H

Wednesday 17 June 2020

Smart ration card Address changes (ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் செய்ய )

                  Smart ration card முகவரியை மாற்றப்பத்தே நிமிடங்கள் போதும் உங்கள் ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் உங்கள் வீட்டில் இருந்தே செய்யலாமே. எப்படி என்றால் கையில் smart phone இருந்தால் போதும் உங்கள் ரேஷன் கார்டில் முகவரியை மாற்றிக் கொள்ளலாமே. 
                     பணியிடமாறுதலில் வெளியூர் செல்லும் போதும் உங்கள் ரேஷன் கார்டில் முகவரியை மாற்றவீட்டில் இருந்தே ஐந்தே நிமிடங்களில் செய்யலாம். நீங்கள் பணிபுரியும் ஊருக்கு அருகில் உள்ள ரேஷன் கடைக்கு ஒரே வாரத்திலேயே மாறிவிடும்.Smart phone எடுத்து Google search சென்று TNPDS அல்லது http://www.tnpds.gov.in இணையதள முகவரியை டைப் செய்யவும். அல்லது https://tnpds.gov.in/ இதைத்தொட்டால் நேரடியாக சென்று பாருங்கள். 
மேலே இருந்து கீழேவர குடும்ப அட்டை முகவரி மாற்றம் செய்ய  என்று வாக்கியம் இருக்கும்.அதைத்தொடுங்கள். உள்ளே சென்று பயனாளர் கைபேசிஎண்ணைப் பதிவிடவும். அதன் கீழே ஆறு இலக்க கேப்சர் குறியீடு பதிவு செய்து சமர்ப்பிக்க பட்டனை தொடுங்கள். 
300 வினாடிக்குள் பதிவு செய்யப் பட்ட உங்கள் மொபைல்போனுக்கு தங்களது பொதுவினியோகத்திட்டத்திற்கான அங்கீகார குறியீடு Portol தங்களது உள்நுழைவு ××××××× என்று குறுஞ்செய்தி வரும். அதில் உள்ள ஏழு இலக்க எண்ணை உள்ளிடவும் 
என்விவரம் என்று வரும். அதில் குடும்ப தலைவர் பெயர், குடும்ப அட்டை எண், அ.பதிவு எண், குடும்ப அட்டை வகை, (அரிசி), குடும்ப அட்டை முகவரி இருக்கும். 
அதற்குகீழே புதிய முகவரி விவரங்களை ஒன்றன் பின் ஒன்றாக நிரப்பவும். முதலில் ஆங்கிலத்தில் புதிய முகவரியை உள்ளிடவும். Address 1, Address 2, Address 3 முன்றில் கதவு எண், தகப்பனார் பெயர்,தெருபெயர் பிளாட் நம்பர் உள்ளிடவும். District ~ select தொடுங்கள் உங்கள் மாவட்டத்தைத்தேர்ந்து எடுக்க வேண்டும். 
Taluk ~select உங்கள் தாலுகாவை தேர்ந்தெடுக்க வேண்டும். 
Village ~ select  உங்கள் ஊரின் பெயர் வரும் தேர்ந்தெடுக்க வேண்டும். அஞ்சல் குறியீடு பதிவு செய்ய வேண்டும். 
இதே போல்தமிழில் நிரப்பவும். 
முகவரி மாற்றம் செய்ய ஆவணங்களைத்தேர்ந்தெடுக்க வேண்டும். 
*ஆதார் அட்டை 
*வாக்காளர் அடையாள அட்டை 
*எரிவாயு நுகர்வோர் அட்டை சிலிண்டர் பில் 
*வரி ரசீது  (வீட்டு உரிமையாளர்)
*வாடகை ஒப்பந்தம்  (வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கு)
*குடிசை மாற்று வாரியம் ஒதுக்கீடு 
* வீடு ஆவணம் 
*மின்சார கட்டண ரசீது 
*தொலைபேசி கட்டண ரசீது 
*வங்கி கணக்குப்புத்தகம் 
இவற்றில் ஏதேனும் ஒன்றை உங்கள்  அலைபேசியில் போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும். 
அதை photos resize application  (mobile app)கொடுத்துபோட்டோ அளவை 1.0 MB ஆக png, gif, jpg, pdf format இல் மாற்றிப்போனில் சேமித்து வைத்து விட்டவும். 
மேலே உள்ள ஒரு ஆவணத்தில் click கொடுக்கவும். 
Files input உள்ளே சென்று image or gallery ல் photo resize app save photo click கொடுக்கவும். File input ஆனதும் சமர்ப்பிக்க ¤¤¤தொடுங்கள். முகவரி மாற்றம் வெற்றிகரமாகப்பதிவு செய்யப்பட்டது. உடனே உங்கள் அலைபேசியில் உங்கள் கோரிக்கை வெற்றிகரமாகச்சமர்ப்பிக்கப்பட்டது. கோரிக்கை எண் ××××××××××× என்று குறுஞ்செய்தி வரும். பத்து நிமிடங்களில் smart ration card முகவரி மாற்றம் செய்ய முடியும். 
சில ideas 
###Ration card address change செய்ய அந்த மாதத்திற்குரிய பொருட்களை வாங்கிய பின் ஆங்கில மாதத்தின் 25 தேதிக்கு மேல் முகவரி மாற்றம் கோரிக்கை வைக்கலாம். ஏனெனில் முகவரி மாற்றம் ஏழு நாட்களில் முடிந்து விடும். ஆனால் அந்தக் கடைக்கு உங்கள் அட்டைக்குரிய பொருட்களை ஒதுக்கீடு செய்ய ஒரு மாதம் ஆகும். 
### smart ration card முகவரி மாற்றம் செய்ய ஆவணமாகச்சிலிண்டர் பில் வைக்கலாம். சிலிண்டர் பில்லை எளிய முறையில் புதிய முகவரி பெற்று உள்ளீடு செய்யலாம். 
 ### உங்கள் வீட்டிலிருந்து முகவரி மாற்றம் செய்யலாம் அல்லது நெட் சென்டர்களில் சென்று ஐந்து நிமிடங்களில் செய்து விடலாம். 
Smart ration card தகவல்கள் தொடரும்...