H
Showing posts with label Your answer. Show all posts
Showing posts with label Your answer. Show all posts

Friday 19 June 2020

உங்கள் பதில் என்ன? Your answer

     மாம்பழம் பறித்த கணக்கு 

   ஒரு பெரிய தோட்டத்தில் மாம்பழங்கள் மரத்தில் பழுத்துதொங்கின. இந்த மாம்பழங்கள் பழுத்த வாசம் வீசி கொண்டு இருந்தது. இதைக் கண்ட சிறுமி மாம்பழங்கள் பறிக்கதோட்டத்தின் வாசலுக்குச் சென்றாள்.

                   அந்தத்தோட்டத்தில் ஏழு வாசல்கள் உண்டு. ஒவ்வொரு வாசலுக்கும் ஒரு காவல்காரர் வீதம் ஏழு காவல்காரர்கள் அத்தோட்டத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்தனர். அவ்வழியாக சென்ற சிறுமி மாம்பழங்கள் சாப்பிட எண்ணி முதல்       காவல்காரனை அணுகினாள். அதற்கு முதல் காவல்காரன் "நீ கொண்டு வருவதில் பாதியைத் தருவதாக கூறினால் உள்ளே செல்" என்றான். அதற்கு அந்தச் சிறுமியும் அந்த உடன்படிக்கையை ஏற்று கொண்டு முதல் வாசலைக்கடந்தாள். 

      
மேற்படி உடன்படிக்கை போலஒவ்வொரு காவல்காரரிடமும் செய்து கொண்டு, உள்ளே சென்று மாம்பழங்கள் பறித்தாள். அனைவருக்கும் பங்கு கொடுத்து விட்டு வெளியில் வரும் போதுஒரே ஒரு மாம்பழம் மட்டுமே  அந்தச் சிறுமியிடம் இருந்தது எனில்    சிறுமி பறித்த மாம்பழங்கள் எத்தனை?               
 
உங்கள் பதிலை கீழே உள்ள comments பதிவு செய்யுங்கள். 

யார் செய்த செயல் பாராட்ட வேண்டியது?

ஒரு நாள் காலையில் பேருந்து நிலையத்தில் நடந்த சம்பவம். ஒருவர் அன்று மதியச்சாப்பாட்டுக்கும் பஸ் செலவுக்கும் சேர்த்து நூறு ரூபாய் எடுத்துக் கொண்டு பஸ் நிலையத்தில் வேலைக்கு செல்ல காத்திருந்தார். அப்பொழுது ஒரு பஸ்ஸில் இருந்து மயக்க நிலையில் உள்ள வயதான பெண்ணைக் கைத்தாங்கலாக இறக்கி பிளாட்பாரத்தில் அமர்ந்து மடியில் தலை சாய்க்க வைத்தார் அவளது மகள். 

டிப் டாப் உடை அணிந்த ஆண்களும், பெண்களும் அந்த அம்மாவுக்கு  என்னஆனது என்று விசாரித்தார்கள். உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் ஊசி போட்டுவந்தோம். பாதி வழியில் மயக்கமுற்றார் என்று அவர்களிடம் மகள் கூறினாள். "சரிப்பா ஒரு ஆட்டோ பிடித்து வீட்டுக்குக் கொண்டு போங்கள்" என்று கூறி விட்டு அவரவர் பஸ் வரவே ஏறிச்சென்று விட்டார்கள். 
"பக்கத்தில் தான் எங்கள் குடியிருப்பு உள்ளது. அம்மா மயக்கம் தெளிந்த உடன் நடந்தே அழைத்துச் சென்று விடுவேன் என்று அவரின் மகள் கூறினார். 
அந்த மகள், "என் அம்மா வீட்டு வேலை செய்து தான் என்னைக்கல்லூரியில் படிக்க வைக்கிறார். காலையில் வேலைக்கு போகவேண்டிய அவசரத்தில் காலை உணவை சாப்பிடாமல் இருந்து உடம்பை கெடுத்துக் கொண்டார்"என்று கூறினார். 
நின்றிருந்த அனைவரும் யோசனைதான் கூறினார்களே தவிர ஒருவரும் உதவ முன் வரவில்லை. கதையில் முதலில் வந்த ஒருவர், நம் வேலை கெட்டாலும் பரவாயில்லை, ஒரு ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கையில் பிளாட்பாரத்தில் சாமி படம் வரைந்து கொண்டிருந்த ஒருவர் தனது திறமைக்காக விழுந்த காசுகளை எல்லாம் பொறுக்கிஒரு ஆட்டோவை வரவழைத்து ஆட்டோவிற்கு பணம் கொடுத்து அந்த அம்மாவின் வீட்டுக்கு போய்இறக்கி விடச் சொல்லி அனுப்பி வைத்தார். 
கதையில் வரும் முதல் நபர் இச்செயலைப் பார்த்து மனம் நெகிழ்ந்து கையில் வைத்திருந்த நூறு ரூபாயை அவர் வரைந்த சாமி படத்தின் மேல் வைத்து விட்டு வேலை கெட்டாலும் பரவாயில்லை என்று வீடு திரும்பினார். 
இவர்கள் இருவரில் யார் செய்த செயல் பாராட்ட படவேண்டியது. 
A  முதல் நபர் 
B சாமி படம் வரைந்த நபர் 
உங்கள் பதில் எதுவானாலும் COMMENTS சென்று பதிவிடுங்கள் 
முயற்சி செய்யுங்கள், உங்களால் முடியும். 
உங்கள் பதில் தவறு ஆனாலும் பரவாயில்லை, உங்களுக்கு முயற்சி செய்த திருப்தி கிடைக்கும். 
உங்கள் பதில் என்னை?  விடை இன்னும் சில நாட்களில் வரும்.