பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்
பதிவேடுகள் ஏன் தேவை?
நேற்றைய செய்திகள் இன்றைய வரலாறு. இன்று நடப்பதை நாளைக்கு நம் தலைமுறைக்கு அறிய செய்வது பதிவேடு தான். பதிவேடுகள் இல்லாவிட்டால் நாம் இதுவரை செய்த பணிகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை நம்மால் கூட கணிக்க முடியாது.
நம் வளர்ச்சியை அதிகாரிகள் கண்காணிப்பதற்காக பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டியது அவசியம். பதிவேடுகள் இல்லாவிட்டால் பள்ளிக்கு தேவைப்படும் நிதியை ஒதுக்கீடு செய்ய முடியுமோ?
பதிவேடுகளின் பயன்கள்
பதிவேடுகள் மூலமாக பள்ளிகள் திறப்பு, பள்ளியின் ஆரம்ப கால வரலாறு தெரிந்து கொள்ள முடியும்.
பள்ளியில் கடந்த ஆண்டுகளில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை, மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள், மாணவர்கள் வருகை சதவீதம், மாணவர்கள் விபரம், மாணவர்கள் பெற்ற கல்வி உதவித்தொகை, கல்வி விலையில்லா பொருள்கள் (சீருடைகள், பாடபுத்தகங்கள், சைக்கிள், லேப்டாப், புத்தகப்பை, வண்ணப்பென்சில், காலணி) வழங்கிய பதிவேடுகளின் மாணவர்களின் வளர்ச்சியை அறிந்து கொள்ள முடியும். நடப்பு ஆண்டு சேர வேண்டிய மாணவர்கள் விபரம் அறிய முடியும்.
பதிவேடுகள் பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் விபரம், அலுவலர்கள் விபரம், ஊதியம் மற்றும் ஓய்வூதிய நிதி விபரம் அறிய முடிகிறது.
பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் பற்றி தெளிவாக படிக்க Read more
பள்ளிக்கல்வித்துறையின் இயக்குநர் செயல் முறைகள்.
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் இயக்குநர் செயல் முறைகள் கடந்த 10/02/2021 அன்று வெளியிடப்பட்டது. அதன் படி இனி வரும் காலங்களிலும் பள்ளிக்கல்வித்துறையின் பணிபுரியும் அலுவலர் அவர்கள் சார்ந்த அலுவலக பதிவேடுகள் பராமரிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக்கல்வி அலுவலகம், பள்ளியின் அலுவலகம் போன்றவற்றில் பணிபுரியும் சார்நிலை அலுவலர் அவர்களுக்குட்பட்ட பதிவேடுகளை கீழ் கண்ட முறையில் பராமரிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.
அலுவலகம் பதிவேடுகள் பட்டியல் Pdf வடிவில் download செய்ய CLICK here
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு புதிய தொடக்கஇப்பள்ளிகள் தொடங்குதல், தொடக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவது, நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவது செய்யப்படும். இதற்காக நிதியை ஒதுக்கீடு செய்து முதல்வர் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்வார்கள்.
இந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலும், மக்களின் கோரிக்கைகள் அடிப்படையிலும் தமிழக அரசு புதிய தொடக்கப்பள்ளிகளின் (New primary school list 2021) பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழக பள்ளிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் மூடப்பட்டு உள்ளது. கொரோனா நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. பல்வேறு மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரின் பெரும் முயற்சியில் இன்று கொரோனா நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளது தமிழக அரசு.
தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் பெற்றோர்களிடம் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் வருகின்ற ஜனவரி 19 ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் கீழ் கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு சார்பில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்த பள்ளிகள் திறப்பு பற்றி செய்திகள் மற்றும் சுற்றறிக்கை படிக்க pdf file download செய்ய CLICK HERE
முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நமது அரசு மூலமாக NISHTHA பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் Matric school Teacher (முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும்) கலந்து கொள்ள வேண்டும். NATIONAL INITIATIVE FOR SCHOOL HEADS AND TEACHERS HOLISTIC ADVANCEMENT என்பதன் சுருக்கம் NISHTHA என்று அழைக்கப்படுகிறது. இது தேசிய அளவில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் முழு மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு என்பது தமிழ் விளக்கம்.
NISHTHA TRAINING 2020
இப்பயிற்சி நாளை (16/10/2020) முதல் ஜனவரி15,2020 வரை ஆன்லைனில் நடைபெறும். இப்பயிற்சி 6 கட்டங்களாக நடைபெற உள்ளது.
ஒவ்வொரு கட்டமும் 15 நாட்கள் நடைபெறும் அக்டோபர் 16 முதல் 30 வரை முதல் கட்டம் நவம்பர் 1 முதல் 15 வரை இரண்டாவது கட்டம் நவம்பர் 16 முதல் 30 வரை
மூன்றாவது கட்டமும் டிசம்பர் 1 முதல் 15 வரை நான்காவது கட்டம் டிசம்பர் 16 முதல் 30 வரை
ஐந்தாவது கட்டமும் ஜனவரி 1 முதல் 15 வரை ஆறாவது கட்டம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு கட்டத்திற்கும் மூன்று course உள்ளது. ஒவ்வொரு ஆசிரியரும் மூன்று course களையும் முடிக்க வேண்டும் 15 நாட்களுக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் ஆசிரியர்கள் அந்த பயிற்சியை எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் அனைத்து ஆசிரியர்களும் ஆறு கட்டங்களையும் முழுமையாக பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பயிற்சி நடைபெறும் பொழுது நமக்கு வினா வினாடி வினா போட்டிகள் நடத்தப்படும் ஆறு கட்டங்களும் கலந்து கொண்ட பின்பு course completion certificate வழங்கப்படும். எனவே அனைத்து ஆசிரியர்களும் முழுமையாக இந்த ஆறு கட்டங்களையும் பயிற்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பயிற்சியில் கலந்து கொள்ள என்னசெய்ய வேண்டும்?
இந்த பயிற்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாக அனைத்து ஆசிரியர்களும் தங்களது மொபைல் போனில் diksha ஆப் டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளவும்.
Username, password பார்ப்பது எப்படி?
Emis வலைதளத்தில் சென்று உங்களது பள்ளியின் emis user name, Password சமர்ப்பிக்கவும்.
அடுத்து பள்ளியில் உள்ள staff details சென்று staff login details சென்று user name மற்றும் password எடுத்துக்கொண்டு அதன் மூலமாக பயிற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
NISHTHA TRAINING DIKSHA APP LOGIN செய்தல்:
இதற்கு DIKSHA APP DOWNLOA D செய்து EMIS இல் ஒவ்வொரு ஆசிரியருக்கும் வழங்கப்பட்ட எண்ணை user id யாகவும் அதற்கென கொடுக்கப்பட்ட கடவுச் சொல்லை பயன்படுத்தி படித்து Online லே கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையலிக்க வேண்டும் நீங்கள் படிக்கவேண்டிய பாடங்கள்.
October 16-30
Course 1- கலைத்திட்டம் மற்றும் உள்ளடங்கிய கல்வி Course 2 - தனியாள் - சமூகத்திற்கு உரிய பண்புகளை வளர்த்தலும் பாதுகாப்பான, ஆரோக்கியமான பள்ளிச் சூழலை உருவாக்குதலும் Course 3 - பள்ளிகளில் மாணவர்களின் சுகாதாரமும் நலவாழ்வும்
நவம்பர் 1-15
Course 4 கற்றல்-கற்பித்தல் செயலில் பாலின பன்முகத்தன்மையின் பொருத்தப்பாடு Course 5 - கற்றல் கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டில் தகவல் தொடர்புத் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு Course 6 - கலையோடு இணைந்த கற்றல்
நவம்பர் 16-30
Course 7- பள்ளி சார்ந்த மதிப்பீடு Course 8- சூழ்நிலையியல் கற்பிக்கும் முறை Course 9-கணிதம் கற்பிக்கும் முறை
டிசம்பர் 1-15
Course 10 - சமூக அறிவியல் கற்பிக்கும் முறை (உயர் தொடக்க நிலை) Course 11- மொழி கற்பிக்கும் முறை Course 12 - அறிவியல் கற்பிக்கும் முறை (உயர் தொடக்க நிலை)
டிசம்பர் 16-31
Course 13 பள்ளி தலைமைப் பண்பிற்கான கருத்துக்களும் அவற்றின் பயன்பாடுகளும் Course 14 - பள்ளிக் கல்வியில் புது முயற்சிகள் Course 15 - பள்ளி முன்பருவக் கல்வி
2021 ஜனவரி 1-15
Course 16 - முன்பருவ தொழிற்கல்வி Course 17 - கோவிட் -19 (Covid-19) நிகழ்நிலவரம்: பள்ளிக் கல்வியில் சவால்களை எதிர்கொள்ளல் Course 18 - உரிமைகளைப் புரிந்துகொள்ளல், குழந்தை பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப்பாதுகாத்தல் சட்டம் (POCSO Act), 2012
ஆசிரியர், சிறந்த ஆசிரியர் எனப் பெயர் பெறுவது மிக எளிமை. நம் நாடு பல்வேறு சிறந்த ஆசிரியர்கள் கொண்டு உள்ளது. சிறந்த ஆசிரியர் என்று ஊர்மக்கள் சொல்ல வேண்டியதில்லை.
நம்மிடம் கல்வி பயிலும் மாணவச் செல்வங்கள் இந்த ஆசிரியர் சிறந்தவர் என்று சொன்னால் போனது. நீங்கள் சிறந்த ஆசிரியராகச் சிறந்த சில குறிப்புகள் பார்க்கலாம்.
ஆசிரியர் ஆடை
புத்தம்புது மலரினைப்போல் எப்போதும் தூய்மையான ஆடையில் பள்ளிக்குச் செல்லுங்கள்.
ஆடைகள் அணியும்போது ஆடம்பரமான ஆடைகள் அணிந்து பள்ளிக்குச் செல்வதை தவிர்த்து விடுங்கள். இல்லையென்றால் உங்கள் ஆடையின் மீது மாணவர்களுக்குக் கவனம் இருக்குமே தவிர, படிப்பு கவனம் குறைய வாய்ப்புள்ளது.
உங்கள் ஆடையைப் பார்க்கும் அக்கிராமத்தில் உள்ள மக்கள் ஆசிரியர் சமுதாயத்தின் மீது பொறமை ஏற்படும்.
ஆசிரியர்கள் விலையுயர்ந்த தங்க நகைகள், அணிகலன்கள் அணிந்துக் கொண்டு பள்ளிக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
அரசு சொன்ன வழிகாட்டின் படி ஜீன்ஸ் பேண்ட், டி-சார்ட் போன்ற ஆடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
காலந்தவறாமை
ஒவ்வொரு ஆசிரியரும் காலைக் கதிரவனைப் போல், காலம் தவறாமல் பள்ளிக்குச் செல்ல வேண்டும்.
அவசியமானத் தேவைகளுக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு பள்ளி மற்ற வேலை நாட்களில் பள்ளிக்குச் செல்ல வேண்டும்.
நீங்கள் தொடர்ந்துப் பள்ளிக்குச் செல்லும்போது உங்கள் வகுப்பில் பயிலும் மாணவர்கள் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
பள்ளிக்குச் சரியான நேரத்திற்குச் சென்றால் மட்டும் போதாது. உங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பாட வேளையில் சரியாக வகுப்புக்குள் நுழைய வேண்டும்.
வாரப்பாடத்திட்டம், மாத பாடத்திட்டத்தில் முடிக்கப்பட வேண்டிய பாடங்களைக் கற்றுத்தர முயற்சிக்க வேண்டும். நூறு சதவீதம் முடியவில்லை என்றாலும் எண்பது சதவீதம் சென்று அடைய முயற்சி செய்ய வேண்டும்.
இவ்வாறு பாடங்களைச்சரியான நேரத்தில் கற்றுத்தரும்போது நீங்கள் கண்டிப்பாகச் சிறந்த ஆசிரியராக மாணவர்கள் மத்தியில் திகழுவீர்கள். நேர மேலாண்மை பற்றிப் படிக்க Read more
சக ஆசிரியர்கள் உடன்
நீங்கள் ஆசிரியர் பணியில் சேர்ந்த நாள் முதல் ஒவ்வொரு நாளும் முதன் முறையாகத் தலைமை ஆசிரியரையும், உடன் ஆசிரியர்களையும் சந்திக்கும்போது வணக்கம் சொல்லுங்கள். இந்தச் செயல் உங்கள்மீது பிறருக்கு மரியாதையைக் கொடுக்க வைக்கும்.
நீங்கள் அந்தப் பள்ளியில் வயதிலும், பணி அனுபவத்திலும் இளம் ஆசிரியர் எனில் மூத்த ஆசிரியர்களுக்குத் தகுந்த மரியாதை செலுத்த வேண்டும்.
அந்தப் பள்ளியில் பணிபுரிந்து வரும் அலுவலகம் உதவியாளர், சத்துணவு ஊழியர்கள், இதரப் பணியாளர் என அனைவருக்கும் மரியாதை செலுத்துங்கள்.
ஒரு ஆசிரியரைப் பற்றி இன்னொரு ஆசிரியரிடம் பேச வேண்டாம். இது பல பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவும்.
வகுப்பறையில் ஆசிரியர் செயல்
வகுப்பறைக்குச் செல்லும் வழியில் மாணவர்கள் வணக்கம் சொன்னால் நீங்களும் வணக்கம் சொல்லுங்கள்.
வகுப்பில் நுழையும் முன்பே அன்றாடம் நடத்த வேண்டிய பாடத்தை நன்றாகத் தயார் செய்து கொண்டு வகுப்பறைக்குச்செல்லுங்கள்.
வகுப்பறையில் நுழைந்தவுடன் காலை வணக்கம் சொல்லுங்கள். மாணவர்கள் எழுந்து சொல்லப் பழக்க வேண்டும்.
வகுப்பிற்குள் சென்றவுடன் வகுப்பறை தூய்மையாகவும், இருக்கைகள் வரிசையாக உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் மாணவர்கள் வரிசையாக நிறுத்தி உரிய இடத்தில் அமர வையுங்கள்.
வகுப்பறையில் உள்ள குப்பைகளை அகற்ற உரிய பணியாளரை அழைத்துக் குப்பைகளை அகற்ற சொல்லுங்கள்.
மாணவர்கள் அணிந்து வந்த காலணிகளை வரிசையாக வைக்க மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்.
பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறை தூய்மையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இதைப் பார்த்தவுடன் பள்ளிக்கு வரும் மக்கள் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் பள்ளியைப் பற்றிய நல்லெண்ணம் தோன்றும். நீங்களும் சிறந்த ஆசிரியர் எனப் பெயர் எளிதில் பெறலாம்.
வகுப்பறை நுழைந்தவுடன் கதவு, ஜன்னல்கள் ஆகியவை மூடியிருந்தால் அவற்றை மாணவர்களைத் திறந்து வைக்கச் சொல்லுங்கள். வகுப்பறை எப்பொழுதும் காற்றோட்டத்துடனும், வெளிச்சத்துடனும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
வகுப்பில் அனைவராலும் விரும்பப்படும் நல்ல மாணவனைக் கண்டறிந்து அம்மாணவனை வகுப்புத் தலைவன் (class leader) ஆக்குங்கள்.
வகுப்பறையில் கற்பித்தல் செயல்
தினமும் ஒரு புதிய செய்தியை மாணவர்களிடம் சொல்லுங்கள். இந்தச் செய்தி தொலைக்காட்சி, செய்தித்தாள் இடம்பெற்ற கல்வித் தொடர்பான செய்தியாக இருந்தால் சிறப்பு.
காலை வந்தவுடன் கரும்பலகையின் மேற்பகுதியில் பதிவு, வருகை, நாள், கிழமை எழுதிபின் பொன்மொழி ஒன்றை எழுதுங்கள்.
தினமும் சிந்தனைக்கு விருந்தாகும் நல்ல பழமொழி ஒன்றை எழுதும் பொறுப்பை மாணவத்தலைவனுக்கு அளியுங்கள்.
பார்வைக் குறைபாடு அல்லது கேட்கும் திறன் குறைபாடுள்ள மாணவரை வகுப்பின் முதல் வரிசையில் அமர்ந்து பாடத்தைக் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யுங்கள்.
பாடம் நடத்தும்போது குறும்புச் செய்யும் மாணவரை வகுப்பின் முன் வரிசையில் உட்காரச் செய்யுங்கள்.
நாள்தோறும் வகுப்பிற்குள் நுழையும்போது சிறந்த ஆசிரியராகத் திகழ வேண்டும் என்ற ஆர்வத்தோடும், துடிப்போடும் காலடி எடுத்து வையுங்கள். அதன்படியே மாணவர்களுக்குச் சிறப்பாகக் கற்றுக் கொடுங்கள்.
இதில் சொல்லப் பட்டுள்ள பல செய்திகள் பழைய முறை. இன்றைய நடைமுறை பல கருத்துகளை அடுத்தப் பதிவில் படிக்கலாம். இந்த பதிவு நீண்டு செல்லும் என்பதால் புதிய கருத்து இடம் பெற வில்லை. இதில் உள்ள பெரும்பாலான கருத்தை உங்கள் பணியில் பயன்படுத்தி வருவீர்கள். உங்களுக்குத் தெரிந்த கருத்தை comments பதிவு செய்யுங்கள். அனைத்து வாசகர்களுக்கும் பயன்படும்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புதிய தேசியக் கல்விக் கொள்கை 34 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 1986-க்கு மாற்றாக அமையும் என்று குறிப்பிட்டுள்ள இந்திய அரசின் பத்திரிகை தகவல் நிறுவனம் (PIB).
இந்த கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களைப் பட்டியலிட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை ஜூலை 30, 2020 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
PIB இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் உள்ள அந்த முக்கிய அம்சங்கள்
பள்ளிக்கல்வியில் NEP 2020
பள்ளிக்கல்வியில் அனைத்து மட்டத்திலும் உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்யப்படும். மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை அனைத்து மட்டத்திலும் பள்ளிக் கல்விக்கு உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்வதை தேசிய கல்விக் கொள்கை 2020 வலியுறுத்துகிறது.
கல்விக்கூடங்களின் கட்டமைப்பு வசதி, ஆராய்ச்சிக்கான கல்வி மையங்கள் போன்றவை ஏற்படுத்தப்படும்.
பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களை இடைநிற்றல் இன்றி மீண்டும் பள்ளியில் சேர்க்க உதவும்.
மாணவர்களையும், அவர்களது படிப்புத் திறனையும் தொடர்ந்து கண்காணித்ததல், முறைசார்ந்த மற்றும் முறைசாரா கல்வி முறைகளை உள்ளடக்கிய கல்விக்கான பலதரப்பட்ட வழிகளை ஏற்படுத்தித் தருவது போன்றவை மேற்கொள்ளப்படும். ஆலோசகர்களின் ஒத்துழைப்பு அல்லது நன்கு பயிற்சி பெற்ற சமூகப் பணியளார்களை பள்ளிகளிலேயே ஏற்படுத்தித் தருவது.
3, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு, தேசிய திறந்தவெளிப் பள்ளி மற்றும் மாநில திறந்தவெளிப் பள்ளிகள் வாயிலாக கல்வி புகட்டுதல்.
10 மற்றும் 12ஆம் நிலைகளுக்கு இணையான இடைநிலைக் கல்வி பாடத் திட்டங்கள், தொழிற்கல்விப் பாடங்கள், முதியோர் கல்வி மற்றும் வாழ்க்கை மேம்பாட்டிற்கான திட்டங்கள் ஆகியவையும் இலக்கினை அடைவதற்கான யோசனைகளாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்ட சுமார் 2 கோடி குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கவும் தேசிய கல்விக் கொள்கை 2020-இல் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
10+2 பள்ளிக் கல்வி முறைக்கு மாற்றாக
முன்குழந்தைப் பருவ கவனிப்பு மற்றும் கல்வியை வலியுறுத்தும் வகையில், தற்போதுள்ள 10 + 2 பாடத்திட்ட முறை மாற்றப்பட்டு, முறையே 3-8, 8-11, 11-14 மற்றும் 14-18 வயதுக்கேற்ற 5 + 3 + 3 + 4 ஆண்டு பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தப்படும்.
இதுவரை பள்ளிக்கு வராத 3 - 6 வயது வரையிலானவர்கள் பள்ளிப் பாடம் படிப்பதற்கு இந்த புதிய முறை உதவும்.
குழந்தைகளின் மனநிலைக்கேற்ற ஆசிரியர்களை உருவாக்க, இந்த காலகட்டம் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டதாக உள்ளது. புதிய கல்வி முறை, 3 ஆண்டு அங்கன்வாடி / மழலையர் கல்வியுடன், 12 ஆண்டு பள்ளிக்கூடப் படிப்பைக் கொண்டதாக இருக்கும்.
பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் கட்டமைப்பு
8 வயது வரையிலான குழந்தைகளுக்கு முன் குழந்தைப்பருவ கவனிப்பு மற்றும் கல்விக்கான தேசியப் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் கட்டமைப்பை (National Curricular and Pedagogical Framework for Early Childhood Care and Education - NCPFECCE) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) உருவாக்கும்.
முன்குழந்தைப் பருவ கவனிப்பு, கற்பித்தல் மற்றும் பாடத்திட்டத்தில் நன்கு பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர் களைக் கொண்ட, விரிவுபடுத்தப்பட்ட மற்றும் அங்கன்வாடி, மழலையர் பள்ளிகள் போன்ற வலுப்படுத்தப்பட்ட மையங்கள் மூலம் முன்குழந்தைப் பருவ கவனிப்பு வழங்கப்படும். முன்குழந்தைப் பருவ கவனிப்பு மற்றும் கல்வி முறையை, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, மற்றும் பழங்குடியினர் நலத்துறைகள் மூலம் கூட்டாக மேற்கொள்ளப்படும்.
அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் அறிவை அடைதல்
அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் அறிவு ஆகியவை கல்வி பயில்வதற்கான இன்றியமையாத உடனடித் தேவையாக இருப்பதால் அவற்றை முன் தகுதியாக அங்கீகரிக்கும் வகையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையால் தேசிய அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் அறிவு இயக்கம் ஒன்றைத் தொடங்க தேசிய கல்விக்கொள்கை 2020இல் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் 2025-க்குள் 3-ஆம் நிலை வரை அனைவரும் பயில ஏதுவாக, உலகளாவிய அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் அறிவு பெறுவதற்கான திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுகள் தயாராக வேண்டும்.
தேசிய புத்தக மேம்பாட்டுக் கொள்கை ஒன்றும் வகுக்கப்பட வேண்டும்.
பள்ளிக்கூடப் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் சீர்திருத்தங்கள்
பள்ளிக்கூடப் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தலில், கற்போரின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அவர்களிடம் 21-ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற முக்கியமான திறமைகளை ஏற்படுத்துவதோடு, அவசியமானவற்றைக் கற்கும் திறனை மேம்படுத்துவதற்கேற்ப பாடத்திட்டம் அமைக்கப்படும்.
பாடத்திட்டத்தைக் குறைப்பதுடன், சோதனை அடிப்படையிலான கல்வி மற்றும் சிந்தனைக்கு பெருமளவு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்க மாணவர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படும்.
கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட மாட்டார்கள்.
பாடத்திட்டம் மற்றும் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டவற்றையும் கற்பதற்கும், தொழிற்கல்வி மற்றும் வழக்கமான கல்வி முறைக்கும் பெரும் வித்தியாசம் இருக்காது.
பள்ளிக்கூடங்களிலேயே 6-ஆம் நிலை முதற்கொண்டே தொழிற்கல்வி பயிற்றுவிக்கப் படுவதோடு, உள்ளுறை பயிற்சிமுறையைக் கொண்டதாகவும் இருககும்.
பனிரெண்டாம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வி தொடரும். உயர் கல்வி நிறுவனங்களை ஒழுங்கு படுத்த உயர் கல்வி வாரியம் அமைக்கப்படும்.
பொறியியல் பட்டப் படிப்பில் மாணவர்கள் ஒரு ஆண்டு விடுப்பு எடுத்துக் கொண்டு கூட மீண்டும் படிப்பு தொடரலாம்.
புதிய மற்றும் விரிவான பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு 2020-21 (National Curricular Framework for School Education, NCFSE) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் ஏற்படுத்தப்படும்.
பன்மொழி மற்றும் மொழியின் ஆற்றல்
குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு வரையிலும் ஆனால் 8-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் முன்னுரிமை அடிப்படையிலும் தாய்மொழி/ உள்ளூர் மொழி/ பிராந்திய மொழி பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என கொள்கை வலியுறுத்துகிறது.
ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயம் தாய் மொழி வழியாக தான் கற்பிக்கப்படும்.
M.Phil படிப்புகள் நிறுத்தப்படும்.
மும்மொழித் திட்டம் அனைத்து மட்டத்திலான பள்ளி மற்றும் உயர்கல்வியில் சமஸ்கிருதம் மாணவர்களின் விருப்பமாக இருக்கும் வகையில் வழங்கப்படுகிறது.
இந்தியாவின் இதர செம்மொழிகள் மற்றும் இலக்கியங்களும் விருப்பப் பாடங்களாக இருக்கும். எந்த மாணவர் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படமாட்டாது.
'ஒரே பாரதம் உன்னத பாரதம்' முன்முயற்சியின் கீழ், 6 முதல் 8 வரையான வகுப்புகளில் ' இந்திய மொழிகள் ' குறித்து மாணவர்கள் வேடிக்கை செயல் திட்டம்/ நடவடிக்கைகளில் பங்கேற்கலாம். இடைநிலைக் கல்வி மட்டத்தில் பல்வேறு வெளிநாட்டு மொழிகளும் கற்பிக்கப்படும். நாடு முழுவதும் இந்திய அடையாள மொழி தரப்படுத்தப்படும்.
செவித்திறன் குறைபாடு உள்ள மாணவர்களின் பயன்பாட்டுக்காக தேசிய, மாநில பாடத்திட்ட ப் பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மதிப்பீட்டு சீர்திருத்தங்கள்
புதிய கல்வி கொள்கை 2020 சுருக்கமான மதிப்பீட்டிலிருந்து வழக்கமான முறையான மதிப்பீட்டுக்கு மாறுவதை எதிர்நோக்குகிறது. இது ஆய்வுகள், விமர்சன சிந்தனை, கருத்தியல் தெளிவு போன்ற உயர் திறன்களுக்கு ஏற்ற வகையில் மாணவர்களின் கல்வி அறிவு மதிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர்களின் மதிப்பீட்டில் திறன் அடிப்படையிலான கற்றல் மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கிறது.
மாணவச் செல்வங்களே நீங்கள் இருக்கும் பருவம் விடலைப் பருவம். இந்தப் பருவத்தில் தேர்வு என்பது ஒரு சுகமான அனுபவம் கிடையாது. தேர்வு என்பது உங்கள் மனதில் பெரும் சுமையாக இருக்கும்.
ஆனால் ஒன்பதாம் வகுப்பு தொடங்கி பனிரெண்டாம் வகுப்புவரை நீங்கள் கடினமாக உழைத்து ஒழுங்காகப் படித்தால் மட்டுமே உங்கள் வாழ்க்கை என்றென்றும் பிரகாசமாக இருக்கும்.
அப்படி உங்கள் வாழ்க்கை உயர அந்தத் தேர்வுக்குப் படித்தல் எப்படிஎன தெரிந்து கொள்வது முக்கியம்.
படிக்க நல்ல நேரம்
படித்தப்பாடங்கள் மனதில் பதியும்படி படிக்க நல்ல நேரம் காலையில் எழுந்ததும் நான்கு மணி முதல் ஆறு மணி வரைப் படிக்கலாம். படிக்கும்போது மற்றவைகளைப் பற்றி நினைக்கக் கூடாது. காலையில் படிக்கும்போது பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று அவசர அவசரமாகப்படித்தால் மனதில் பதியாது.
காலையில் படிக்கும்போது பள்ளிக்குச் செல்ல வேண்டுமென்ற டென்ஷன் இருக்கும். அதைவிடப் படிக்க நல்ல நேரம் என்று இரவு நேரத்தை மருத்துவர்கள் பரிந்துரைச் செய்கிறார்கள். ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய பாடங்களை அரை வயிறு சாப்பிட பின் இரவில் படியுங்கள். இரவில் படிப்பது தான் சிறந்தது.
இரவில் பாடங்களைப் படிப்பதே நெடுநாள் ஞாபகம் வைத்துக் கொள்ள உதவுகிறது என்பது அறிவியல்பூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளது என்று மனநல மருத்துவர் கூறினார்.
படித்தல் கால அட்டவணை
ஒரு கால அட்டவணைப் போட்டுக் கொண்டு படியுங்கள். உங்கள் கால அட்டவணையில் விளையாட்டுக்கும், தொலைக்காட்சி பார்ப்பதற்கும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளலாம்.
ஆனால் படிப்புக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் நிச்சயம் படிக்க வேண்டும். டாக்டராக வேண்டும், இன்ஜினியராக வேண்டும் என்று படிப்பதை விட 'சிறந்த மனிதனாக' வேண்டும் என்ற எண்ணத்தில் படியுங்கள்.
படிக்கும் காலத்தில் கடினமான பாடப்பகுதியை அரை மணி நேரம் கூடுதலாகப் படிக்கும் நேரத்தை ஒதுக்கி விட வேண்டும். திரும்பத்திரும்பப் படிக்கும்போது உங்கள் மனதில் ஆழமாகப் பதியும்.
தினமும் படிக்கும் நேரம் இரண்டு மணி நேரம் என ஒதுக்கிப்படித்தால் அது சனி, ஞாயிறு உட்பட எல்லாம் நாள்களுக்கும் படித்தல் கால அட்டவணையைத்தயார் செய்து கொள்ள வேண்டும்.
பெற்றோர்களின் வழிகாட்டல்
மாணவர்கள் ஒழுங்காகப் படிக்கப் பெற்றவர்கள் துணை புரிய வேண்டும். எப்போதும் புத்தகத்தைப் 'படி படி' என்று பெற்றவர்கள் சொல்லிக்கொண்டு இருக்காமல் நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கக் குழந்தைகளை அனுமதிக்க வேண்டும்.
தினமும் குழந்தைகள் படிப்பதை கவனிக்க வேண்டும். அவர்கள் படிக்கும்போது வாசிக்கச் சொல்லுதல். தேர்வு நேரத்தில் எழுதிப் பார்க்கச் சொல்லுதல். பெற்றோர்கள் குழந்தைகள் படிக்கும்போது அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.
தினந்தோறும் படித்தல்
நிறைய மதிப்பெண்கள் வாங்க வேண்டுமென்றால் வகுப்பில் ஆசிரியர் நடத்தும் படத்தைக் கவனமாகக் கேளுங்கள். வீட்டில் தினமும் பாடங்களைப் படியுங்கள். தேர்வைச் சிறந்த முறையில் எழுதலாமே.
அதிக மார்க் பெற டியூஷன் தேவையேயில்லை. தேர்வுச்சிறப்பாக எழுத மொழித்திறமை உதவுகிறது. ஆகவே தமிழையும், ஆங்கிலத்தையும் நன்கு படியுங்கள்.
படித்தல் கால அட்டவணைப்படி தினந்தோறும் படித்தல் தேர்வில் வெற்றி பெறலாம்.
அதிக மதிப்பெண்கள் பெற தேர்வில் பின்பற்ற வேண்டியவை
தேர்வு அறையில் தேர்வு நேரத்திற்கு முன்பாகச்சென்று விடுங்கள். முதலில் தெரிந்த வினாக்களுக்கு விடை எழுதுங்கள். விடைத்தாளில் அடித்தல் திருத்தல், கிறுக்குவதும் போன்றவை மிகத்தவறான செயல்களாகும்.
தேர்வு எழுதுவதற்கு முன்பு நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது கையெழுத்து நன்றாகவும் அழகாகவும் இருக்கும்படி எழுத வேண்டும். விடை எழுதும்போது ஒரு பாயிண்ட் மறந்து விட்டால் பரவாயில்லை. அதை விட்டு விட்டு அடுத்த பாயிண்டுக்குச் செல்லுங்கள். ஒரு போதும் வினாவிற்கு சம்மந்தமில்லாத 'ஒரு பாயிண்டை' அங்கே எழுதி விடாதீர்கள். கேள்விக்குப்பதில் தெரியாவிட்டால் அக்கேள்வியை விட்டு விடுங்கள்.
தேர்வுமுடிவும் பிறர்மீது குறையும்
மாணவச் செல்வங்களே தேர்வில் அதிக மதிப்பெண் பெறாவிட்டால் அதற்குக் காரணம் நீங்கள் சரியாகப் படிக்காமல் தேர்வுக்குச் சென்றது தான். இந்த உண்மையை உணர்ந்து கொண்டு அடுத்த முறையாவது ஒழுங்காகப் படியுங்கள். அதை விட்டு விட்டு ஆசிரியர் சரியாகத்திருத்தவில்லை. ஒரு பாயிண்டில் மார்க் போய்விட்டது என்றெல்லாம் சாக்குப் போக்குகளைச் சொல்லாதீர்கள்.
தேர்வுக்குப்படித்தல்
தேர்வுக்குப் பாடங்களைப் படிக்கும்போது முழுவதும் முதலில் வாசித்தப் பின்பு சிறுசிறுப் பகுதிகளாக அந்தப் பாடத்தைப் பிரித்துப்படிக்க வேண்டும். பாடத்தைப் பிரித்துச் சிறு குறிப்புகள் எழுதி வைக்க வேண்டும். சிறு குறிப்புகளை மன வரைபடம்போல் தயாரித்துக் கொள்ள வேண்டும். இந்த மாதிரி செய்தால் சிறப்பாக மனதில் நினைவில் நிறுத்திக் கொள்ளலாம்.
இம்முறையில் படித்தால் படித்தப்பாடங்களை எப்போது வேண்டுமானாலும் நினைவில் கொண்டுவரலாம்.
தேர்வு தயார் செய்யும்போது சூத்திரங்கள், இலக்கணம், grammar போன்றவற்றை பாடக்குறிப்பேட்டில் குறிப்பெடுத்து படிக்க வேண்டும்.
நண்பர்களைப் பின்பற்ற வேண்டாம்.
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட திறன்கள் உண்டு. போட்டித்தேர்வனாலும் சரி, கல்லூரி தேர்வனாலும் சரி, பள்ளித் தேர்வனாலும் சரி சகமாணவர்கள் படித்தலில் பின்பற்றும் முறையைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டாம்.
அவர் படித்தல் திறன் வேறு உங்கள் படித்தல் திறன் வேறு. எனவே அவர் படிக்கும் முறையைப் பின்பற்ற வேண்டாம்.
சிலருக்கு மனப்பாடம் செய்யும் கால அளவு குறைவாக இருக்கும். அவர் எளிதில் மனப்பாடம் செய்து விடுவார். மாணவ விடுதிகளில் சில நேரங்களில் இரவில் மாணவர்கள் தனியாகப் படித்து விட்டுப் பகலில் மற்றவர்களைப் படிக்க விடாமல் செய்வதுண்டு.
மதிப்பெண் நிர்ணயத்துப் படித்தல்
நான் அரையாண்டுத் தேர்வில் ஆறுபதுசதவீதம் தான் வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் படிக்கக் கூடாது. அதை நினைத்துக் கொண்டு பாதி பாடங்களைப் படிக்காமல் ஒதுக்கி வைத்து விடுவது தவறு. எப்பொழுதும் நூறு சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என இலக்கு நிர்ணயத்துப் படிக்க வேண்டும். நாம் உயர்வான இலக்கை நிர்ணயம் செய்ய Click here
படிக்கும் போது அமரும் முறை
போட்டித்தேர்விற்குப் படிப்பவர்கள் படிக்கும்போது நல்ல காற்றோட்டமுள்ள வெளிச்சமான இடத்தில் அமர வேண்டும். நீங்கள் தினமும் உறங்கும் அறையில் கட்டில் மேலே படித்தால் சிறிது நேரத்தில் உறக்கம் வந்து விடும். தேர்வுக்குப் படிக்கும்போது நேராக நிமிர்ந்து படிக்க வேண்டும்.
தேர்வுக்குப் படித்தலில் மாணவர்கள் அமரும் முறையும் மிக முக்கியமானது.
தேர்வுக்குப் படித்தல் ஒரு வகை கலை
சாதரணமாகப் படித்தல், தேர்வுக்குப் படித்தல் இரண்டிற்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது. சாதாரணமாகப் படித்தல் அதை மனதில் நிறுத்திப் பின் தேவையான நேரத்தில் வெளிக்கொணரத் தேவையில்லை. திட்டமிட்டு தேர்வுக்குப் படித்தால் வாழ்க்கை வளமாக அமையும். வருடம் முழுவதும் படித்த கருத்துக்களை மூன்று மணிநேரம் எழுத வேண்டும். அப்படிப்பட்ட தேர்வு மூலமாக அவரின் மேல் படிப்பு அல்லது வேலை ஆகியவற்றை எளிதில் அடையலாம்.
தேர்வுக்குப் படித்தல் என்பது அற்புதமான ஒரு கலை. இந்தக்கலையை திட்டம் தீட்டிச் செய்தால் தேர்வு அறையில் குழப்பம் வராது. தேர்வுக்குப் படித்தல் தலைப்பில் பல விஷயங்கள் தெரிந்துக் கொண்டோம்.இன்னும் அதிக படிக்க Read more
தமிழகத்தில் தஞ்சையில் நெல் விளையும் பூமியாக இன்று மாறியதற்கு பல அறிஞர்கள் அன்று உழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் ஆட்சியில் தமிழகம் வேளாண்மையில் முன்னேற்றமடைந்தது. பலர் ஆங்கிலேய அறிஞர்களின் உழைப்பும் மறைந்துள்ளது.
தஞ்சையை ஆண்ட கரிகாலன் கல்லணையைக் கட்டினார். கல்லணையில் மண் படிந்து தண்ணீர் போவது தடைப்பட்டது. இதைப்பார்த்த ஆங்கிலேய கேப்டன் ஆதார் காட்டன் தஞ்சை நெற்களஞ்சியம் உருவாகத் திட்டம் திட்டம் தீட்டினார்.
தஞ்சை நெற்களஞ்சியம் ஆதார் காட்டன்
ஆதார் காட்டன் தனது பதினைந்து வயதில் கிழக்கிந்தியக் கம்பெனியில் ராணுவ பயிற்சியாளர் பணியில் சேர்ந்தார். ஆதார் காட்டன் சென்னைக்கு 1822 ஆம் ஆண்டு மே மாதம் பணி மாறுதல் பெற்று வந்தார்.
ஆதார் காட்டன் முதல் பணி
சென்னை வந்த ஆதார் காட்டன் நிலவை செய்யப்பாம்பன் நீரிணை சென்றார். இன்றளவும் கனவாகவே இருக்கும் சேது சமுத்திரத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் இதுதான். 1829 ஆம் ஆண்டு காப்டனாகப் பதவி உயர்வு பெற்று காவிரிப் பாசனப் பகுதிகளுக்குப் பொறுப்பேற்றார்.
கேப்டனும் காவிரிப் பாசனப் பணியும்
அவர் வாழ்வில் மிகச் சிறந்த சாதனை படைக்கத் தொடக்கமாக இந்தப் பணி இருந்தது. அப்போது கல்லணையின் முன்புறம் வண்டல் மண் படிந்து மணல் மேடாக மாறியிருந்தது. இதனால் காவிரி கழிமுகப் பகுதிகளுக்குத் தண்ணீர் போவது தடைபட்டது. இதனால் விவசாயமே கைவிட வேண்டிய சூழ்நிலை இருந்தது.
இந்த நிலைமையை மாற்றுவதற்காகக் காப்டன் காட்டன் ஒரு திட்டம் தீட்டினார்.
காவிரி, கொள்ளிடம் பிரியும் முக்கொம்பு என்ற இடத்தில் காவிரிக்குக் குறுக்காகவும், கொள்ளித்திற்கு குறுக்காகவும் மதகணைகள் கட்டி கல்லணையில் மணல் படிவதைத் தடுப்பது இவரது திட்டம்.
கல்லணை பெருமையை உலகறியச் செய்தவர்
கல்லணையில் மணற்போக்கி அமைப்பதற்கானப் பணி 1830 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று தொடங்கியது. அப்போது தான் கல்லணை எப்படி கட்டப்பட்டது என்ற தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தார். வியந்து போன ஆதார் காட்டன் கல்லணைக்கு 'மகத்தான அணை' (Grand anicut) என்று பெயரிட்டார். இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அணையைக் கட்டி முடித்தார்.
'ஆழம் காண இயலாத மணற்படுகையில் எப்படி அடித்தளம் அமைப்பது என்ற தொழில்நுட்பத்தை இவர்களிடமிருந்து நாம் தெரிந்து கொண்டோம். இப்பாடத்தைப் பயன்படுத்தி ஆற்றுப் பாலங்கள், அணைக்கட்டுகளைக் கட்டினோம். எனவே இந்தச் சாதனை புரிந்த பெயர் தெரியாத அந்நாளைய மக்களுக்கு நாம் பெரிதும் கடன் பட்டுள்ளோம்'. என்று கூறினார்.
1832 ஆம் ஆண்டு முதல் 1836 ஆம் ஆண்டுக்குள் முக்கொம்பில் காவிரி ஆற்றில் மேலணை, கொள்ளிடம் மேலணை ஆகியவற்றையும் கட்டினார்.
இதனால் கல்லணையில் வண்டல் மண் சேருவது தடுக்கப்பட்டது. காவிரி கழிமுகப் பகுதி பாசன நிலங்களுக்குத் தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.
தமிழக நெற்களஞ்சியம்
ஆதார் காட்டன் 'தான் கற்ற அறிவியலும் தொழில்நுட்பமும் மக்களுக்காகவே' என்ற கோட்பாட்டினை தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்த தலைசிறந்த பொறியாளர்.
அவர் அன்று காவிரிக்குக் குறுக்காகவும், கொள்ளிடம் குறுக்காகவும் அணையைக் கட்டாவிட்டால் இன்று தஞ்சை பகுதியில் தண்ணீர் கல்லணைக்குச் செல்லாது. எனவே தஞ்சையில் நெற்களஞ்சியம் எப்படி உருவாகி இருக்கும்?
தஞ்சையில் நெற்களஞ்சியம் வித்திட்டவர் நினைவு கூர்வோம். இது தொடர்பாக மேலும் படிக்க இதைத் தொடுங்கள்.
காமராஜ் என்றப்பெயரை காமராஜர் என்றே இனிக் குறிப்பிடவேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தான்.
காமராஜர் பிறந்தநாளான ஜீலை 15 ஆம் நாளை ஒவ்வொரு ஆண்டும் கல்வி நிறுவனங்கள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட வேண்டுமென அறிவித்தவர் கலைஞர் அவர்கள் தான்.
சென்னை காமராஜர் சாலை:
சென்னை மெரினா கடற்கரை சாலைக்குக் காமராஜர் சாலை என்று பெயர் வைத்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தான்.
சென்னை கிண்டியில் கர்மவீரர் காமராஜருக்கு மணிமண்டபம் கட்டி பெருமை சேர்த்தவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தான்.
கடற்கரை சாலைக்குக் காமராஜர் சாலை என்று பெயர் சூட்டியதோடு நிற்காமல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்குள் காமராஜர் விமான நிலையம் என்று பெயர் வைக்க வேண்டும் என அப்போதைய பிரதமர் திரு.வி.பி.சிங் அவர்களிடம் கோரிக்கை வைத்து நிறைவேற்றிக் காமராஜர் விமான நிலையம் எனப்பெயர் சூட்டிய பெருமை கலைஞரே சாரும்.
காமராஜர் பிறந்த விருதுநகரில் உள்ள வீட்டைக் காமராஜர் நினைவில்லம் ஆக்கியவர் கலைஞர் தான்.
காமராஜர் நினைவு மண்டபம்:
தமிழகத்தின் தென் கடைசி மாவட்டமான கன்னியாகுமரியில் காமராஜருக்கு நினைவு மண்டபம் எழுப்பியவர் கலைஞர் தான்.
நெருக்கடி நிலையின்போது காமராஜரை கைது செய்ய வேண்டும் என்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சொன்னதற்கு, என் ஆட்சி கலைக்கப்பட்டாலும் பரவாயில்லை, காமராஜரை கைது செய்ய முடியாது, என் ஆட்சியைக் கலைத்துவிட்டு உங்கள் ராணுவம் வேண்டுமானால் அதை செய்யட்டும் என்றுச் சொன்னவர் கலைஞர் அவர்கள் தான்.
காமராஜர் சென்ற கலைஞர் இல்லத்திருமண விழா:
மணமேடைக்கே காரில் காமராஜரை அழைத்து வந்து தன் மகன் ஸ்டாலினுக்கு அவர் தலைமையில் திருமணம் செய்து வைத்தவர் கலைஞர் கருணாநிதி தான். காமராஜர் மறைந்த 1972 அக்டோபர் இரண்டு அன்று கொட்டும் மழையில் இரவோடு இரவாகத் தன்னுடைய நேரடி மேற்பார்வையில் அவருடைய அடக்கத்திற்கான இடத்தை ஒதுக்கித் தயார் செய்து தந்தவர் கலைஞர் தான்.
தமிழகத்திலயே முதன் முதலில் காமராஜருக்கு சிலை வைத்தது கலைஞர் தான். சென்னை மாநாகராட்சியில் பெரியார் பாலத்திற்கு அருகே காமராஜர் சிலை அமைத்து அதை நேருவை கொண்டுத்திறந்து வைத்தவர் கலைஞர் தான்.
காமராஜர் நினைவு மண்டபத்தில் அணையா விளக்கு இல்லையே என்ற குறை இருந்து வந்தது. இதை உணர்ந்து 25/07/2010 அன்று காமராஜர் நினைவு மண்டபத்தில் அணையா விளக்கை ஏற்றி வைத்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தான்.
முத்துக்குளித்தலுக்குப் பெயர் பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தின் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திற்கு காமராஜரின் தாயார் பெயர் நினைவில் நிலைத்திருக்கும் வகையில், "அன்னை சிவகாமி அம்மையார் வளாகம்” என்று பெயர் சூட்டியதும் தலைவர் கலைஞர் தானே.
சிவகாமி அம்மையார் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்:
தமிழக அரசின் “பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டதிற்கு” சிவகாமி அம்மையாரின் பெயரை வைத்து, அத்திட்டத்தைச் சிறப்பாக நடைமுறைப் படுத்தினார் கலைஞர்.
பெருந்தலைவரின் படத்திற்குக் கீழே எழுதுவதற்குப் பொருத்தமான வாசகத்தைக் கேட்ட நிலையில், 'உழைப்பே உயர்வு தரும்' என்று தலைவர் கலைஞர் அவர்கள் அந்தக் கணமே எழுதிக் கொடுத்து, கர்மயோகி காமராஜருக்குப் பெருமை சேர்த்தார்.
நெல்லை மாவட்டம் இராதாபுரம் பேருந்து நிலையம் புதிதாகக்கட்டப்பட்டு காமராஜர் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இதைச் செய்தவர் கலைஞர் அவர்கள் தான்.
காமராஜர் பெயரில் தபால் தலை வெளியிடக் கலைஞர் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்து, மத்திய அரசு தபால் தலை வெளியிட்டுள்ளது. இதை முன்னாள் முதல்வர் கலைஞர் தான் செய்தார்.
காமராஜர் விருது:
காமராசர் பெயரில் அரசு விருது ஒன்றை நிறுவி 'பெருந்தலைவர் காமராசர் விருது' சமூகப்பணி செய்பவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதை முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்தார்.
இளைஞர்கள் இந்த வரலாற்று நிகழ்வுகளை பலருக்குத்தெரிய செய்வதே பெருந்தலைவர் காமராஜருக்கான உண்மையான புகழ் வணக்கம்.
கல்வி கண் திறந்த காமராஜர் பிறந்த தினத்தில் அவர் பெயரில் தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களைத் தெரிந்து கொண்டோம்.
இது காமராஜரும் கலைஞரும் என்றத் தலைப்பில் நான் படித்த, கேட்ட செய்திகளைச் சமர்ப்பித்துள்ளேன். இதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை. நான் அரசியல் விரும்பாத நடுநிலை தவறாமல் எழுதுபவன்.
காமராஜர் புத்தகம்:
இந்தப் புத்தகத்தைத் தொட்டுப்படிக்கலாம். இதை விட அதிக செய்திகள் தெரிந்து கொள்ள இதைத் தொடங்கிய Read more vedio
கல்வி கண் திறந்த வள்ளல் பெருந்தலைவர் காமராஜர் மூன்று முறை தமிழக முதல்வராக இருந்தார். தமிழகத்தின் வளர்ச்சி, தமிழக மக்களின் முன்னேற்றம் இவையிரண்டையும் மனதில் வைத்து அல்லும் பகலும் அயராது பாடுபட்டவர் காமராஜர். தமக்கென வாழாமல் பிறருக்காக வாழ்ந்த படிக்காத மேதை காமராஜர் வரலாறு படித்து இருப்பீர்கள். இது அதற்கு ஒரு படி மேலே சென்று பல சுவாரஸ்யமான தகவல்களை சேகரித்து தந்துள்ளேன்.
காமராஜர் பிறப்பு:
மக்களால் பெருந்தலைவர் என்று அழைக்கப்பட்ட காமராஜர் தமிழகத்தில் தென் மாவட்டமான விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜுலை திங்கள் பதினைந்தாம் நாள் குமாரசாமி,
சிவகாசி அம்மையாரின் அருந்தப்புதல்வனாய் பிறந்தார். இன்று காமராஜர் அவர்களின் 118 ஆவது பிறந்த நாளாகும்(15/07/2020).
காமராஜர் இயற்பெயரும் புனைப்பெயரும்
காமராஜரின் தந்தை குமாரசாமி இந்தக் குழந்தை நம் குலத்தெய்வதின் அருளால் பிறந்ததாக எண்ணி அவர்களின் குலதெய்வ மான 'காமட்சி' என்ற பெயரை கர்ம வீரர் காமராஜருக்கு பெயர் சூட்டினார். காமாட்சி என்று அழைக்கப்பட்டவர் எப்படி காமராஜர் எனப்பெயர் மாறியது என்ற சந்தேகம் உங்களுக்கு எழுந்துள்ளதா?
காமாட்சி என்று வீட்டில் உள்ளவர்கள் அழைத்து வந்தனர். ஆனால் அவருடைய அம்மா செல்லமாக ராஜா என்ற பெயரில் அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற இயற்பெயர் காமராஜர் என்ற புனை பெயராக மாறி அனைவரும் காமராஜர் என்றே அழைத்தனர்.
காமராஜர் கல்வி வாழ்க்கை:
கல்வி கண் திறந்த வள்ளல் காமராஜர் அவர்களின் கல்வி வாழ்க்கை எட்டக்கனியாகத் தான் இருந்தது. அதனால்தான் என்னவோ தம் கற்க தடையாக இருந்தக் கல்வியைப் பட்டித் தொட்டி எல்லாம் வழங்க ஏற்பாடுச் செய்தார் கல்வி வள்ளல் காமராஜர். அவர் தொடக்கக் கல்வியை விருதுநகரில்உள்ள சத்திரிய வித்யாசாலா என்ற பள்ளியில் படித்தார்.
இளமைப் பருவத்தில் இருந்தே பிறரிடம் அன்புடன் பழகுதல், பிறருக்கு உதவும் மனப்பான்மை, பிறரிடம் கனிவுடன் பேசுதல் போன்ற நல்ல பண்புகளைப் பெற்றிருந்தார்.
காமராஜரின் தந்தை இறந்து விட்டதால் பள்ளிக் கல்வியைத் தொடரமுடியவில்லை. மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் தான் தனக்குக் கிடைக்காத கல்வி அனைத்து கிராமங்களிலும் சென்றடையச்செய்த பெருமை பெருந்தலைவர் காமராஜருக்குச்சேரும்.
காமராஜர் அரசியல் ஆரம்பம்:
பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்ட காமராஜர் அம்மாவின் சொல்லைக்கேட்டு அம்மாவின் சகோதரர் வைத்திருந்த ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். கடை வேலை முடிந்ததும் மாலையில் பொதுக் கூட்டங்களுக்குச் சென்று தலைவர்கள் பேசும் உரையைக் கேட்பது வழக்கமாக கொண்டு இருந்தார். அந்தக்காலம் விடுதலைப் போராட்டக் காலம். 1920 ஆம் ஆண்டு தனது பதினாறு வயதில் காங்கிரஸில் இணைந்தார். அன்றே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று மனதில் கணக்குப் போட்டுக்கொண்டார்.
காமராஜரின் அரசியல் குரு:
காமராஜர் கடையில் வேலை பார்த்து கொண்டே மாலைவேளையில் நடக்கும் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வார். பலர் உரை நிகழ்த்துவார்கள். காங்கிரஸ் கட்சியின் முதன்மை பேச்சாளர் திரு. சத்தியமூர்த்தி அவர்களின் பேச்சு காமராஜர் மனதில் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே அவரை அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார்.
காமராஜரின் சிறைவாசம்:
காமராஜர் 1930 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த உப்பு சத்தியா கிரகம் போராட்டத்தில் கலந்துக் கொண்டார். இதற்காகக் கல்கத்தாவின் அலிப்பூர் சிறையில் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார்.
காமராஜர் குண்டு வெடிப்பு வழக்கில் 1940 ஆம் ஆண்டு வேலூர் சிறையில் அடைக்கப் பட்டார். வேலூர் சிறையில் இருந்து கொண்டு விருதுநகர் நகராட்சி தலைவர் தேர்தலில் வெற்றிப பெற்றார்.
மூன்றாவது முறையாக காமராஜர் 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் புரட்சியில் ஈடுபட்டுச் சிறை சென்றார்.
இவ்வாறு காமராஜர் மூன்று முறை மக்களுக்காகச் சிறைச்சென்று ஒன்பதாண்டுகள் சிறையில் கழித்தார்.
காமராஜரின் கல்விப்புரட்சி:
பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு பெயர் முன் எழுத்து கு என்றால் அடுத்து வருகிற எழுத்து கல்விதான். காமராஜர் அவர்களையும் கல்வியையும் இரண்டாக பிரித்து பார்க்க முடியாது. தொடக்கக் கல்வியில் மூன்றாம் வகுப்பினை முடித்தவர் என்பார்கள். அவர் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது நமக்கு எட்டாத கல்வி தமிழகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக கோயில் இல்லாத ஊராக இருந்தாலும் பரவாயில்லை; பள்ளிகள் இல்லாத ஊர் இருக்கக்கூடாது என்று கிராமங்கள் தோறும் பள்ளிகளை உருவாக்கினார்.
ஒரு மைல் தொலைவிற்குள் ஒரு தொடக்கப்பள்ளியும், மூன்று மைல் தொலைவிற்குள் ஒரு நடுநிலைப் பள்ளியும், ஐந்து மைல் தொலைவிற்குள் ஒரு உயர்நிலைப் பள்ளியையும் உருவாக்கினார். ஏழைக் குழந்தைகளுக்காகப் பள்ளிகளைத் தொடங்கி கல்விக் கண்ணைத் திறந்து வைத்தவர்.
அவருடைய 1954_1963 ஒன்பது ஆண்டுகளில்தான் இன்று இருகின்ற பெரும்பாலான பள்ளிகள் தொடங்கப்பட்டது. குலக்கல்வித்திட்டத்தால் மூடப்பட்ட 6000 பள்ளிகளைத்திறந்தார். கிராமங்கள் தோறும் மேலே உள்ள விகிதங்கள்படி 17,000 மேற்பட்ட புதிய பள்ளிகளைத் திறந்தார். பள்ளிகள் திறந்தால் போதுமா கல்விச் சிறப்பாகச் சென்றடைய கல்வி நிறுவனங்கள் ஆண்டுதோறும் இருநூறு நாள்கள் வேலை நாள்களாகச் செயல்பட அரசு ஆணை ஒன்றைப் பிறப்பித்தார். இவ்வாறு கல்வியில் செய்த புரட்சி கர்மவீரர் காமராஜரையே சேரும்.
காமராஜரின் மதிய உணவுத்திட்டம்:
பள்ளிகள் பல திறக்கப்பட்டன. காமராஜர் முதல்வராக இருந்தபோது தனது அமைச்சரவையைக் கூட்டி பள்ளிகளின் கல்வியின் நிலை குறித்து ஆலோசனை செய்தார். மாணவர்களின் வருகை மற்றும் தேர்ச்சியை அதிகரிக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார்.
ஆசிரியர்கள் கல்வியறிவு ஊட்டுகிறார்கள். ஆனால் பட்டினி பசியுடன் பிள்ளைகள் எப்படி படிப்பார்கள் என்று எண்ணி இலவச மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் கர்மவீரர் காமராஜர்.
காமராஜரின் பள்ளிச் சீருடைத்திட்டம்:
காமராஜர் பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களும் ஏழை பணக்காரர் என்ற வேறுபாடுகளை நீக்க பள்ளிச் சீருடைத் திட்டம் கொண்டு வந்தார். அனைத்து மாணவர்களுக்கும் இலவச சீருடையை வழங்கியவர் கல்விக்கண் திறந்த காமராஜர் தான்.
காமராஜரும் ஆசிரியர் சங்கங்களும்:
காமராஜர் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரப்படி 5 ஆயிரம் ஆசிரியர்கள் வேலை இழக்க வேண்டி இருந்தது. இந்த தகவலை ஆசிரியர் சங்கங்கள் முதலமைச்சர் அவர்களிடம் கொண்டு சென்றபோது அந்நாள் கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் அவர்களை வரவழைத்து நாம் ஆட்சிக்கு வந்ததும் வாத்திமாரை வெளியே அனுப்புறதுக்குத்தான் வந்தமா?
அந்த விகிதாச்சாரம் எல்லாம் எனக்கு தெரியாது. அத்தனை பேரும் வெளியே செல்லாமல் பணியாற்ற வேண்டும் அரசாணை போட்டுக் கொடுங்கள் என்றார். முதலமைச்சர் காமராஜர் அவர்களுடைய ஆணையின்படி உடன் ஆசிரியர்கள் பாதுகாக்கப் பட்டார்கள். அப்போது ஆசிரியர் சங்கங்களைப் பார்த்து ஏழைப் பிள்ளைகளை உங்களை நம்பி ஒப்படைக்கிறோம். துரோகம் பண்ணிடாதீங்க என்று அவருக்கே உரிய பாணியில் ஆசிரியர் சமுதாயத்தின் இதயத்தைத் தொட்டு உணர்த்தியிருக்கிறார்.
காமராஜரைப் புகழ்ந்த கண்ணதாசன்:
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் அவரது கவிதையில் கிராமங்கள் தோறும் உள்ள பள்ளிகளுக்குச் சென்று பள்ளிக் கட்டிடச் சுவரினைத் தட்டினால் காமராஜர் காமராஜர் என்றல்லவா எதிரொலிக்கும் என்றார். காமராஜர் செய்த கல்விப்புரட்சியை கவிதையில் வடித்தார் கண்ணதாசன்.
தமிழக முதலமைச்சர் பதவியில் காமராஜர்:
தமிழக அரசியலில் அப்போது முதல்வர் ராஜாஜி குலக்கல்வித் திட்டத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டார் என அப்போதைய முதல்வர் ராஜாஜி அவர்கள் பதவி விலகினார். ராஜாஜி சார்பில் சுப்பிரமணியம், காமராஜர் என இரு அணிகளாகப் பிரிந்து சட்டசபையில் அமைச்சர்கள் வாக்கெடுப்பு நடந்தது. இதில் காமராஜர் பெரும்பான்மை பெற்று 1954 இல் தமிழக முதல்வர் ஆனார்.
அரசியல் வாழ்வில் 1954 - 1963 வரை ஒன்பது ஆண்டுகாலம் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர்.
காங்கிரஸில் காமராஜரின் தொண்டு:
5 ஆண்டுகாலம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். அவர் இறந்தபோது நான்கு வேட்டி சட்டையை தவிர வேறு எந்த சொத்து சுகத்தையும் அவர் சேர்த்து வைத்துச் செல்லவில்லை. பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் பிரதமராக இருந்தபோது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மூன்றாம் வகுப்பு வரை படித்த காமராஜர் அவர்களை தேர்ந்தெடுத் தார்கள் என்றால் அவரின் எளிமை, தூய்மை, நேர்மை, தலைமைப் பண்புக்கு கிடைத்த வெற்றியாகும். காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல இந்திய நாடே அவரின் வெளிப்படைத் தன்மையினை உணர்ந்திருந்தார்கள்.
அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக வடமாநிலங்களில் காமராஜர் அவர்களின் படத்தை போட்டு "A man without any property is our Congress leader vote for Congress"என்று சுவரொட்டி அடித்து வடமாநிலங்களில் ஒட்டியிருந்தார்கள் என்பது தேர்தல் வரலாற்றில் இடம்பெற்றிருந்த நிகழ்வாகும்.
காமராஜரும் குலக்கல்வித் திட்டம் ஒழிப்பும்:
குலக்கல்வியையும் ராஜாஜி அவர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. தமிழகத்தில் குலக்கல்வித் திட்டத்தை அறவே அப்புறப்படுத்திய பெருமைக்குரியவர்கள் யார் என்றால் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் இவர்களுக்கே அந்த அழியாப் புகழ் நிலைத்து நிற்கும்.
பெரியாருக்காக கப்பலையே நிறுத்தியவர் காமராஜர்.
தந்தை பெரியார் அவர்கள் குடும்பத்தார் ஐந்து பேருடன் சிங்கப்பூர், மலேசியா செல்ல வேண்டும் பாஸ்போர்ட், விசா பெற்று விட்டார்கள். கப்பல் புறப்படுகிற நேரத்திற்கு பெரியாரால் செல்ல முடியாத நிலை என்பது பெரியார் அவர்களுக்கும் தெரியாத ரகசியம். காமராஜர் அவர்களிடம் இந்த ரகசியத்தை சொல்லி இருக்கிறார்கள்.
1956இல் காமராஜர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது இந்த நிகழ்வு நடைபெற்றது. வந்தவர்களிடம் காமராஜர் அவர்கள் பெரியார் எந்தத்தேதியில் கப்பலுக்குச் செல்ல வேண்டும் எனக்கேட்டிருக்கிறார். ஒருநாள் காலதாமதமாகச்செல்ல வேண்டி வரும் என்று சொல்லி இருக்கிறார்கள். அந்த தேதிக்குப் புறப்பட்டு வாருங்கள் எனச் சொல்லிவிட்டார். உடன் டெல்லிக்கு தொடர்புகொண்டு கப்பலை ஒருநாள் நிறுத்தச் சொல்லி இருக்கிறார். இது பெரியாருக்குத் தெரிய வேண்டாம் எனக் கண்டிப்புடன் கூறியிருக்கிறார். பெரியார் அவர்களுக்குத் தெரிந்தால் ஒத்துக் கொள்ளவே மாட்டார் என்றும் சொல்லி இருக்கிறார்.
காமராஜர் அவர்கள் சொன்னபடியே கப்பல் ஒரு நாள் கடலில் நிறுத்தப்பட்டிருந்தது. பெரியார் அவர்கள் அவரது குடும்பத்தார்களுடன் கப்பலில் ஏறி அமர்ந்த பிறகுதான் கப்பல் புறப்படுவதற்கான அனுமதி டெல்லியிலிருந்து கிடைத்திருக் கிறது. இந்த நிகழ்வால் தான் பெரியாருக்காக கப்பலையே நிறுத்தியவர் காமராஜர் என்ற பெயரும், பெருமையும் அவருக்கு உண்டு என்பார்கள்.
காமராஜரின் நீர்ப்பாசனத் திட்டங்கள்:
தமிழக முதல்வராகப்பதவியேற்ற பெருந்தலைவர் காமராஜர் தமிழ்நாட்டின் ஏழ்மையை அகற்ற வேளாண்மை அவசியம் என நம்பினார். ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டம் கொண்டு வந்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் அணை திட்டம். மதுரை மாவட்டத்தில் வைகை அணை திட்டம், திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் மணிமுத்தாறு அணை திட்டம், ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் அணை திட்டம், சேலம் மேட்டூர் அணை திட்டம், கிருஷ்ணகிரி அமராவதி திட்டம் எனப் பல்வேறு நீர் தேக்கங்கள் கட்டி வேளாண்மைத் தொழிலில் புரட்சி செய்தார்.
காமராஜரின் தொழிற்புரட்சி:
காமராஜர் கல்வியில் மட்டும் புரட்சி செய்யவில்லை. மக்கள் ஏழ்மையைப்போக்க பல்வேறு வேலை வாய்ப்பு பெருக்கத்திட்டம் தீட்டினார். பல்வேறு இடங்களில் தொழிற் சாலைகள் நிறுவினார். அவற்றில் சிலவற்றைப் பட்டியல் இடுகிறேன்.
திருச்சி BHEL நிறுவனம்
கிண்டி டெலிபிரிண்டர்
மேட்டூர் காகித ஆலை
சேலம் ஸ்டீல் நிறுவனம்
ஊட்டி கச்சா ஃபிலிம் நிறுவனம்
பெரம்பலூர் ரயில் பெட்டி நிறுவனம்
நெய்வேலி நிலக்கரி உற்பத்தி நிறுவனம்
காமராஜர் அழைக்கப்படும் பெயர்கள்:
கல்விக் கூடங்களே நம் அறிவுக்கண் திறக்கும் ஆலயங்கள். அந்தக் கல்விக்காகப் புதியப்பள்ளிகளைத் திறந்ததால் கல்விக்கண் திறந்த காமராஜர் எனப்போற்றப்பட்டார்.
கர்மவீரர் காமராஜர்
படிக்காத மேதை காமராஜர்
பெருந்தலைவர் காமராஜர்
தென்னாட்டு காந்தி காமராஜர்
King maker kamaraj
பதவிகளை உதறிய காமராஜர்:
அரசியலில் இருந்து முதியவர்கள் விலகி இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்ற தாரகமந்திரத்தை முதலில் நடைமுறைக்குக் கொண்டு வந்தவர் காமராஜர். பல்வேறு பதவிகள் அவரைத் தேடி வந்த போதும் அந்தப்பதவியை உதறித்த்தள்ளி விட்டு மக்களுக்குச் சேவை செய்யும் கட்சிப் பணிக்குத் திரும்பினார்.
காமராஜரின் இறப்பு:
முதலமைச்சர் பதவி வகித்த தலைவர்களில் இவர் ஒருவரே கடைசி வரை தனக்கென்று சொந்தவீடு வாங்காமல் வாடகை வீட்டில் வாழ்ந்த பெருமை பெருந்தலைவர் காமராஜரையேச் சாரும். கோடிக்கணக்கில் பணத்தை வங்கியில் சேமிக்காத சிறந்த தலைவர் காமராஜர் தான்.
தோன்றுக புகழோடு என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க தோன்றிய பெருந்தலைவர் காமராஜர் இந்தியா மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற கர்மவீரர் காமராஜர் தனது எழுபத்திரண்டு அகவையில் 1975 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் மண்ணுலகம் விட்டு இன்னுயிர் ஈந்தார்.
காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாள்:
பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய பிறந்தநாளான ஜூலை 15 ஆம் நாளினை மறைந்த தமிழகத்தின் முதலமைச்சர் அவர்கள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடு மாறு கேட்டுக்கொண்டு ஆணை வழங்கினார். பொதுவாக காமராஜர் என்றுச் சொன்னால் அவருக்கு மக்கள் தந்த மகத்தான முனைவர் பட்டம் கல்விக்கண் திறந்த காமராஜர் என்பதுதான். காமராஜர் கல்வியில் செய்த புரட்சி வரலாற்றில் நீங்க இடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டு அவருடைய 118 வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக வட்டாரக்கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்களில் கொண்டாடுமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
காமராஜரின் மணிமண்டபம்:
காமராஜரின் பிறந்த ஊரான விருதுநகரில் நுழைவாயில் அருகே காமராஜர் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த காமராஜர் மணிமண்டபம் அவருடைய 117 பிறந்தநாள் கடந்தாண்டு 2019 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் பதினைந்தாம் நாள் தமிழக முதல்வர் அவர்களின் பொற்கரங்களால் காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். விருதுநகர் மாவட்டம் சென்றால் காமராஜரின் மணிமண்டபத்தைப் பார்த்து ரசியுங்கள்.
காமராஜர் மணிமண்டபம் திறப்பு விழா வீடியோபதிவு.
காமராஜர் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள்:
இந்தப் புத்தகத்தைத் தொட்டுப்படிக்கலாம். இது போன்ற பலப்புத்தங்கள் உள்ளது. சென்று படிங்க.
மேலும் பல அரியத்தகவல் படிக்க தொடுங்கRead more