H
Showing posts with label Smart ration card. Show all posts
Showing posts with label Smart ration card. Show all posts

Thursday 25 June 2020

Smart ration card உறுப்பினர் சேர்க்க, உறுப்பினர் நீக்க

         Smart ration card உறுப்பினர் சேர்க்க, உறுப்பினர் நீக்கப்பத்தே நிமிடங்கள் போதும். உங்கள் ரேஷன் கார்டில் புதியதாகப்பிறந்த குழந்தைகளைச் சேர்த்து கொள்ளலாம்.                         திருமணம் முடிந்து வெளியூர்களுக்கு சென்றவர்களின் பெயர்களை நீக்கி விடலாம். இதைஉங்கள் வீட்டில் இருந்தே செய்யலாமே. எப்படி என்றால் கையில் smart phone இருந்தால் போதும் உங்கள் ரேஷன் கார்டில் சேர்த்தல், நீக்கல் செய்து கொள்ளலாம்.
 உறுப்பினர் சேர்க்கை :  
          நாம் வீட்டில் புதிய  வரவுகளானக் குழந்தைகள் பெயரை smart ration card இல் எப்படி சேர்க்க வேண்டும் என்று பார்க்கலாம்.               குழந்தையின் பிறந்த சான்றிதழ் ஒரிஜினல் அல்லது ஆதார் அட்டை ஒரிஜினல் இவற்றில் ஏதேனும் ஒன்றை உங்கள் smart phone இல் போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும். 
           உங்கள் போனில்அதை photo resize application  (mobile app) கொடுத்து போட்டோ  அளவை 1.0 MB ஆக png, gif, jpg, pdf format இல் மாற்றிப்போனில் சேமித்து வைத்து விடவும்.                       
                       smart phone எடுத்து Google search சென்று TNPDS அல்லது http://www.tnpds.gov.in இணையதள முகவரியை டைப் செய்யலாம். அல்லது https://www.tnpds.gov.in/
இந்த லிங்கைத்தொட்டு நேரடியாக tnpds home page  செல்லலாம்.
                      மேலே இருந்து கீழே வரக் குடும்ப அட்டை உறுப்பினர் சேர்க்க  என்று வாக்கியம் இருக்கும்.அதைத்தொடுங்கள். 
                உள்ளே சென்று பயனாளர் கைபேசிஎண்ணைப் பதிவிடவும். அதன் கீழே ஆறு இலக்க கேப்சர் குறியீடு பதிவு செய்து சமர்ப்பிக்க பட்டனை தொடுங்கள். 
                         300 வினாடிக்குள் பதிவு செய்யப் பட்ட உங்கள் மொபைல்போனுக்கு தங்களது பொதுவினியோகத்திட்டத்திற்கான அங்கீகார குறியீடு Portol தங்களது உள்நுழைவு ××××××× என்று குறுஞ்செய்தி வரும். 
                     அதில் உள்ள ஏழு இலக்க எண்ணை உள்ளிடவும்.என்விவரம் என்று வரும். அதில் குடும்ப தலைவர் பெயர், குடும்ப அட்டை எண், அ.பதிவு எண், குடும்ப அட்டை வகை(அரிசி), குடும்ப அட்டை உறுப்பினர் விபரம் இருக்கும். 
                         அதில் உறுப்பினர் சேர்க்கையில் உறுப்பினர் பெயர் (தமிழ், English), பிறந்த தேதி, குடும்ப தலைவருக்கு உறவு முறை(மகன்/மகள்) தேர்வு செய்து பின் ஆதார் எண் டைப் செய்து விடவும். 
                           பிறந்த சான்றிதழ்  (birth certificate below 5 years child only) மட்டும் இருந்தாலும் பெயரைச் சேர்த்து கொள்ளலாம். ஆனால் அவருக்கு ரேஷன் பொருட்களை ஒதுக்கீடு செய்யமாட்டார்கள். 
                 ஆதார் எண் சேர்ந்தால்தான் அவரும் அரை யூனிட் கணக்கில் சேர்த்து அரை கிலோ சர்க்கரை சேர்த்து அந்தக் குடும்ப அட்டைக்கு வழங்கப்படும். 
       அதற்குக்கீழே ஆவணங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் ஆதார் அட்டை அல்லது பிறந்த சான்றிதழ் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து பின் உங்கள் மொபைல்போனுக்கு போனில் சேமித்து வைத்துள்ள gallery இல் photo resize application போட்டோவை upload செய்து விட்டு, உறுதிப்படுத்துதலில் டிக் கொடுத்து விட்டு பதிவுச்செய்ய பட்டனைத் தொடவும்.                                               சிறிது நேரத்தில் உங்கள் போனுக்கு குறிப்பு எண்  SMS வரும். ஒரே வாரத்தில் உங்கள் குடும்ப அட்டையில் குழந்தையின் பெயரும் சேர்ந்து விடும், ரேஷன் பொருள்கள் கிடைத்துவிடும். இதற்காக வட்டாட்சியர் அலுவலகம் சென்று அலைய வேண்டாம். 
             நெட் சென்டர் ஏறி இறங்க வேண்டாம். பணத்தையும்  செலவழிக்க வேண்டாம். 
            ஐந்தே நிமிடத்தில் smart ration card உறுப்பினர் சேர்க்கை செய்து விடலாம். வீட்டில் இருந்தே செய்து விடலாம். 
                  புதிதாகத்திருமணம் செய்து வந்த மணமகளின் பெயரைச் சேர்க்க ஆதார் எண்ணை உள்ளீடு செய்தால் ஏற்றுக் கொள்ளாது(not accepted).
                                அதற்கு முதலில் அவருடைய பெயரை அவருடைய அப்பா குடும்ப அட்டையில் நீக்கியப்பிறகு தான் இந்தக்குடும்ப அட்டையில் சேர்க்க முடியும்.
உறுப்பினர் நீக்கம் செய்ய:
                                       உங்கள் ரேஷன் கார்டில் திருமணமாகி வெளியூர் சென்ற ஆண்/பெண் பெயரை நீக்க உங்கள் வீட்டில் இருந்தே ஐந்து நிமிடத்தில் செய்து விடலாம். 
                            Smart phone எடுத்து Google search சென்று TNPDS அல்லது http://www.tnpds.gov.in இணையதள முகவரியை டைப் செய்யவும். அல்லது இந்த   https://www.tnpds.gov.in/  லிங்கைத்தொட்டு உள்ளே செல்ல முடியும். 
                          மேலே இருந்து கீழே வர குடும்ப அட்டை உறுப்பினர்  நீக்கம் செய்ய  என்று வாக்கியம் இருக்கும்.அதைத்தொடுங்கள். உள்ளே சென்று பயனாளர் கைபேசிஎண்ணைப் பதிவிடவும். 
                       அதன் கீழே ஆறு இலக்க கேப்சர் குறியீடு பதிவு செய்து சமர்ப்பிக்க பட்டனை தொடுங்கள். 300 வினாடிக்குள் பதிவு செய்யப் பட்ட உங்கள் மொபைல்போனுக்கு தங்களது பொதுவினியோகத்திட்டத்திற்கான அங்கீகார குறியீடு Portol தங்களது உள்நுழைவு ××××××× என்று குறுஞ்செய்தி வரும். அதில் உள்ள ஏழு இலக்க எண்ணை உள்ளிடவும்.
                    என்விவரம் என்று வரும். அதில் குடும்ப தலைவர் பெயர், குடும்ப அட்டை எண், அ.பதிவு எண், குடும்ப அட்டை வகை (அரிசி) என இருக்கும். 
                
                   உறுப்பினர் நீக்கம் செய்ய இறப்பு சான்றிதழ், திருமணச் சான்றிதழ், தத்தெடுப்பு சான்றிதழ் ஏதேனும் ஒரு ஒரிஜினல் கையில் வைத்துக்கொள்ள வேண்டும். 
                           இவற்றில் ஏதேனும் ஒன்றை உங்கள்  அலைபேசியில் போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும். 
                 அதை photos resize application  (mobile app)கொடுத்துபோட்டோ அளவை 1.0 MB ஆக png, gif, jpg, pdf format இல் மாற்றி போனில் சேமித்து வைத்து விட்டவும்.                                ஆவணங்களைத்தேர்வு செய்க என்பதைத் தொடுங்கள். அதில் மேலே சொன்ன ஆவணத்தில் ஒன்றைத் தேர்வுச்செய்து விடவும். 
                   Files input உள்ளே சென்று image or gallery ல் photo resize app save photo click கொடுக்கவும். File input ஆனதும் அதற்குக்கீழே காரணம் டைப் செய்து விட்டு உறுதிப்படுத்துதல் டிக் கொடுக்கவும். 
                         பின்னர் கீழே பதிவுச்செய்ய பட்டனைத்தொட்டால் பதிவு ஆகிவிடும்.     உடனே உங்கள் அலைபேசியில் உங்கள் கோரிக்கை வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப் பட்டது. கோரிக்கை எண் ××××××××××× என்று குறுஞ்செய்தி வரும். ஐந்து  நிமிடங்களில் smart ration உறுப்பினர் நீக்கம் செய்ய முடியும். 
                 உங்கள் வீட்டிலிருந்து  smart ration card இல் உறுப்பினர் நீக்கம் செய்யலாம்.நெட் சென்டர் ஏறி இறங்க வேண்டாம். வட்டாட்சியர் அலுவலகம் சென்று அலைய வேண்டாம். Smart ration card உறுப்பினர் சேர்க்க, நீக்கத்தெரிந்து கொண்டோம் என்பது மகிழ்ச்சி. 
Smart ration card தகவல்கள் தொடரும்...

Wednesday 17 June 2020

Smart ration card Address changes (ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் செய்ய )

                  Smart ration card முகவரியை மாற்றப்பத்தே நிமிடங்கள் போதும் உங்கள் ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் உங்கள் வீட்டில் இருந்தே செய்யலாமே. எப்படி என்றால் கையில் smart phone இருந்தால் போதும் உங்கள் ரேஷன் கார்டில் முகவரியை மாற்றிக் கொள்ளலாமே. 
                     பணியிடமாறுதலில் வெளியூர் செல்லும் போதும் உங்கள் ரேஷன் கார்டில் முகவரியை மாற்றவீட்டில் இருந்தே ஐந்தே நிமிடங்களில் செய்யலாம். நீங்கள் பணிபுரியும் ஊருக்கு அருகில் உள்ள ரேஷன் கடைக்கு ஒரே வாரத்திலேயே மாறிவிடும்.Smart phone எடுத்து Google search சென்று TNPDS அல்லது http://www.tnpds.gov.in இணையதள முகவரியை டைப் செய்யவும். அல்லது https://tnpds.gov.in/ இதைத்தொட்டால் நேரடியாக சென்று பாருங்கள். 
மேலே இருந்து கீழேவர குடும்ப அட்டை முகவரி மாற்றம் செய்ய  என்று வாக்கியம் இருக்கும்.அதைத்தொடுங்கள். உள்ளே சென்று பயனாளர் கைபேசிஎண்ணைப் பதிவிடவும். அதன் கீழே ஆறு இலக்க கேப்சர் குறியீடு பதிவு செய்து சமர்ப்பிக்க பட்டனை தொடுங்கள். 
300 வினாடிக்குள் பதிவு செய்யப் பட்ட உங்கள் மொபைல்போனுக்கு தங்களது பொதுவினியோகத்திட்டத்திற்கான அங்கீகார குறியீடு Portol தங்களது உள்நுழைவு ××××××× என்று குறுஞ்செய்தி வரும். அதில் உள்ள ஏழு இலக்க எண்ணை உள்ளிடவும் 
என்விவரம் என்று வரும். அதில் குடும்ப தலைவர் பெயர், குடும்ப அட்டை எண், அ.பதிவு எண், குடும்ப அட்டை வகை, (அரிசி), குடும்ப அட்டை முகவரி இருக்கும். 
அதற்குகீழே புதிய முகவரி விவரங்களை ஒன்றன் பின் ஒன்றாக நிரப்பவும். முதலில் ஆங்கிலத்தில் புதிய முகவரியை உள்ளிடவும். Address 1, Address 2, Address 3 முன்றில் கதவு எண், தகப்பனார் பெயர்,தெருபெயர் பிளாட் நம்பர் உள்ளிடவும். District ~ select தொடுங்கள் உங்கள் மாவட்டத்தைத்தேர்ந்து எடுக்க வேண்டும். 
Taluk ~select உங்கள் தாலுகாவை தேர்ந்தெடுக்க வேண்டும். 
Village ~ select  உங்கள் ஊரின் பெயர் வரும் தேர்ந்தெடுக்க வேண்டும். அஞ்சல் குறியீடு பதிவு செய்ய வேண்டும். 
இதே போல்தமிழில் நிரப்பவும். 
முகவரி மாற்றம் செய்ய ஆவணங்களைத்தேர்ந்தெடுக்க வேண்டும். 
*ஆதார் அட்டை 
*வாக்காளர் அடையாள அட்டை 
*எரிவாயு நுகர்வோர் அட்டை சிலிண்டர் பில் 
*வரி ரசீது  (வீட்டு உரிமையாளர்)
*வாடகை ஒப்பந்தம்  (வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கு)
*குடிசை மாற்று வாரியம் ஒதுக்கீடு 
* வீடு ஆவணம் 
*மின்சார கட்டண ரசீது 
*தொலைபேசி கட்டண ரசீது 
*வங்கி கணக்குப்புத்தகம் 
இவற்றில் ஏதேனும் ஒன்றை உங்கள்  அலைபேசியில் போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும். 
அதை photos resize application  (mobile app)கொடுத்துபோட்டோ அளவை 1.0 MB ஆக png, gif, jpg, pdf format இல் மாற்றிப்போனில் சேமித்து வைத்து விட்டவும். 
மேலே உள்ள ஒரு ஆவணத்தில் click கொடுக்கவும். 
Files input உள்ளே சென்று image or gallery ல் photo resize app save photo click கொடுக்கவும். File input ஆனதும் சமர்ப்பிக்க ¤¤¤தொடுங்கள். முகவரி மாற்றம் வெற்றிகரமாகப்பதிவு செய்யப்பட்டது. உடனே உங்கள் அலைபேசியில் உங்கள் கோரிக்கை வெற்றிகரமாகச்சமர்ப்பிக்கப்பட்டது. கோரிக்கை எண் ××××××××××× என்று குறுஞ்செய்தி வரும். பத்து நிமிடங்களில் smart ration card முகவரி மாற்றம் செய்ய முடியும். 
சில ideas 
###Ration card address change செய்ய அந்த மாதத்திற்குரிய பொருட்களை வாங்கிய பின் ஆங்கில மாதத்தின் 25 தேதிக்கு மேல் முகவரி மாற்றம் கோரிக்கை வைக்கலாம். ஏனெனில் முகவரி மாற்றம் ஏழு நாட்களில் முடிந்து விடும். ஆனால் அந்தக் கடைக்கு உங்கள் அட்டைக்குரிய பொருட்களை ஒதுக்கீடு செய்ய ஒரு மாதம் ஆகும். 
### smart ration card முகவரி மாற்றம் செய்ய ஆவணமாகச்சிலிண்டர் பில் வைக்கலாம். சிலிண்டர் பில்லை எளிய முறையில் புதிய முகவரி பெற்று உள்ளீடு செய்யலாம். 
 ### உங்கள் வீட்டிலிருந்து முகவரி மாற்றம் செய்யலாம் அல்லது நெட் சென்டர்களில் சென்று ஐந்து நிமிடங்களில் செய்து விடலாம். 
Smart ration card தகவல்கள் தொடரும்...

Tuesday 16 June 2020

Smart ration card தொலைந்துவிட்டதா?

                   Smart ration card தொலைந்து விட்டதா?ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறதா. 
                 Smart ration card தொலைந்து விட்டது என்றாலும் ரேஷன் கடையில் அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை வாங்க முடியும். எப்படி என்று கேட்டால் இதோ வழிகளைப் படியுங்கள். 
             புதியதாக ரேஷன் கார்டு விண்ணப்பம் செய்து இதுவரையில் ரேஷன் கார்டு வரவில்லை என்றாலும்கூட பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். 
                  சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்து தனி குடும்ப அட்டைப்பெறுவதற்கு விண்ணப்பம் செய்து புதிய அட்டை பெறவில்லை என்றாலும் உங்களுக்கு ரேஷன்கடை மற்றும் smart card number ஆகியவை பதிவு செய்த mobile number க்கு message வரும்.
            அதன் பின் பொருட்கள் வாங்க Smart ration card தேவையில்லை. 
                       தமிழக அரசு  smart ration card திட்டத்தை  2013 _ 2014 ஆண்டுகளில் நடைமுறைக்குக்கொண்டு வந்தது. 
                      தமிழக அரசின் சார்பில்  ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கிக்கொள்ள மூன்று வழி முறைகள் பின்பற்றலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 
                          ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கப்பெரும்பாலானவர்கள் பின்பற்றும் வழிமுறை 
Smart ration card வைத்து scan செய்து அரிசி,பருப்பு, பாமாயில், சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்ற பொருட்கள் வாங்கி கொள்ளலாம். 
                      இரண்டாவது முறையாக smart ration card இல் சேர்த்து உள்ளவர்களில் எவரேனும் ஒருவரின் ஆதார் அட்டை ஒரிஜினல் வைத்து scan செய்து பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். 
                ஆதார் அட்டை கணவன், மனைவி, குழந்தைகள் என எதாவது ஒரு ஆதார் அட்டை ஒரிஜினல் போதும். 
                    மூன்றாவது வழி முறையாக smart ration card பதிவு செய்யும் போதும் கொடுக்கப்பட்ட mobile number ஐ ரேஷன்கடை விற்பனையாளரிடம் சொல்ல அவர் scanning machine இல் mobile number பதிவு செய்து  transaction code அந்த mobile number க்கு அனுப்பி வைப்பார். பதிவு செய்யப்பட்டுள்ளது mobile phone யை கடைக்குச்செல்லும் போதுஉடன் எடுத்துச்செல்ல வேண்டும். 
📱📲 உங்கள் mobile phone க்கு வந்த OTP சொல்லிப்பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம். 
 ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க மூன்று வழி முறைகளில் உங்களுக்கு ஏற்ற ஒரு வழிமுறையைப்பயன்படுத்திப் பொருட்கள் வாங்கி பலன் அடையுங்கள். 
Smart ration card தகவல்கள் தொடரும்.