H

Tuesday 16 June 2020

Smart ration card தொலைந்துவிட்டதா?

                   Smart ration card தொலைந்து விட்டதா?ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறதா. 
                 Smart ration card தொலைந்து விட்டது என்றாலும் ரேஷன் கடையில் அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை வாங்க முடியும். எப்படி என்று கேட்டால் இதோ வழிகளைப் படியுங்கள். 
             புதியதாக ரேஷன் கார்டு விண்ணப்பம் செய்து இதுவரையில் ரேஷன் கார்டு வரவில்லை என்றாலும்கூட பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். 
                  சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்து தனி குடும்ப அட்டைப்பெறுவதற்கு விண்ணப்பம் செய்து புதிய அட்டை பெறவில்லை என்றாலும் உங்களுக்கு ரேஷன்கடை மற்றும் smart card number ஆகியவை பதிவு செய்த mobile number க்கு message வரும்.
            அதன் பின் பொருட்கள் வாங்க Smart ration card தேவையில்லை. 
                       தமிழக அரசு  smart ration card திட்டத்தை  2013 _ 2014 ஆண்டுகளில் நடைமுறைக்குக்கொண்டு வந்தது. 
                      தமிழக அரசின் சார்பில்  ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கிக்கொள்ள மூன்று வழி முறைகள் பின்பற்றலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 
                          ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கப்பெரும்பாலானவர்கள் பின்பற்றும் வழிமுறை 
Smart ration card வைத்து scan செய்து அரிசி,பருப்பு, பாமாயில், சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்ற பொருட்கள் வாங்கி கொள்ளலாம். 
                      இரண்டாவது முறையாக smart ration card இல் சேர்த்து உள்ளவர்களில் எவரேனும் ஒருவரின் ஆதார் அட்டை ஒரிஜினல் வைத்து scan செய்து பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். 
                ஆதார் அட்டை கணவன், மனைவி, குழந்தைகள் என எதாவது ஒரு ஆதார் அட்டை ஒரிஜினல் போதும். 
                    மூன்றாவது வழி முறையாக smart ration card பதிவு செய்யும் போதும் கொடுக்கப்பட்ட mobile number ஐ ரேஷன்கடை விற்பனையாளரிடம் சொல்ல அவர் scanning machine இல் mobile number பதிவு செய்து  transaction code அந்த mobile number க்கு அனுப்பி வைப்பார். பதிவு செய்யப்பட்டுள்ளது mobile phone யை கடைக்குச்செல்லும் போதுஉடன் எடுத்துச்செல்ல வேண்டும். 
📱📲 உங்கள் mobile phone க்கு வந்த OTP சொல்லிப்பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம். 
 ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க மூன்று வழி முறைகளில் உங்களுக்கு ஏற்ற ஒரு வழிமுறையைப்பயன்படுத்திப் பொருட்கள் வாங்கி பலன் அடையுங்கள். 
Smart ration card தகவல்கள் தொடரும்.