H

Wednesday 10 June 2020

முகம் பொலிவு பெற வேண்டுமா?/Face beauty tips

           முகம் பொலிவு பெற வேண்டுமா? 

முக அழகு

             நம் முகம்  அழகாக இருக்க வேண்டும் என சிறுவர் முதல் பெரியவர் வரை நினைக்கிறார்கள். முகம் அழகு பெற பேசியல் செய்பவர்கள் அதிகம் உள்ளனர்.

         முகம் அழகாக இருந்தால் தன்னிடம் ஒரு கெத்து இருக்கும். நானும் சரி நீங்களும் சரி முகம் பொலிவு பெற விரும்புவது உண்டு. உறவினர்கள் வீடுகளில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளதன்முகத்தை பொலிவுடன் வைக்க பல டிப்ஸ் இருக்கும். அதில் சிலவற்றை மட்டும் செய்முறை விளக்கம் விளக்கம் அளித்துள்ளேன். 
     ஆசையாய் ,அன்பாக வரி விடாமல் படிக்கும் வாசகர்கள் இந்த அழகு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். முகம் ஏன் அழகாக இருக்க வேண்டும்? இது பற்றி யோசித்து கொண்டு இருங்கள். 


வாழைப்பழம் &சீனி

ஒரு வாழைப்பழம் தோலைஉரித்து சதைப்பகுதி பவுலில் எடுத்து கொள்ளுங்கள். அதற்கு சமமான அளவில் இரண்டு டேபிள் ஸ்பூன் சீனி  ( வெள்ளை சர்க்கரை ) எடுக்க வேண்டும். இரண்டையும் கலந்து மிக்ஸியில் அரைத்து கொள்ளுங்கள். முகத்தை நீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்துவிடுங்கள். பின்பு வாழைப்பழம் சீனி கலவை முகத்தில் தடவி மேல் நோக்கி முகம் இருக்குமாறு வைக்கவும். பிறகு ஒரு மணிநேரம் வரை உலர விடுங்கள். முகத்தை நீர் வைத்து கழுவ வேண்டும். இப்போதுஉங்கள் முகம் பளிச்சென்று இருக்கும். இது எளிய முறை பேசியல் டிப்ஸ். வீட்டில் இருந்தே குறைந்த செலவில் செய்யலாம்

 அடிக்கடி உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகசோர்வு நீங்கிவிடும். ஒரு நாளில் பத்து முறையேனும் நீரில் கழுவி சுத்தம் செய்து வாருங்கள். 
  அவசரமாக வெளியே செல்ல வேண்டும் என்றால் குறைந்த செலவில் குறைந்த நேரத்தில் செய்யும் அற்புதமான டிப்ஸ் இதோ. 

முகப்பொலிவு டிப்ஸ் 

          சோற்றுக்கற்றாழை சிறிய தண்டு பகுதியை செடியில் இருந்து எடுத்து கொள்ளுங்கள். 
               மேல் உள்ள தோலைஉரித்து உள்ளே இருக்கிற ஐஸ் போன்ற ஜெல்லி பகுதியை எடுத்து கட்டி தயிரை கலக்கி முகத்தில் தடவி ஐந்து நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். பிறகு நீர் வைத்து முகத்தை கழுவிவிடுங்கள். 
                     உங்கள் முகத்தை பார்த்து உங்களுக்குஒரு ஆச்சரியம் ஏற்படும். 
முல்தானி மட்டி &ரோஸ்வாட்டர்
          சித்த மருத்துவ கடைகளில் கிடைக்கும் முல்தானி மட்டியை  வாங்கி வையுங்கள். சந்தனக்கடையில் ரோஸ்வாட்டர் கிடைக்கும். கிண்ணத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ்வாட்டர், இரண்டு டேபிள்ஸ்பூன் முல்தானி மட்டி சேர்த்து கலந்து பேஸ்ட் போன்ற நிலை வந்து உடன் முகத்தில் மென்மையாக தடவுங்கள். உங்கள் முகத்தில் இருந்த கரும்புள்ளிகள் நீங்கிவிடும். 

முகப்பரு நீங்க 

முகப்பருவிற்கு அகத்திக்கீரை இலையை தண்ணீர் விடாமல் சாறு பிழிந்து பஞ்சில் நனைத்து பருவின் மேல் போடவும் . சில தினங்களாக இப்படி செய்தால் பருக்கள் மறையும். 
முகத்தில் பருக்கள் முற்றிய நிலையில் இருக்கிறதா?அப்படி என்றால் உடனே வெதுவெதுப்பான அரிசிக்கஞ்சியை இரவில் தடவிக் கொள்ளுங்கள். காலை எழுந்து நீரில் கழுவினால் பருக்கள் விரைவில் மறையும். 
                          பாதாம் பருப்பை தோலைஉரித்து நன்றாக அரைத்து முட்டை  வெள்ளைக்கருவையும் சில துளிகள் எலுமிச்சை சாறு விட்டு கலந்து முகத்தில் தடவி முகம் காய்ந்த பின்பு கழுவி வந்தால் முகத்தில் பருக்கள் நீங்கும். 

முகத்தில் கண்ணைச் சுற்றி உள்ள கரு வளையம் நீங்க . . . 

தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். வடிகட்டகூடாது. இந்த தக்காளி பேஸ்ட் முகத்தில் மென்மையாக கண்களைச்சுற்றி கண்களைமூடிக் கொண்டு பூசி உலர வைத்து குளிர் நீரில் கழுவி வந்தால் கண்கருவளையம் மறையும். 

  உருளைக்கிழங்கு சிப்ஸ் போல்  வட்டமாக வெட்டி முகத்தில் ஒட்டி பத்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடுங்கள். முகத்தின் அழகு கூடும். 
          வெள்ளரிக்காய் வட்ட வடிவில் வெட்டி முகம் முழுவதும் மூடி சில மணித்துளிகள் கழித்து நீரில் கழுவவும். இருப்பினும் இரவில் ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை நன்றாக தூங்குவது முக பொலிவை அதிகரிக்கும். இரவு வேளையில் வேலை செய்யும் பழக்கத்தை விட முயற்சி செய்யுங்கள். 
"முடியும் என்றால் முயற்சி செய்யுங்கள். 
முகப்பொலிவுடன் வாழுங்கள் "

1 comment:

Super useful ideas thank you reading