H

Monday 27 July 2020

Abdul kalam July 27

  Abdul Kalam July 27

அப்துல் கலாம் கல்லூரி வாழ்க்கை 

        விமானியாக வேண்டும் என்ற அப்துல் கலாமின் கனவு நூலிழையில் தவறிப் போனலும் விதி அவரை உலகம் போற்றும் விஞ்ஞானியாக்கியது.
      எப்படியும் விமானியாக வேண்டும் என்பதே அப்துல் கலாமின் விருப்பம். இதற்காக விமானத் தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம் என நினைத்தார். சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில்  (M.I.T) சேர நினைத்துக் கொண்டிருந்தார்.

சகோதரி செய்த தியாகம் 

        சென்னை M.I.T யில் சேர அட்மிஷனுக்கு ஆயிரம் ரூபாய் பணம் தேவைப்பட்டது. அப்துல் கலாமின் தந்தையிடம் ஆயிரம் ரூபாய் பணம் இல்லை. எனவே கலாமின் கனவு கானல் நீராகும் நிலை உருவானது. 
         அந்த நேரத்தில் கலாமின் சகோதரி சோக்ர உதவ முன் வந்தார். ஆனால் அவரிடமும் பணமாக இல்லை. இருப்பினும் தனது கையில் அணிந்திருந்த தங்க வளையல்களையும், தங்கச் சங்கிலியையும் அடகு வைத்துக் கலாம் இடம் பணமாகத் தந்தார். அந்தப் பணத்தைக் கொண்டு அட்மிஷன்கட்டணத்தைக் கட்டினார் கலாம். 

 அப்துல்கலாமின் அக்னிச்சிறகுகள்

           அப்துல் கலாம் அவர்கள் எழுதியுள்ள 'அக்னிச்சிறகுகள்' என்ற புத்தகத்தில் உணர்ச்சி ததும்ப சகோதரி செய்த தியாகத்தைக் கூறியுள்ளார். 'எனது படிப்புக்காக எனது சகோதரி செய்த தியாகம் என்மனதைஉருக வைக்கிறது. எனது திறமைமீது அவர் வைத்திருந்த நம்பிக்கை என்னை மேலும் ஊக்கப்படுத்தியது" என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார். 

அப்துல்கலாம் பணியைத் தேர்வு செய்தல் 

       அப்துல் கலாம் அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் கல்வி பயின்று வெளியே வந்தார். இரண்டு வேலைகள் அவருக்கு ரெடியாக இருந்தது.
         எதைத்தேர்ந்தெடுப்பது என்று குழம்பினார் கலாம். தனது பிறவி விருப்பமான விமானப்படையில் சேர்ந்து விண்ணில் பறப்பதா? அல்லது பாதுகாப்புத்துறையில் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புப் பிரிவில் சேருவதா? இரண்டிலும் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் கலாமுக்கு தோன்றியது.
      குழப்பமான மனதுடன் இரண்டு வேலைகளுக்கும் விண்ணப்பம் செய்தார். சொல்லிவைதாற் போல் இரண்டு நிறுவனங்கள்
இடமிருந்து நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு வந்தது. 
        விமானப் படை வேலைக்கு டேராடூன் செல்ல வேண்டும். பாதுகாப்புத் துறை வேலைக்கு டெல்லி செல்ல வேண்டும். 

அப்துல்கலாம் அவர்கள் பங்கேற்ற நேர்முகத் தேர்வு 

      பாதுகாப்புத் துறை நேர்முகத் தேர்வு பெரிய அளவில் சவால் எதுவும் இல்லை. பாதுகாப்புத் துறை நேர்முகத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிமையாக இருந்தது.
         அதேசமயம் டேராடூனில் பெரிய சவால் காத்திருந்தது. பொதுவாக விமானப் படையில் அறிவுப்பூர்வமான வினாக்களுடன், உடல் தகுதியும் மதிப்பிடப்படும். உடல் தகுதி இல்லை என்றால் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற முடியாது. ஆனால் எப்படியும் வெற்றி பெற்று விட முடியும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தார். 

நேர்முகத் தேர்வு முடிவு 

      டேராடூனில் நடைபெற்ற விமானப்படை பணியின் நேர்முகத் தேர்வுக்கு மொத்தம் இருபத்தைந்து  (25) பேர் அழைக்கப்பட்டனர். ஆனால் அந்தப்பணிக்கு எட்டுப் பேரைத் தேர்வுச்செய்தனர். ஆனால் அப்துல் கலாமின் துரதிர்ஷ்டம் ஒன்பதாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.
    நூலிழையில் அப்துல்கலாம் அவர்களின் வாய்ப்பு கைநழுவிப் போனது. அந்த ஏமாற்றத்துடனும், வேதனையுடனும் டேராடூனில் இருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ள ரிஷிகேஷ் சென்றார். 

அப்துல்கலாமிற்கு ஆறுதல் சொன்னவர்

          ரிஷிகேஷ் சென்று கங்கையில் குளித்து விட்டு சுவாமி சிவானந்தாவை சந்தித்தார்.
          'உன்னுடைய தலைவிதி முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்டது. உனக்கு ஏற்பட்ட இந்த ஏமாற்றம் முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டு விட்டது. விமானியாக முடியாது என்பது முன்னதாகவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. வாழ்வில் ஒவ்வொன்றும் முன்னதாகவே முடிவான ஒன்று. எனவே இதைக் கண்டு வருத்தப்பட வேண்டாம். ஆனால் உனது பாதை எது என்று நான் இப்போது கூற முடியாது. நீங்கள் தேர்ந்தெடுத்த பாதையில் செல். வெற்றி கிடைக்கும்." என்று அப்துல் கலாமிற்கு ஆறுதல் கூறினார். 

பாதுகாப்புத்துறையில் பணிக்குச்சேர்தல்

    அப்துல்கலாம் விமானியாகும்கனவை விட்டு விட்டு நேராக டெல்லி சென்றார். பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்திப் பிரிவில் பணிக்குச் சேர்ந்தார். 
      உலகம் போற்றும் விஞ்ஞானியாகப் பிரகாசித்தார். இன்றைய இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி கனவுக் காணுங்கள் என்று கூறினார்.

அப்துல்கலாம் நினைவு தினம் ஜூலை  27

          அப்துல்கலாம் அவர்கள் இந்தியாவின் முதல் குடிமகன் என்ற உயரிய பதவியான குடியரசுத் தலைவராக இருந்தார். குடியரசுத் தலைவர் பதவியை விட நான் ஆசிரியர் பணி செய்ததே  எனக்கு மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.
        இந்தியாவின் அறிவியல் விஞ்ஞானி முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமைக்குரியவர். அப்துல்கலாம் அவர்கள்  2015 ஆம் ஆண்டு சூலை திங்கள்  27  ஆம் தேதி இம்மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் சென்றார். ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 27 ஆம் தேதி அப்துல்கலாம் அவர்களின் நினைவு தினம் நினைவு கூறுகிறோம். 
        அப்துல்கலாம் அவர்கள் எழுதிய அக்னிச்சிறகுகள் புத்தகம் மீீது தொட்டுப்படிக்கலாம். தள்ளுபடி விலையில் கிடைக்கும். 

No comments:

Post a Comment

Super useful ideas thank you reading