ஆடி அமாவாசை /Aadi amavasai
சூரியனும் சந்திரனும் நேர்கோட்டில் சந்திக்கும் நாள் தான் அமாவாசை. ஆடி அமாவாசையில் இறந்த முன்னோர்களுக்குத் திதி கொடுப்பார்கள். கடற்கரை, குளக்கரை, ஆற்றுக்கரை போன்ற நீர்நிலைகளில் எள், தண்ணீர் வைத்து அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பார்கள்.
அமாவாசையில் ஆடி அமாவாசை, தை அமாவாசை மிக முக்கியமானதாக இந்து சமயத்தில் கருதப்படுகிறது.
கடக ராசியில் சூரியன் இருக்கும் மாதம் தான் ஆடி மாதம். சந்திரனின் சொந்த வீடு கடகம். ஜோதிடத்தில் சந்திரன் தாயைக் குறிக்கும். சூரியன் தகப்பனைக் குறிக்கும்.

அமாவாசை தர்ப்பணம்
அமாவாசை அன்று எள், தண்ணீர் வைத்து இறந்த தாய், தந்தை, தாத்தா, பாட்டி போன்றவரை நினைத்து ஐயரிடம் காணிக்கை, பிண்டம் செய்து முன்னோர்களை மனதார நினைத்து வழிபாடு செய்வார்கள்.
இன்று ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணம் கொடுக்க மிகச் சரியான நாள். சூரியன் மற்றும் சந்திரன் சேரும் நாளே ‘அமாவாசை’.
இந்த அமாவாசை நாளில் நாம் செய்கிற தர்ப்பணத்தால், முன்னோர்களின் ஆசி நமக்குக்கிடைக்கும். ‘நம் வீட்டில் நல்ல காரியங்கள் செய்யும்முன் எள்ளும், தண்ணீரும் கொடுத்தப்பிறகு செய்யுங்கள்’ என்பது சான்றோர் வாக்கு. இந்த அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்துபின் தொடங்கும் செயல்கள் வெற்றியாகவே முடியும் என்பது நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற பாடம்.

ஆடி அமாவாசை தர்ப்பணம் பயன்
இன்று அமாவாசை நாளில் தர்ப்பணங்களை நாம் முழு மனதுடன் செய்தால், நம்முடைய வாழ்வில் அனைத்து வளங்களும் கிட்டும். மகிழ்ச்சியான இல்வாழ்க்கை அமையும்.ஆடி அமாவாசை அன்று பித்ருக்கு எள் மட்டும் தண்ணீர் வைத்துத்தர்ப்பணம் செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது. அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் கொடுத்துப் பித்ருகளைத் திருப்தி செய்து அவர்களின் ஆசிர்வதங்களைப் பெற வேண்டும். ‘எள்’ வடமொழியில் ‘திலம்’ என்று பொருள்படும். ‘திலம்’ என்றால் ‘விஷ்ணுவின் அம்சம்’ என்று பொருள். விஷ்ணுவிலிருந்து விஷ்ணு பகவானின் அம்சமாகத்தோன்றியது எள் ஆகும். எள்ளை தானமாகக் கொடுத்தாலே நம்மிடம் இருந்த சகல பாவங்களும் நம்மை விட்டு நீங்கிவிடும் என்று முன்னோர் கூறியுள்ளனர்.
அமாவாசை தர்ப்பணம் யாருக்குக்கொடுப்பது
யார் யாருக்கு இந்த அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்க வேண்டுமென்பது பற்றிப் பலருக்கு சந்தேகம் ஏற்படும். இறந்த நாம் முன்னோர்கள் அனைவருக்கும் அமாவாசையில் தர்ப்பணம் தரலாம்.குறிப்பாக இறந்த தங்களுடைய தகப்பனார், தன்னுடைய தாத்தா, கொள்ளுத் தாத்தா, தங்கள் அம்மா, தன்னுடைய பாட்டி, தன்னுடைய கொள்ளுப் பாட்டி, அம்மாவின் வம்சம்- அவர்களின் வழிப்பரம்பரை, அப்பாவின் வம்சம் - அவர்களின் வழிப்பரம்பரை என்று பன்னிரண்டு பேர்களுக்குக்கூடஅமாவாசையில் தர்ப்பணம் கொடுக்கலாம். யாரும் இல்லாமல் ஆதரவற்ற நிலையில் இறந்தவர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பதால் பல நன்மைகள் ஏற்படும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
ஆடி அமாவாசை விரத முறை
நம்முடைய முன்னோர்களை மனதில் வேண்டி வணங்கும் விரதம் தான் அமாவாசை விரதமாகும். அன்றைய தினம் காலையில் எழுந்து அருகில் இருக்கும் ஆற்றிலோ, குளத்திலோ, கடலில் குளித்து விட்டு, இறந்த முன்னோரை நினைத்துத்தர்ப்பணம் செய்ய வேண்டும்.
முறைப்படி தர்ப்பணம் செய்து வைப்பதற்காக அந்தணர்கள், ஆற்றின் கரையோரங்களில், குளக்கரைகளில், கடற்கரையோரங்களில் இருப்பார்கள். அவர்களிடம் நமது முன்னோர்கள் பெயர்களைச் சொல்லித் தர்ப்பணம் செய்து கொள்ளலாம்.
அதன்பின்னர் அருகில் இருக்கும் முதியவர்கள் மற்றும் ஏழைகளுக்கு உங்களால் முடிந்தளவிற்கு அன்னதானம் கொடுத்து வீடு திருப்பலாம்.
ஆடி அமாவாசை நாளன்று, வீட்டிலுள்ளப் பெண்கள் குளித்துக் காலை உணவு உண்ணாமல், இறந்த முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகளையும், பொறியல், கூட்டு, வடை தயார் செய்வார்கள். அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளைப் பயன்படுத்தி உணவுப் பொருள்கள் செய்தல் வேண்டும். வீட்டிற்கு வெளியே வாசலில் செம்மண் வைத்துக் கோலம் போடுவார்கள்.
ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டியவை
ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலை உணவாக எதையும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். பின்னர் நம்முன்னோர் களில் எத்தனை பேர்களை வணங்க வேண்டுமோ, அத்தனை இலைகளைப் போட்டு, சமைத்த எல்லா வகையான உணவையும் சிறிது சிறிதாக வைத்து வழிபடலாம். வடை, பணியாரம் போன்ற பலகாரங்களைப் படைக்கலாம். முன்னோர்களுக்குப் பிடித்த புதிய ஆடைகள் வைத்து அகல் விளக்கேற்றிச் சாம்பிராணிப் புகைப்போட்டு வழிபடவும்.முன்னோர்களை மனதார நினைத்து அவர்களின் ஆன்மா சந்தியடைய ஆடி அமாவாசையில் வழிபட்டால் முன்னோர்களுக்குத் திருப்தி ஏற்பட்டு ஆசீர்வாதம் கிடைப்பதாக ஐதீகம்.
படைத்த உணவையும் பலகாரங்களைத் தனித்தனியாக இலையோடு எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியில் அல்லது மாடியில் உயரமான இடத்தில் வைத்து விட வேண்டும்.
முன்னோர்களுக்கு ஆடிஅமாவாசையில் படைத்ததைக் காகம் மட்டும் சாப்பிட வேண்டும் என்பதால்தான் உயரமான இடத்தில் வையுங்கள். நம் முன்னோர்கள் காகம் வடிவில் அமாவாசை அன்று நமது வீட்டிற்கு வருவதாகப் பெரியவர்கள் நம்புகிறார்கள். காகம் உணவு சாப்பிடுவதைப் பார்த்து விட்டு வர வேண்டும்.
வீட்டிற்குள் வந்து வீட்டலுள்ளவர்களின் எண்ணிக்கைக்கேற்ப இலைப்போட்டுச் சாப்பிட வேண்டும்.
ஆடி அமாவாசை விரதமிருப்பவர்கள் காலை உணவுச் சாப்பிடக் கூடாது. மதிய உணவை விரதச்சாப்பாடாகச் சாப்பிடலாம். இரவு உணவாகப் பால், பழம் எனப் பிடித்தைச் சாப்பிடலாம். இவ்வாறு ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள் இன்றளவும் கடைபிடித்து வருகிறார்கள்.
சோமவார ஆடி அமாவாசை
இன்று 20/07/2020 திங்கள்கிழமையில் ஆடி அமாவாசை வந்துள்ளது. திங்கள் கிழமையைத்தெலுங்கு மொழியில் சோமவாரம் என்பதால் இன்று சோமவாரஅமாவாசை என்று வட மாநிலங்களில் அழைக்கப்படுகிறது.
திங்கள்கிழமை சிவனை வழிபட உகந்த நாள். அமாவாசை அன்று வழிபட வேண்டிய கடவுள் சிவன். ஆடி மாதத்தில் வரும் அமாவாசையில் சிவ ஆலயங்களில் கூட்டம் அலை மோதும். இருபது ஆண்டுகளுக்குப் பின் வந்த சோமவார அமாவாசை இன்று என வட மொழி பத்திரிகை செய்தி. மேலும் படிக்கRead more