Human's dress / மனிதனின் ஆடை
மனிதனின் ஆடை மாறும் சம்பவம்:
எனக்குத் தெரிந்த பிரமுகர் வீட்டில் நடக்கும் ஒருநாள் சம்பவம். அந்தப் பிரமுகர் அதிகாலை யில் தூக்கத்திலிருந்து எழுந்ததும் அவரைப் பார்ப்பதற்காக வெளியே தோட்ட வேலை செய்யும் வேலையாள் காத்துக் கொண்டிருப்பதாகத்தகவல் கிடைத்தது. உடனே அந்தப் பிரமுகர் படுக்கையை விட்டு எழுந்து முகத்தை மட்டும் கழுவிக் கொண்டு பனியன் லுங்கியுடன் அப்படியே வெளியே வந்தார். வெளியே வந்து தோட்டவேலையாளிடம் இன்று செய்யப்பட வேண்டிய வேலைகளைச் சொல்லி அனுப்பி வைத்தார்.
மறுபடி அந்தப் பிரமுகர் வீட்டில் வந்து தேனீர் குடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரைப் பார்க்க அவருக்கு வேண்டிய நபர் வந்திருந்தார். உடனே அந்தப் பிரமுகர் கொடியில் காயபோட்டு இருந்த துண்டை எடுத்து மேலே போட்டுக்கொண்டு வெளியே வந்து அந்த நபரிடம் பேசினார். பின்னர் அந்த நபர் பிரமுகரிடம் சொல்லவந்த செய்தியைச் சொல்லி வீடு திரும்பினார்.
அந்தப்பிரமுகர் வீட்டிற்குள் நுழைந்து இன்றையச்செய்தித்தாளை எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்று படித்தார். செய்தித்தாளில் உள்ள சுடச்சுட செய்திகளை விருவிருப்பாகப் படித்து கொண்டிருந்தார். அந்தச்சமயத்தில் நகராட்சியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் அந்தப் பிரமுகரிடம் பேச வந்திருக்கிறார் என்ற தகவல் வருகிறது. உடனே அந்தப் பிரமுகர் அவசரமாக எழுந்து லுங்கியை மாற்றி வெளுத்த வேட்டியை எடுத்துக் கட்டிக்கொண்டு அத்துடன் பால் போன்ற வெண்மையானச்சட்டையைப் போட்டுக்கொண்டு தலையை அழகாக வாரியபடி வெளியே வந்து நகராட்சி அதிகாரியைச் சந்தித்து பேசினார்.
ஆக, அந்தப் பிரமுகர் தன்னை சந்திக்க வந்த நபர்களின் தகுதிகளுக்கேற்ப தனது ஆடைகளை மாற்றிக் கொண்டதைக் கவனித்தோம் அல்லவா.
இப்படி வந்திருக்கும் ஆட்களின் தகுதிகளுக்கேற்ப நாம் ஆடை அணிய வேண்டிய அவசியமிருக்கிறது. ஏனெனில் நமக்குத் தனியாகத்தகுதிகள் இல்லாததால் அணியும் ஆடை மூலமே நம் தகுதிகளைப் பெற்றுக் கொள்ளமுடிகிறது. "ஆள் பாதி ஆடை பாதி" என்ற பழமொழி நமக்குத் தெரியும். இன்று நம் அணியும் ஆடைகள் தான் நமக்கு நன்மதிப்பைத் தருகிறது. அரசு வேலையில் உள்ளவர்கள் அவரவர் வேலையைப் பொறுத்து ஆடைகள் அணியும் விதம் மாறுபடுகிறது.
கிழிந்த கந்தலாடை அணிந்திருந்தவரிடம் பலர் பேசமாட்டார்கள். மனிதனின் ஆடை மாறிய சம்பவம் உங்களுக்குச் சுவாரசியமாக இருந்தது என்று நினைக்கிறேன்.
ஆக, அந்தப் பிரமுகர் தன்னை சந்திக்க வந்த நபர்களின் தகுதிகளுக்கேற்ப தனது ஆடைகளை மாற்றிக் கொண்டதைக் கவனித்தோம் அல்லவா.
இப்படி வந்திருக்கும் ஆட்களின் தகுதிகளுக்கேற்ப நாம் ஆடை அணிய வேண்டிய அவசியமிருக்கிறது. ஏனெனில் நமக்குத் தனியாகத்தகுதிகள் இல்லாததால் அணியும் ஆடை மூலமே நம் தகுதிகளைப் பெற்றுக் கொள்ளமுடிகிறது. "ஆள் பாதி ஆடை பாதி" என்ற பழமொழி நமக்குத் தெரியும். இன்று நம் அணியும் ஆடைகள் தான் நமக்கு நன்மதிப்பைத் தருகிறது. அரசு வேலையில் உள்ளவர்கள் அவரவர் வேலையைப் பொறுத்து ஆடைகள் அணியும் விதம் மாறுபடுகிறது.
கிழிந்த கந்தலாடை அணிந்திருந்தவரிடம் பலர் பேசமாட்டார்கள். மனிதனின் ஆடை மாறிய சம்பவம் உங்களுக்குச் சுவாரசியமாக இருந்தது என்று நினைக்கிறேன்.
மனிதனின் ஆடை மாறாத சம்பவம்:
காந்தியடிகளின் ஆடை:
மனிதனின் ஆடை மாறாத சம்பவத்திற்கு உதரணமாக அண்ணல் காந்தியடிகளைச் சொல்லலாம். காந்திஜி 1927 ஆம் ஆண்டு மதுரையில் தனது ஆடையை மாற்றிக் கொண்ட பின்னர் அவர் சாதரண மக்களைப் பார்ப்பதற்குப்
பயன்படுத்திய ஆடையிலே தான் உலகத்தையே ஆண்ட இங்கிலாந்து இளவரசரையும் சந்திக்கச் சென்றார். இடுப்பில் ஒரு வேட்டியும் மேலே ஒரு துண்டும் மட்டும் தான் இந்நாட்டு ஏழைகளைச் சந்திப்பதற்கும் இங்கிலாந்து பேரரசரைச் சந்திப்பதற்கும் அண்ணல் காந்தியடிகளுக்குப் பயன்பட்டது.
காரணம் காந்தியடிகள் தன்னை மகாத்மாவாக உயர்த்தி இருந்ததால் அந்த ஒரு தகுதிக்கு உலகமே தலைவணங்கிய நிலையில் அவர் எவ்வளவு எளிமையாக ஆடை அணிந்து இருந்தாலும் அவருக்குள்ள மரியாதை குறையவில்லை.
வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் ஆடை:
இன்று மகனாகப் போற்றப்படுகிற வள்ளலார் இராமலிங்க அடிகள் வாழ்ந்த காலத்தில் ஒரு அன்பர் தங்கள் வீட்டுத் திருமணத்துக்கு விரும்பி அழைத்தார் என்று அங்கே வள்ளலார் புறப்பட்டுச் சென்றார். அவருடைய எளிமையான கோலத்தைப் பார்த்து அந்தத் திருமண வீட்டு வாசலிலே வரவேற்புக்கு நின்றவர்கள் அவரை உள்ளே விட மறுத்து விட்டனர்.
இராமலிங்க அடிகள் அமைதியாக ஏதும் பேசாமல் எதிரே இருந்த திண்ணையில் போய் அமர்ந்தார். சற்று நேரத்தில் திருமண வீட்டின் சொந்தக்காரர் வெளியே வந்தார். எதிர் வீட்டுத் திண்ணையிலே அமர்ந்திருக்கும் வள்ளலாரைப் பார்த்து விட்டுப் பதறிப் போய்'தங்கள் இங்கே வந்து இருக்கலாமா... 'வீட்டிற்குள் வாருங்கள் ஐயா' என்று மிகப்பணிவுடன் அழைத்தார்.
வள்ளலாரின் கதையைப்படிக்க இதைத் தொட்டுப்படிக்கலாம். Read more
மனிதனுக்கு ஆடைத்தேவை:
சின்னச் சிறுவயதில் பிள்ளைகள் தங்கள் அணிவதற்கு நல்ல ஆடை இல்லாவிட்டால் எவ்வளவு தாழ்வு மனப்பான்மை வரக்கூடும்?
அந்தத் தாழ்வு மனப்பான்மையின் காரணமாகத்தங்கள் திறமைகளைக்கூட வெளிப்படுத்துவதற்குத் தயங்கி விடுவார்கள். எனவேதான் குழந்தைகள் அனைவரும் ஒன்று தான் என்ற எண்ணத்தை ஏற்படுத்தச் சீருடைமுறை பள்ளிகளுக்கு வந்தது.
மக்கள் எளிதில் அடையாளம் காண காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறையில் பணிபுரியும் அனைவரும் சீருடை அணிந்து பணிபுரிகின்றனர்.
போக்குவரத்து கழக ஊழியர்கள் அனைவரும் சீருடை அணிந்து பணியாற்றி வருகின்றனர்.
"ஆடையில்லாத மனிதன் அரை மனிதன்" என்ற பழமொழி மனிதனின் ஆடை எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக் காட்டுகிறது. தரமான ஆடைகளை அணிவோம்!தன்னம்பிக்கையுடன் வாழ்வம்!!
குறைந்த விலையில் தள்ளுபடி விலையில் ஆடைகள் வாங்க