H
Showing posts with label Technology. Show all posts
Showing posts with label Technology. Show all posts

Wednesday 24 March 2021

வாக்காளர் பட்டியலில் வரிசை எண், பாக எண் எளிதாகப் பார்ப்பது எப்படி? / voters list part no & serial number

  வாக்காளர் பட்டியலில் வரிசை எண், பாகம் எண் பார்ப்பது எப்படி?

       வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை ஒவ்வொரு தேர்தலிலும் சரிபார்க்க வேண்டும். உங்கள் கையில் வாக்காளர் அடையாள அட்டை (voters id) இருந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களித்து விட முடியாது. உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும். இதை எவ்வாறு சரிபார்ப்பது?

Pandiarajan1988143@blogspot.com

        ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு ஜனவரி மாதம் இருபத்தைந்தாம் நாள் தேசிய வாக்காளர் தினம் அனுசரித்து வருகிறது. அன்று புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதில் இறந்தவர்களின் பெயர் நீக்கப்பட்டு இருக்கும். புதியதாக திருமணம் செய்து கொண்டு இந்த ஊரில் வசிப்போர் பெயர் சேர்க்கப்பட்டு இருக்கும்.        

  VOTERS HELPLINE APP 

                     வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதையும் பாகம், வரிசை எண் முதலியவற்றை எளிதாகப் பார்க்க Google Play store சென்று voters helpline app என்று search கொடுத்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

Playstore app

அல்லது https://play.google.com/store/apps/details?id=com.eci.citizen இந்த link CLICK செய்து நேரடியாக download செய்யலாம். இந்த voters helpline app open செய்து search results உங்கள் epic number (வாக்காளர் அடையாள அட்டை எண்) உள்ளீடு செய்தால் உங்கள் பெயர், பாகம் எண், வரிசை எண், முகவரி போன்ற அனைத்து விபரங்களும் இடம் பெற்றுள்ளது. 

தேர்தல் ஆணையம் இணையத்தில் பார்ப்பது எப்படி?

      Google chrome இல் Election commission என search கொடுத்து home page touch செய்தால் voters I'd search கொடுக்கலாம். அல்லது இந்த link CLICK HERE  தொட்டு நேரடியாக உள்ளே செல்லலாம். 
pandiarajan1988143@blogspot.com

அதில் முதலில் voters name search என்று இருக்கும் அதற்கு கீழே epic number search என்று இருக்கும் அதைத் தொட்டால் உங்கள் epic number, select state name, capture code enter என்று இருக்கும். அதற்கு கீழே search கொடுத்தால் உங்கள் பெயர், தந்தை பெயர், முகவரி வரும். அதை தொட்டால் pdf வடிவில் download செய்யலாம். இதில் வாக்காளர் பாகம் எண், வரிசை எண் தேர்தல் நாள் முதலியவற்றை எளிதாகப் பார்க்கலாம். 
        இதன் மூலம் உங்கள் பெயர் உங்கள் ஊர் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதை சரிபார்க்கலாம்.
              வரும் தேர்தலில் தவறாமல் வாக்களிப்போம்!
         நம்மை வாழ வைக்க எண்ணுவோரை  நாம் ஆள வைப்போம்!!

Monday 27 July 2020

Free New Pan card apply 10 minutes

   Free New Pan card apply 10 minutes 

Pan card apply old method 

        Pan card apply old method இரண்டு பக்கங்கள் கொண்ட விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதனுடன் address Proof, age Prof, ID Proof இணைத்து அனுப்ப வேண்டும். பதினைந்து நாட்கள் கழித்து தான் Pan Card கிடைக்கும். இப்ப ஆதார் எண்  இருந்தால் போதும் பத்தே நிமிடங்களில் இலவசமாகப் புதிய Pan Card பெறலாம். 

New Pan card apply for eligible 

            புதிய Pan card apply செய்ய வயது பதினெட்டு முடிந்தவராக இருக்க வேண்டும். 
         இதற்கு முன்பு  Pan card அவர் பெயரில் வைத்து இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் application reject ஆகும் அல்லது future some problems வரும். 
         New Pan card apply செய்பவருக்கு ஆதார் அட்டை கண்டிப்பாக இருக்க வேண்டும். 
ஆதார்  அட்டையில் உள்ள பெயர், பிறந்த தேதி சரியாக இருக்குமெனில் free Pan card பெறலாம். பெயர், பிறந்த தேதியில் பிழை இருந்தால் முதலில் ஆதார் அட்டையைத் திருத்தம் செய்து விட்டுபின் free new pan card apply செய்யலாம். 

Free New Pan card apply need  (தேவையானவைகள்)

        யாருக்கு free new Pan card apply செய்யப் போகிறோமோ அவருடைய ஆதார் எண் வேண்டும். ஆதார் எஎண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் போனை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
             ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP செல்லும். அதைப் பார்த்து online enter செய்ய வேண்டும். 

வருமான வரித்துறை சலுகைகள்

            புதிய பான் கார்டைப் பெறுவதற்கு நீங்கள் 2 பக்க விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டியதில்லை. மேலும் சில நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. 
                                                 ஏனெனில் வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறை ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆதார் அட்டை வைத்துள்ள எவரும் ஆன்லைனில் உடனடி பான் கார்டைப் பெற அனுமதிக்கிறது. அதுவும் இலவசமாக உடனடியாக e-Pan card பெற்றுக் கொள்ளலாம்.
       இதற்காக எவ்விதமான கட்டணம் செலுத்த தேவையில்லை. 

Free New Pan card apply method 

       Free new Pan card apply செய்ய உங்கள் போனில் Google search சென்று income tax home டைப் செய்து உள்ளே செல்லலாம். 
      அல்லது இந்த  Free New Pan card apply link தொட்டுநேரடியாக free Pan card இணையதளத்திற்குச் செல்லலாம்.
        Google search மூலமாகச் சென்றால் வருமான வரித் துறையின் மின்-தாக்கல் போர்ட்டலைப் பார்வையிட்டு, இடது பக்கத்தில் "விரைவு இணைப்புகள்" என்பதன் கீழ் "உடனடி பான் மூலம் ஆதார்" பிரிவில் சொடுக்கவும்.
        இல்லாவிட்டால் நான் கொடுத்தlink தொட்டல் நேரடியாக new pan card page செல்லும்.
        புதிய பக்கத்தில் "புதிய பான் பெறு" (Get new Pan) என்பதைக் கிளிக் செய்க.
       ஆதார் எண்  (Aadhaar number) பதிவு செய்து பின் captcha code Enter (5643227 example) செய்யவும்.
       I confirm that  முன்பு சிறிய அளவில் உள்ள கட்டத்தை டிக் கொடுத்து  Generate Aadhaar OTP தொடவும்.
       உங்கள் ஆதார்-இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு  OTP வரும். அந்த OTP  யை  உள்ளிடவும்.
       OTP ஐ சரிபார்த்து உங்கள் ஆதார் விவரங்கள் வரும்.
          ஆதார் விவரங்களைச்சரிபார்க்கவும். சரியாக இருந்தால் next கொடுக்கவும்.
        பான் கார்டு பயன்பாட்டிற்காக உங்கள் Email id (மின்னஞ்சல் ஐடி) யைச்சரிபார்க்க உங்களுக்கு விருப்பமிருந்தால் கொடுக்கவும். இல்லையென்றால் Get Pan செல்லவும்.
      அந்த ஆதார் எண்ணின் e - KYC  தகவல்கள் இந்திய தனித்துவ அடையாளஆணையத்துடன் (யுஐடிஏஐ) பரிமாறிக்கொள்ளப்படுகிறது.
          அதன் பிறகு உங்களுக்கு உடனடி மின்-பான் அட்டை (e - Pan card) வழங்கப்படும். முழு செயல்முறையும் 10 நிமிடங்களுக்கு மேல் ஆகாது.
      இதற்குபின் இந்த link தொட்டுநேரடியாக  Click here  "சரிபார்ப்பு நிலை / பதிவிறக்கம் பான்" (check status / Download) தொட வேண்டும். பின்பு உங்கள் ஆதார் எண்ணைச் சமர்ப்பிப்பதன் மூலம் உங்கள் பான்னை pdf வடிவத்தில் பதிவிறக்கம் செய்யலாம். Colour print எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
                 உங்கள் மின்னஞ்சல் ஐடி ஆதார் தரவுத்தளத்தில் பதிவுசெய்யப்பட்டால், உங்கள் மின்னஞ்சல் வழியாக  PAN ஐ PDF வடிவத்தில் பெறுவீர்கள்.

Free Pan card அட்டை வடிவில் 

                 ஒரு நிரந்தர கணக்கு எண் (பான்) விண்ணப்பதாரருக்கு PDF வடிவத்தில் வெறும் 10 நிமிடங்களில் உடனடியாக, இலவசமாக வழங்கப்படுகிறது. Pancard ஒரு photo copy   போலவே சிறந்தது என்றாலும், வெறும் ₹ 50 க்கு மறுபதிப்புக்கு ஆர்டர் செய்வதன் மூலம் நீங்கள் விரும்பினால் லேமினேட் பான் கார்டைப் (pan card)பெறலாம்.
        New pan card அட்டை வடிவில் பெற free Pan card apply செய்து பத்து நாட்கள் கழித்து செய்ய வேண்டும். உடனே செய்தல் உங்கள் details இல்லை என்று வரும். இந்தப் பதிவு நீண்டு செல்வதால் New Pancard lamination வடிவில் பெறுவது எப்படி? என்பதைத் தனிப்பதிவாக பார்க்கலாம்.

Free new Pan card apply செய்யும்போது கவனிக்க வேண்டியவை 

        புதிய பான் கார்டைப் பெறுவதற்கான முழு செயல்முறையும் இப்போது இலவசமாகவும், எளிதாகவும், காகிதமற்றதாகவும் செய்யப் பட்டுள்ளது. நீங்கள் எந்த ஆவணங்களையும் போர்ட்டலில் பதிவேற்ற தேவையில்லை.
         புதிய  பான் கார்டு விண்ணப்பிப்பவருக்கு ஆதார் எண் இருந்தால் மட்டும் போதும்.
                       இதற்கு முன்பு ஒருபோதும் பான் ஒதுக்கப்படாதவர்களுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கிறது.
             மொபைல் போனின் எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆதார் அட்டையில் dd/mm/yyyy வடிவத்தில் முழுமையான பிறந்த தேதி ஆதார் அட்டையில் இருக்க வேண்டும்.
           இந்த free new Pan card apply செய்யும்வசதி குழந்தைகளுக்கு இல்லை.
     இந்தச் சலுகை இனி வரும் காலங்களில் இல்லாமல் போகலாம். இப்போது பயன்படுத்திக் கொள்ளலாமே!
     ரேஷன் கார்டு தொடர்பான தகவல்களை அறிய Read more

Sunday 26 July 2020

EIA Draft 2020 / August 11

   Environmental impact Assessment Draft 2020

EIA ACT 



        EIA  என்பதன் விரிவாக்கம் Environmental impact assessment.  1986 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் போபல் நகரில் விஷ வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால் பலர் தூங்கிய நிலையிலே இறந்து விட்டார்கள். இது போன்ற தவறு இனிமேல் நடக்கக் கூடாது என்று மத்திய அரசு  1986  ஆம் ஆண்டு EIA Act  கொண்டு வந்ததது.
       இந்தச் சட்டம் தொழிற்சாலைத் தொடக்கம், இயற்கை சூழல் பாதுகாப்பு. இப்படி பல அம்சங்களைக் கொண்டுள்ளது. தற்சமயம் இந்திய அரசாங்கம் EIA Draft 2020 அறிவித்துள்ளது. 

EIA Act அம்சங்கள் 

     ஒரு கம்பெனி தொடங்க தேவையான அனுமதியை அளிக்க உறுதிச் செய்யும். கம்பெனி தொடங்குவதால் எவ்வளவு மண் சுரண்டப்படும்? மலைப்பகுதி எவ்வளவு குடையப்படும்? எத்தனை மரங்கள் வெட்டப்படும்? எவ்விதமான பயன்கள் கிடைக்கும் என்று ஆராய்ந்து அனுமதி அளிப்பது EIA  சட்டமாகும்.  
           1986  ஆம் ஆண்டு முதல் இன்றுவரை நடைமுறையில் உள்ளது. 

அமெரிக்கா நிறுவனம் கருத்துக் கணிப்பு 

       அமெரிக்காவில் உள்ள கிளைமட்சென்டர் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு இந்தியா பற்றிய கருத்துக் கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
                  அதில்  2050 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் பாதிப்பகுதி நீரில் மூழ்கிப்பரிதாபம் உள்ளது என்று கூறியுள்ளது. 
       இதற்கு முக்கிய காரணம் வீட்டில் பயன்படுத்தும் பிரிட்ஜ், ஏசி, கார், தொழிற்சாலை போன்றவைகளிலிருந்து வெளியேறும்  நச்சு வாயுக்களால் ஆர்டிக் பனிப்பாறைகள் உருகி கடலின் நீர் மட்டம் உயரும் அபாயம் உள்ளது என்றும் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

பொருளாதரத்தை மேம்படுத்துதல் 

       இந்த ஆண்டு (2020) தொடக்கம் முதலே கொரோனாவின் கோரத்தண்டவத்தால் இந்தியா பொருளாதரம் சரிவைக் கண்டது. உலக நாடுகளின் பொருளாதரமும் கூடப்பத்து ஆண்டுகள் பின்னோக்கி சரிவைக் கண்டது.
      இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஒவ்வொரு நாடும் தன்னுடைய நாட்டில் வேலை வாய்ப்புகளைப் பெருக்குதல், பொருளாதரத்தை மேம்படுத்துவது குறித்து பல சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்தியாவும் EIA Act சில திருத்தங்களைக் கொண்டு (EIA Draft 2020) வருவதற்கு நம்மிடம் கருத்துக்கள் கேட்டு உள்ளது. 

சீனா நாட்டில் தொழிற்சாலை 

     சீனா நாட்டில் தொழிற்சாலைச் தொடங்குவது மிக எளிது. தொழிற்சாலை தொடங்குவது தொடர்பானச் சட்டம் முதலாளிகளை ஈர்க்கும் வகையில் உள்ளது. எனவே தான் உலகில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகள் சீனாவில் தொடங்க முதலாளிகள் முன் வந்தனர். 
     அதுபோல இந்தியா அரசாங்கம் தொழிற்சாலை தொடங்க தேவையான EIA Draft 2020 திருத்தம்  அறிவிக்க உள்ளது. 

EIA Draft 2020 

      Environmental Impact Assessment சட்டத்தில் தொழிற்சாலை தொடங்குவது குறித்த தகவல்கள் அடங்கும். தொழிற்சாலை கட்டினால் எவ்வளவு பரப்பு பயன்படுத்த வேண்டும்? கனிம வளங்களை எவ்வளவு எடுக்க வேண்டும். ஊரில் உள்ள மக்களுக்குப் பிரச்சனை வருமா? இந்தத்தொழிற்சாலை கட்டினால் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்? தொழிற்சாலை கழிவுகளை அகற்றும் முறை குறித்து விளக்கம். எத்தனை மரங்கள் வெட்டப்படும்? எத்தனை ஏக்கர் விவசாய நிலங்கள் தொழிற்சாலை கட்டப் பயன் படுத்தப்படுகிறது?
       தொழிற்சாலை அமைக்க அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் மூப்பது நாட்களில் கருத்துக்கள் தெரிவிக்கலாம். இது போன்ற பல அம்சங்கள் கொண்டுள்ளது. இது கடல் அளவுக்குச்செய்திகள் உள்ளது. இது EIA Act 1986 ஆம் ஆண்டுச்சட்டம். 
       ஆனால் புதிய சட்டம் EIA Draft 2020 திருத்தம் செய்யக்கருத்துக்கள் நம்மிடம் மத்திய அரசு கேட்டுள்ளது. 
      EIA draft 2020 தொழிற்சாலை தொடங்க முதலாளிகள் இருபது நாள்களில் அந்தப் பகுதியில் உள்ள மக்களிடம் கருத்து கேட்டுத் தொடங்கலாம். 
      தொழிற்சாலைப் பற்றி கருத்து சொல்ல நூறு கிலோமீட்டர் பகுதியில் உள்ளவர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. 
      தேசிய பாதுகாப்பு தொழிற்சாலை தொடர்பாக கருத்துக்கள் கேள்வி கேட்க முடியாது. 
     தொழிற்சாலை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வரும் இயற்கை பாதுகாப்பு சான்றிதழ் இனி  வருடம் ஒரு முறை சமர்ப்பித்தால் போதும். 
      இது குறித்து கருத்துக்கள் தெரிவிக்க இந்திய அரசு ஆகஸ்ட் மாதம்  11 தேதி வரை காலம் நிர்ணயம் செய்துள்ளது. உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். 
     இந்தச் செய்தியை அனைவருக்கும் பகிருங்கள். மேலே உள்ள வீடியோவில் mail address உள்ளது. 

Tuesday 7 July 2020

Mobile charge tips

Mobile charge tips 

How to use Mobile charger:

       இன்று ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை நபர்கள் உள்ளனரோ அத்தனை cell phone வைத்துள்ளனர். அப்பாவுக்கு ஒன்று, அம்மாவுக்கு ஒன்று, கல்லூரி செல்லும் அக்காவுக்கு ஒன்று, வேலைக்குப்போகும் அண்ணனுக்கு ஒன்று, play games விளையாடும் தம்பிக்கு ஒன்று. இப்படி வீட்டில் இருக்கும் mobile phones அடுக்கிக்கொண்டே செல்லலாம். சில நேரங்களில் mobile charge போட சண்டைக்கூட நடக்கும். நான் தான் முதலில் mobile charge போடுவேன் என்று சண்டை போடுவார்கள். Mobile charge tips சிலவற்றைப்பார்க்கலாம்.

    Mobile charger time 

       நாம் mobile phone charger இரவில் தூங்கும்போது switchon செய்துவிட்டு காலை எழுந்து மின்சாரத்தை switch off செய்வது வழக்கம். இது தவறு. இப்படி செய்வதால் mobile phone battery சூடாகி அதன் saving capacity குறைந்து விரைவில் பழுதடைந்து விடும். சராசரியாக இரண்டு மணிநேரம் mobile charge செய்தல் போதும்.

Mobile charge battery level 

       mobile phone battery life long வர வேண்டுமென்றால் எப்பொழுதும் உங்கள் mobile phone charger level maximum 90% _ 95%   இருக்கும்வரை charge செய்தால் போதும். அதுபோல் mobile charge battery level  10% குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறைந்தால் உடனே mobile phone ஐ charge செய்ய வேண்டும். அதுபோல்  100% வரை charge போட வேண்டாம்.

New mobile charge methods

             புதிய mobile phone  வாங்கியதும்  mobile கடைகாரர் இரவு முழுவதும் அல்லது ஒரு நாள் முழுவதும்  mobile charge போட்டுவிட்டு பிறகு mobile phone யை  on செய்து பயன்படுத்துங்கள் என்று கூறுவார்கள். இது தவறானது. தற்பொழுது வருகிற புதிய mobile phone அனைத்துமே 40 - 80 சதவீதம் வரை battery charge செய்துதான் வருகிறது. எனவே புதிய மொபைல் அப்படியே use செய்யலாம் அல்லது தேவையான அளவு mobile charge செய்து கொள்ளலாம்.

 Mobile charger போட்டுக்கொண்டு

            Mobile charge போட்டுக்கொண்டே சிலர் mobile phone பேசுவார். இப்படி செய்தால் சில நேரங்களில் வெடித்துவிடும் என்ற செய்தியைச்செய்தித்தாளில் படித்துள்ளோம். ஆகவே mobile phone charger போட்டுக்கொண்டே பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.

          சிலர் mobile phone charge போட்டுக்கொண்டே game விளையாடு கிறார்கள். இதுவும் தவறான செயல். இதனால் mobile phone சூடாகிவிடுகிறது.

Mobile speed charge method

          எனக்கு  mobile charge வேகமாக charge ஆகவில்லை என்று பலர் கூறுவதை கேட்டுள்ளோம்.அதற்கு mobile phone charger அடிக்கடி  கீழே போடுவதைத் தவிர்க்கவேண்டும். Mobile charge cable மடக்கிச்சுற்றக்கூடாது. Mobile Phone charger data, data cable ஒரே company brand ஆக இருந்தால் நல்லது. Mobile charger input voltage, out put voltage பார்த்து வாங்க வேண்டும். Output voltage DC 5V - 10V இருந்தால் வேகமாக mobile charge ஆகும்.
          நீங்கள் எப்பொழுதும் உங்கள் mobile phone  உடன் வந்த charger பயன்படுத்தலாம். அல்லது தரமான வேறு  mobile phone charger கூடப்பயன்படுத்தலாம்.
           மேலும் பல புதிய தகவல்களை இதைத் தொட்டுப்படிக்கலாம்.

Mobile charger தள்ளுபடி விலையில்

         Good charger your mobile phone and speed charge touch it
 மிகக் குறைந்த விலைக்குத்
தரமான mobile charger மேலே தொட்டுப்பார்க்கலாம்.
    உங்கள் மொபைல் போனில் சார்ஜ் நிக்க வில்லை என்றால் உங்கள் போனில்ஒரே ஒரு setting செய்தால் போதும் சார்ஜ் வேகமாகக் குறையாது. பழைய மொபைல் போன் பயன் படுத்துபவர்கள் சார்ஜ் வேகமாகக் குறைவதைக் குறைக்கலாம். இந்த setting tips  நாளை தொடரும்.