H

Wednesday, 7 April 2021

தேர்தல் பணியைச் சிறப்பாக செய்வது எப்படி? / Election duty training

 தேர்தல் மிகவும் முக்கியமான பணி. இப்பணி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப் படுகிறார்கள்.தேர்தல் பணிக்கு செல்பவர்களுக்கு சில முக்கிய குறிப்புகள். இதை எவ்வாறு செய்வது என்று தெரிந்து கொண்டால் தேர்தல் பணியைச் சிறப்பாக செய்து முடிக்கலாம். 


வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பணி (PRO duty)

1-Pro dairy

2-form17c.

3- 16 points abserver report  sheet.

4- visiter sheet.

5- pledge commencement of poll and after close the poll.

 6- Mock poll certificate.  

         மேற்கண்ட ஆறு படிவங்களை மிகவும் கவனமாக  வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பூர்த்தி செய்யவும்.

வாக்குச் சாவடி அலுவலர் 1 - PO 1 duty

 1- elector identify is very important. தேர்தலில் வாக்களிக்க வரும் வாக்காளர் கீழ் கண்ட அடையாள அட்டை ஏதாவது ஒன்று எடுத்து வந்தால் மட்டுமே வாக்களிக்க விட வேண்டும். பூத் சிலிப் மட்டும் கொண்டு வந்தால் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது. 

      ஓட்டுனர் உரிமம் அட்டை,
      வாக்காளர் அடையாள அட்டை, 
       ஆதார் அட்டை, 
      வங்கி கணக்கு புத்தகம்,
      பாஸ்போர்ட், 
      பான் கார்டு,
      ஊரக வேலைவாய்ப்பு அட்டை, 
      அரசு ஊழியர்கள் அடையாள அட்டை, 
       இந்திய அரசின் பணியாளர்கள் நல அட்டை, 

2.Marked copy of elecoral roll. ஆண்வாக்காளராக இருந்தால் வரிசை எண்ணை நீல மை பேனாவால்  வட்டமிடவேண்டும். பெயரை அடிகோடிடவேண்டும்

3-பெண் வாக்காளராக இருந்தால் சிகப்பு மை பேனாவால் வரிசை எண்ணை மட்டும் சுழிக்க வேண்டும்            

வாக்குச் சாவடி அலுவலர் 2 பணிகள் (PO 2 duty)

 1- 17-A register.

            வாக்காளரின் வரிசை எண்ணை குறித்து 2-அடுத்த கட்டத்தில் Ep என்று எழுதி கடைசி நான்கு நம்பரை குறிக்க வேண்டும். அவர்கள் எடுத்து வந்த அடையாள அட்டை சுருக்க குறிப்பில் எழுத வேண்டும். 

3.வாக்காளரிடம் கையொப்பம் பெறவேண்டும்.

4- Voter slip இல் வரிசை எண்ணை குறித்து வாக்காளரின் இடதுகை  ஆள் காட்டி விரலில் அழியா மை இடவேண்டும்.

          Voter slip யை வாக்காளரிடம் கொடுக்கவும்.   

வாக்குச் சாவடி அலுவலர் 3 பணிகள்  (PO 3 duty)

       வாக்காளர் கொண்டுவரும் Voter slip யை பெற்றுக்கொண்டு Control unit  உள்ள Ballot பட்டனை அழுத்தவும். Voter slip ஐம்பது எண்ணிக்கை கொண்ட கட்டுகளாக கட்ட வேண்டும். 

    பொதுவான குறிப்புகள் General instructions.   

           49 0 என்றால் வாக்காளர் கையில் மை வைத்தபிறகு யாருக்கும் வாக்களிமாட்டேன் என்று வாக்காளர் அறிவித்தால் வாக்காளரின்  பெயருக்கு  நேரில் உள்ள Remarks காலத்தில் 49 -0 என்று குறிப்பிடவேண்டும்   refused the Vote என்று எழுத வேண்டும்.             

           49-M என்றால் வாக்களருக்கு மை வைத்தபிறகு Before  enterd the vote he declared the symbol or candidate name சொன்னால் அந்தவாக்காளரை வாக்கு பதிவு எந்திரத்தில் வாக்களிக்க PRO வாக்குச் சாவடி தலைமை அலுவலர்  அனுமதிக்ககூடாது. இந்நேர்வில் 17-A register ல் வாக்காளர் கையொப்பம் அடுத்து Remarks காலத்தில் 49-M என்று குறிப்பிடவேண்டும்.

          49 MA என்றால் வாக்காளர் வாக்களித்தபின் அந்த வாக்காளர் நான் வாக்களித்த Symbol பதிலாக Vvpat ல் வேறு ஒரு Symbol பதிவாகிறது என்று  தெரிவித்தாள் இந்நேர்வில் வாக்குச் சாவடி தலைமை அலுவலர்  PRO அந்த வாக்காளரிடம் இதுவரை வாக்களித்தவர்கள் யாரும் இவ்வாறு தெரிவிக்கவில்லை. நீங்கள் மட்டுமே  தெரிவிக்கீறீர்கள் நான் உங்களுக்கு மறுபடியும் Testing vote வழங்குகிறேன். அதற்கு முன்பு நீங்க தெரிவித்த கருத்து தவறாக இருந்தால் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று எச்சரித்து உள்ளே இருக்கும் Polling agent மற்றும்  வெளியே இருக்கும் காவல்துறை சார்ந்தவரை உள்ளே அழைத்து அந்த நபரை மீண்டும் வாக்களிக்க செய்யவேண்டும்.                                                 இந்நேர்வில் 17-A registerல் மீண்டும் அந்த நபரின் வரிசை எண் Epic எண் குறித்து கையொப்பம் பெறவேண்டு Remarks காலத்தில் Testing vote என்று குறிப்பிடவேண்டும் இதற்கு முன்பாக Pro 49 MA படிவத்தில் அவருடைய பெயர் த/பெ. மற்றும் Part no,serial no, serial no in 17 A register of voters குறித்து அந்த வாக்காளரிடம் கையொப்பம் பெறவேண்டும்.மறு வாக்கு பதிவின் போது வாக்காளர் தெரிவித்தது நிருபனம் ஆகவில்லை எனில் அவரை உடனடியாக காவல்துறையிடம் ஒப்படைக்கவேண்டும். அவர் சொல்வது சரிதான் என்றால் vvpat மாற்ற வேண்டும்.

1.Tendered votes ஆய்வுக்குரிய வாக்குகள்.

2.Challenged votes எதிர்க்கப்பட்ட வாக்குகள்.

3.Test votes.

4.proxy votes

    மேற்கண்ட நிகழ்வுகள் Maximum நடக்கவாய்ப்பில்லை இருந்த போதிலும் ELECTION RULES தெரிந்து  வைத்திருப்பது நமக்கு மிகவும் அவசியம்.


                         குறிப்பு

        தேர்தல் முடிந்தவுடன் CONTROL UNIT OFF செய்யவேண்டும். VVPAT ல் BATTERY ஐ கழற்றி விட வேண்டும். மறவாதீர்கள்.

தேர்தல் பணிக்கு செல்லும்போது தேர்தல் பணி அலுவலர்கள் எடுத்துச் செல்ல வேண்டியவை:

        உங்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் பணி ஆணை

           ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை நகல்கள் (Optional)

            ATM Card, பணியிடம் சார்ந்த அடையாள அட்டை

             டார்ச் லைட்

             செல்போன் சார்ஜர்

          மாற்று உடை அனைத்திலும் 1 செட்

லுங்கி, துண்டுகள் 2, போர்வை 1

          கொசுவர்த்தி சுருள்/ ஆல்அவுட்/ Odomos cream, தீப்பெட்டி

           பேஸ்ட், டூத்பிரஷ், கண்ணாடி, சீப்பு, பவுடர், எண்ணை, ஷாம்பு, சோப்பு

            தேர்தல் நாளான 6ஆம் தேதி இரவு வரை எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் (Optional)

            பிஸ்கட் பாக்கெட், முறுக்கு உள்ளிட்ட சில நொறுக்கு தீனிகள், குளுக்கோஸ் (சர்க்கரை அதிகமாகவோ, குறைவாகவோ  உள்ளவர்களுக்கு அவசரத்துக்கு உதவக்கூடும்)

          ஒரு லிட்டர் அல்லது ஒன்றரை லிட்டர் காலி தண்ணீர் பாட்டில் 1 (குடிநீர் பிடித்து வைத்து பயன்படுத்தி கொள்ளலாம்)

         மாஸ்க், சானிடைசர், கையுறை, hand wash (பணி செய்யும் இடத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது எனினும் நம்மிடம் ஒரு செட் வைத்திருத்தல் நலம்)

          மேற்கண்டவை தவிர பொதுவான தலைவலி மாத்திரை, காய்ச்சல் மாத்திரை, வயிற்றுப் பிரச்சினை தொடர்பான மாத்திரைகள் அவசர பயன்பாட்டிற்காக ஒன்றிரண்டு கொண்டு செல்வது நல்லது.

             ஒருநாள் பணிக்கு இத்தனை தேவையா என்ற கேள்வி எழுந்தாலும்...

             இவைகளெல்லாம் இருந்தால் எப்படிப்பட்ட அசௌகரியமான சூழ்நிலைகளையும்...

                மற்றவர்களை எதிர்பார்க்காமல் நாமே சமாளித்துக் கொள்ளலாம்.

அது மட்டுமின்றி...

           ஒரு வாக்குச் சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஒவ்வொருவரும்...

           தங்களுக்கு ஒதுக்கப்பட்ட  பணிகளைத் தெளிவாக தெரிந்து கொள்வதுடன்...

            மற்ற அனைவரது பணிகளும்  என்னென்ன என்பதையும்...

          இயந்திரங்களை இணைப்பது.. இயக்குவது, சீல் செய்வது உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளையும் ஓரளவேனும் அறிந்து வைத்திருப்பது.

            குழுச் செயல்பாடு சிறப்புடன் அமைய  மிக்க பயனுள்ளதாய் அமையும்

                குறிப்பு: யாரிடமும் அரசியல் பேசாமல் இருப்பது நலம்

 ஒரு சிறிய விழிப்புணர்வு.

          அரசியல்கத்துகிலாம் வாங்க. 

                இனி வரும் நாட்களில் தேர்தல் முன்புவரை இரவு நேரங்களில் குறிப்பிட்ட நேரத்தில் அடிக்கடி மின்சாரம் தடைபடும் நம்ம மக்கள்தானேன்னு பேச்சு கொடுத்திராதீங்கள். 

                    வெளியே செல்லும் போது நம்ம முன்னோடிகளை பெரும்பாலும் தவிர்த்துவிடுங்கள். 

                          மிக கவனம் நேரிலேயே பேசுங்கள்.போனை தவிர்த்துவிடுங்கள் உலக உத்தமர்கள் நிறையநபர்கள் நாம் எதார்த்மாக பேசுவதைகூட ரெக்கார்டிங் செய்கிறார்கள். 

          தேவையான அளவுபணத்தை மட்டும் கையில் வைத்திருங்கள். 

           நமது தேர்தல் பணியில் கவனமாக இருங்கள்  அசால்ட் வேண்டாம். 

            சட்டவிதிகளை முறையாக பின்பற்றுங்கள். 

            ஞாயிறு மாலை7மணிவரை கருத்துகளைபகிரலாம் அதற்கு பின் அட்மினுக்கு ஒத்துழைப்பது நம் கடமை.        

        அவசரத்திற்கு கூட அரசியல்வாதிகளின் வாகனத்தை பயன்படுத்தாதீர்கள். 

       நம்முடன் தேர்தல்பணியாற்றுபவர்களிடம் ஏற்றதாழ்வு பார்க்கவேண்டாம் அவரும் நம் சகபணியாளரே. 

             தேர்தல்பணியில் வாகனம் இயக்கும்போது கூடுதல்கவனம் செலுத்தவும். 

          தங்களது தேர்தல் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!

           எவ்வித மனக்கசப்புக்கும் ஆளாகாமல் குழு ஒற்றுமையுடன் தேர்தல் பணி புரிவோம். தேர்தல் பணியை 100% எவ்வித இடையூறுமின்றி செய்வோம்  

           நல்வாழ்த்துக்கள். பணிசிறக்கட்டும் எப்பொழுதும் இறுதி வெற்றி நமதே!! 

வாழ்க அரசுஊழியர் ஆசிரியர் ஒற்றுமை. 

Election duty arrangement covers tn assembly and Loksaba / தேர்தல் பணியில் படிவங்கள் உறைகள் அடுக்கி வைப்பது எப்படி?

 தேர்தல் பணியில் படிவங்கள் உறைகள் அடுக்கி வைப்பது எப்படி?

        தேர்தல் பணியைச் சிறப்பாக செய்வது எப்படி என்றால் முதலில் ஓட்டு பதிவு இயந்திரம் சரியான முறையில் இணைக்க தெரிந்து கொள்ள வேண்டும். 
pandiarajan1988143blogspot.com

          அதற்கு அடுத்த படியாக தேர்தல் பணியில் உள்ள படிவங்கள் பூர்த்தி செய்ய தெரிந்து கொள்ள வேண்டும். படிவம் பூர்த்தி செய்தல் மற்றும் அந்த படிவத்தை உரிய உறையின் உள்ளே வைக்க தெரிந்து கொள்ள வேண்டும். 
            தேர்தல் ஆணையம் வழங்கப்படும் பயிற்சிகள்  அடிப்படையில் மட்டும் தேர்தல் பணியில் உள்ள மண்டல அலுவலர்கள் தரப்பட்ட தகவல் அடிப்படையில் மட்டுமே தேர்தல் பணியில் படிவங்கள் உறைகள் அடுக்கி வைப்பது பற்றி படிக்கலாம். 

மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டிய உறைகள் 

         ஓட்டு பதிவு இயந்திரங்கள் (EVM, CONTROL UNIT, VVPAT) Address tag வைத்து ஒப்படைக்க வேண்டும். 

     வெள்ளை நிற உறைகள் (White cover)

    படிவம் 17c மூன்று செட் 
   வாக்குச்சாவடி தலைமை அலுவலர் அறிக்கை PO diary
   வாக்குச் சாவடி தலைமை அலுவலர் உறுதி மொழிகள். 
    பார்வையாளர்கள் பதிவேடு, 16 அம்ச மைக்ரோ அப்சர்வர் visit sheet 
 இவற்றை ஒட்டாமல் மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். 

பச்சை நிற உறை

     வாக்காளர் குறியீட்டு நகல் (mark copy)
    Voters slip 
     வாக்காளர் பதிவேடு 17A Register 
     பயன் படுத்தப்பட்ட ஆய்வுக்குரிய வாக்குச் சீட்டு பதிவேடு 17B
பயன் படுத்தப்படும் வாக்குச்சீட்டு 
இதர முத்திரையிட்டு வைக்க வேண்டிய உறைகள். 
       இது போன்ற பிற உறைகள் படிவங்கள் படிக்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள link யை தொடவும்.

Wednesday, 24 March 2021

வாக்காளர் பட்டியலில் வரிசை எண், பாக எண் எளிதாகப் பார்ப்பது எப்படி? / voters list part no & serial number

  வாக்காளர் பட்டியலில் வரிசை எண், பாகம் எண் பார்ப்பது எப்படி?

       வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை ஒவ்வொரு தேர்தலிலும் சரிபார்க்க வேண்டும். உங்கள் கையில் வாக்காளர் அடையாள அட்டை (voters id) இருந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களித்து விட முடியாது. உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும். இதை எவ்வாறு சரிபார்ப்பது?

Pandiarajan1988143@blogspot.com

        ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு ஜனவரி மாதம் இருபத்தைந்தாம் நாள் தேசிய வாக்காளர் தினம் அனுசரித்து வருகிறது. அன்று புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதில் இறந்தவர்களின் பெயர் நீக்கப்பட்டு இருக்கும். புதியதாக திருமணம் செய்து கொண்டு இந்த ஊரில் வசிப்போர் பெயர் சேர்க்கப்பட்டு இருக்கும்.        

  VOTERS HELPLINE APP 

                     வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதையும் பாகம், வரிசை எண் முதலியவற்றை எளிதாகப் பார்க்க Google Play store சென்று voters helpline app என்று search கொடுத்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

Playstore app

அல்லது https://play.google.com/store/apps/details?id=com.eci.citizen இந்த link CLICK செய்து நேரடியாக download செய்யலாம். இந்த voters helpline app open செய்து search results உங்கள் epic number (வாக்காளர் அடையாள அட்டை எண்) உள்ளீடு செய்தால் உங்கள் பெயர், பாகம் எண், வரிசை எண், முகவரி போன்ற அனைத்து விபரங்களும் இடம் பெற்றுள்ளது. 

தேர்தல் ஆணையம் இணையத்தில் பார்ப்பது எப்படி?

      Google chrome இல் Election commission என search கொடுத்து home page touch செய்தால் voters I'd search கொடுக்கலாம். அல்லது இந்த link CLICK HERE  தொட்டு நேரடியாக உள்ளே செல்லலாம். 
pandiarajan1988143@blogspot.com

அதில் முதலில் voters name search என்று இருக்கும் அதற்கு கீழே epic number search என்று இருக்கும் அதைத் தொட்டால் உங்கள் epic number, select state name, capture code enter என்று இருக்கும். அதற்கு கீழே search கொடுத்தால் உங்கள் பெயர், தந்தை பெயர், முகவரி வரும். அதை தொட்டால் pdf வடிவில் download செய்யலாம். இதில் வாக்காளர் பாகம் எண், வரிசை எண் தேர்தல் நாள் முதலியவற்றை எளிதாகப் பார்க்கலாம். 
        இதன் மூலம் உங்கள் பெயர் உங்கள் ஊர் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதை சரிபார்க்கலாம்.
              வரும் தேர்தலில் தவறாமல் வாக்களிப்போம்!
         நம்மை வாழ வைக்க எண்ணுவோரை  நாம் ஆள வைப்போம்!!

Thursday, 18 March 2021

பள்ளிக்கல்வித்துறை அலுவலக பதிவேடுகள்/ School education department records

 பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் 

பதிவேடுகள் ஏன் தேவை?

        நேற்றைய செய்திகள் இன்றைய வரலாறு. இன்று நடப்பதை நாளைக்கு நம் தலைமுறைக்கு அறிய செய்வது பதிவேடு தான். பதிவேடுகள் இல்லாவிட்டால் நாம் இதுவரை செய்த பணிகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை நம்மால் கூட கணிக்க முடியாது.

   


                              நம் வளர்ச்சியை அதிகாரிகள் கண்காணிப்பதற்காக பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டியது  அவசியம். பதிவேடுகள் இல்லாவிட்டால் பள்ளிக்கு தேவைப்படும் நிதியை ஒதுக்கீடு செய்ய முடியுமோ?

பதிவேடுகளின் பயன்கள் 

     பதிவேடுகள் மூலமாக பள்ளிகள் திறப்பு, பள்ளியின் ஆரம்ப கால வரலாறு தெரிந்து கொள்ள முடியும். 

      பள்ளியில் கடந்த ஆண்டுகளில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை, மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள், மாணவர்கள் வருகை சதவீதம், மாணவர்கள் விபரம், மாணவர்கள் பெற்ற கல்வி உதவித்தொகை, கல்வி விலையில்லா பொருள்கள் (சீருடைகள், பாடபுத்தகங்கள், சைக்கிள், லேப்டாப், புத்தகப்பை, வண்ணப்பென்சில், காலணி) வழங்கிய பதிவேடுகளின் மாணவர்களின் வளர்ச்சியை அறிந்து கொள்ள முடியும். நடப்பு ஆண்டு சேர வேண்டிய மாணவர்கள் விபரம் அறிய முடியும். 

     பதிவேடுகள் பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் விபரம், அலுவலர்கள் விபரம், ஊதியம் மற்றும் ஓய்வூதிய நிதி விபரம் அறிய முடிகிறது. 

        பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் பற்றி தெளிவாக படிக்க Read more

பள்ளிக்கல்வித்துறையின் இயக்குநர் செயல் முறைகள்.

            தமிழக பள்ளிக்கல்வித்துறையின் இயக்குநர் செயல் முறைகள் கடந்த 10/02/2021 அன்று வெளியிடப்பட்டது. அதன் படி இனி வரும் காலங்களிலும் பள்ளிக்கல்வித்துறையின் பணிபுரியும் அலுவலர் அவர்கள் சார்ந்த அலுவலக பதிவேடுகள் பராமரிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார். 
      மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக்கல்வி அலுவலகம், பள்ளியின் அலுவலகம் போன்றவற்றில் பணிபுரியும் சார்நிலை அலுவலர் அவர்களுக்குட்பட்ட பதிவேடுகளை கீழ் கண்ட முறையில் பராமரிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார். 
       அலுவலகம் பதிவேடுகள் பட்டியல் Pdf வடிவில் download செய்ய CLICK here

Wednesday, 13 January 2021

NMMS Exam question paper and answer

    NMMS Exam question Paper 2018 and answer 

      

NMMS Exam 2018 question paper download link CLICK HERE 

NMMS Exam 2018 Question with answer key mathematics download link CLICK HERE 

Tuesday, 12 January 2021

New primary school open list tamilnadu Government 2021

 New primary school open list tamilnadu Government 

        ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு புதிய தொடக்கஇப்பள்ளிகள் தொடங்குதல், தொடக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவது, நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவது செய்யப்படும். இதற்காக நிதியை ஒதுக்கீடு செய்து முதல்வர் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்வார்கள். 

       இந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலும், மக்களின் கோரிக்கைகள் அடிப்படையிலும் தமிழக அரசு புதிய தொடக்கப்பள்ளிகளின் (New primary school list 2021) பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
       

School reopening date announced 2021 pdf file

     School reopening date announced Pdf file

         கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழக பள்ளிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் மூடப்பட்டு உள்ளது. கொரோனா நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. பல்வேறு மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரின் பெரும் முயற்சியில் இன்று கொரோனா நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளது தமிழக அரசு. 


            தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் பெற்றோர்களிடம் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் வருகின்ற ஜனவரி 19 ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் கீழ் கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு சார்பில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்த பள்ளிகள் திறப்பு பற்றி செய்திகள் மற்றும் சுற்றறிக்கை படிக்க pdf file download செய்ய CLICK HERE 

Monday, 11 January 2021

TAMILNADU Government C,D staff Pongal bonus G.O

                 Pongal bonus   

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகை மிகை ஊதியம் வழங்குவது                   

          தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு  தமிழக முதல்வர் பொங்கல் போனஸ்  கடந்த   04/01/2021 அன்று அறிவித்தார்.

TN Government Pongal bonus G.O

           அந்த பொங்கல் போனஸ் (Pongal bonus) தமிழக அரசு பணியில் உள்ள சி(C) பிரிவு, டி(D) ஊழியர்களுக்கு மட்டும் வழங்கப்படும். இதனுடன் ஓய்வூதியம் பெறும் பென்சன்தாரர்களுக்கு ரூபாய் ஐநூறு (500) வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. 

          சி பிரிவு ஊழியர்கள் கிரேடு பே(Grade pay) 4300வரையிலான ஊதியம் பெற்றவர்களுக்கு மட்டுமே ரூபாய் மூவாயிரம் (3000) வழங்கப்படும். 

            டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அரசாணை (G.O) தமிழக அரசு அறிவித்துள்ளது. 

      தமிழக அரசு அறிவித்துள்ளது பொங்கல் போனஸ் அரசாணையை (Pongal bonus G.O) முழுமையாக படிக்க  CLICK HERE 

Sunday, 1 November 2020

உளுத்தம்பருப்பின் பயன்கள் / Ulundhu benefits in tamil

 உளுத்தம்பருப்பின் பயன்கள் 

       நாம் தினமும் காலை, இரவு உண்ணும் உணவில் உளுந்து இட்லி, தோசை, வடை போன்றவற்றில் சேர்த்து கொள்கிறோம். உளுந்து வடை அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பிடிக்கும். உளுந்து உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் உள்ளும் புறமும் எண்ணற்ற நன்மைகளை அடைகிறோம்.
உளுந்து வடை 

     உளுந்தம் பருப்பில் உள்ள சத்துகள் 

         உளுந்து நூறு கிராமில் புரதம்  25 கிராம், பொட்டாசியம், காப்பர், மக்னீசியம், மாக்னீசு, கால்சியம், நார் சத்து என பல வகையான சத்துகள் நிறைந்து உள்ளது. 

உளுந்தம் பருப்பின் நன்மைகள் 

        கழுத்து வலி, எலும்பு இணைப்புகளின் வலி உள்ளவர்கள் வாரம் ஒரு முறை உளுத்தம்பருப்பு களி செய்து சாப்பிட்டு வந்தால் வலி குறையும். 
உளுந்து
        ஆஸ்டியோ போரோஸிஷ் என்ற எலும்புக்குறை நோய் சரிசெய்ய கால்சியம் சத்து அதிகம் உள்ள உளுத்தம்பருப்பு சேர்த்து கொள்ளவும். 
         நமது தலை முடியின் வளர்ச்சி அதிகரிக்க புரதம், இரும்பு சத்து அதிகம் உள்ள உளுத்தம்பருப்பு உள்ளும் புறமும் பயன்படுத்த வேண்டும். 

     சீரான செரிமான மண்டலம் செயல்பாடு அதிகரிக்க உளுத்தம் பருப்பை பொடிசெய்து உணவில் சேர்த்துக் கலந்து சாப்பிடவும்.
       அடிக்கடி மலச்சிக்கல், குடல் பிரச்சனை தீர்க்க தினமும் காலை வேளையில் உளுத்தம்பருப்பு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
       வலிமையான உடல் வளர்ச்சி வேண்டுமா? தசை வலிமை பெற, தேகம் பொலிவுபெற கண்டிப்பாக உளுத்தம்பருப்பு உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 
        வளரும் குழந்தைகளுக்கு தசை வளர்ச்சி, மெலிந்த தேகம் கொண்டவர்களுக்கு உளுந்து பொடிசெய்து நல்லெண்ணெய் கலந்து உணவு ஊட்டும் போது ஆரோக்கியமும் மேன்மை அடையும். 
       வயதானவர்கள் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் உளுந்தம் களி சாப்பிட்டு வந்தால் நோய் கட்டுக்குள் வரும். 
       இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்த பொட்டாசியம் சத்து நிறைந்த உளுந்தம்பருப்பு சாப்பிட வேண்டும். 
        உடல் குளிர்ச்சி அடைய உளுத்தம்பருப்பு உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சூடான உடல் தேகம் கொண்ட உளுத்தம்பருப்பு சாப்பிடலாம். 
      கருப்பு உளுந்து உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் இடுப்பு எலும்பு வலிமை பெறும். 

       எலும்பு முறிவு ஏற்பட்டவருவரின் வெளிப்புறத்தில் கட்டு போட உளுந்தம் பருப்பை பொடிசெய்து மாவுக்கட்டு போடப்படுகிறது.
       ஆண்களின் ஆண்மை குறைவு மற்றும் மலட்டுத்தன்மை போக்க உளுந்தம் பருப்பின் வடை, பலகாரம் செய்து சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட விந்தணுக்களின் சக்தி அதிகரிக்கும். 
          

Wednesday, 21 October 2020

Confident in any situation/எப்பொழுதும் தன்னம்பிக்கை உடன் இருக்க வேண்டுமா?

   தன்னம்பிக்கை உடன்  வாழ

         நாம் ஒவ்வொரு நாளும் postive ஆக இருக்க வேண்டும் என்றும் confident ஆக இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறோம். ஆனால் நம் confident level ஏதோ காரணத்தால்  குறைந்துவிட்டதாக எண்ணுகிறோம். Confident ஆக, postive ஆக நாம் எப்படி இருப்பது பற்றி தெரிந்து கொள்வோம்.


ஏன் confident ஆக இருக்க வேண்டும் 

           நீங்களும் நானும் confident ஆக இருக்க கூடாது என்று நினைப்போமா? கல்வி,அறிவு இவற்றால் சாதித்தவையை விட தன் தன்னம்பிக்கையால் சாதித்தவைகள் தான் அதிகம். 
       கூச்சம் கொண்டவர்கள் பலரிடம் பேசவும் சந்தேகம் கேட்கக் கூட தயங்குவதால் அதைச் செய்ய முடியும் என்ற நேர்மறையான எண்ணங்கள் மனதில் தோன்றுவது இல்லை. இதனால் பல செயல் செய்யும் தன்னம்பிக்கை தோன்றுவது இல்லை. 

        நம்மில் பலர் வங்கியில் கடன் பெற சந்தேகங்கள் இருந்தாலும் மேலாளரை அணுகி பேச தயக்கம் இருக்கும். தனது அக்கவுண்டில் பணம் பிடித்தாலும் கூட customers care தொடர்பு கொண்டு பேச தயக்கம் காட்டுவதும் தன் மீது தன்னம்பிக்கை இல்லாதது தான் காரணம். 

தவறுகளும் self confident 

           வாழ்க்கை வாழும் போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் போது நம் confident level குறைகிறது. தப்பு செய்வது மனித இயல்பு. நாம் ஒவ்வொரு நாளும் செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சியிலும் அறிவு அனுபவம் வாய்ந்த பலரும் தவறு செய்த செய்தியைப் படித்து வருகிறோம்.

      அவர் தவறு செய்வதற்கு முக்கிய காரணம் அவரின் mind setup தான். 
    தவறு செய்தல் இயற்கையின் நியதி. தவற்றை சரி செய்ய confident உங்களுக்கு உதவும். 

கௌரவம்தனித்தன்மை

             Confident level சரிசெய்ய உங்களைப் பற்றிய image குறைத்துக் கொள்ளவேண்டாம். சமுதாயத்தில் தனக்கு தேவையான அளவு மதிப்பு இவ்வளவு தான் என புரிந்து கொள்ளவேண்டும். 
      உதரணமாக மாதம் பத்தாயிரம் ரூபாய் ஊதியம் பெறும் கூலித் தொழிலாளியை சமுதாயம் இப்படி தான் நடத்தும். 
     மாதம் 25,000 ஊதியம் பெற்று வரும் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் நல்ல வேலை, படிப்புக்கு தகுந்த மரியாதை கிடைக்கும். 
      அதே சமயம் மாதம்  100000 ஊதியம் பெறும் Doctor, Engineer, Police station head officer, special officer இவரின் self image தன்னை அனைவரும் மதிக்க வேண்டும். சமுதாயத்தில் தனக்கு அதிக அளவில் முக்கியத்துவம், மதிப்பு, மரியாதை தர வேண்டும் என்று நினைப்பார்கள். அதில் தவறு ஒன்றும் இல்லை. 

       ஆனால் சில நேரங்களில் மரியாதை குறைவாக இருக்கும் போது நம் confident level குறைந்து விடும். அவர் மீது குற்றம் பார்க்க வேண்டாம். நாம் வேலையை மட்டும் செய்தால் confident level கூடும். 
       புதிய செயல்களைச் செய்யும் போது நம் self image குறைந்து விடும். நாம் தவறாகச் செய்து விடுவோமா என்ற பயம் தோன்றும். 
     நிறைய செயல்களைச் செய்ய வேண்டும் என்று நினைத்தால் நேர்மறையான எண்ணங்கள் மனதில் தோன்றும் வெற்றி கிடைக்கும். 
       தன்னம்பிக்கை வளர்க்கும் பல புத்தகங்கள் படிங்க, postive thought உள்ள படங்களைப் பார்த்தால் நம்முடைய confident level increase ஆகும், உங்கள் மனமும் அமைதி அடையும். 

Friday, 16 October 2020

காலையில் எழுந்ததும் நட இரவில் தூங்கும் முன் நட / Walking practice

 காலையில் எழுந்ததும் நட இரவில் தூங்கும் முன் நட

                   நடை பயிற்சி 

      காலையில் எழுந்ததும் நட இரவில் தூங்கும் முன் நட என்பது மேற்கத்திய பழமொழி. நடைப்பயிற்சி (walking Practice) ஏன் செய்ய வேண்டும் என்று நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
       நடைப்பயிற்சி செய்யும் போது நூற்றைம்பது கலோரிகள் பயன்படுத்தப்படும். இது மட்டுமல்லாமல் பல இரத்தம் நாளங்களில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் பல நோய்கள் வராமல் தடுக்க முடியும். 

          காலையில் எழுந்ததும் நடக்க வேண்டும். இரவில் தூங்கும் முன் நடக்க வேண்டும் என்று நமக்குத் தெரியும். நகர்ப்புறங்களில் மாலை வேளையில் சாலையில் நடந்து சென்று வருபவர்களைப் பார்த்தீர்களா? 
      இரவு உணவு உண்டவுடனே உறங்கக் கூடாது. இரவு உணவு உண்பதற்கும் உறங்குவதற்கும் இடையில் சுமார் மூன்று மணி நேர இடைவெளி இருப்பது  அவசியம். எதற்காக இந்த இடைவெளி என்று சிந்திப்போம். 

உணவு இடைவெளியும் செரிமானமும்

     மனிதன் உறங்கும்போது மூளையும் ஓய்வெடுக்கத் தொடங்கி விடும். மூளை உறங்கி விடுவதால் மற்ற உள்ளுறுப்புகள் ஓய்வெடுக்க வேண்டும். இது இயற்கை நியதி. இரப்பையில் உணவு நிரம்பியவுடன் சீரணக்கருவிகள் ஓய்வெடுக்கச் தொடங்கினால் என்னாகும்.

 
        தேவையான செரிமான நீர் சுரப்பது தடைபடுவதோடு வயிற்றில் அசீரணம் ஏற்படும். எனவே நாம் உண்ட உணவானது முழுமையாகச் செரிக்கமால் புளித்து நாற்றமெடுத்துப் போய்விடும். 
       இந்தப் புளித்த உணவு காலை எழுந்திருக்கும் வரை இரைப்பையில் இருந்து ஒரு விதமான வாயுவை உற்பத்தி செய்யும். 
      இந்த நஞ்சு வாயு இரத்தத்தில் கலந்து உடல் முமுவதும் பரவுகிறது. 

நடை பயிற்சி இல்லாத நிலையில் ஏற்படும் விளைவுகள் 

        இரவு உணவு உண்ட உடனே தூங்கச் செல்பவர்களுக்கு மன, உடல் உபாதைகள் ஏற்படும். உடல் எடை அதிகரிக்கும். 
       இதனால் நடைப்பயிற்சி செய்வதற்கு உடலில் அசதியாகத் தோன்றும். 

                இவர்களால் அதிகாலையில் புத்துணர்ச்சியுடன் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முடியாது. 
           யோகா, தியானம் போன்ற மன அமைதிக்காகச் செய்யும் பயிற்சிகளில் நாட்டம் குறையும். 
            உடலில் வளையும் தன்மை குறைந்து விடும். இதனால் இரத்த ஓட்டம் தடை படும். 
         இரவில் சாப்பிட உடனே படுக்கைக்குச் செல்லும் பலருக்கும் தலைவலி, இடுப்பு வலி, முதுகு வலி, மூக்கடைப்பு, வாய் தூர்நாற்றம் போன்ற தொல்லைகளில் ஏதேனும் ஒன்று இருந்து கொண்டேஇருக்கும்.

நடைபயிற்சியின் நன்மைகள் 

        நடைப்பயிற்சி தினமும் காலை எழுந்ததும், இரவு தூங்கும் முன் செய்தால் உணவு செரிமானமாகி சுரப்பிகளின் செயல் திறன் அதிகரிக்கும். சர்க்கரை வியாதி தோற்றுவிக்கும் இன்சுலின் ஹார்மோனின் அளவை சமநிலையில் வைக்கும். 

        உடலின் எடையை சரியான உயரத்துக்கு ஏற்ற அளவில் பராமரிக்க உதவும். 
       உடலில் தேவையற்ற கொழுப்புகள் குறைந்து விடும். பசி உணர்வை தூண்டும். வயிற்றில் அளவோடு சாப்பிட வைக்கும். 
       காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி செய்யும் போதுசிறிதளவு நீர் அருந்தி விட்டு நடந்தால் உடலின் நீர் சமநிலை ஏற்படும். தேவையற்ற அமில காரங்களும் வியர்வையாக வெளியேறும். 

        தினந்தோறும் நடைபயிற்சி செய்வோம்.
        நலமுடன் வாழ்வோம். 

Thursday, 15 October 2020

NISHTHA TRAINING REGISTRATION எவ்வாறு செய்ய வேண்டும்?

 NISHTHA TRAINING

NISHTHA பயிற்சி யார் கலந்து கொள்ள வேண்டும் ?

           முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நமது அரசு மூலமாக NISHTHA பயிற்சி வழங்கப்பட உள்ளது.                        இந்த பயிற்சியில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் Matric school Teacher (முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும்) கலந்து கொள்ள வேண்டும்.    NATIONAL INITIATIVE FOR SCHOOL HEADS AND TEACHERS HOLISTIC ADVANCEMENT என்பதன் சுருக்கம் NISHTHA என்று அழைக்கப்படுகிறது. இது தேசிய அளவில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் முழு மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு என்பது தமிழ் விளக்கம்.

                                                        

 NISHTHA TRAINING 2020

       இப்பயிற்சி நாளை (16/10/2020) முதல் ஜனவரி15,2020 வரை ஆன்லைனில் நடைபெறும். இப்பயிற்சி 6 கட்டங்களாக நடைபெற உள்ளது.

          ஒவ்வொரு கட்டமும் 15 நாட்கள் நடைபெறும் அக்டோபர் 16 முதல் 30 வரை முதல் கட்டம் நவம்பர் 1 முதல் 15 வரை இரண்டாவது கட்டம் நவம்பர் 16 முதல் 30 வரை 
         மூன்றாவது கட்டமும் டிசம்பர் 1 முதல் 15 வரை நான்காவது கட்டம் டிசம்பர் 16 முதல் 30 வரை
         ஐந்தாவது கட்டமும் ஜனவரி 1 முதல் 15 வரை ஆறாவது கட்டம் நடைபெற உள்ளது.                 ஒவ்வொரு கட்டத்திற்கும் மூன்று course  உள்ளது. ஒவ்வொரு ஆசிரியரும் மூன்று course களையும் முடிக்க வேண்டும் 15 நாட்களுக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் ஆசிரியர்கள் அந்த பயிற்சியை எடுத்துக் கொள்ளலாம்.

        ஆனால் அனைத்து ஆசிரியர்களும் ஆறு கட்டங்களையும் முழுமையாக பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
          பயிற்சி நடைபெறும் பொழுது நமக்கு வினா வினாடி வினா  போட்டிகள் நடத்தப்படும் ஆறு கட்டங்களும் கலந்து கொண்ட பின்பு course completion certificate வழங்கப்படும்.               எனவே அனைத்து ஆசிரியர்களும் முழுமையாக இந்த ஆறு கட்டங்களையும் பயிற்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 பயிற்சியில் கலந்து கொள்ள என்னசெய்ய வேண்டும்? 

           இந்த பயிற்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாக அனைத்து ஆசிரியர்களும் தங்களது மொபைல்  போனில் diksha ஆப் டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளவும்.

Username, password பார்ப்பது எப்படி?

              Emis வலைதளத்தில் சென்று உங்களது பள்ளியின் emis user name, Password சமர்ப்பிக்கவும்.
             அடுத்து பள்ளியில் உள்ள staff details சென்று staff login details சென்று user name மற்றும் password எடுத்துக்கொண்டு அதன் மூலமாக  பயிற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

NISHTHA TRAINING DIKSHA APP LOGIN செய்தல்:

         இதற்கு DIKSHA APP DOWNLOA D செய்து EMIS இல் ஒவ்வொரு ஆசிரியருக்கும் வழங்கப்பட்ட  எண்ணை user id யாகவும் அதற்கென கொடுக்கப்பட்ட கடவுச் சொல்லை பயன்படுத்தி படித்து Online லே கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையலிக்க வேண்டும்  நீங்கள் படிக்கவேண்டிய பாடங்கள்.

October 16-30

Course 1- கலைத்திட்டம் மற்றும் உள்ளடங்கிய கல்வி
Course 2 - தனியாள் - சமூகத்திற்கு உரிய பண்புகளை வளர்த்தலும்
பாதுகாப்பான, ஆரோக்கியமான பள்ளிச் சூழலை உருவாக்குதலும் 
Course 3 - பள்ளிகளில் மாணவர்களின் சுகாதாரமும் நலவாழ்வும்

நவம்பர் 1-15

Course 4 கற்றல்-கற்பித்தல் செயலில் பாலின பன்முகத்தன்மையின் பொருத்தப்பாடு
Course 5 - கற்றல் கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டில் தகவல் தொடர்புத் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு
Course 6 - கலையோடு இணைந்த கற்றல்

நவம்பர் 16-30

Course 7- பள்ளி சார்ந்த மதிப்பீடு
Course 8- சூழ்நிலையியல் கற்பிக்கும் முறை
Course 9-கணிதம் கற்பிக்கும் முறை

டிசம்பர் 1-15

Course 10 - சமூக அறிவியல் கற்பிக்கும் முறை (உயர் தொடக்க
நிலை)
Course 11- மொழி கற்பிக்கும் முறை
Course 12 - அறிவியல் கற்பிக்கும் முறை (உயர் தொடக்க நிலை)

டிசம்பர் 16-31

Course 13 பள்ளி தலைமைப் பண்பிற்கான கருத்துக்களும் அவற்றின் பயன்பாடுகளும்
Course 14 - பள்ளிக் கல்வியில் புது முயற்சிகள்
Course 15 - பள்ளி முன்பருவக் கல்வி

2021 ஜனவரி 1-15 

Course 16 - முன்பருவ தொழிற்கல்வி
Course 17 - கோவிட் -19 (Covid-19) நிகழ்நிலவரம்: பள்ளிக் கல்வியில் சவால்களை எதிர்கொள்ளல்
Course 18 - உரிமைகளைப் புரிந்துகொள்ளல், குழந்தை பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப்பாதுகாத்தல் சட்டம் (POCSO Act), 2012





Friday, 14 August 2020

நீங்கள் ஆசிரியரா? /Are your teacher?

      நீங்கள் ஆசிரியரா?

ஆசிரியர் 

         ஆசிரியர் பணி அறப்பணி. அதற்கு உன்னை அர்ப்பணி. இன்று நடைமுறையில் பல ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.
         ஊதியத்திற்காகப் பணி புரிவதை விட மன ஈடுபட்டுடன் பணியாற்றி வருகின்றனர். பல்வேறு கல்வியாளர்கள் சொன்னச்சில கருத்துக்கள் படிக்கலாம் வாங்க.

ஆர். கே. நாராயணன் 

         காலையிலும், மாலையிலும் அதே மணிதான் ஒலிக்கிறது. காலையில் கசக்கும் அது பள்ளி முடியும்போது மட்டும் ஏன் இனிக்கிறது. 

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 

     நான் மாணவர்களுக்காக எதையும் கற்றுக் கொடுப்பது கிடையது. அவர்கள் கற்றுக் கொள்ளும் சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதோடு சரி.

கரோலின் டிவிக்

      ஒரு மாணவன் எதையெல்லாம் செய்தால் ஒரு ஆசிரியரான உங்களுக்குப் பிடிக்கும் என்பதைப்போல ஒரு ஆசிரியராக நீங்கள் எதையெல்லாம் செய்தால் தனக்குப் பிடிக்கும் எனக் கருத ஒரு மாணவருக்கும் உரிமை உண்டு. 

பேராசிரியர் யஷ்பால் 

           பள்ளியில் மணி ஒலித்தபின் வகுப்பறை நோக்கி நடக்கும் ஒரு ஆசிரியர் பாடத்தைக் கரைத்துக் குடித்தவராக இருக்கலாம். ஆனால் அவருக்குக் குழந்தை உளவியல் எவ்வளவு தெரியும் என்பது அதை விட முக்கியம்.
       நீங்கள் வகுப்பில் ராம் என்பவருக்கு அறிவியல் போதிக்கும் ஆசிரியர் என்றால் உங்களுக்கு அறிவியல் மட்டும் தெரிந்தால் போதாது. ராம் பற்றியும் தெரிய வேண்டும்.

ஜான் ஹோல்ட் 

         உண்மையான ஆசிரியர்கள் புத்தகத்திலிருந்து பாடம் நடத்துவதில்லை. தங்கள் இதயத்திலிருந்து நடத்துகிறார்கள். 

ஜார்ஜ் பெர்னாட்ஷா 

             எப்போது பள்ளிக்கு விடுமுறை என அறிவித்தால் குழந்தைகள் மனம் வருந்துகிறார்களோ, பள்ளி வேண்டும் என அடம் பிடிக்கிறார்களோ அப்போதுதான் உண்மையான கல்வி நடக்கிறது என்று அர்த்தம்

ஹோரஸ் மன் 

       கற்க வேண்டும் என்ற ஆர்வ உந்துதலை மாணாக்கரிடம் ஏற்படுத்தாமல் போதனை செய்ய முயலும் ஆசிரியர்கள், சூடில்லாத இரும்பினைச் சுற்றியல்கொண்டு அடிப்பவராவார்.

மிஷேல்தெ மோன்த்தேன்

      குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பதில், அவரவர் ஈடுபாட்டையும் அன்பையும் கவர்வது போல் வேறு எதுவும் இல்லை. இல்லாவிடில், புத்தகப் பொதிசுமக்கும் கழுதைகளாகத்தான் , நாம் அவர்களை ஆக்குவோம். 

அரிஸ்டாட்டில் 

       குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுவோர், பெற்றோர்களையும் விட பெருமதிப்புக்கு உரியவர்கள். பெற்றோர் உயிர் மட்டுமே அளிக்கிறார். ஆசிரியர்கள் நல்வாழ்வு வாழும் கலையைக் கற்றுத் தருகின்றனர் 

பிளேட்டோ 

       கட்டாயமாகவும் கடுமையுடனும் மாணவர்களுக்குக் கல்வி போதனை செய்யாதீர்கள். அவர்கள் மனத்தைக் கவர்ந்து கற்பதில் ஈடுபடுத்துவதற்கு தேவையான ஆற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அதிவீரராமபாண்டியர்

     எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார். 
        இங்குள்ள கருத்துக்கள் அனைத்து நான் புத்தகங்களில் படித்தவை மட்டுமே. 

Monday, 10 August 2020

TN SSLC Result 2020 declared today

 TN SSLC Result 2020 declared today

100 % students pass tamil nadu 

      தமிழ் நாடு அரசு தேர்வுத்துறை இயக்ககம்  (The Directorate of Government exam) இன்று 10/8/2020 திங்கள்கிழமை  காலை  9: 30 மணியளவில் கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
                      மாணவ, மாணவிகள் SSLC பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
     பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் படித்து விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப் பட்டுள்ளது. 

தேர்வு கால அட்டவணை 

     கடந்த  2019 - 2020 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்குக் கால அட்டவணை (TIME TABLE)  மார்ச் மாதம்  27 முதல் ஏப்ரல் மாதம்  13 வரை SSLC பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 
      இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரனோவிற்காக பொதுஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைப்பதாகத்தமிழக அரசு வெளியிட்டச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
       மீண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணையை ஜுன் மாதம் 1 முதல் ஜூன் மாதம்  12 வரை என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அப்பொழுது கொரனோவின் கோரத்தண்டவத்தால் ஒவ்வொரு நாளும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருந்தது. இதனால் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் கல்வியாளர்களின் ஆலோசனைபடி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. 
        பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மீண்டும் ஜுன் மாதம்  15 முதல் ஜுன் மாதம் 25 வரை என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் பலரும் கொரோனாவின் கோரத்தண்டவத்தை நினைத்து மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடு குறித்துக் கேள்வி எழுப்பினார். இதற்குச் சென்னை உயர் நீதிமன்றம்  9.30 இலட்சம் மாணவர்களின் பாதுகாப்பு முன் நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
       இதையடுத்து தமிழக அரசு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்தத் தேர்வில் அனைவரும் தேர்ச்சி என தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்தார். 

SSLC தேர்வில் விண்ணப்பித்தவர்கள் 

        கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு  9,39,829 மாணவ மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.
               இதில் மாணவர்கள்  4,71,759 மற்றும் மாணவிகள்  4,68,070  ஆவார்கள். அனைவரும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

6235  மாற்றுத் திறனாளி  மாணவர்கள் SSLC தேர்ச்சி 

        பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விண்ணப்பித்து இருந்த மாற்றுத் திறனாளி மாணவர்கள்  6235  பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

SSLC மதிப்பெண் கணக்கிடல்

         கடந்த கல்வியாண்டில் நடத்த வேண்டிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரனோ விற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக ரத்து செய்யப்பட்டது. 
        மாணவர்கள்  காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகை சதவீத மதிப்பெண்களுடன் சேர்த்து மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. 
      காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள்  80% மற்றும் வருகை நாள்கள்  20% மதிப்பெண் கொண்டு மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது. 
     மதிப்பெண் கணக்கிடலாம் வாங்க Read more

SSLC தேர்ச்சி மதிப்பெண் 

          இன்று வெளியிட்டுள்ள தேர்வு முடிவுகளில் பத்தாம் வகுப்பு பாடங்களில் தலா 35% (35/100) மதிப்பெண் பெற்றால் மட்டுமே தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. 
        அறிவியல் பாடத்தில் Theory Paper  20/75 மற்றும் Practical Paper 15/25 பெற்று இருந்தால் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் ஐந்து மாவட்டங்கள்

      இன்று வெளியிட்டுள்ள தேர்வு முடிவுகளில் முதல் ஐந்து மாவட்டங்கள் தேர்ச்சி பெற்றவர்கள் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. 
  1. கன்னியாகுமரி 
  2. திருநெல்வேலி 
  3. தூத்துக்குடி 
  4. ராமநாதபுரம் 
  5. சிவகங்கை 

SSLC Result online பார்ப்பது எப்படி? 

        நீங்கள் mobile phone Google search சென்று tn results.nic. In என டைப் செய்து search கொடுக்கவும். இல்லாவிட்டால் இந்த லிங்கைத்தொட்டு நேரடியாகச் செல்லலாம். 
              அதற்குப்பின் SSLC Result March 2020 என இருக்கும். அதைத் தொட
வேண்டும்.
        பின்னர் உங்கள் பதிவு எண் டைப் செய்து விடவு‌ம். அதற்குக் கீழே பிறந்த தேதி  dd/mm/yyyy (உதரணமாக  06/06/2005) என்று டைப் செய்து கீழ் Result தொடுங்கள். 
       உங்கள் SSLC Result screen தோன்றும் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.
      மாணவர்கள் மதிப்பெண் சார்ந்த குறைகளைப் பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக ஆகஸ்ட் மாதம் 17 முதல் ஆகஸ்ட் மாதம் 25 தேதி வரை விண்ணப்பிக்கலாம். 
     மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் பட்டியல் அந்தந்தப் பள்ளிகளில் ஆகஸ்ட் மாதம்  17 தேதி முதல் ஆகஸ்ட் மாதம்  21 தேதி வரை வழங்கப்படும். கொரோனா கட்டுபாடுடன் பெற்று கொள்ளலாம்.
      ஏதேனும் சந்தேகம் இருந்தால் comments பதிவிடவும்.
     

Sunday, 9 August 2020

சிறந்த ஆசிரியராகத் திகழ வேண்டுமா? /best teacher improve habits

சிறந்த ஆசிரியராகத்  திகழ வேண்டுமா?

சிறந்த ஆசிரியர் 

        ஆசிரியர், சிறந்த ஆசிரியர் எனப் பெயர் பெறுவது மிக எளிமை. நம் நாடு பல்வேறு சிறந்த ஆசிரியர்கள் கொண்டு உள்ளது. சிறந்த ஆசிரியர் என்று ஊர்மக்கள் சொல்ல வேண்டியதில்லை.
          நம்மிடம் கல்வி பயிலும் மாணவச் செல்வங்கள் இந்த ஆசிரியர் சிறந்தவர் என்று சொன்னால் போனது. நீங்கள் சிறந்த ஆசிரியராகச் சிறந்த சில குறிப்புகள் பார்க்கலாம். 

ஆசிரியர் ஆடை

       புத்தம்புது மலரினைப்போல் எப்போதும் தூய்மையான ஆடையில் பள்ளிக்குச் செல்லுங்கள். 
    ஆடைகள் அணியும்போது ஆடம்பரமான ஆடைகள் அணிந்து பள்ளிக்குச் செல்வதை தவிர்த்து விடுங்கள். இல்லையென்றால் உங்கள் ஆடையின் மீது மாணவர்களுக்குக் கவனம் இருக்குமே தவிர, படிப்பு கவனம் குறைய வாய்ப்புள்ளது.
    உங்கள் ஆடையைப் பார்க்கும் அக்கிராமத்தில் உள்ள மக்கள் ஆசிரியர் சமுதாயத்தின் மீது பொறமை ஏற்படும். 
   ஆசிரியர்கள் விலையுயர்ந்த தங்க நகைகள், அணிகலன்கள் அணிந்துக் கொண்டு பள்ளிக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். 
  அரசு சொன்ன வழிகாட்டின் படி ஜீன்ஸ் பேண்ட், டி-சார்ட் போன்ற ஆடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். 

காலந்தவறாமை

     ஒவ்வொரு ஆசிரியரும் காலைக் கதிரவனைப் போல், காலம் தவறாமல் பள்ளிக்குச் செல்ல வேண்டும். 
     அவசியமானத் தேவைகளுக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு பள்ளி மற்ற வேலை நாட்களில் பள்ளிக்குச் செல்ல வேண்டும். 
    நீங்கள் தொடர்ந்துப் பள்ளிக்குச் செல்லும்போது உங்கள் வகுப்பில் பயிலும் மாணவர்கள் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
    பள்ளிக்குச் சரியான நேரத்திற்குச் சென்றால் மட்டும் போதாது. உங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பாட வேளையில் சரியாக வகுப்புக்குள் நுழைய வேண்டும். 
     வாரப்பாடத்திட்டம், மாத பாடத்திட்டத்தில் முடிக்கப்பட வேண்டிய பாடங்களைக் கற்றுத்தர முயற்சிக்க வேண்டும். நூறு சதவீதம் முடியவில்லை என்றாலும் எண்பது சதவீதம் சென்று அடைய முயற்சி செய்ய வேண்டும். 
    இவ்வாறு பாடங்களைச்சரியான நேரத்தில் கற்றுத்தரும்போது நீங்கள் கண்டிப்பாகச் சிறந்த ஆசிரியராக மாணவர்கள் மத்தியில் திகழுவீர்கள். நேர மேலாண்மை பற்றிப் படிக்க Read more

சக ஆசிரியர்கள் உடன் 

        நீங்கள் ஆசிரியர் பணியில் சேர்ந்த நாள் முதல் ஒவ்வொரு நாளும் முதன் முறையாகத் தலைமை ஆசிரியரையும், உடன் ஆசிரியர்களையும் சந்திக்கும்போது வணக்கம் சொல்லுங்கள். இந்தச் செயல் உங்கள்மீது பிறருக்கு  மரியாதையைக் கொடுக்க வைக்கும். 
      நீங்கள் அந்தப் பள்ளியில் வயதிலும், பணி அனுபவத்திலும் இளம் ஆசிரியர் எனில் மூத்த ஆசிரியர்களுக்குத் தகுந்த மரியாதை செலுத்த வேண்டும். 
     அந்தப் பள்ளியில் பணிபுரிந்து வரும் அலுவலகம் உதவியாளர், சத்துணவு ஊழியர்கள், இதரப் பணியாளர் என அனைவருக்கும் மரியாதை செலுத்துங்கள். 
      ஒரு ஆசிரியரைப் பற்றி இன்னொரு ஆசிரியரிடம் பேச வேண்டாம். இது பல பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவும்.   

வகுப்பறையில் ஆசிரியர் செயல்

          வகுப்பறைக்குச் செல்லும் வழியில் மாணவர்கள் வணக்கம் சொன்னால் நீங்களும் வணக்கம் சொல்லுங்கள். 
        வகுப்பில் நுழையும் முன்பே அன்றாடம் நடத்த வேண்டிய பாடத்தை நன்றாகத் தயார் செய்து கொண்டு வகுப்பறைக்குச்செல்லுங்கள். 
        வகுப்பறையில் நுழைந்தவுடன் காலை வணக்கம் சொல்லுங்கள். மாணவர்கள் எழுந்து சொல்லப் பழக்க வேண்டும். 
        வகுப்பிற்குள் சென்றவுடன் வகுப்பறை தூய்மையாகவும், இருக்கைகள் வரிசையாக உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் மாணவர்கள் வரிசையாக நிறுத்தி உரிய இடத்தில் அமர வையுங்கள்.
      வகுப்பறையில் உள்ள குப்பைகளை அகற்ற உரிய பணியாளரை அழைத்துக் குப்பைகளை அகற்ற சொல்லுங்கள். 
      மாணவர்கள் அணிந்து வந்த காலணிகளை வரிசையாக வைக்க மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். 
       பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறை தூய்மையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இதைப் பார்த்தவுடன் பள்ளிக்கு வரும் மக்கள் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் பள்ளியைப் பற்றிய நல்லெண்ணம் தோன்றும். நீங்களும் சிறந்த ஆசிரியர் எனப் பெயர் எளிதில் பெறலாம். 
       வகுப்பறை நுழைந்தவுடன் கதவு, ஜன்னல்கள் ஆகியவை மூடியிருந்தால் அவற்றை மாணவர்களைத் திறந்து வைக்கச் சொல்லுங்கள். வகுப்பறை எப்பொழுதும் காற்றோட்டத்துடனும், வெளிச்சத்துடனும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். 
       வகுப்பில் அனைவராலும் விரும்பப்படும் நல்ல மாணவனைக் கண்டறிந்து அம்மாணவனை வகுப்புத் தலைவன்  (class leader) ஆக்குங்கள். 

   வகுப்பறையில் கற்பித்தல் செயல் 

          தினமும் ஒரு புதிய செய்தியை மாணவர்களிடம் சொல்லுங்கள். இந்தச் செய்தி தொலைக்காட்சி, செய்தித்தாள் இடம்பெற்ற கல்வித் தொடர்பான செய்தியாக இருந்தால் சிறப்பு. 
         காலை வந்தவுடன் கரும்பலகையின் மேற்பகுதியில் பதிவு, வருகை, நாள், கிழமை எழுதிபின் பொன்மொழி ஒன்றை எழுதுங்கள்.
     தினமும் சிந்தனைக்கு விருந்தாகும் நல்ல பழமொழி ஒன்றை எழுதும் பொறுப்பை மாணவத்தலைவனுக்கு அளியுங்கள்.
       பார்வைக் குறைபாடு அல்லது கேட்கும் திறன் குறைபாடுள்ள மாணவரை வகுப்பின் முதல் வரிசையில் அமர்ந்து பாடத்தைக் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யுங்கள்.
         பாடம் நடத்தும்போது குறும்புச் செய்யும் மாணவரை வகுப்பின் முன் வரிசையில் உட்காரச் செய்யுங்கள்.
       நாள்தோறும் வகுப்பிற்குள் நுழையும்போது சிறந்த ஆசிரியராகத் திகழ வேண்டும் என்ற ஆர்வத்தோடும், துடிப்போடும் காலடி எடுத்து வையுங்கள். அதன்படியே மாணவர்களுக்குச் சிறப்பாகக் கற்றுக் கொடுங்கள்.
      இதில் சொல்லப் பட்டுள்ள பல செய்திகள் பழைய முறை. இன்றைய நடைமுறை பல கருத்துகளை அடுத்தப் பதிவில் படிக்கலாம். இந்த பதிவு நீண்டு செல்லும் என்பதால் புதிய கருத்து இடம் பெற வில்லை. இதில் உள்ள பெரும்பாலான கருத்தை உங்கள் பணியில் பயன்படுத்தி வருவீர்கள். உங்களுக்குத் தெரிந்த கருத்தை comments பதிவு செய்யுங்கள். அனைத்து வாசகர்களுக்கும் பயன்படும். 

Wednesday, 5 August 2020

எண்ணெய் குளியல் பயன்கள் / Oil bathing benefits

    எண்ணெய் குளியல் பயன்கள் 

எண்ணெய் குளியல் 

           நாம் சிறு குழந்தையாக இருக்கும்போது நம் பெற்றோர்கள் மற்றும் தாத்தா, பாட்டி என அனைவரும் வாரத்தில் ஒரு நாள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பார்கள். ஆனால் இன்று எண்ணெய் குளியல் அது என்னவென்று தெரியாமல் மறைந்து விட்டது. 
         எண்ணெய் குளியல் என்பது உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு சில மணிநேரம் கழித்து குளிப்பது தான். தீபாவளி பண்டிகை நாட்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். 
        நம் முன்னோர்கள் தைப்பொங்கல்,  ஆடி மாதம் முதல் நாள் எண்ணெய் குளியல் செய்து வந்தார்கள்.
       தற்போது உள்ள சூழ்நிலை, தொழில் ஆகிய காரணங்களால் நேரமில்லை எனவும், வீண் செலவுகள் என்ற ஆதாரமற்ற கருத்துக்கள் எண்ணி நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி வந்த நல்ல பழக்கம் புறக்கணிக்கப் பட்டுள்ளது. 
         உடல் உழைப்பு மிகுதி, உணர்ச்சிக் கொந்தளிப்பு இவைகளால் உடல் தசைகளும், மனமும் இறுகி அசதியாக இருக்கும். 
         ஒவ்வொரு நாளும் இரவு  தூங்கி மறுநாள் உடல் களைப்பு நீங்காமல் விழிக்கிறோம். இதற்குச்சிறந்த தீர்வு காண எண்ணெய் குளியல் உதவும். எண்ணெய் குளியல் குளித்தப்பிறகு உடலும் உள்ளமும் ஓய்வு பெறும். தசைகளும், முகமும் புத்துணர்ச்சி பெறும். 
      எனவே இதை தினமும் செய்ய ஆயுர்வேதம் கூறுகிறது. 

எண்ணெய் குளியல் செய்ய வேண்டிய எண்ணெய் 

       எண்ணெய் குளியல் செய்யப்பெரும்பாலும் 
நல்லெண்ணெய் பயன்படுத்த வேண்டும். நல்லெண்ணெய் உடலுக்குக்குளிர்ச்சி தரும். 
        நல்லெண்ணெய் குளிக்கப்பிடிக்கவில்லை என்றால் தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.

குளிக்கும் முறை 

        தீபாவளி பண்டிகை அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில்  (4:30 - 6:00) மணிக்குக்குளிக்க வேண்டுமென்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். 
          எண்ணெய் குளியல் பெரும்பாலும் காலை 6.30 - க்குள் தொடங்கி விடுவது நல்லது. வெதுவெதுப்பான வெந்நீரில் தான் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். தலைக்குத் தேய்க்க சீயக்காய் பயன் படுத்தலாம். 
      உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் கொள்ளமுடியாமல் போனலும் குளிப்பதற்கு முன்பு தலை, காது, கால் இந்த மூன்று இடங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

          குளிக்கும் முன் உள்ளங்கை, உள்ளங்கால், நகங்கள், கணுக்கால் பூட்டு, குதிங்கால் சதைப் பகுதியில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளவது நல்லது.
       தலையில் எண்ணெய் தேய்த்தால் நீர் கோர்த்துக்கொள்ளாது. 
     குளிர்ந்த நீரில் கண்டிப்பாகக் குளிக்க வேண்டாம்.

முன்னோர்கள் பின்பற்றிய கிழமைகள் 

      ஆண்கள் புதன் கிழமை குளித்தால் அறிவும், சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளித்தால் ஆயுளும் பெருகும் என்பது முன்னோர்கள் நம்பிக்கை.
    பெண்கள் செவ்வாய் கிழமை, வெள்ளி கிழமை எண்ணெய் தேய்த்துக் குளித்தால் செல்வம் பெருகும் என்பது முன்னோர்கள் நம்பிக்கை.
     அவரவர் பிறந்த தினத்தில், கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டாம் என்றும் முன்னோர்கள் கூறி விட்டு சென்றார்கள். 

குளியல் செய்த அன்று கடைப்பிடிக்க வேண்டியவை 

    எளிமையான உணவுகள் உண்ண வேண்டும்.எண்ணைக் குளியல் செய்த அன்று பகலில் உறங்கக் கூடாது. கடுமையான வெய்யிலில் வேலை செய்ய வேண்டாம். குளிர்ந்த உணவுகளான ஐஸ்கிரீம், ஐஸ் தவிர்க்க வேண்டும். 

பயன்கள்

               எண்ணெய் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு தணியும். உடலுக்குக்குளிர்ச்சி தரும். உடல் சூட்டைத் தணிப்பதால் உடல் சூட்டில் ஏற்படும் நோய் வராது.
       தோல் வறட்சி நீங்கிவிடும். தோல்பொழிவு பெறும்.
      உடல் நலம் மேம்படுத்தும் வகையில் பல்வேறு தொல்லைகள் நீங்கும்.
       நமக்குச்சளி, ஜலதோஷம், மண்டைக்கனம் நீங்கி விடும்.
       தலையில் வறட்சி நீங்கி முடி பொலிவு பெறும். மயிர் கால்களில் அழுக்கு தங்குவது, அதிக சூடு போன்றவை நீங்கும்.
     உடலின் பாரத்தைத் தாங்குவது எலும்புகள் மற்றும் பாதங்கள். இந்தப் பகுதியில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது மூளைக்கும் கண்களுக்கும் தொடர்பான நரம்புகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் கண் பார்வைத் திறன் மேம்படும். முக பொலிவு பெற Read more
     எண்ணெய் தேய்த்துக் குளிப்போம்!
முன்னோர்கள் விட்டுச்சென்ற நல்லவைகளைப் பின்பற்றுவோம்!

Tuesday, 4 August 2020

New Education Policy 2020 / புதிய கல்விக் கொள்கை என்ன சொல்கிறது?

New Education Policy 2020

புதிய கல்விக் கொள்கை என்ன சொல்கிறது?

              புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புதிய தேசியக் கல்விக் கொள்கை 34 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 1986-க்கு மாற்றாக அமையும் என்று குறிப்பிட்டுள்ள இந்திய அரசின் பத்திரிகை தகவல் நிறுவனம் (PIB).
        இந்த கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களைப் பட்டியலிட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை ஜூலை  30, 2020 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

PIB இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் உள்ள அந்த முக்கிய அம்சங்கள்

பள்ளிக்கல்வியில் NEP 2020

       பள்ளிக்கல்வியில் அனைத்து மட்டத்திலும் உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்யப்படும். மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை அனைத்து மட்டத்திலும் பள்ளிக் கல்விக்கு உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்வதை தேசிய கல்விக் கொள்கை 2020 வலியுறுத்துகிறது.

                கல்விக்கூடங்களின் கட்டமைப்பு வசதி, ஆராய்ச்சிக்கான கல்வி மையங்கள் போன்றவை ஏற்படுத்தப்படும்.
           பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களை இடைநிற்றல் இன்றி மீண்டும் பள்ளியில் சேர்க்க உதவும்.
       மாணவர்களையும், அவர்களது படிப்புத் திறனையும் தொடர்ந்து கண்காணித்ததல், முறைசார்ந்த மற்றும் முறைசாரா கல்வி முறைகளை உள்ளடக்கிய கல்விக்கான பலதரப்பட்ட வழிகளை ஏற்படுத்தித் தருவது போன்றவை மேற்கொள்ளப்படும்.                               ஆலோசகர்களின் ஒத்துழைப்பு அல்லது நன்கு பயிற்சி பெற்ற சமூகப் பணியளார்களை பள்ளிகளிலேயே ஏற்படுத்தித் தருவது.
       3, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு, தேசிய திறந்தவெளிப் பள்ளி மற்றும் மாநில திறந்தவெளிப் பள்ளிகள் வாயிலாக கல்வி புகட்டுதல்.
          10 மற்றும் 12ஆம் நிலைகளுக்கு இணையான இடைநிலைக் கல்வி பாடத் திட்டங்கள், தொழிற்கல்விப் பாடங்கள், முதியோர் கல்வி மற்றும் வாழ்க்கை மேம்பாட்டிற்கான திட்டங்கள் ஆகியவையும் இலக்கினை அடைவதற்கான யோசனைகளாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
                பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்ட சுமார் 2 கோடி குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கவும் தேசிய கல்விக் கொள்கை 2020-இல் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

10+2 பள்ளிக் கல்வி முறைக்கு மாற்றாக

                முன்குழந்தைப் பருவ கவனிப்பு மற்றும் கல்வியை வலியுறுத்தும் வகையில், தற்போதுள்ள 10 + 2 பாடத்திட்ட முறை மாற்றப்பட்டு, முறையே 3-8, 8-11, 11-14 மற்றும் 14-18 வயதுக்கேற்ற 5 + 3 + 3 + 4 ஆண்டு பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தப்படும்.
           இதுவரை பள்ளிக்கு வராத 3 - 6 வயது வரையிலானவர்கள் பள்ளிப் பாடம் படிப்பதற்கு இந்த புதிய முறை உதவும்.
              குழந்தைகளின் மனநிலைக்கேற்ற ஆசிரியர்களை உருவாக்க, இந்த காலகட்டம் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டதாக உள்ளது.                    புதிய கல்வி முறை, 3 ஆண்டு அங்கன்வாடி / மழலையர் கல்வியுடன், 12 ஆண்டு பள்ளிக்கூடப் படிப்பைக் கொண்டதாக இருக்கும்.

பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் கட்டமைப்பு 

         8 வயது வரையிலான குழந்தைகளுக்கு முன் குழந்தைப்பருவ கவனிப்பு மற்றும் கல்விக்கான தேசியப் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் கட்டமைப்பை (National Curricular and Pedagogical Framework for Early Childhood Care and Education - NCPFECCE) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) உருவாக்கும்.
       முன்குழந்தைப் பருவ கவனிப்பு, கற்பித்தல் மற்றும் பாடத்திட்டத்தில் நன்கு பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர் களைக் கொண்ட, விரிவுபடுத்தப்பட்ட மற்றும் அங்கன்வாடி, மழலையர் பள்ளிகள் போன்ற வலுப்படுத்தப்பட்ட மையங்கள் மூலம் முன்குழந்தைப் பருவ கவனிப்பு வழங்கப்படும்.         முன்குழந்தைப் பருவ கவனிப்பு மற்றும் கல்வி முறையை, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, மற்றும் பழங்குடியினர் நலத்துறைகள் மூலம் கூட்டாக மேற்கொள்ளப்படும்.

அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் அறிவை அடைதல்

      அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் அறிவு ஆகியவை கல்வி பயில்வதற்கான இன்றியமையாத உடனடித் தேவையாக இருப்பதால் அவற்றை முன் தகுதியாக அங்கீகரிக்கும் வகையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையால் தேசிய அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் அறிவு இயக்கம் ஒன்றைத் தொடங்க தேசிய கல்விக்கொள்கை 2020இல் வலியுறுத்தப்பட்டுள்ளது.
    அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் 2025-க்குள் 3-ஆம் நிலை வரை அனைவரும் பயில ஏதுவாக, உலகளாவிய அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் அறிவு பெறுவதற்கான திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுகள் தயாராக வேண்டும்.
     தேசிய புத்தக மேம்பாட்டுக் கொள்கை ஒன்றும் வகுக்கப்பட வேண்டும்.

பள்ளிக்கூடப் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் சீர்திருத்தங்கள்

         பள்ளிக்கூடப் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தலில், கற்போரின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அவர்களிடம் 21-ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற முக்கியமான திறமைகளை ஏற்படுத்துவதோடு, அவசியமானவற்றைக் கற்கும் திறனை மேம்படுத்துவதற்கேற்ப பாடத்திட்டம் அமைக்கப்படும்.
          பாடத்திட்டத்தைக் குறைப்பதுடன், சோதனை அடிப்படையிலான கல்வி மற்றும் சிந்தனைக்கு பெருமளவு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
             பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்க மாணவர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படும்.
                     கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட மாட்டார்கள்.
       பாடத்திட்டம் மற்றும் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டவற்றையும் கற்பதற்கும், தொழிற்கல்வி மற்றும் வழக்கமான கல்வி முறைக்கும் பெரும் வித்தியாசம் இருக்காது.
           பள்ளிக்கூடங்களிலேயே 6-ஆம் நிலை முதற்கொண்டே தொழிற்கல்வி பயிற்றுவிக்கப் படுவதோடு, உள்ளுறை பயிற்சிமுறையைக் கொண்டதாகவும் இருககும்.
         பனிரெண்டாம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வி தொடரும். உயர் கல்வி நிறுவனங்களை ஒழுங்கு படுத்த உயர் கல்வி வாரியம் அமைக்கப்படும்.
          பொறியியல் பட்டப் படிப்பில் மாணவர்கள் ஒரு ஆண்டு விடுப்பு எடுத்துக் கொண்டு கூட மீண்டும்  படிப்பு தொடரலாம்.
                புதிய மற்றும் விரிவான பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு 2020-21 (National Curricular Framework for School Education, NCFSE) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் ஏற்படுத்தப்படும்.

பன்மொழி மற்றும் மொழியின் ஆற்றல்

        குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு வரையிலும் ஆனால் 8-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் முன்னுரிமை அடிப்படையிலும் தாய்மொழி/ உள்ளூர் மொழி/ பிராந்திய மொழி பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என கொள்கை வலியுறுத்துகிறது.
         ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயம் தாய் மொழி வழியாக தான் கற்பிக்கப்படும்.
        M.Phil படிப்புகள் நிறுத்தப்படும்.
       மும்மொழித் திட்டம்  அனைத்து மட்டத்திலான பள்ளி மற்றும் உயர்கல்வியில் சமஸ்கிருதம் மாணவர்களின் விருப்பமாக இருக்கும் வகையில் வழங்கப்படுகிறது.
         இந்தியாவின் இதர செம்மொழிகள் மற்றும் இலக்கியங்களும் விருப்பப் பாடங்களாக இருக்கும். எந்த மாணவர் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படமாட்டாது.

                    'ஒரே பாரதம் உன்னத பாரதம்' முன்முயற்சியின் கீழ், 6 முதல் 8 வரையான வகுப்புகளில் ' இந்திய மொழிகள் ' குறித்து மாணவர்கள் வேடிக்கை செயல் திட்டம்/ நடவடிக்கைகளில் பங்கேற்கலாம்.                              இடைநிலைக் கல்வி மட்டத்தில் பல்வேறு வெளிநாட்டு மொழிகளும் கற்பிக்கப்படும். நாடு முழுவதும் இந்திய அடையாள மொழி தரப்படுத்தப்படும்.
          செவித்திறன் குறைபாடு உள்ள மாணவர்களின் பயன்பாட்டுக்காக தேசிய, மாநில பாடத்திட்ட ப் பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மதிப்பீட்டு சீர்திருத்தங்கள்

         புதிய கல்வி கொள்கை 2020 சுருக்கமான மதிப்பீட்டிலிருந்து வழக்கமான முறையான மதிப்பீட்டுக்கு மாறுவதை எதிர்நோக்குகிறது.                இது ஆய்வுகள், விமர்சன சிந்தனை, கருத்தியல் தெளிவு போன்ற உயர் திறன்களுக்கு ஏற்ற வகையில் மாணவர்களின் கல்வி அறிவு மதிப்பிடப்பட்டுள்ளது. 
            மாணவர்களின்  மதிப்பீட்டில்  திறன்  அடிப்படையிலான கற்றல் மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கிறது.