விடை தேட! நடை போடு!! Search Answer Go walk
இளைஞர்களின் விடை
இன்று இளைஞர் நாளை சமுதாய தலைவர் இந்தியாவின் எதிர்காலத்தூண்கள் இப்படித்துருப்பிடித்துப் போய்கிடக்கின்றீர்கள். என்று யாரவது கேட்டால் "வேலை கிடைக்கவில்லை" என்கின்றனர்.
இப்படி சோர்ந்துப்போய் உட்கார்ந்திருந்தால்எல்லாம்கிடைத்து விடுமா?
விடை தேட தூண்டும் வரிகள்
சிறகுகளை விரிக்காமல் பறவை எப்படிப் பறக்கும்? காற்று நுழையாமல் புல்லாங்குழலில் கானம் எப்படிப்பிறக்கும்? துடுப்பைஇயக்கமால் படகில் எப்படிப்பயணம் செய்வது? கேள்வி கேட்காமல் விடை எப்படி தெரியும்?
வீறு கொண்டு விடை தேட
இளைஞர்களே, நீீங்கள் ஏன்முடங்கி போய்கிடக்கின்றீர்கள்.முதலில் சோம்பலைச் சுருட்டி போடுங்கள். வீறு கொண்டு எழுங்கள். நடந்து செல்லுங்கள்.
"உங்களால் பறக்கமுடியவில்லை எனில் ஓடுங்கள்; ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள்; நடக்க முடியாவிட்டால் ஊர்ந்து செல்லுங்கள்"
மார்டின் லூதர் சொன்ன மகத்தான கருத்தை கடைபிடித்து வெற்றி இலக்கை அடைய முயலுங்கள்.
தட்டுங்கள் திறக்கப்படும்
"கேளுங்கள் தரப்படும்...
தட்டுங்கள் திறக்கப்படும் ...
தேடுங்கள் கண்டடைவீர்"
என்ற வசனத்தை நினைவு படுத்துங்கள். உங்கள் வாழ்க்கையின் வெற்றி பாதை கண் முன்னே தோன்றும். புதையல்கள் நிறைந்த பூமியில் நடப்பதற்கு எத்தனையோ பாதைகள் இருக்கின்றன.
ஆனால் சரியான நேரத்தில் சரியான முறையில் மிகச்சரியான பாதையை தேர்ந்தெடுக்கப்பட்டவர் வாழ்வில் வெற்றி பெறுவார்.
சரியான பாதையில் விடை தேட
வெற்றிபெற வேண்டும் என நினைப்பவர்கள் முதலில் சரியான பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் பயணத்தை தொடங்கவேண்டும்.
எப்படி பயணத்தை தொடங்குவது? உதாரணமாக வீட்டின் மாடிப்படியில் பல படிகள் உள்ளன. கடைசி படியை அடைவதற்கு முதல் படியில் முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும். முதற்படி இரண்டாம் படிக்கான வழியைக்காட்டும். அப்படியே ஒவ்வொருப் படியாகச் சென்றால் செல்ல வேண்டிய இடத்தைச்சென்றடைய முடியும்.
ஆனால் முதல் அடியே தவறான திசையில் வைக்கப்பட்டால் நீங்கள் சேர வேண்டிய இடத்தை எப்பதான் அடைவது?
விடை தேட பொன்மொழி
"சிந்தனை தெளிவிருந்தல் திறந்த மனம் இருக்கும்;
திறந்த மனம் இருந்தால் இலக்குகளை நிர்ணயிக்கும் ;
முழு முயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம்;
வெற்றி கிடைத்தால் வாழ்க்கை உயரும்.
மனிதன் உடலில் இரண்டு கால்கள் உண்டு .மனித படைப்பிலும் இரண்டு கால்கள் உண்டு. அளவாக எட்டு வைத்தால் தான் சரியாக நடந்து செல்ல முடியும்.
அகலமாக காலை வைத்தால் கிழே விழ வேண்டி வரும். வீழ்ச்சிக்குப் கால்களைத் தான் காரணம் சொல்வது உண்டு. அவன் அகலக்கால் வைத்து விட்டான். அதனால்தான் நஷ்டம் வந்துவிட்டது. அவர் 'தலைகால் தெரியாமல் ஆடினார்.' அதனால் குப்புற விழுந்து விட்டார். எழுவதும் கால்களில் இருக்கிறது என்பதை உணருங்கள்.
விடை தேட நூல் படி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguQ9iNjvDsWwKxUHmOogV1uHncQzR5G2HhQ3hZ9_0HNjpskjO7GHsP85i_rbWMfYTp1xuxm27hlQIX_EoVzrWsIebrUJNW0VoB4K2Japgc3NQAxwU9P4AUg083V3ylvN4oVakDDj3HhYI/s320/Tamil_News_large_2494159.jpg)
உங்கள் மனதில் ஏதேனும் தனிமையான உணர்வு உள்ளதா கவலைப்படாமல் இருக்க , மகிழ்ச்சி அடைய, மனம் புத்துணர்ச்சி பெற வேண்டுமா,வாழ்க்கையில் வெற்றி பெற நல்ல புத்தகங்களை நாள் தோறும்படியுங்கள்." புத்தகமே சிறந்த நண்பன்"
தினமும் ஐந்து நிமிடங்கள் நல்ல புத்தகங்களை வாசிக்க பழகுங்கள் உங்களுக்கு தன்னம்பிக்கை வரும் ..மனதில் மகிழ்ச்சி வரும் புதிய சிந்தனை தோன்றும். தனிமை போகும்தைரியம் பெருகும்.
செய்யும் வேலையில் ஆளுமை வளரும். நூலாசிரியரின் கருத்துக்கள் நம்ம வாழ்க்கையைச் செம்மை படுத்தும்.
இந்த ஒருவர் படிக்கும் புத்தகமே அவர் வாழ்வில் முன்னேற ஒரளவுக்கு உதவி செய்யும்.
விடைத்தேட உதவும் அனுபவம்
மிகுதியாக அவர் பெற்ற அனுபவம்தான் வாழ்க்கையை வளப்படுத்தும்.அனுபவங்கள் மூலம் கிடைக்கும் பாடம் வாழ்க்கைப் பயணத்தை பயனுள்ளதாக மாற்றும்.
இதோ கவியரசர் பாடல் வரிகள்,
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் முடியும்
பயணம் முடிந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
இப்பாடல் வரிகள் மொத்தவாழ்வின் அணுகுமுறை சூத்திரம்.
பக்குவம் நடை போடு
தெளிவு பெற்ற மனம் சாதனைச் சாலையில் சகதி இருந்தாலும் சந்தனம் இருந்தாலும் சலனமின்ற செல்லும்.
இந்த பக்குவத்தை பயணத்தில் பெற உங்களால் முடியும். நம்பிக்கை வாழ்க்கையை நடத்தும். நம்பிக்கை புயல் காற்றில் துவண்டு விழும் மெல்லிய மலர் அல்ல. அது அடிபெயரா இமயம் போன்றது.
விடைத்தேட பலம் பலவீனம்
நம்மிடம் இருக்கும் பலம், பலவீனம் பற்றி தெரிந்து கொண்டு பட்டியல் இட்டு பலவீனமாக உள்ளதை பலமாக மாற்றும் வழிகளில் நம் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தால் வெற்றி நிச்சயம் உங்களை வந்தடையும். எல்லா திறமை உங்களுக்குள் ஒளிந்து உள்ளது.. எழுந்திரு , விழித்திரு, குறிக்கோளை அடையும் வரை நில்லாதே. இப்பொழுதே விடை தேடுங்கள் நடை போடுங்கள் அந்த பாதை உங்கள் பாதங்களை வரவேற்க காத்திருக்கிறது. வெற்றி நமதே.
Super useful ideas for all age groups people
ReplyDeleteSuperb
ReplyDelete