H

Thursday 25 June 2020

How to get deep sleep ஆழ்ந்த தூக்கம் வர

         உணவு இல்லாமல் கூட வாழ்ந்து விட முடியும். ஆனால் தூக்கம் வரவில்லை என்றால் நிம்மதியாக வாழ வாய்ப்பில்லை. எனக்கு நிம்மதியான தூக்கம் இல்லை. கண் எரிச்சலாக இருக்கு டாக்டர். தூக்க மாத்திரை கொடுங்க என வாங்கி விழுங்கும் சிலர் உள்ளனர். இரவு தூக்கம் ஒரு நாள் கெட்டால் ஐந்து நாளைக்கு அலுப்பு இருக்கும் என்று பெரியவர்கள் சொல்வது உண்டு. 
        இன்றைய இளைஞர்கள் இரவு தூக்கத்தை பறித்து விடுகிறது mobile phone. இன்று சரியான நேரத்தில் தூங்க செல்பவர்கள் மிக குறைவு. நீங்களும், நானும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆழந்த தூக்கத்தை பெற வேண்டுமா? இதைப்படிங்கள்.
       இரவில் சரியான நேரத்தில் படுக்கைக்கு செல்ல உங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இரவு பத்து மணிக்கு மேல் எந்த வேலையையும் செய்யமாட்டேன் தூங்க சென்று விடுவேன் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இரவு பத்து மணிக்கு மேல் தூங்க வில்லை என்றால் வரும் உடல் உபாதைகள் எண்ணி விருப்பப்படி தூங்க செல்ல வேண்டும். 
           மனிதன் பழக்கத்திற்கு அடிமை. எனவே நம்மை நாமே பழக்கப் படுத்திக்கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் படுக்கைக்கு செல்ல வேண்டும் என பல மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். தூங்க செல்ல சரியான நேரம் எது? என்று கேட்டால் இரவு பத்து மணி முதல் அதிகாலை இரண்டு மணி வரை இளமை ஹார்மோன் சுரக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே இரவு பத்து மணி முதல் காலை இரண்டு மணி வரை தூங்கினால் ஆழ்ந்த தூக்கம் கண்டிப்பாக வரும். 
           இரவு தூங்க செல்லும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு அலை பேசி, மடிக்கணினி, கணினி  பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இந்த சாதனங்களில் உள்ள blue light waves உங்கள் கண்களிலும் , உங்கள் தோலிலும் தூக்கத்தை தூண்டும் ஹார்மோன் சுரப்பிகள் சுரப்பதை தடுக்கும். என்னால் cell phone, laptop, computer பயன்படுத்தாமல் இருக்க முடிய வில்லை எனில் உங்கள் சாதனத்தில் உள்ள blue light mode off செய்து விடலாம். அதற்கு நிறைய அப்ளிக்கேஷன் வந்து உள்ளது. அதைப் பயன்படுத்தி blue light mode off செய்து விட்டு பயன்படுத்தினால் தூங்கச்செல்லும் போதுஆழ்ந்த தூக்கம் வரும். 
        தொலைக்கட்சியை தூங்கச்செல்லும் ஒரு மணி நேரத்திற்கு முன் பார்ப்பதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 
       சிலர் தூங்கும் அறையில் லைட் போட்டுக்கொண்டு தூங்குவது வழக்கம். இது கண்டிப்பாக தவறான ஒன்று. சிலர் கண்களைக் கறுப்பு துணி கட்டிக் கொண்டு தூங்குவார்.நான் தான் வெளிச்சத்தை பார்க்க வில்லை என்றால் உங்கள் தோலில் வெளிச்சம்  படுகிறது எனவே ஆழ்ந்த தூக்கம் வராது. கண்களுக்கும், தோலுக்கும் நிறைய தொடர்பு உண்டு. இரண்டிலும் வெளிச்சம் படவில்லை என்றால் மட்டும் தூக்கத்தை தூண்டும் ஹார்மோன் சுரக்கும். என்னால் இருட்டறையில் தூங்க முடியாது என்றால் அந்த அறையில்  blue colour light தவிர்த்து red, yellow colour light யை சிறிய லைட்டாக  பயன்படுத்திக் கொண்டால் உங்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வரும். 
        இரவில் தூங்குவதற்கு முன் வெந்நீரில் குளிக்க உடலில் வெப்பநிலை சமநிலை அடைய முயற்சிக்கும். ஆழ்ந்த தூக்கம் வரும். படுக்கையில் குறைந்த அளவு ஆடைகளை அணிந்து கொண்டால் உடல் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு குறைவு. Night dress பயன்படுத்த வேண்டும். 
                      ஜீன்ஸ், லெக்கீன்ஸ் போன்ற இருக்கமானஆடை அணிவதால் உடல் வெப்பம் அதிகரிக்கும். உங்கள் தூக்கத்திற்கு தடையாக இருக்கும். அமெரிக்காவில் தூக்க பிரச்சனை உள்ள பலருக்கும் சோதனை செய்யப்பட்டது. இதில் அவர்கள் சராசரியாக தூங்கும் போது அவர்கள் அணிந்திருந்த ஆடையால் இரண்டு டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்தது என்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு குறைவாக ஆடையை அணிந்து தூங்க பரிந்துரைகள் செய்தனர். ஒரு வாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு அவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வந்துள்ளதைக் கண்டறிந்தனர். ஆகவே இரவில் இருக்கமானஆடை அணிவதைத் தவிர்த்தல் மூலம் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். 
           இரவில் ஆழ்ந்த தூக்கம் வரவேண்டும் என்றால் மதியம் இரண்டு மணிக்கு மேல் காபியை பருகக்கூடாது. அதில் உள்ள ஹாபின் என்ற வேதிப்பொருள் ஆழ்ந்த தூக்கம் வர உதவும் ஹார்மோன் சுரப்பதை தவிர்க்கும். எனவே மதியம் இரண்டு மணிக்கு மேல் காப்பிக்கு டாட்டா சொல்லிவிடுங்கள். 
       இரவில் ஆழ்ந்து தூங்க வேண்டுமானால் தூங்கச்செல்லும் முன் பால் பருக வேண்டும்.
பாலில் தூக்கத்தைத் தூண்டக்கூடிய டிரைப்டோபான் என்ற அமிலச்சத்து உள்ளதால் தூக்கத்தைத் தூண்டும். 
        இரவில் மது குடித்து விட்டு தூங்குவது மயக்கத்தை ஏற்படுத்துமே தவிர ஆழ்ந்த தூக்கத்தை தராது. படுக்கைக்கு செல்லும் முன் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவை தவிர்த்தால் ஆழ்ந்த தூக்கம் வரும். 
     இரவு  இலேசான உணவை உட்கொள்ள வேண்டும். அதிகமான கொழுப்புச்சத்து உள்ள இறைச்சியை இரவு உணவாக சாப்பிட்டால் இரவு தூக்கம் கெட்டுவிடும். 
        இரவில் அதிகமாகச் சாப்பிட்டால் வயிறு இரவு முழுவதும் 'ஓவர்டைம் ' வேலை செய்வதால் தூக்கம் கெட்டுப் போய்விடும். 
         இரவில் செரிமானப்பிரச்சனை உள்ள உணவுகளான கீரை, தயிர், ஊறுகாய் தவிர்க்க வேண்டும். புளிப்பு சுவையாக உள்ள ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களை தூங்கச்செல்லும் முன் சாப்பிடுவதைத் தவிர்த்தால் செரிமானப் பிரச்சனை ஏற்படாமல் ஆழந்த தூக்கம் வரும். 
         பகலில் தூக்கத்தைத்தவிர்க்க வேண்டும். முடியவில்லை என்றால் பகல் தூக்கம் அரை மணி நேரத்திற்கு மிகாமல் தூங்கி வந்தால் இரவில் ஆழந்த தூக்கம் வரும். 
       தூங்கும் இடத்தை  ( bed) கட்டில் அல்லது மெத்தையின் மீது அமர்ந்து கொண்டு அலை பேசி, மடிக்கணினி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அந்த பகுதியை படுக்கையாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். நம் படுக்கும் இடத்தில் இருந்து ஒரு மீட்டர் தூரத்தில் தான் அலைபேசி வைக்க வேண்டும். அப்போதுதான் அலைபேசியின் கதிர்வீச்சு உங்கள் மூளையைத் தாக்குதல் நடத்தாமல் ஆழ்ந்த தூக்கத்தைத் தரும். Bed is only for sleeping என்ற தத்துவத்தைப் பின்பற்றினால் ஆழ்ந்த தூக்கம் வரும். 
            இரவு உணவு உண்ட உடனே தூங்கச் செல்லக்கூடாது. சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்தபின் தூங்கலாம். தூக்கம் தானே வரும். இரவு உணவை சாப்பிட்டு விட்டு குடும்ப உறுப்பினர்களிடம் பேசி இன்று நடந்த செயலைக் கூறி நாளை என்னச்செய்வது எனக் கலந்துரையாடல் செய்து பின் தூங்கலாம். 
             இரவு உணவை இரவு எட்டு மணிக்குள் சாப்பிட்டு விட்டு  பின்னர் ஒரு மணிநேரம் கழித்து உறங்கச் சென்றால். உணவும் செரிமானம் ஆகிவிடும். ஆழ்ந்த தூக்கம் வரும். 
       இரவு தூக்கத்திற்கு செல்லும் முன் டைரி எழுதும் போது  உடல் சோர்வாகி தூக்கத்தை வரவழைக்கும். இதே போல் தான் நூல்கள் படிக்கும் போது உடலில் களைப்பு ஏற்பட்டு ஆழ்ந்த தூக்கம் வரும். 
           ஆழ்ந்த தூக்கம் வர வேண்டுமென்றால் தூங்கச்செல்லும் முன் தியானம், ஜபம், கடவுளை மனதில் நினைத்து அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து இருத்தல் போன்றவை செய்யலாம். மிக முக்கியமாக மூச்சுப் பயிற்சியும்  செய்யலாம். 
            இதைக் கடைபிடித்தால் ஒவ்வொரு இரவிலும் ஆழ்ந்த தூக்கம் கண்டிப்பாக வரும். நல்லத் தூக்கம் தான் அனைத்து நோய்க்கும் மருந்து. 
ஆழ்ந்த தூக்கத்தைப்பெறுவோம்!
அனைத்து நோயையும் விரட்டுவோம்!!
          

No comments:

Post a Comment

Super useful ideas thank you reading