H

Thursday, 16 July 2020

காமராஜரும் கலைஞரும் / kamarajar & kalaignar

          காமராஜரும் கலைஞரும்

       காமராஜ் என்றப்பெயரை காமராஜர் என்றே இனிக் குறிப்பிடவேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தான்.
                  காமராஜர் பிறந்தநாளான ஜீலை 15 ஆம் நாளை ஒவ்வொரு ஆண்டும் கல்வி நிறுவனங்கள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட வேண்டுமென அறிவித்தவர் கலைஞர் அவர்கள் தான்.

சென்னை காமராஜர் சாலை:

                   சென்னை மெரினா கடற்கரை சாலைக்குக் காமராஜர் சாலை என்று பெயர் வைத்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தான்.
             சென்னை கிண்டியில்  கர்மவீரர் காமராஜருக்கு மணிமண்டபம் கட்டி பெருமை சேர்த்தவர்  கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தான்.
                கடற்கரை சாலைக்குக் காமராஜர் சாலை என்று பெயர் சூட்டியதோடு நிற்காமல்      சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்குள்  காமராஜர் விமான நிலையம் என்று பெயர் வைக்க வேண்டும் என அப்போதைய பிரதமர் திரு.வி.பி.சிங் அவர்களிடம் கோரிக்கை வைத்து நிறைவேற்றிக்  காமராஜர் விமான நிலையம் எனப்பெயர் சூட்டிய பெருமை கலைஞரே சாரும்.
                   காமராஜர் பிறந்த விருதுநகரில் உள்ள வீட்டைக் காமராஜர் நினைவில்லம் ஆக்கியவர் கலைஞர் தான்.

காமராஜர் நினைவு மண்டபம்:

               தமிழகத்தின் தென் கடைசி மாவட்டமான கன்னியாகுமரியில் காமராஜருக்கு நினைவு மண்டபம் எழுப்பியவர் கலைஞர் தான்.
                     நெருக்கடி நிலையின்போது காமராஜரை கைது செய்ய வேண்டும் என்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சொன்னதற்கு, என் ஆட்சி கலைக்கப்பட்டாலும் பரவாயில்லை, காமராஜரை கைது செய்ய முடியாது, என் ஆட்சியைக் கலைத்துவிட்டு உங்கள் ராணுவம் வேண்டுமானால் அதை செய்யட்டும் என்றுச் சொன்னவர் கலைஞர் அவர்கள் தான்.

காமராஜர் சென்ற கலைஞர் இல்லத்திருமண விழா:

             மணமேடைக்கே காரில் காமராஜரை அழைத்து வந்து தன் மகன் ஸ்டாலினுக்கு அவர் தலைமையில் திருமணம் செய்து வைத்தவர் கலைஞர் கருணாநிதி தான்.                          காமராஜர் மறைந்த 1972  அக்டோபர் இரண்டு  அன்று கொட்டும் மழையில் இரவோடு இரவாகத் தன்னுடைய நேரடி மேற்பார்வையில் அவருடைய அடக்கத்திற்கான இடத்தை ஒதுக்கித் தயார் செய்து தந்தவர் கலைஞர் தான்.
                 தமிழகத்திலயே முதன் முதலில் காமராஜருக்கு சிலை வைத்தது கலைஞர் தான். சென்னை மாநாகராட்சியில் பெரியார் பாலத்திற்கு அருகே காமராஜர் சிலை அமைத்து அதை நேருவை கொண்டுத்திறந்து வைத்தவர் கலைஞர் தான்.

              காமராஜர் நினைவு மண்டபத்தில் அணையா விளக்கு இல்லையே என்ற குறை இருந்து வந்தது. இதை உணர்ந்து 25/07/2010 அன்று காமராஜர் நினைவு மண்டபத்தில் அணையா விளக்கை ஏற்றி வைத்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தான்.
                முத்துக்குளித்தலுக்குப் பெயர் பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தின்  மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திற்கு காமராஜரின் தாயார் பெயர் நினைவில் நிலைத்திருக்கும் வகையில், "அன்னை சிவகாமி அம்மையார் வளாகம்” என்று பெயர் சூட்டியதும்  தலைவர் கலைஞர் தானே.

சிவகாமி அம்மையார் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்:

                   தமிழக  அரசின் “பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டதிற்கு” சிவகாமி அம்மையாரின் பெயரை வைத்து, அத்திட்டத்தைச் சிறப்பாக நடைமுறைப் படுத்தினார் கலைஞர்.
          பெருந்தலைவரின் படத்திற்குக் கீழே எழுதுவதற்குப் பொருத்தமான  வாசகத்தைக் கேட்ட நிலையில், 'உழைப்பே உயர்வு தரும்' என்று தலைவர் கலைஞர் அவர்கள் அந்தக் கணமே எழுதிக் கொடுத்து, கர்மயோகி காமராஜருக்குப் பெருமை சேர்த்தார்.
        நெல்லை மாவட்டம் இராதாபுரம் பேருந்து நிலையம் புதிதாகக்கட்டப்பட்டு காமராஜர் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இதைச் செய்தவர் கலைஞர் அவர்கள் தான்.
                காமராஜர் பெயரில் தபால் தலை வெளியிடக் கலைஞர் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்து, மத்திய அரசு தபால் தலை வெளியிட்டுள்ளது. இதை முன்னாள் முதல்வர் கலைஞர் தான் செய்தார்.

காமராஜர் விருது:

           காமராசர் பெயரில் அரசு விருது ஒன்றை நிறுவி 'பெருந்தலைவர் காமராசர் விருது' சமூகப்பணி செய்பவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதை முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்தார்.
                  இளைஞர்கள் இந்த வரலாற்று நிகழ்வுகளை பலருக்குத்தெரிய செய்வதே பெருந்தலைவர் காமராஜருக்கான உண்மையான புகழ் வணக்கம்.
      கல்வி கண் திறந்த காமராஜர் பிறந்த தினத்தில் அவர் பெயரில் தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களைத் தெரிந்து கொண்டோம்.
    இது காமராஜரும் கலைஞரும் என்றத் தலைப்பில் நான் படித்த, கேட்ட செய்திகளைச் சமர்ப்பித்துள்ளேன். இதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை. நான் அரசியல் விரும்பாத நடுநிலை தவறாமல் எழுதுபவன்.

காமராஜர் புத்தகம்:

இந்தப் புத்தகத்தைத் தொட்டுப்படிக்கலாம். இதை விட அதிக செய்திகள் தெரிந்து கொள்ள இதைத் தொடங்கிய
Read more vedio

No comments:

Post a Comment

Super useful ideas thank you reading