Appreciation To say/ பாராட்டு! பாராட்டு!!
இயற்கையின் பாராட்டு
அது அந்த வானமும் அதில் மின்னும் நட்சத்திரங்களும் எவ்வளவு அழகாக இருக்கின்றன என்று வியந்தார் ஒருவர். பார்த்து ரசிப்பதற்கு யாருமே இல்லா விட்டாலும்கூட, வானம் இப்படி அழகாகத்தான் இருக்கும் என்றார் மற்றொருவர். உண்மைதான், நகரங்களை விட கிராமப்புறங்களில் மனிதனால் மாசுபடாத காற்று, அழுக்குப்படாத பகுதிகளில் வானம் மிகவும் அழகாகத்தான் இருக்கிறது.
இந்த இயற்கை அழகு நம் பாராட்டை எதிர்பார்த்துக் காத்திருக்காமல் இயங்கும். பாராட்டுப்பாராட்டு யாரைப் பாராட்டுவது பற்றிப் பார்ப்போம்.
குற்றால அருவி பாராட்டு
குற்றால அருவியில் குளித்திருக்கிறீர்களா!
தண்ணீர் மேலிருந்து நம்மீது மோதும்போது, அவ்வளவு சுகமாக இருக்கும். ஆனால் குளித்து ரசிப்பதற்கு யாருமே இல்லாத இரவு நேரங்களில் குற்றால அருவியில் அதே வேகத்துடன் தான் தண்ணீர் கொட்டிக்கொண்டு இருக்கும். இவையெல்லாம் இயற்கை நியதி. அங்கீகாரத்துக்கும் பாராட்டுக்கும் காத்திராமல் எப்போதும் தன் இயல்பிலேயே இயங்கிக் கொண்டிருக்கும்.
மனித மனநிலை பாராட்டு
மனித மனநிலை இதற்கு ஒத்துவராது. மனிதனுக்கு அங்கீகாரம் தேவைப்படுகிறது. பாராட்டு தேவைப்படுகிறது. 'நம்மால் இதைச்செய்யமுடியும்' என்ற நம்பிக்கையை அவனுக்குத் தருவது அடுத்தவர்களிடம் கிடைக்கும் அங்கீகாரமும் பாராட்டும்தான்.
சாப்பாடு பாராட்டு
'சமையல் நன்றாக இருந்தது' என்று சாப்பிட்டவுடன் பாராட்டுவது சமைத்தவருக்கு எவ்வளவு மகிழ்ச்சியைத் தரும். விருந்துக்குச் சென்ற வீட்டில் கூட, ஊர்க்கதையெல்லாம் பேசுகிறோம். ஆனால் 'சாப்பாடு பிரமாதம்' என்று சொல்ல மறந்துவிடுகிறோம். அல்லது சொல்லக்கூச்சப்பட்டுக்கொண்டு கிளம்பி விடுகிறோம்.
குழந்தைகள் பாராட்டு
பேரக்குழந்தையுடன் பந்து விளையாடிக் கொண்டிருக்கும் தாத்தா, 'அடடே, எவ்வளவு தூரம் நீ பந்தை எறிகிறாய், தாத்தாவால் பந்தைப் பிடிக்க முடியவில்லை. நீயே பந்தைப் போடு பார்க்கலாம் என்று சொல்லும்போதுதான் குழந்தை கூட இன்னும் உற்சாகமாக விளையாடுகிறது. தாத்தாவையே தோற்கடித்த மகிழ்ச்சியில் குழந்தை துள்ளிக் குதிக்கும்.
ஒரு கவிஞர் எதையும் நயமாகச் சொல்வதில் வல்லவர். நண்பர் ஒருவர் நிறைய வகை வகையான உணவுகளுடன் கவிஞருக்கு ஒரு நாள் விருந்து கொடுத்தார். 'இவ்வளவு உணவு வகைகளும் பிரமாதமாக ஏற்பாடு செய்து விட்டு ஒரேயொரு குறை வைத்து விட்டீர்களே'என்றார் கவிஞர். என்ன?என்ன?என்ன குறை என்று பதறிவிட்டார் அவர் நண்பர். எல்லாம் சரிதான்,'எப்படியாவது எனக்கு இன்னுமொரு வயிறும் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தால்,இன்னும் சாப்பிட்டிருப்பேன்'
என்றார்.
பாராட்டுதல் கலை
பாராட்டுவது ஒரு கலை.கேட்பவர்களுக்கு அது உயிர்ப்புச் சக்தியைத்தரும். திட்டுவதையே கலையாக வைத்துக்கொண்டு திட்டுபவர்களும் உண்டு.
மனைவி ஒரு நாள் ஆம்லெட் செய்து வைத்தாள். 'இன்று அவித்த முட்டை சாப்பிட நினைத்தேன், நீயேன் ஆம்லெட் செய்தாய்?' என்று திட்டினான் கணவன். மறுநாள் மனைவி முட்டையை அவித்து வைத்தாள்.
"இன்று நான் ஆம்லெட்டைச் சாப்பிட ஆசையுடன் வந்தேன். உன்னை யார் முட்டையை அவிக்கச் சொன்னது? என்று படபடவென்றுக் கத்தினான். எதற்கு வம்பு என்று மறுநாள் ஒரு முட்டையை அவித்தும், இன்னொரு முட்டையை ஆம்லெட் செய்தும் வைத்தாள் மனைவி. இன்று பாராட்டு கிடைக்குமென்று நம்பினாள். யார் உன்னை இப்படி செய்யச்சொன்னது? அவிக்க வேண்டிய முட்டையை ஆம்லெட் செய்திருக்கிறாய். ஆம்லெட் செய்ய வேண்டிய முட்டையை அவித்திருக்கிறாய். உன்னையெல்லாம் திருத்தவே முடியாது என்று அதற்கும் கணவன் கத்தினான்.
வாழ்வில் பாராட்டு
அடுத்தவரின் பாராட்டினை எதிர்பாராமல் செய்வதே உயர்ந்த பணி என்பது உண்மைதான். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் சின்னச் சின்னப்பாராட்டுகளும், நன்றிகளும் தேவைப்படவே செய்கின்றன. அடுத்தவர் நம்மைப் பாராட்டும்போது மகிழ்ச்சியை நாம், கண்டிப்பாக அந்த மகிழ்ச்சியைஅடுத்தவருக்குத்
தரக் கடமைப்பட்டுள்ளோம்.
தன்னை பாராட்ட
தன்னைப் பிறர் பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் மட்டுமே சிலர் ஒவ்வொரு காரியத்தையும் செய்து கொண்டிருப்பார்கள். பேச ஆரம்பித்தால் தன்னைப்பற்றியும், தன் திறமையைப் பற்றியும், தனது சாதனையைப் பற்றியுமே அளந்து கொண்டிருப்பார்கள். ஒரு மணி நேரம் கழித்து, ரொம்ப நேரம் நானே பேசிக்கிட்டு இருக்கேன். சரி நீங்கள் எதும் பேசவில்லையே, சொல்லுங்கள். என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்பார்கள்.
இவர்களையெல்லாம் உங்கள் மனதில் ஒரு ஒரத்தில் கட்டம் கட்டி வைத்துவிடுங்கள். அவர்களைப் பற்றி இங்கே பேச்சேயில்லை.
சின்ன சின்ன பாராட்டு
தகுதியானவர்களுக்குச் சொல்லும் சின்ன சின்னப்பாராட்டுகள், அவர்களின் தகுதியை இன்னும் மேம்படுத்தும்.
குடிக்கத் தண்ணீர் கொண்டுவந்தவருக்குச் சொல்லும் நன்றியிலிருந்து ஓட்டலில் சாப்பிடுவதற்கு உடனே கொண்டு வந்த பணியாளருக்குச் சொல்லும் நன்றிவரை, இந்த ரகம் பாராட்டு தான்.
உள்ளே நுழையக்கதவைத் திறந்துவிடும் பியூனுக்குச் சொல்லும் நன்றி, கேட்டவுடன் விவரங்களை எடுத்துச் சொல்லும் உதவியாளருக்குச் சொல்லும் பாராட்டு, சொன்ன வேலையைத் திறமையுடன் முடித்த பணியாளருக்குச் சொல்லும் பாராட்டு, உதவும் நண்பனுக்கு மனமுவந்து சொல்லும்நன்றி. இவையெல்லாம் மந்திர சக்தி வாய்ந்தவை.
தகுதியானவர்களைப் பாராட்ட வேண்டிய தன் அவசியத்தைப் பாரதி"வீரர்களைப் பாராட்டாத நாட்டில் வீரர்கள் உருவாக வாய்ப்பில்லை" என பாராட்டுத்தேவை என்றார்.
பாராட்டு தரும் சக்தி
உண்மையான பாராட்டு மிகப்பெரிய உந்து சக்தி. பாராட்டுபவர், பாராட்டப்படுபவர் இருவரிடமும் உண்மை இருக்க வேண்டும். பாராட்டில் பொய் இருக்க கூடாது. யாரை எப்பொழுது பாராட்ட வேண்டுமோ அப்போது பாராட்டுவது தான் சிறந்தது. நான் சொல்வதைச்சரியா? எனப்பார்க்க தொடுங்கRead more
முகத்துக்கு நேராகப் புகழ்ந்து தள்ளும் நண்பனை நம்ப கூடாது. உண்மையான நட்பு, அடுத்தவரிடம்தான் பாராட்டிப் பேசும்.
யார் யாரை பாராட்ட வேண்டும்
ஆசிரியரிடம் எப்போதும் நன்றி பாராட்ட வேண்டும். அன்புள்ள மனைவியிடம் தனித்திருக்கும்போது பாராட்டிப் பேச வேண்டும். தனது பிள்ளைகளைப் பற்றிப்பெருமை, மனதில் வைத்துப் பாராட்ட வேண்டும். பணியாளரை வேலை முடிந்தவுடன் பாராட்ட வேண்டும்.
இந்தப்பட்டியலைத் தருவது நானல்ல, ஔவையார் தான். இதோ ஔவையின் பாட்டு வரிகள்.
நேசனைக் காணாவிடத்தில்
நெஞ்சாரவே துதித்தல்,
ஆசானை எவ்விடத்தும் அப்படியே -
வாச மனையாளைப் பஞ்சணையில், மைந்தர் தம்மை நெஞ்சில்,
வினையாளை வேலைமுடி வில்!
பாராட்டுவதற்குச் சொற்கள் வேண்டுமென்ப தில்லை. புன்னகையில் கூடப்பாராட்டலாம். அதற்கு இதயத்திலிருந்து சிரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பாராட்டு புத்தகம் தள்ளுபடி விலையில்
இது போன்ற பல அரியக்கருத்துகள் நிறைந்தப்புத்தகம் கீழே உள்ளது. https://amzn.to/3gMBZZ4இதைத்தொட்டுப் படிக்கலாம். பிடித்தால் வாங்கிக் கொள்ளுங்கள்.
இந்த புத்தகத்தின் மீது தொட்டால் புத்தகம் பற்றியக்கருத்துகள் வரும். தேவைப்பட்டால் வாங்கலாம். இல்லையென்றால் வெளியே வந்து விடலாம்.
No comments:
Post a Comment
Super useful ideas thank you reading