எண்ணெய் குளியல் பயன்கள்
எண்ணெய் குளியல்
நாம் சிறு குழந்தையாக இருக்கும்போது நம் பெற்றோர்கள் மற்றும் தாத்தா, பாட்டி என அனைவரும் வாரத்தில் ஒரு நாள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பார்கள். ஆனால் இன்று எண்ணெய் குளியல் அது என்னவென்று தெரியாமல் மறைந்து விட்டது.
எண்ணெய் குளியல் என்பது உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு சில மணிநேரம் கழித்து குளிப்பது தான். தீபாவளி பண்டிகை நாட்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.
நம் முன்னோர்கள் தைப்பொங்கல், ஆடி மாதம் முதல் நாள் எண்ணெய் குளியல் செய்து வந்தார்கள்.
தற்போது உள்ள சூழ்நிலை, தொழில் ஆகிய காரணங்களால் நேரமில்லை எனவும், வீண் செலவுகள் என்ற ஆதாரமற்ற கருத்துக்கள் எண்ணி நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி வந்த நல்ல பழக்கம் புறக்கணிக்கப் பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் இரவு தூங்கி மறுநாள் உடல் களைப்பு நீங்காமல் விழிக்கிறோம். இதற்குச்சிறந்த தீர்வு காண எண்ணெய் குளியல் உதவும். எண்ணெய் குளியல் குளித்தப்பிறகு உடலும் உள்ளமும் ஓய்வு பெறும். தசைகளும், முகமும் புத்துணர்ச்சி பெறும்.
எனவே இதை தினமும் செய்ய ஆயுர்வேதம் கூறுகிறது.
எண்ணெய் குளியல் செய்ய வேண்டிய எண்ணெய்
எண்ணெய் குளியல் செய்யப்பெரும்பாலும்
நல்லெண்ணெய் குளிக்கப்பிடிக்கவில்லை என்றால் தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.
குளிக்கும் முறை
தீபாவளி பண்டிகை அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் (4:30 - 6:00) மணிக்குக்குளிக்க வேண்டுமென்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.
எண்ணெய் குளியல் பெரும்பாலும் காலை 6.30 - க்குள் தொடங்கி விடுவது நல்லது. வெதுவெதுப்பான வெந்நீரில் தான் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். தலைக்குத் தேய்க்க சீயக்காய் பயன் படுத்தலாம்.
உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் கொள்ளமுடியாமல் போனலும் குளிப்பதற்கு முன்பு தலை, காது, கால் இந்த மூன்று இடங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
குளிக்கும் முன் உள்ளங்கை, உள்ளங்கால், நகங்கள், கணுக்கால் பூட்டு, குதிங்கால் சதைப் பகுதியில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளவது நல்லது.
தலையில் எண்ணெய் தேய்த்தால் நீர் கோர்த்துக்கொள்ளாது.
குளிக்கும் முன் உள்ளங்கை, உள்ளங்கால், நகங்கள், கணுக்கால் பூட்டு, குதிங்கால் சதைப் பகுதியில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளவது நல்லது.
தலையில் எண்ணெய் தேய்த்தால் நீர் கோர்த்துக்கொள்ளாது.
குளிர்ந்த நீரில் கண்டிப்பாகக் குளிக்க வேண்டாம்.
பெண்கள் செவ்வாய் கிழமை, வெள்ளி கிழமை எண்ணெய் தேய்த்துக் குளித்தால் செல்வம் பெருகும் என்பது முன்னோர்கள் நம்பிக்கை.
அவரவர் பிறந்த தினத்தில், கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டாம் என்றும் முன்னோர்கள் கூறி விட்டு சென்றார்கள்.
முன்னோர்கள் பின்பற்றிய கிழமைகள்
ஆண்கள் புதன் கிழமை குளித்தால் அறிவும், சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளித்தால் ஆயுளும் பெருகும் என்பது முன்னோர்கள் நம்பிக்கை.பெண்கள் செவ்வாய் கிழமை, வெள்ளி கிழமை எண்ணெய் தேய்த்துக் குளித்தால் செல்வம் பெருகும் என்பது முன்னோர்கள் நம்பிக்கை.
அவரவர் பிறந்த தினத்தில், கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டாம் என்றும் முன்னோர்கள் கூறி விட்டு சென்றார்கள்.
குளியல் செய்த அன்று கடைப்பிடிக்க வேண்டியவை
எளிமையான உணவுகள் உண்ண வேண்டும்.எண்ணைக் குளியல் செய்த அன்று பகலில் உறங்கக் கூடாது. கடுமையான வெய்யிலில் வேலை செய்ய வேண்டாம். குளிர்ந்த உணவுகளான ஐஸ்கிரீம், ஐஸ் தவிர்க்க வேண்டும்.
பயன்கள்
எண்ணெய் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு தணியும். உடலுக்குக்குளிர்ச்சி தரும். உடல் சூட்டைத் தணிப்பதால் உடல் சூட்டில் ஏற்படும் நோய் வராது.
தோல் வறட்சி நீங்கிவிடும். தோல்பொழிவு பெறும்.
உடல் நலம் மேம்படுத்தும் வகையில் பல்வேறு தொல்லைகள் நீங்கும்.
நமக்குச்சளி, ஜலதோஷம், மண்டைக்கனம் நீங்கி விடும்.
தலையில் வறட்சி நீங்கி முடி பொலிவு பெறும். மயிர் கால்களில் அழுக்கு தங்குவது, அதிக சூடு போன்றவை நீங்கும்.
நமக்குச்சளி, ஜலதோஷம், மண்டைக்கனம் நீங்கி விடும்.
தலையில் வறட்சி நீங்கி முடி பொலிவு பெறும். மயிர் கால்களில் அழுக்கு தங்குவது, அதிக சூடு போன்றவை நீங்கும்.
உடலின் பாரத்தைத் தாங்குவது எலும்புகள் மற்றும் பாதங்கள். இந்தப் பகுதியில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது மூளைக்கும் கண்களுக்கும் தொடர்பான நரம்புகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் கண் பார்வைத் திறன் மேம்படும். முக பொலிவு பெற Read more
எண்ணெய் தேய்த்துக் குளிப்போம்!
முன்னோர்கள் விட்டுச்சென்ற நல்லவைகளைப் பின்பற்றுவோம்!
எண்ணெய் தேய்த்துக் குளிப்போம்!
முன்னோர்கள் விட்டுச்சென்ற நல்லவைகளைப் பின்பற்றுவோம்!
No comments:
Post a Comment
Super useful ideas thank you reading