H

Tuesday 28 July 2020

விக்கல் நிற்க / stop vikkal tips

விக்கல் நிற்க /  STOP vikkal tips

விக்கல்

விக்கல் நமக்கு சௌகரியமானதாக இருக்காது. விக்கல் வந்தால் சிக்கல் என சிலர் நினைப்பார். விக்கல் ஒரு தனி நோய் என சித்த மருத்துவம் கூறுகிறது. வயிறு செரிமானம் இல்லாமல் இருந்தால் விக்கல் வரும். 
             அவசரமாகக் கெட்டியான உணவுப் பொருளை உண்பதால்  விக்கல் வரும். அதிகக்காரம், இனிப்பு, மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்டாலும், வயிற்றில் காற்று சேர்ந்தாலும், வயிறு புண்பட்டிருந்தாலும் விக்கல்வரும். 

விக்கல் நிற்க

         சிலருக்கு விக்கல் தண்ணீர் அல்லது வெந்நீர் குடிக்க நின்று விடும். சிலருக்கு இவை எதிலும் சரியாகாமல் நாள் கணக்கில் விக்கல் தொடர்வது உண்டு. 
                பால்குடிக்கும் குழந்தைகளுக்கு அடிக்கடி விக்கல் உண்டாகும். இதை குழந்தைகளுக்கு வயிறு பெருக்கிறது என்று சொல்வார்கள். 

விக்கல் பழமொழி

                 "விக்கல் கண்டால் ஏக்கம் 
                 வீக்கம் கண்டால் தூக்கம் "
என்பது பழமொழி. விக்கல் நண்பணுக்கு எடுத்தால் உடனே உன்னை யாரோநினைகிறார்கள் என்று பேசி கிண்டல் செய்த விளையாட்டு அனைவருக்கும் நினைவு இருக்கும்.
          நான் இங்கு சொல்லும் கருத்துக்கள் சித்த மருத்துவர் கூறிய செய்தி. 
          

விக்கல் நிற்க ஆலோசனை 

அரை டம்ளர் தேங்காய்ப் பாலுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட விக்கல் விடும். 
நான்கு ஏலக்காய் விதைகளைத் தூளாக்கி வெற்றிலைக்குள் வைத்துத் தின்று விட விக்கல் நிற்கும். 
சிறிதளவு பெருங்காயம் எடுத்து பொரித்துத் தண்ணீர் அல்லது மோரில் குடிக்க விக்கல் தணியும். 
சிறிய சுக்கு, அச்சு வெல்லம் இரண்டையும் அரைத்துச் சுண்டைக்காய் அளவு உருட்டி வைத்துக் கொண்டு வாயில் அடக்கிச்சாற்றை மட்டும் விழுங்கி விட, விக்கல் தீரும். 
ஒரு பிடி நெற்பொரியை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் விக்கல் விடும். பால்  பிடிக்காதவர்கள்  தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் விக்கல் தீரும். 
வல்லாரை இலையை அரைத்து அரைக் கோப்பைச்சாற்றை எடுத்து அத்துடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டு வர விக்கல் நிற்கும். 
விரலி மஞ்சளைச் சுட்டு அது எரியும் போது அணைத்து அதிலிருந்து வரும் புகையை மூக்கில் உறிஞ்சினால் விக்கல் சரியாகும். 
சில கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து உள்ளேன். உணவே மருந்து, மாத்திரைகள் உண்பதை குறைப்போம்.
விலக்கல் நிற்க...
   இந்தப்  புத்தகத்தைத் தொட்டுப்படிக்கலாம்.

3 comments:

Super useful ideas thank you reading