H

Sunday 9 August 2020

சிறந்த ஆசிரியராகத் திகழ வேண்டுமா? /best teacher improve habits

சிறந்த ஆசிரியராகத்  திகழ வேண்டுமா?

சிறந்த ஆசிரியர் 

        ஆசிரியர், சிறந்த ஆசிரியர் எனப் பெயர் பெறுவது மிக எளிமை. நம் நாடு பல்வேறு சிறந்த ஆசிரியர்கள் கொண்டு உள்ளது. சிறந்த ஆசிரியர் என்று ஊர்மக்கள் சொல்ல வேண்டியதில்லை.
          நம்மிடம் கல்வி பயிலும் மாணவச் செல்வங்கள் இந்த ஆசிரியர் சிறந்தவர் என்று சொன்னால் போனது. நீங்கள் சிறந்த ஆசிரியராகச் சிறந்த சில குறிப்புகள் பார்க்கலாம். 

ஆசிரியர் ஆடை

       புத்தம்புது மலரினைப்போல் எப்போதும் தூய்மையான ஆடையில் பள்ளிக்குச் செல்லுங்கள். 
    ஆடைகள் அணியும்போது ஆடம்பரமான ஆடைகள் அணிந்து பள்ளிக்குச் செல்வதை தவிர்த்து விடுங்கள். இல்லையென்றால் உங்கள் ஆடையின் மீது மாணவர்களுக்குக் கவனம் இருக்குமே தவிர, படிப்பு கவனம் குறைய வாய்ப்புள்ளது.
    உங்கள் ஆடையைப் பார்க்கும் அக்கிராமத்தில் உள்ள மக்கள் ஆசிரியர் சமுதாயத்தின் மீது பொறமை ஏற்படும். 
   ஆசிரியர்கள் விலையுயர்ந்த தங்க நகைகள், அணிகலன்கள் அணிந்துக் கொண்டு பள்ளிக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். 
  அரசு சொன்ன வழிகாட்டின் படி ஜீன்ஸ் பேண்ட், டி-சார்ட் போன்ற ஆடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். 

காலந்தவறாமை

     ஒவ்வொரு ஆசிரியரும் காலைக் கதிரவனைப் போல், காலம் தவறாமல் பள்ளிக்குச் செல்ல வேண்டும். 
     அவசியமானத் தேவைகளுக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு பள்ளி மற்ற வேலை நாட்களில் பள்ளிக்குச் செல்ல வேண்டும். 
    நீங்கள் தொடர்ந்துப் பள்ளிக்குச் செல்லும்போது உங்கள் வகுப்பில் பயிலும் மாணவர்கள் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
    பள்ளிக்குச் சரியான நேரத்திற்குச் சென்றால் மட்டும் போதாது. உங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பாட வேளையில் சரியாக வகுப்புக்குள் நுழைய வேண்டும். 
     வாரப்பாடத்திட்டம், மாத பாடத்திட்டத்தில் முடிக்கப்பட வேண்டிய பாடங்களைக் கற்றுத்தர முயற்சிக்க வேண்டும். நூறு சதவீதம் முடியவில்லை என்றாலும் எண்பது சதவீதம் சென்று அடைய முயற்சி செய்ய வேண்டும். 
    இவ்வாறு பாடங்களைச்சரியான நேரத்தில் கற்றுத்தரும்போது நீங்கள் கண்டிப்பாகச் சிறந்த ஆசிரியராக மாணவர்கள் மத்தியில் திகழுவீர்கள். நேர மேலாண்மை பற்றிப் படிக்க Read more

சக ஆசிரியர்கள் உடன் 

        நீங்கள் ஆசிரியர் பணியில் சேர்ந்த நாள் முதல் ஒவ்வொரு நாளும் முதன் முறையாகத் தலைமை ஆசிரியரையும், உடன் ஆசிரியர்களையும் சந்திக்கும்போது வணக்கம் சொல்லுங்கள். இந்தச் செயல் உங்கள்மீது பிறருக்கு  மரியாதையைக் கொடுக்க வைக்கும். 
      நீங்கள் அந்தப் பள்ளியில் வயதிலும், பணி அனுபவத்திலும் இளம் ஆசிரியர் எனில் மூத்த ஆசிரியர்களுக்குத் தகுந்த மரியாதை செலுத்த வேண்டும். 
     அந்தப் பள்ளியில் பணிபுரிந்து வரும் அலுவலகம் உதவியாளர், சத்துணவு ஊழியர்கள், இதரப் பணியாளர் என அனைவருக்கும் மரியாதை செலுத்துங்கள். 
      ஒரு ஆசிரியரைப் பற்றி இன்னொரு ஆசிரியரிடம் பேச வேண்டாம். இது பல பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவும்.   

வகுப்பறையில் ஆசிரியர் செயல்

          வகுப்பறைக்குச் செல்லும் வழியில் மாணவர்கள் வணக்கம் சொன்னால் நீங்களும் வணக்கம் சொல்லுங்கள். 
        வகுப்பில் நுழையும் முன்பே அன்றாடம் நடத்த வேண்டிய பாடத்தை நன்றாகத் தயார் செய்து கொண்டு வகுப்பறைக்குச்செல்லுங்கள். 
        வகுப்பறையில் நுழைந்தவுடன் காலை வணக்கம் சொல்லுங்கள். மாணவர்கள் எழுந்து சொல்லப் பழக்க வேண்டும். 
        வகுப்பிற்குள் சென்றவுடன் வகுப்பறை தூய்மையாகவும், இருக்கைகள் வரிசையாக உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் மாணவர்கள் வரிசையாக நிறுத்தி உரிய இடத்தில் அமர வையுங்கள்.
      வகுப்பறையில் உள்ள குப்பைகளை அகற்ற உரிய பணியாளரை அழைத்துக் குப்பைகளை அகற்ற சொல்லுங்கள். 
      மாணவர்கள் அணிந்து வந்த காலணிகளை வரிசையாக வைக்க மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். 
       பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறை தூய்மையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இதைப் பார்த்தவுடன் பள்ளிக்கு வரும் மக்கள் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் பள்ளியைப் பற்றிய நல்லெண்ணம் தோன்றும். நீங்களும் சிறந்த ஆசிரியர் எனப் பெயர் எளிதில் பெறலாம். 
       வகுப்பறை நுழைந்தவுடன் கதவு, ஜன்னல்கள் ஆகியவை மூடியிருந்தால் அவற்றை மாணவர்களைத் திறந்து வைக்கச் சொல்லுங்கள். வகுப்பறை எப்பொழுதும் காற்றோட்டத்துடனும், வெளிச்சத்துடனும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். 
       வகுப்பில் அனைவராலும் விரும்பப்படும் நல்ல மாணவனைக் கண்டறிந்து அம்மாணவனை வகுப்புத் தலைவன்  (class leader) ஆக்குங்கள். 

   வகுப்பறையில் கற்பித்தல் செயல் 

          தினமும் ஒரு புதிய செய்தியை மாணவர்களிடம் சொல்லுங்கள். இந்தச் செய்தி தொலைக்காட்சி, செய்தித்தாள் இடம்பெற்ற கல்வித் தொடர்பான செய்தியாக இருந்தால் சிறப்பு. 
         காலை வந்தவுடன் கரும்பலகையின் மேற்பகுதியில் பதிவு, வருகை, நாள், கிழமை எழுதிபின் பொன்மொழி ஒன்றை எழுதுங்கள்.
     தினமும் சிந்தனைக்கு விருந்தாகும் நல்ல பழமொழி ஒன்றை எழுதும் பொறுப்பை மாணவத்தலைவனுக்கு அளியுங்கள்.
       பார்வைக் குறைபாடு அல்லது கேட்கும் திறன் குறைபாடுள்ள மாணவரை வகுப்பின் முதல் வரிசையில் அமர்ந்து பாடத்தைக் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யுங்கள்.
         பாடம் நடத்தும்போது குறும்புச் செய்யும் மாணவரை வகுப்பின் முன் வரிசையில் உட்காரச் செய்யுங்கள்.
       நாள்தோறும் வகுப்பிற்குள் நுழையும்போது சிறந்த ஆசிரியராகத் திகழ வேண்டும் என்ற ஆர்வத்தோடும், துடிப்போடும் காலடி எடுத்து வையுங்கள். அதன்படியே மாணவர்களுக்குச் சிறப்பாகக் கற்றுக் கொடுங்கள்.
      இதில் சொல்லப் பட்டுள்ள பல செய்திகள் பழைய முறை. இன்றைய நடைமுறை பல கருத்துகளை அடுத்தப் பதிவில் படிக்கலாம். இந்த பதிவு நீண்டு செல்லும் என்பதால் புதிய கருத்து இடம் பெற வில்லை. இதில் உள்ள பெரும்பாலான கருத்தை உங்கள் பணியில் பயன்படுத்தி வருவீர்கள். உங்களுக்குத் தெரிந்த கருத்தை comments பதிவு செய்யுங்கள். அனைத்து வாசகர்களுக்கும் பயன்படும். 

No comments:

Post a Comment

Super useful ideas thank you reading