H

Thursday 9 July 2020

Time management நேர மேலாண்மை

நேர மேலாண்மை Time management 

     நேரம் Time 

மனிதர்கள் பலர் வாழ்க்கையில் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவது இல்லை. யாரெல்லாம் சரியாக நேரத்தைப் பயன்படுத்து கிறார்களோ அவர்கள் வாழ்வில் ஜெயிக்கலாம். பணம், பொருள்கள் போன்றவற்றைச் சேமித்து வைக்க முடியும். ஆனால் நேரத்தைச்சேமிக்க முடியாது. நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் இன்று July 2020 திரும்ப வராது. போனநேரம் போனதுதான். "காலம் பொன் போன்றது" 'ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்குமா?' போன்ற பல பழமொழிகள்  காலத்தின் அருமையை கூறுகிறது.

       நேரம் என்பது பிரதமந்திரி முதல் பிச்சைக்காரன் வரை அனைவருக்கும் சரிசமமாக  வழங்கப்பட்டுள்ள சொத்து. நேர மேலாண்மை  (Time management) பற்றி விளக்கமாகப் படிக்கலாம்.

Time management is self management:

      நேரம் ஆதியும் அந்தமும் இல்லாதது. அதாவது ஆரம்பமும் முடிவும் இல்லாதது. நேரத்தை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது. ஒவ்வொருவரும் நேரத்தை எப்படி கையாளுகின்றனர் என்பதைத்தான்  self management என்று சொல்லலாம்.

              ஒரு நாளைக்கு  24 மணி நேரம் சமமாக அனைவருக்கும் இருந்தாலும் அந்த நேரத்தை எப்படி உபயோகப்படுத்துகிறார்கள் என்பதில் தான் ஒருவரின் முன்னேற்றம் அடங்கியுள்ளது. 
           நேரம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. நேரம் அழுகி வீணாகும் பொருள். தொடர்ந்து  அழுகிக்கொண்டே இருக்கும்.ஒவ்வொரு மணித்துளியும் நாம்  ஒன்று செய்யாமல் வீணாகியிருந்தால் அது கடந்த காலமாகிவிடும்.

நேர மேலாண்மையின் முக்கியத்துவம்: Importance of time management 

          நேரத்தைச் சரியாக மேலாண்மை செய்பவர்கள் தான் இன்று உலகில் பணக்காரர்களாகவும்.சாதனையாளர்களாகவும்
உள்ளனர். பலர் தம் இளம்பருவத்தில் நேரத்தை வீணாக்கிப்பிற்காலத்தில் கஷ்டப்பட்டு  உழைத்து வருகிறார்.

    இளம்பருவத்தில் நேரத்தை ஒதுக்கித்திட்டமிட்டு உழைப்பவர்கள் பிறர் உதவியின்றி பிற்காலத்தில் வாழலாம். இதற்கு நம்வீட்டில் சின்னப்பிள்ளையில் கஷ்டப்பட்டு படித்தால் பிற்காலத்தில் சந்தோஷமாக இஷ்டப்படி வாழலாம் என்று    சொல்லவார்கள். இளமையில் நேரத்தை வீணாக்கி முதுமையில் வேதனைப்பட்டு வாழ்பவர்கள் நம் நாட்டில் கோடிக்கணக்கில் உள்ளனர். நீங்கள் அந்தப் பட்டியலில் வாராமல் இருக்க சரியாக நேரத்தை மேலாண்மை  (time management) செய்யக்கற்றுக்கொள்ளுங்கள். இதோ நேர மேலாண்மைப்படிகள். 

நேரமேலாண்மைப்படிகள்:(timemanagement steps)

      நம்வீட்டில் பொருள்களை அங்கே இங்கே என்று வைத்து விட்டுத்தேவையான நேரத்தில் தேடி அலைந்து திரிந்து நேரத்தை வீணடிக்காமல் பொருள்களை அதற்குரிய இடத்தில் வைத்துப்பழகுங்கள். இதனால் நேரமும் உடல் உழைப்பும் மிச்சமாகும்.

TIME MANAGEMENT STEP 1

            சிலர் வீடுகளில் வெளியேச்சென்று வந்தஉடன் காலணிகளைக்(செப்பல்ஸ்) கழற்றி விட்டு வெளியே போட்டுவிடுவார். மறுநாள் காலை வெளியில் செல்லும்போது தேடி அலைவார்கள். இரவில் காலணிகளை நாய் தூக்கிச்சென்றிருக்கும். சின்னப்பிள்ளைகள் விளையாட்டாகப்போட்டுக்கொண்டு  தூரத்தில் போட்டுவிடுவார்கள். இதைத் தவிர்க்கக் காலணிகளை சிறிது உயரமான இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இப்படி பொருள்களைப் பராமரிப்பது house keeping என்று சொல்லவார்கள். 
        இதே போல்தான் அலுவலகத்தில் கோப்புகள், பதிவேடுகள் நிரம்பி வழியும். சரியான இடத்தில் பதிவேடுகள் வைக்க வில்லை என்றால் பதிவேடுகள் தேவையான போதுதேடி அலைய வேண்டும். இதுவே இன்றையச் சூழலில் வீட்டிலும், அலுவலகத்திலும்  80 சதவீத பிரச்சனையாக உள்ளது. பதிவேடுகளைப் பெயர் பட்டியல் ஒட்டிப்பராமரிக்க வேண்டும். இதனால் நேரம் மிச்சமாகும். இது time management step one.

             TIME MANAGEMENT STEP 2

              இன்று என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் எனப்பட்டியல் தயார் செய்ய வேண்டும். இந்தப்பட்டியலை நேற்று செய்ய வேண்டும். நேற்று பகல் நேரத்தில் செய்ய முடியாது. செய்யச்சரியான நேரம் எது? நேற்று இரவு தான். அதாவது நாளைக்கு செய்யக்கூடிய வேலையை இன்று இரவு தூங்கச்செல்லும் முன் பட்டியல் தயார் செய்துவிட வேண்டும். அதில் முதலில் செய்யும் வேலை எது என்று குறித்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் வேலையை விரைவில் செய்து முடிக்க முடியும். இது Time management செய்யும் வழி இரண்டு.

TIME MANAGEMENT STEP 3

            தொலைபேசி மற்றும் அலைபேசி என்பது மிக மிக அரிய வரப்பிரசாதம். ஆனாலும் பலருடைய நேரத்தைக்கொள்ளை கொண்டுச்சென்றவிடுகிறது. போன்வந்தவுடன் வணக்கம் சொல்லி நேராக விஷயத்தைச் சொல்ல வேண்டும்.பலர் ஊர்க்கதை, உலக கதை என மணிக்கணக்கில் பேசி நேரத்தை வீண் அடிப்பார்கள். பலர் போன்வந்தவுடன் குறைந்தது அரை மணி நேரமாவது பேசுவார். நீங்கள் இப்படிப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்து விட வேண்டாம். சொல்லவந்த விஷயத்தைச் சுருக்கமாகச் சொல்லுங்க. இப்படியும்  நேரத்தை மிச்சப்படுத்தலாம். இது நேர மேலாண்மையின் மூன்றாவது படி.
       Time management பற்றிப்பல தகவல்கள் படிக்க இங்குச்செல்லலாம். 

             TIME MANAGEMENT STEP 4

          பல வீடுகளில் இன்று டிவி காலையில் எழுந்ததும் போட்டுவிடுவார். அது அப்படியே இரவு தூங்கும் வரை இயங்கிக்கொண்டு இருக்கும். இன்றைய மிகப்பெரிய நேர விழுங்கி டிவி தான். இன்று கேபிள் டிவி அல்லது டிஷ் டிவி வைத்து இல்லாதவர்கள் வீடு மிகக் குறைந்த அளவே இருக்கும். டிவியில் ஒளிபரப்பாகும் நாடகம், படம் என மாறிமாறி பார்த்து நேரத்தை வீணாக்கிக்கொண்டு இருக்கிறோம்.
             இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் படிப்பில் நாட்டம் குறைகிறது. Home work செய்ய நேரமில்லை. போட்டித்தேர்வு எழுதுபவர்கள் வெற்றி பெற்று வேலைக்குச்செல்ல முடியாமல் போகிறது. டிவியில் ஒளிபரப்பாகும் நாடகத்தைப் பார்த்துக்
கொண்டே வீட்டு வேலைகளைச் சரிவரச் செய்யவில்லை என்று கணவன் மனைவிக்குள் சண்டை. இப்படி தொலைக்காட்சி தொல்லைக் காட்சியாக மாறி நம் நேரத்தைக் கொள்ளை கொண்டுச்சென்றுவிடுகிறது. டிவி குறிப்பிட்ட நேரத்தில் பார்த்து விட்டுப் பிறகு மற்ற வேலைகளைச் செய்யப்பழகிக் கொள்ளுங்கள். இது time management நான்காவது படி. 

         TIME MANAGEMENT STEP 5

            காலையில்  வேலைக்குச் செல்லும்போது அவசரமாகக் கிளம்பி ஒடுபவர்கள் பலர் இன்று உள்ளனர். இதனால் பணிக்கு வேகமாகச் செல்ல வேண்டும் என்று விபத்தும் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க முதல் நாள்  இரவே நாளை அணியப்போகும் ஆடைகள், கொண்டுச்செல்லும் பொருள்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் பதற்றமின்றி வேகமாக வேலைக்குச் செல்லலாம். இது time management ஐந்தாவது படி. 


TIME MANAGEMENT STEP 6

                    இன்று மனிதன் மிக அதிக அளவில் நேரத்தை வீண் அடிப்பது ஒன்று தூக்கம். தூக்கம் மனிதனுக்கு மிகத் தேவையான ஒன்றுதான். ஆனால் அதுவே அதிகமாகி பகலில் தூங்குவது, இரவிலும் தூங்குவது எனத் தூங்கிக் கொண்டே இருந்தால் இளமைப் பருவம் வீணாகிவிடும். மாணவப்பருவத்தில் தினமும் ஏழு மணி நேரத்திற்குமேல்  தூங்கினால் முன்னேற முடியாது. தூக்கம் பற்றிய பாடலைக் கேட்டு இருப்பீர்கள். ஆகவே தூக்கத்தைப்பற்றித்தெரிந்து கொள்ள இதைத் தொட்டுப்படிங்கள். TOUCH it Read more
தூங்குவது சரியான அளவில் இருந்தால் நேரத்தை மிச்சப்படுத்தலாம். இது Time management ஆறாவது படி.

TIME MANAGEMENT தள்ளுபடி விலையில் புத்தகம் 

Time management புத்தகம் வடிவில் படிக்கப் பல அற்புதமானக் கருத்துக்கள் உள்ளன. இதைத் தொட்டுப்படியுங்கள் தள்ளுபடி விலையில் offer sale வாங்கி மகிழுங்கள். 

            
                           

         இன்று நம் நேரம் எப்படி எல்லாம் கழிந்தது? எவ்வளவு நேரத்தை வீணாக்கினோம். 
                நாளை நேரத்தை வீணாக்க கூடாது என்று சிந்தியுங்கள். வாழ்வை வளமாக்குங்கள். 

No comments:

Post a Comment

Super useful ideas thank you reading