கோப மேலாண்மை / anger management
ஒவ்வொரு நாளும் மாறி வரும் சூழலில் காரணமின்றி கூடக்கோபம் (angry) வருகிறது. கோப மேலாண்மை செய்யத் தெரிந்தால் மட்டுமே பிரச்சனையை குறைக்க முடியும்.
கோப மேலாண்மை செய்யத் தன்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். எப்படி என்று நீங்கள் கேட்பதற்கு முன் நான் பதிலைப் பதிவு செய்து விடுகிறேன்.
கோபம் நமக்கு எதனால் ஏற்பட்டது அல்லது நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு எதனால் ஏற்பட்டது, எனக் கோபத்தின் மூலக் காரணத்தை அறிய முற்பட வேண்டும்.
அவரின் கோபத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய கோபத்தை மற்றவருக்குப் புரிய வைக்க முயற்சி செய்ய வேண்டும்.

கோபத்தின் விளைவுகளை யோசித்தல்:
நாம் கோபப்பட்டால் என்னென்ன நடக்கும். என்னென்ன மாறும், என்னென்ன பிரச்சனை ஏற்படும். இப்படி கோபத்தின் விளைவுகளை எண்ணிப்பார்க்க வேண்டும்.கோபம் கொள்ளமால் எந்தெந்த வழிகளில் பிரச்சனை சமாளிக்க முடியும் என்ற சரியான தீர்வை யோசித்தல் வேண்டும்.
சரி நண்பா. கோபம் தலைக்கு மேல் ஏறி விட்டது. என்னதான் செய்வது. கோபம் ஏற்படுத்திய நபர் அல்லது கோபம் கொள்ளக் காரணமானச் சூழ்நிலை ஆகியவற்றில் பேசு வதற்கு முன் யோசித்தல் அவசியம்.
கோபம், சொல் இரண்டின் ஒப்புமை:
சொல்லைக்கொட்டினால் அள்ள முடியாது. கோபத்தில் வரும் வார்த்தைகள் எதிரே உள்ளவரை மனதில் அம்பு போல் பாய்த்து ஆறாத வடுவாகி விடும். எனவே பேசும் முன் யோசித்தலே பாதி பிரச்சனை குறையும்.கோபம் வந்தபின் சிறிது அமைதியாக இருக்க வேண்டும். அமைதியாக இருந்தால் தான் கோபம் மேலாண்மைச் செய்யலாம்.
கோபம் வந்தஉடன் படபடவென்று சொல்லைக்கொட்டாமல், சிறிது நேரம் இடைவெளி விட்டு பேசுங்கள்.
என்னுடைய கோபத்தின் காரணம் இது தான் என்று கோபத்தின் காரணங்களைக்கூறி ஆறுதல் பெற வேண்டும்.
கோபம் வந்தால் என்னென்ன நோய் வரும் என்று "கோபத்தைக் குறைக்க"என்ற எனது கட்டுரையில் கூறி இருந்தேன். அதைப் படித்துப் பாருங்கள். இதைத்தொட்டுப் படிங்க https://pandiarajan1988143.blogspot.com/2020/06/manage-angry.html?m=1
கோபம் வராமல் இருக்க செய்ய வேண்டியவை:
கோபம் எனக்கு வரக்கூடாது. நான் என்னென்ன செய்ய வேண்டும்? என்று கேட்டால் முதலில் உடற்பயிற்சி செய்யுங்கள்.
தினந்தோறும் பத்து நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள். கைப்பயிற்சி, கால் பயிற்சி செய்யுங்கள்.
தினந்தோறும் பத்து நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள். கைப்பயிற்சி, கால் பயிற்சி செய்யுங்கள்.
கோப மேலாண்மையில் எழுத்துப்பயிற்சி:
கோபத்தைக்கையாள கோபம் வந்ததும் அந்த இடத்தை விட்டு வெளியேறி விடுங்கள். தனி அறையில் சென்று பேப்பர், பேனா எடுத்து அவரை பற்றி எழுதித் தள்ளுங்கள். பின்பு படியுங்கள் பேப்பரை கிழித்து எறியுங்கள். எழுதுவது சிரமம் என்றால், உங்களிடம் இருக்கும் smart phone யை வைத்து டைப் செய்து பின்னர் clear all கொடுத்து delete செய்ய வேண்டும்.இப்படி செய்யக் கோபத்தை சிறப்பாகக் மேலாண்மை செய்ய முடியும்.
கோபத்தைக்குறைக்க மூச்சுப்பயிற்சி:
கோபம் வந்தவுடன் மனது படபடப்புடன் இருக்கும். இதைக்குறைக்க ஒரு கப் தண்ணீர் பருகலாம். உடல் மூச்சின் வேகம் குறைந்து மன அழுத்தம் குறையும்.கோபம் அடக்க முடியாமல் இருந்தால் ஆழமாக மூச்சை இழுத்து விடுங்கள். மீண்டும் மீண்டும் மூச்சை இழுத்து விடவும். இவ்வாறு செய்வதால் கோப மேலாண்மை மேம்படும்.
கோப மேலாண்மையில் எண்களை எண்ணுங்கள்:
ஒன்று முதல் பத்து வரை எண்களை ஏறுவரிசையில் எண்ணுங்கள். பின்பு பத்திலிருந்து ஒன்று வரை எண்களை இறங்கு வரிசையில் எண்ணுங்கள். கோபம் குறைய அதிக வாய்ப்பு உள்ளது.
தினமும் தியானம், முத்திரை பயிற்சி செய்தால் கோபத்தை விரட்ட முடியும். தினமும் காலை அல்லது மாலைவேளைகளில் பத்து நிமிடங்கள் ஒதுக்கித் தியாானம் செய்யும்போது கோபம் குறையும். இப்படி செய்தால் கோப மேலாண்மை மேம்படும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-o3Ck8Wr3EO3U0yymYEMp5FwSsiZ2T5OpT6aHQphZVtRYvkLV6IPb5XG_mGyrXqKzVgPro5IRQiiL-NrfRzSiFu5-VvkmnNwxk2xiQDljSjIkH_MCh2cHs0e806Sk1ZMw7HmgHlXeluc/s320/OIP+%25285%2529.jpeg)

கோப மேலாண்மை மேம்பட ஆலோசனை:
கோபம் கட்டுபடுத்த தம்மால் முடிய வில்லை என்றால் கோபத்தை மேலாண்மை செய்ய பிறரை அணுகி ஆலோசனைப் பெறலாம். உளவியல் நிபுணர்கள், ஆலோசகர், மருத்துவர் போன்றோரின் உதவியை நாடி கோபத்தைக் கையாள முடியும்.
பிறர் எவ்வாறு கோபத்தை ஆரோக்கியமான முறையில் மேலாண்மை செய்கிறார்கள் என்பதை நீங்கள் கவனித்து வர உங்களால் கோபத்தை மேலாண்மை செய்ய முடியும்.
பிறர் எவ்வாறு கோபத்தை ஆரோக்கியமான முறையில் மேலாண்மை செய்கிறார்கள் என்பதை நீங்கள் கவனித்து வர உங்களால் கோபத்தை மேலாண்மை செய்ய முடியும்.
கோபத்தைக் குறைக்க வீடியோ:
கோபம் வந்தவுடன் பதற்றம் வந்து சேரும். அப்பொழுது பதற்றத்தைக் குறைக்க நகைச்சுவை வீடியோ பாருங்கள். அல்லது நகைச்சுவை பேச்சைப் பயன்படுத்தி பேசுங்கள். இப்படி நகைச்சுவையாக பேசியும் உங்கள் கோபத்தை மேலாண்மை செய்ய முடியும்.கோப மேலாண்மையில் மன்னிப்பு:
கோப மேலாண்மையில் மிகப்பெரிய சக்தி வாய்ந்த ஆய்தம் மன்னிப்பு. பிறர் செய்த செயலை மன்னித்துவிடுங்கள்.அவர்மீது வன்மத்தை வைத்துப்பழிவாங்கும் உணர்வைத் தூக்கி வீசுங்கள்.
"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று ".
என்ற தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் படி நடப்போம்!!
மறப்போம் !! மன்னிப்போம் !!கோப மேலாண்மை சிறப்பாகச் செய்வோம்!!!