H

Friday 26 June 2020

How to manage your fear? பயம். . .

         How to manage your fear?                           பயம்

சிறுவயதில் பயம்   

              இதுல பயமா இருக்கு, அதுல பயமா இருக்கு என்று நாம் சின்னச் சிறு வயதில் பயந்து இருந்தோம். நம் சிறு வயதில் நம்மை வளர்த்த பெற்றோர், தாத்தா, பாட்டி என பலரும் நம் ஆழ்மனதில் பயத்தை உருவாக்கி உள்ளனர். டாக்டரைப் பார்த்து,வாத்தியாரைப் பார்த்து, போலீசாரைப் பார்த்து இளம் வயதில் பயந்தவர்கள் பலர் உள்ளனர். 
             இருட்டைக் காட்டி பயமுறுத்தி வைப்பார்கள். இப்படி நமக்கு பயம் என்ற உணர்வு மனதில் பதிந்து விட்டது. நம் கூடப் பிறந்த பிறப்பாகவே பயம் மாறி விட்டது.
         குழந்தை பருவத்தில் எதற்கெல்லாம் பயம்? யாருமில்லாத தனிமை ஒரு பயம். இருட்டைக் கண்டால் பயம். 

மாணவனுக்கு எங்கு பயம்?

        பள்ளிக்குச் செல்லும் மாணவனுக்கு ஆசிரியரைக் கண்டால் பயம். புதிய மாணவரிடம் பேச பயம். போட்டிகளில் பங்கேற்க பயம். பரீட்சை எழுத பயம். மேடை ஏறி பேச பயம்.
             கல்லூரி சென்று புதிய மாணவர்கள் உடன் பேச,பழக பயம். பதினாறு வயது கடந்த பின்னரும் கூட பயம் இருக்கும். பள்ளி வாழ்க்கை முடித்து கல்லூரி வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பயம்.
                     போட்டிகள் நிறைந்த உலகில் போட்டித்தேர்வு எழுத பயம். போட்டித்தேர்வில் வெற்றி பெற்று வேலை கிடைக்குமா? என்பதில் பயம். 

பெண்ணின் பயம் 

          பெண்கள் தமக்கு பாதுகாப்பு கிடைக்குமா? என்பதில் பயம். கரப்பான் பூச்சியைப் பார்த்தல் பயம்.பல்லியைப் பார்த்தல் பயம். போட்டிகள் நிறைந்த உலகில் எப்படி வாழப்போகிறோம்? என்று பயம். திருமணம் நடக்குமா? என்று பயம். 
                      திருமணம் வாழ்க்கையில் என்னென்ன பிரச்சனை வரும்? என்று பயம். நாம் இல்லாமல் குடும்ப எப்படி நடக்கும்? என்று பயம். பயந்து பயந்து பாதி வாழ்க்கை முடிந்து விடும்.

       பயம் விளக்கம் 

         பயம் என்றால் என்னவென்று தெரியுமா? உண்மைக்குப் புறம்பாக இல்லாத ஒன்றை ஊதி பெரிதாக்குவது. இதை தான் fear என்றார்கள். Fஎன்பது falls, a என்பது appear, R என்பது reality. 
         பயத்திற்கு காரணம் மனமே. பயம் கவலையை உண்டு பண்ணும். 

கவலை, பயம் 

       "நடந்து போன கசப்பான நிகழ்ச்சிகளால் கவலை. நடக்கப்போகும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்காகவும் பயம் "
     இப்படி பயம், கவலை ஆகிய இரண்டாலும் பின்னப்பட்ட ஒரு ஆடையாகத்தான் பலர் மனம் உள்ளது. 
   "நேற்று என்பது உடைந்த பானை
      நாளை என்பது மதில் மேல் பூனை
     இன்று என்பது கையில் உள்ள வீணை"
   நேற்று முடிந்து விட்டது. நாளை எப்படியும் மாறலாம். இன்று நம் கையில் உள்ள நேரத்தை,  நேற்று பெற்ற அனுபவங்களோடு சிறப்பாக்க வேண்டும். பலரின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? 
   கடந்த காலம் பற்றிய கவலை 
  வருங்காலத்தைப் பற்றிய பயம் 
   நிகழ்காலம் _ மேலே கூறிய இரண்டின் கலவை. பயத்தால் நமக்கு நன்மை உண்டா? இல்லையா? இதன் பதிலை உங்களிடமே விடுகிறேன். 
தேர்வு  பயம் :
       தேர்வு என்று பள்ளியில் அறிவித்தவுடன் மாணவ, மாணவிகளின் உள்ளத்தில் மேலோங்கி நிற்கும் உணர்வு பயம். தேர்வு வந்து விட்டாலே போதும் பலருக்கு வயிற்றில் புளியைக் கரைத்த மாதிரியாகிவிடும்.தேர்வு பயம் யாருக்குத்தான் இல்லை? 
             நன்றாகப் படிக்கும் மாணவர்கள் கூட, தேர்வு நெருங்கும் வேளையில் கொஞ்சம் படபடப்புடன் இருப்பதைப் பார்த்து இருக்கிறேன்.

       பயத்தால் ஏற்படும் பிரச்சினைகளை

         நமக்கு தெரிந்த சில பிள்ளைகள் பகல் முழுவதும் படித்தும், இரவில் கண் விழித்து நன்றாக படித்து இருப்பார்கள். ஆனால் தேர்வு அறைக்குச்சென்ற உடனே படித்தது அனைத்தையும் மறந்து விடுவார்கள்.                                வினாத்தாள் வாங்கியவுடன் படித்துப் பார்த்தால் விடை தெரிவது போல்தோன்றும். விடை எழுத வராது. எனவே மனதில் பட்டதை எல்லாம் எழுதி விட்டு வந்து விடுவார்கள். திருத்தும் ஆசிரியர் பாடுதான் திண்டாட்டம். 
       அது மட்டுமா, இரவில் கண் விழித்து படித்தாகப் பொய்சொல்கிறாயா? என்று வீட்டில் இருப்பவர்களின் கேள்வி கனைகளும் துளைக்கும். இதன் விளைவு படிப்பின் மேல் ஆர்வம் போய்விடும். 

நேர்முகத் தேர்வு பயம் 

       சிலர் நேர்முகத்தேர்வுக்கு தன்னைத் தயார் படுத்திக்கொண்டு வருவார். அங்கு தேர்வு செய்பவர்கள் கேட்கும் கேள்விக்கு மிகச்சரியான பதில் தெரியும். ஆனால் பயத்தின் காரணமாக நெற்றியிலும், கைகளிலும் ஏன் உடம்பில் கூட வியர்வை வியர்த்துக் கொட்டிபதிலையும் மறந்து விடுகிறார்கள். 
       வகுப்பில் ஆசிரியர் கேட்கும் கேள்விக்கு பதில் தெரிந்தும் கைதூக்க, பதில் சொல்ல பலரும் பயப்படுவார்கள். 
  பயத்தைக் குறைக்க :
      பயத்தை மாற்றவில்லை என்றால் வாழ்வில் வெற்றி பெற முடியாது. பயம் வரும் போது செயலில் தொய்வு ஏற்படும். பரிச்சையில் பயம் வந்தால் பாஸ் ஆக முடியாது. மேடையில் ஏறி பேச பயம் வந்தால் திறம்பட பேச முடியாது.

   பயம் குறைக்கும் வழிகள்

     பயத்தை குறைக்க சிலவழிகளைப் பதிவிடுகிறேன். 

சிறு சிறு செயல் செய்ய பயம் 

    **பயத்தைப் போக்க சின்ன சின்ன செயல்களை செய்ய வேண்டும். மேடையில் ஏறி பேசுவதற்கு கண்ணாடியின் முன் நின்று பேசிப்பார்க்கலாம். தேர்வுக்கு பயமாக இருந்தால் சின்ன சின்ன பாடப்பகுதியை மனப்பாடம் செய்து எழுதிப் பழக வேண்டும். வாய் மொழியாக ஒப்புவித்தல் செய்யலாம்.

பயத்தை அணுகுதல்  

     **பயத்தை குறைக்க என்னசெய்வது? என்று யோசிக்கலாம். நமக்கு பயம் தரும் செயல்களைத் தள்ளி போடாமல் பயத்தை முன்னோக்கிச் செல்லுங்கள். பயத்தை தள்ளிப்போடபயம் அதிகரிக்கும்.  பயம் குறையாது.
                   வழியில் யானையைப் பார்த்தால் பயம்.அருகில் சென்றால் அதிக பயம். யானை தும்பிக்கையை நம் தலையில் வைத்தால் பயம் குறையும். பயத்தை தள்ளிப்போட்டால் பயம் அதிகரிக்கும். நேருக்குநேர் எதிர் கொண்டால் பயம் குறையும்.  

பயம் உளவியல் 

     **பயம் தோன்றும் போது காகிதம், பேனா கொண்டு எழுதுங்கள். பயம் தோன்றக் காரணங்கள் எழுதி வைத்து விட்டு பின்னர் வாசித்து பாருங்கள். பயம் குறையும் என்பது உளவியல் நிபுணர்கள் கருத்து.

பயம் தைரியசாலி  

     **உங்கள் பயத்தை நல்ல தைரியமான நபர்களிடம் பகிர்ந்து கொண்டால் அவர்கள் உங்களுக்கு பயத்தைப் போக்க தைரியம் சொல்லுவார்கள். பயத்தை மனதில் இருந்து  வேரொடு பிடுங்க தன்னம்பிக்கை போதும். அந்த தன்னம்பிக்கையை தைரியமானவர் உங்களுக்குத் தருவார். 
         'யானைக்கு பலம் தும்பிக்கையிலே,
          மனிதனுக்கு பலம் நம்பிக்கையிலே,'
  தன்னம்பிக்கை வந்தால் பயம்  பறந்தோடிப் போகும்.

     முடிவுகளுடன் பயம் 

 **பரிட்சையில் தோற்றல் என்ன நடக்கும்? என்று சிந்தியுங்கள். பரிட்சையில் தோற்றல் திரும்ப எழுதிக் கொண்டு தேர்ச்சி பெற்று விடலாம். பரிட்சை மீது பயம் போகும்.மேடையில் ஏறி பேசுகையில் தவறு ஏற்பட்டால் என்னதான் நடக்கும் என்று சிந்தியுங்கள். மேடையில் பேச பயம் வராது. 
  பிறர் போல் பயம் கொள்ளாதே!
      பயத்தை தவிர்ப்போம்! 

பயத்தை போக்க உதவும் நூல்


     இந்தப் புத்தகத்தைத் தொட்டுப்படிக்கலாம்.

No comments:

Post a Comment

Super useful ideas thank you reading