H

Saturday 13 June 2020

நலமுடன் வாழ பத்து ...Top ten health tips.

      நாம் எவ்வளவு எண்ணெயை உணவாக மாதம் பயன்படுத்தலாம்? 
          ஒருவருக்கு மாதந்தோறும் 500 மில்லி லிட்டர் மிகாமல் எண்ணெயை உணவாகப் பயன்படுத்தலாம். உதாரணமாக ஒரு வீட்டில் நான்கு நபர்கள் இருந்தால் இரண்டு லிட்டர் எண்ணெய் பயன்படுத்தலாம். அந்த எண்ணெய் ஒரே வகையாக இல்லாமல் நிலக்கடலை எண்ணெய், எள் எண்ணெய், பாமாயில், தேங்காய் எண்ணெய் என்று பயன்படுத்த வேண்டும் 
         
  அயோடின் உப்பை உணவில் சேர்த்துக் கொள்வதன் நன்மைகள் என்ன?
அயோடின் பற்றாக்குறையினால் தைராய்டு சுரப்பி வீங்கும். இதனால் கழுத்துக்குக் கீழ் கட்டி போல்உருவாகும். இதற்கு முன் கழுத்துக்கழலை என்று பெயர். தைராய்டு சுரப்பி உடம்பின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும். இதன் குறைவு உடல் பருமனையும் மந்த தன்மையையும் உண்டு பண்ணும். இதனால் கர்ப்பிணிப் பெண்களுக்குக்குறை பிரசவம், குழந்தை முழு வளர்ச்சியின்றி பிறப்பதும் நிகழும். வளரும் பருவமாக இருந்தால் மூளை வளர்ச்சியில்லா குழந்தையாக இருக்கும். இவைகளை போக்குவதற்கு அயோடின் சேர்த்து கொள்ள வேண்டும். இது சாதாரண கல் உப்பில் உள்ளது. 
சர்க்கரை வியாதிக்காரர்கள் எந்த மாதிரி உணவை உட்கொள்ளக்கூடாது?
இனிப்பு வகைகள், சர்க்கரை, தேன், சர்பத், ஜெல்லி, பழரசம், உருளைக்கிழங்கு, பீட்ரூட் எல்லா வித கொழுப்பு உணவுகள், நெய், வெண்ணெய் முதலானவைகளை உண்ண கூடாது. மாம்பழம், வாழைப்பழம் முதலான பழங்களை உண்ண கூடாது. 
குறைந்தபட்சம் எவ்வளவு தண்ணீர் பருக வேண்டும்? 
ஆரோக்கியமான வாழ்வுக்கு மனிதன் தினந்தோறும் அவனுடைய உடல் எடையில் கிலோவிற்கு 30 மி.லி தண்ணீர் பருக வேண்டும். வெளியேறும் சிறுநீரின் அளவும் அதே அளவில் இருக்க வேண்டும். சராசரியாக இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். 
காலை உணவு சாப்பிட வேண்டிய நேரம் எது? 
காலை உணவைக்காலை எட்டு மணியிலிருந்து பத்து மணிக்குள் சாப்பிடுவது நல்லது. 
மதிய உணவு எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்? 
 நண்பகல் 12 மணிக்கு மேல் 2 மணிக்குள் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. 
 இரவு உணவு எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்? 
   மாலை  ஆறு மணி முதல் இரவு பத்து மணிக்குள் இரவு உணவைச் சாப்பிடுங்கள். இரவு பத்து மணிக்குப் பிறகும் சாப்பிடாமல் இருந்தால் அமிலம் அதிகம் சுரந்து குடலில் கோளாறு ஏற்படும். 
இரவில் தயிர், கீரை சேர்த்து சாப்பிடலாமா? 
தயிர்  போன்ற நொதிக்கும் தன்மையுடைய பொருள்களை இரவில் சாப்பிடக்கூடாது என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டது. ஏனெனில் ஜீரண உறுப்புகளின் செயல்பாடுகள் குறைவாக இருக்கும். எனவே கீரை, தயிர், ஊறுகாய் போன்ற உணவை இரவில் சாப்பிட வேண்டாம். 
சாப்பிடும் டீயில் தேன் சேர்ப்பது நல்லதா? 
டீயுடன் தேனை சேர்த்து கொதிக்க வைக்ககூடாது. சூடான டீயுடன் தேனைச் சேர்த்துக் கலந்து குடித்தால் உடம்பிற்கு நல்லது. 
படர்ந்த கொடிகளில் விளையும் காய்கறிகள் உடலுக்கு நல்லதா? 
பாகற்காய், சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறிகள் சாப்பிட உடலிலிருந்து அதிகமாகச்சிறுநீர் வெளியேறுகிறது. சிறுநீரக கோளாறு வராமல் தடுக்க இதைச்சாப்பிடலாம். 
டீயுடன் வெல்லம் சேர்க்கலாமா? 
டீயுடன் வெல்லம் சேர்த்து பருகலாம். வெள்ளை சீனி சேர்ப்பது உடல் நலத்திற்கு தீங்கைத்தரும். 
உணவை உரிய நேரத்தில் உண்போம்  !!
உடல் நலத்துடன் வாழ்வோம்   !!!

1 comment:

Super useful ideas thank you reading