானவன். வகுப்பில் இருப்பவர்கள் அனைவருமே அவனுக்கு விரோதிகள் தான். 
அவசரத்தில் காரியம் செய்வதும், ஆத்திரத்தில் கை ஓங்குவதும் அவன் பிறவி குணம் என வகுப்பு ஆசிரியர் அடிக்கினார். 
  
"உண்மையை சொல்வதற்கு நினைவாற்றல் தேவையில்லை".என்பது போல மனதில் உள்ளதைக்கொட்டித் தீர்த்தார். 
வகுப்பாசிரியர்,முருகன் பற்றி தலைமை ஆசிரியரிடம் கூறினார். இந்தச்சமயத்தில் அங்கு உதவியாளர் வந்து   ஐயா, முருகன் வீட்டில் யாரும் இல்லை, பக்கத்து வீட்டில் இருந்தவர்களிடம் முருகன் பெற்றோரைநாளை பள்ளிக்கு உங்களை பார்க்க வர வேண்டும் என நீங்கள் சொன்னதாகச்சொன்னேன் . 
மற்ற பாட ஆசிரியர்களிடம் முருகன் பற்றி விசாரிக்க அவன் சேட்டை செய்வான், வீட்டுப்பாடம் முறையாகச் செய்யமாட்டான்என்று கூறினார்கள். 
முருகனை இனிமேலும் பள்ளியில் வைத்திருப்பது எவ்வித நியாயமும் இல்லை சார்  என்று வகுப்பு ஆசிரியர் மீண்டும் கூறினார். முரட்டுத்தனமும், ஒழுங்கீனமும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறன...என மற்ற பாட ஆசிரியர்கள் கூறினார்கள். 
தலைமை ஆசிரியர் பரமசிவத்திற்கு இவர்கள் சொல்லச்சொல்ல கோபம்தலைக்கு ஏறுவது போல் இருந்தது.
இனிமேலும் முருகனைப் பள்ளியில் நீடிக்க விடுவது சரியில்லை என முடிவு செய்தார். 
சரி ராமச்சந்திரன். ..நீங்கள் சொல்வதில் எனக்கும் உடன்பாடு இருக்கிறது. நாளை கல்வி அதிகாரி இங்கு வர இருக்கிறார். அவரிடம் கலந்து பேசி அவனை பள்ளியை விட்டு நீக்கி விடலாம், என்று தலைமை ஆசிரியர் கூற திருப்தி அடைந்து எழுந்து சென்றார் ராமசந்திரன். 
அடுத்த நாள் காலை வழிபாட்டு கூட்டம் தொடங்கும் போதே கல்வி அதிகாரி  வந்தார். காலை வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டு, பள்ளி வளாகத்தைச் சுற்றி பார்த்தார். வளாகம் தூய்மையாக இருப்பதை கண்டு பாராட்டினார். பின்னர் அலுவலகம் வந்து பதிவேட்டில் கையெழுத்து இட்டார். 
பள்ளியின் வளர்ச்சி பற்றி தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார். அவர் ஒவ்வொன்றாக சொல்லி இறுதியில் முருகனின் பிரச்சினையைப் பேச தொடங்கினார்.
மாணவன் முருகனிடம் இருக்கும் கெட்ட குணங்கள் , திருட்டுப் பழக்கம் ஆகியவை குறித்து வரிசையாய் எடுத்துச் சொன்னார் தலைமை ஆசிரியர். 
இனியும் முருகன் பள்ளியில் வைத்து இருப்பது ஆபத்து சார் என்றார். அனைத்தையும் பொறுமையாய் கேட்டு கொண்ட கல்வி துறை அதிகாரி, உங்கள் ஆதங்கமும், கோரிக்கையும் எனக்கு புரிகிறது என்றார். இருந்தாலும் ...
ஏதோசொல்லவர்றீங்க...ஆனால் என்ன சார்? ஏதும் புரியாமல் கேட்க.
   உங்களை ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே? 
  கேளுங்க சார் ...
முருகனை அவனுடைய தவறுகளுக்குக்காகக் கண்டித்திருக்கிறீர்கள் சரி. அவன் ஒழுங்கு படவில்லை. அதற்காக அவனைப் பள்ளியில்இருந்து விரட்டுவது தான் ஒரே வழியா? தவறானவழியில் செல்லும் மாணவனை; திருத்துவது என்று ஒன்று இருக்கிறதே. அதை முயற்சித்துப்பார்த்ததாகவே தெரியவில்லை! 
நெற்றி பொட்டில் அறைந்தாற் போல் இருந்தது தலைமை ஆசிரியருக்கு. ஆம், நாம் அவனைக் கண்டித்திருக்கிறோம். பயமுறுத்தியிருக்கிறோம். தண்டனை கொடுத்திருக்கிறோம். ஆனால் அவனைத் திருத்த எந்த முயற்சியும் செய்யவில்லையே முதன் முறையாக தன்னை நினைத்து வெட்கப்பட்டுக்கொண்டார்.
நினைத்துப்பாருங்கள் பரமசிவம், நம்முடைய வாகனம் பழுதடைந்தால் அதைச்சரி செய்து ஓட்டத்தானே முயற்சி செய்கிறோம் .அதை 
உடனே நம்மிடமிருந்து தொலைத்துவிட வேண்டும் என நினைப்பது இல்லை. சாதாரண வாகனத்தில் காட்டும் இந்த அணுகுமுறையை, அறியாத வயதில் இருக்கும் ஒரு மாணவனிடம் ஏன் காட்டக்கூடாது? 
எதிர்காலச்சிற்பிகளை உருவாக்குவதாக கூறும் கல்வி நிறுவனமே இதை போன்ற மாணவர்களைத் திருத்த முயற்சி செய்யாமல் வெளியேற்றினால், இந்த சமுதாயத்தில் யார் அக்கறை கொள்ளப்போகிறார்கள்? 
இயல்பிலேயே நல்ல குணம் இல்லாத ஒருவனை அனைவரும் புறகணித்தால், அவன் ஒரு சமூக விரோதியாகத்தானே உருவான் .?என உணர்ச்சிகள் பொங்க பேசினார் . 
அலுவலகத்தில் கோப்புகள் உடனே காலத்தைக் கழிக்கும் ஓர் அதிகாரி மனதில் எழுந்த இந்த சிந்தனை, முப்பது ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் இருந்த நமக்கு தோன்றவில்லை. ஆசிரியர் பணியில் இன்னும் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது, அவர் பல்வேறு பள்ளியில் பெற்ற அனுபவம் நமக்கு வழிகாட்டியது. முருகனை என்பொறுப்பில் எடுத்து அவனிடம் இருக்கும் பிற திறமைகள் மூலம் திருத்துவேன். 
இங்கு அனுபவம் பேசுகிறது . . . 

No comments:

Post a Comment

Super useful ideas thank you reading