H

Thursday 18 June 2020

மன அழுத்தம் குறைக்க manage stress/health tips

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பணி சூழலில் மன அழுத்தம் அதிகரித்து வருகிறது. மாறிவரும் சமூக சூழல் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மன அழுத்தம் அதிகமாக குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது.
மாறி வரும் நவீன உலகில் பணிச்சுமை அதிகரித்து மனசோர்வு, மன அழுத்தம் ஏற்படுகிறது. மனஅழுத்தம் அதிகமானால் அவரும், அவரைச் சுற்றியுள்ள சமுதாயமும் பல பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். 
அவரின் பணியை செவ்வனே செய்ய முடியாது. மனஅழுத்தம் உள்ளவர்களின் நடத்தையைப்பற்றி இன்னொரு பதிவில் தெளிவாக பார்க்கலாம். 
மனஅழுத்தம் குறைக்க எளிய வழிகள் பின்பற்றி நீங்களும்,  உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களும் மகிழ்ச்சி அடைய வேண்டுகிறேன். சில வழிகள் நீங்கள் பின்பற்றி வாழ்ந்து கொண்டு இருக்கலாம். அல்லது வழிகள் உங்களுக்கும் தெரிந்து இருக்கலாம். 
*சிக்கல் அல்லது பிரச்சனைக்குத்தீர்வு காண முடியவில்லை எனில் சத்தம் போட்டுக்கத்த வேண்டாம். வீண் உரையாடல் செய்ய வேண்டாம். ஆரோக்கியமான வாதம் தேவை ஆனால் வீண் விவாதம் தேவை அல்ல. 
*அனைத்து சிக்கல்களையும் அல்லது பிரச்சனைகளையும் தன்னுடையது என கருதவேண்டாம். 
*என்னால் இது முடியாது, அது முடியாது என்ற இயலாமை எண்ணத்தை கைவிடுங்கள். 
*தவறு நடந்து விட்டது எனில் பிறரைக் குறை கூற வேண்டாம். நடந்த தவறை மாற்ற முடியாது. ஆனால் திரும்ப நடக்காமல் இருக்க வழிகளை வகுத்துக் கொள்ளலாமே. 
* சிக்கல் அல்லது பிரச்சனை நினைத்து நினைத்து தினமும் சண்டைப்போடவேண்டாம். மறத்தல் மனதுக்கு நல்ல மருந்து, ஆகவே சிலவற்றை மறந்து விடுவதும் நல்லதே. 
*நான் சொல்லியவாறுதான் நீங்கள் கேட்க வேண்டும் என்று யாரையும் கட்டுப்படுத்த வேண்டாம். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் உண்டு. யாரையும் யாரும் திருத்தி விட முடியாது என்ற எண்ணத்தை மனதில் வைக்க மன அழுத்தம் குறையும். 
மேலே சொன்ன அனைத்தும் செய்யாமல் 
இருப்பதே மன அழுத்தத்தைக்குறைக்கும். 
++சொந்தஊர்திருவிழாவிற்கு குடும்பத்துடன் செல்ல மனஅழுத்தம் குறைந்து மனம் மகிழ்ச்சி அடையும். 
++குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள். காமெடியில் பேச மனமே இலேசாகி விடும். குலுங்க குலுங்கச்சிரித்தால் குறைந்து போகும்நோய்கள் என்பது பழமொழி. சிரித்து வாழக்கற்று கொள்ளலாமே. 
++ உங்கள் மனைவி /கணவன், குழந்தைகள் போன்றோரை வீட்டுக்கு அருகில் உள்ள கோயில்,பூங்கா போன்ற இடங்களுக்கு வாரம் ஒரு முறையாவது அழைத்து சென்று வரவும். 
+++குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து டிவி, செல்பேசி போன்றவைகளை அணைத்து விட்டு உணவை ரசித்து ருசித்து சாப்பிட்டால் மன அழுத்தம் எப்படி வரும். மன அழுத்தம் இருந்தாலும் குறைந்து விடும். 
++மன அழுத்தம் ஏற்பட காரணமாக உள்ள சிக்கல் அல்லது பிரச்சனை குறித்து குடும்ப உறுப்பினர்கள் உடன் கலந்துரையாடல்
செய்ய மனஅழுத்தம் குறையும். 
++உங்கள் கருத்துக்களை அனைவரிடமும் பகிர்ந்து ஆதரவு பெற்று கொள்ளலாமே. இந்த சம்பவத்தில் நான் இதை இப்படி தான் நினைத்து பேசினேன், ஆனால் நீ தவறாக புரிந்து கொண்டாய் விளக்கம் தந்து விட மன அழுத்தம் குறையும். 
+++கருத்து வேறுபாடு நிறைந்த சம்பவம் குறித்து பேசி ஒரு முடிவு செய்து விட்டால் பாதி மன அழுத்தம் குறைந்து விடும். 
++ குடும்ப வேலைகளை கணவன், மனைவி இருவரும் சேர்ந்து செய்தால் வேலையால் வந்த மன அழுத்தம் குறையும். 
++காலையில் தினமும் நடைபயிற்சி பத்து நிமிடங்கள், மூச்சுப்பயிற்சி ஐந்து நிமிடங்கள், முத்திரை பயிற்சி ஐந்து நிமிடங்கள் என செய்து வர மன அழுத்தம் குறையும். 
இன்று பல குடும்பங்களில் பிரச்சனை பணத்துக்காக வருகிறது. பணத்தை செலவு செய்யும் போதும் பிரச்சனை வருகிறது. கணவனிடம் மனைவி பணம் கேட்க அல்லது மனைவி இடம் கணவன் பணம் கேட்க பிரச்சனை தொடங்கி இருவருக்கும் சண்டை நடக்கும். அவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் மன அழுத்தம் அதிகமாகி விடும். இதை தவிர்க்க விட்டு கொடுத்துவாழ வேண்டும். "விட்டு கொடுப்பவர் கெட்டு போவதில்லை" ஆனால் இங்கு யார் விட்டு கொடுப்பதுதான் பிரச்சனை. ஒருவர் விட்டு கொடுத்துவாழக்கற்றுக்கொள்ளுங்கள், இருவரும் பணத்தை சேமிக்கும் பழக்கத்தைக்கற்றுக்கொண்டால் மனஅழுத்தம் குறைந்து விடும். 
மன அழுத்தம் குறைப்போம்!!
மகிழ்ச்சியுடன் வாழ்வோம்!!

No comments:

Post a Comment

Super useful ideas thank you reading