H

Sunday 21 June 2020

How to download CPS allotment letter & correction

            How to download cps allotment letter. என்னால் cps allotment letter ஐ download செய்ய முடியுமா? என்று கேட்டால் கண்டிப்பாக உங்களால் cps allotment letter download செய்ய முடியும். எப்படி என்று ஒவ்வொரு படியாகச்சொல்கிறேன். 
         அது இருக்கட்டும் நான் ஏன் cps allotment letter download செய்யனும். அதனால் என்னக்கு என்னப்பயன் என்று கேட்டால் அதற்கு விடை இதோ உங்களுக்கா.
        CPS என்பதன் விரிவாக்கம் Contribution pension scheme. 2004 ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்த அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் cps திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். GPF திட்டத்தில் சேர்ந்த அனைவருக்கும் pension உண்டு. ஆனால் Cps திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு இதுவரை pension  இல்லை என்று தகவல்.இனி வரும் காலங்களில் பென்ஷன் வந்தால் cps allotment letter தேவைப்படும். Cps allotment letter உங்கள் வாரிசுதாரர் (nominee details) விபரம், அவருக்கு வழங்க வேண்டிய பங்கு (share) சதவீதம் கொடுக்கப்பட்டு இருக்கும். உங்கள் பெயரில் எழுத்துப்பிழையின்றி, பிறந்த தேதி, நீங்கள் பணிபுரியும் துறை பற்றி சரியாக உள்ளதா என்று  அறிய வேண்டுமா?.எனவே cps allotment letter download செய்வது எப்படி எனத்தெரிந்து கொள்வோம்.
  
        இன்று எல்லாருடைய கையிலும் கண்டிப்பாக இருப்பது smart phone. Smart phone இல் Google search box ல் Cps அல்லது cps.tn.gov.in/public /menu.php என்று டைப் செய்து search கொடுங்க. கொடுத்தவுடன் cps சம்பந்தப்பட்ட எல்லாம் வரும். அதில் welcome to the site - scheme cps தொடவும். அல்லது CPS.TN.GOV.IN  
    இதைத்தொட்டு நேரடியாக cps tn website  செல்ல முடியும். 
      இது Government data center, Government of tamil nadu, chennai - 600085, welcome to online cps  என வரும். அந்தப் பக்கத்தில் subcriber login  என்ற கட்டம் இருக்கும். அதில் உங்கள் cps number டைப் செய்து விடுங்க. அதற்குக்கீழே பிறந்த தேதி டைப் செய்ய வேண்டும். பிறந்த தேதி உதரணமாக  8/6/1990 என எடுத்துக் கொண்டால் டைப் செய்யும்போது  08/06/1990 என்று இடைவெளி இல்லாமல் டைப் செய்து log in செய்ய வேண்டும். 
       இப்போது உங்கள் details வரும். Government data center, Government of tamil nadu, chennai - 600085. அதற்குக்கீழே உங்கள் cps number, your name, your job details இருக்கும். அதற்குக்கீழே ஒரத்தில் மூன்றாவது வார்த்தையில் cps allotment letter இருக்கும். அதைத்தொட்டவுடன் download கேட்கும். Ok கொடுத்தவுடன் download ஆகி விடும். இப்ப உங்கள் போனில் my fills ல் download options போய் open  செய்துப்பார்க்கலாம். Print எடுத்துப்பைலில் சேமித்து வைக்கலாம். 
      Cps allotment letter படித்துப்பாருங்கள். அதில் உங்கள் பெயர், cps number, பிறந்த தேதி, Date of joining, Department, category, DDO details, Naminee details, relationship,  share (பங்கு சதவீதம்) போன்றவை சரியாக இருக்கும், இல்லை என்றால் திருத்தம் செய்ய உங்கள் DDO  வை அணுகலாம். 
       அவருக்குத்தெரியவில்லை என்றால் CPS tamil nadu head office address with phone number தருகிறேன். ஒரு வாரத்தில் சரி செய்யப்படும். போனில் உங்களிடம் தொடர்பு கொண்டு Cps officers பேசுவார்கள். Cps head office சென்னை அனுப்பும்போது உங்கள் விண்ணப்பம்,அதில் அனுப்புநர் நீங்கள் பணிபுரியும் அலுவலகமுகவரி, போன் நம்பர்,பெறுநர்cps address, வழி உங்கள் தலைமை ஆசிரியர் அல்லது அலுவலக தலைவர், பொருள் cps allotment letter correction தொடர்பாக,கடிதத்தின்விளக்கம் சுருக்கமாக, உங்கள் கையெழுத்து, வழி தேவைப்பட்டால் மட்டும் பயன்படுத்தினால் போதும்.
          இணைப்பு Cps allotment letter, உங்கள் job id card copy இணைத்து விடவும். இதை postal மூலம் அனுப்பி வைக்கவும். 
        பெறுநர்&அஞ்சல் முகவரி 
      முதன்மை செயலாளர் / ஆணையாளர், 
        அரசுத்தகவல் தொகுப்பு விவர மையம், 
       கோட்டூர், சென்னை _ 600025
       Pin code : 600 025
 Phone number : +91- 4422350120
                               +91- 4422351222
               கடிதம்  அனுப்பி  ஒரு வாரத்தில் அதற்குத்தீர்வு கிடைக்கும்.Cps correct allotment letter உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.  சில மாதங்களுக்கு முன் Cps allotment  letter correction நான் செய்து உள்ளேன். அந்த அனுபவத்தைப்பதிவு செய்து உள்ளேன். 
        எதுவும் புதிதல்ல நாளுக்கு நாள் புதிய தகவல்கள் கற்போம். சிறப்புடன் வாழ்வோம்.
     Cps திட்டத்தில் தற்போது பென்ஷன் உண்டா? 
        பதிலை yes or no என comments தொட்டு type செய்யவும். நன்றி.