H

Sunday 19 July 2020

தஞ்சை நெற்களஞ்சியம் வித்திட்டவர் / THANJAVUR

      தஞ்சை நெற்களஞ்சியம் வித்திட்டவர் / THANJAVUR

    தமிழகத்தில் தஞ்சையில் நெல் விளையும் பூமியாக இன்று மாறியதற்கு பல அறிஞர்கள் அன்று உழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் ஆட்சியில் தமிழகம் வேளாண்மையில் முன்னேற்றமடைந்தது. பலர் ஆங்கிலேய அறிஞர்களின் உழைப்பும் மறைந்துள்ளது.
       தஞ்சையை ஆண்ட கரிகாலன் கல்லணையைக் கட்டினார். கல்லணையில் மண் படிந்து தண்ணீர் போவது தடைப்பட்டது. இதைப்பார்த்த ஆங்கிலேய கேப்டன் ஆதார் காட்டன் தஞ்சை நெற்களஞ்சியம் உருவாகத் திட்டம் திட்டம் தீட்டினார். 

தஞ்சை நெற்களஞ்சியம் ஆதார் காட்டன் 

      ஆதார் காட்டன் தனது பதினைந்து வயதில் கிழக்கிந்தியக் கம்பெனியில் ராணுவ பயிற்சியாளர் பணியில் சேர்ந்தார். ஆதார் காட்டன் சென்னைக்கு 1822 ஆம் ஆண்டு மே மாதம் பணி மாறுதல் பெற்று வந்தார். 

ஆதார் காட்டன் முதல் பணி

          சென்னை வந்த ஆதார் காட்டன் நிலவை செய்யப்பாம்பன் நீரிணை சென்றார். இன்றளவும் கனவாகவே இருக்கும் சேது சமுத்திரத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் இதுதான்.  1829 ஆம் ஆண்டு காப்டனாகப் பதவி உயர்வு பெற்று காவிரிப் பாசனப் பகுதிகளுக்குப் பொறுப்பேற்றார்.

கேப்டனும் காவிரிப் பாசனப் பணியும் 

   அவர் வாழ்வில் மிகச் சிறந்த சாதனை படைக்கத் தொடக்கமாக இந்தப் பணி இருந்தது. அப்போது கல்லணையின் முன்புறம் வண்டல் மண் படிந்து மணல் மேடாக மாறியிருந்தது. இதனால் காவிரி கழிமுகப் பகுதிகளுக்குத் தண்ணீர் போவது தடைபட்டது. இதனால் விவசாயமே கைவிட வேண்டிய சூழ்நிலை இருந்தது.
       இந்த நிலைமையை மாற்றுவதற்காகக் காப்டன் காட்டன் ஒரு திட்டம் தீட்டினார். 
      காவிரி, கொள்ளிடம் பிரியும் முக்கொம்பு என்ற இடத்தில் காவிரிக்குக் குறுக்காகவும், கொள்ளித்திற்கு குறுக்காகவும் மதகணைகள் கட்டி கல்லணையில் மணல் படிவதைத் தடுப்பது   இவரது திட்டம். 

கல்லணை பெருமையை உலகறியச் செய்தவர் 

        கல்லணையில் மணற்போக்கி அமைப்பதற்கானப் பணி 1830 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று தொடங்கியது. அப்போது தான் கல்லணை எப்படி கட்டப்பட்டது என்ற தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தார். வியந்து போன ஆதார் காட்டன் கல்லணைக்கு 'மகத்தான அணை' (Grand anicut) என்று பெயரிட்டார். இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அணையைக் கட்டி முடித்தார்.
       'ஆழம் காண இயலாத மணற்படுகையில் எப்படி அடித்தளம் அமைப்பது என்ற தொழில்நுட்பத்தை இவர்களிடமிருந்து நாம் தெரிந்து கொண்டோம். இப்பாடத்தைப் பயன்படுத்தி ஆற்றுப் பாலங்கள், அணைக்கட்டுகளைக் கட்டினோம். எனவே இந்தச் சாதனை புரிந்த பெயர் தெரியாத அந்நாளைய மக்களுக்கு நாம் பெரிதும் கடன் பட்டுள்ளோம்'. என்று கூறினார்.
        1832 ஆம் ஆண்டு முதல்  1836 ஆம் ஆண்டுக்குள் முக்கொம்பில் காவிரி ஆற்றில் மேலணை, கொள்ளிடம் மேலணை ஆகியவற்றையும் கட்டினார்.
      இதனால் கல்லணையில் வண்டல் மண் சேருவது தடுக்கப்பட்டது. காவிரி கழிமுகப் பகுதி பாசன நிலங்களுக்குத் தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.

தமிழக நெற்களஞ்சியம் 

         ஆதார் காட்டன் 'தான் கற்ற அறிவியலும் தொழில்நுட்பமும் மக்களுக்காகவே' என்ற கோட்பாட்டினை தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்த தலைசிறந்த பொறியாளர்.
      அவர் அன்று காவிரிக்குக் குறுக்காகவும், கொள்ளிடம் குறுக்காகவும் அணையைக் கட்டாவிட்டால் இன்று தஞ்சை பகுதியில் தண்ணீர் கல்லணைக்குச் செல்லாது. எனவே  தஞ்சையில் நெற்களஞ்சியம் எப்படி உருவாகி இருக்கும்?
     தஞ்சையில் நெற்களஞ்சியம் வித்திட்டவர் நினைவு கூர்வோம். இது தொட‌ர்பாக மேலும் படிக்க இதைத் தொடுங்கள்.

 படத்தின் மீது தொடுங்கள் 

No comments:

Post a Comment

Super useful ideas thank you reading