H

Thursday 11 June 2020

பிரச்சனை ஏற்பட Problem reasons

          பிரச்சனை  ஏற்பட

வாழ்க்கையில் பிரச்சனை 

               என்னுடைய வாழ்க்கை முழுவதும் பிரச்சனை. நின்றால் பிரச்சனை, நடந்தால் பிரச்சனை, உட்கார்ந்தால் பிரச்சனை எங்கும் பிரச்சனை எதிலும் பிரச்சனை எனக்கு மட்டும் தான் பிரச்சனை எனப்பலரும் நினைத்துக் கொண்டு உள்ளார்கள். இது தவறான முடிவு.                           முதலில் இதைத்தூக்கி எறிந்து விட்டு பிரச்சனைகள் ஏன் ஏற்படுகிறது என்று யோசிப்போம். பிரச்சனைகளின் கூட்டு உருவம் தான் வாழ்க்கையா? அல்லது வாழ்க்கை பிரச்சனைகளின் தொகுப்பா?  இந்தக்கேள்விக்கு பதில் தேட கேள்வியே சிக்கலாக இருக்கே. 

மனித பிறப்பில் பிரச்சனை 

          நம்மில் பலர் உலகில் மனித  பிறப்பே  ஒரு பிரச்சனைதான், ஒரு சிக்கல் தானா என நினைக்கிறார்கள். 
        "கடவுளே ! மறுபடியும் என்னைப் பூமியில் பிறக்க வைத்தால் இந்த மனித பிறவியாக  மட்டும் பிறக்க வைக்காதே. இந்தப்பிறவியில் பட்ட கஷ்டம் போதும்  இனியும் தாங்க முடியாது. "என்று பல முறைச்சொல்வதும் உண்டு 
                    மனிதன் குழந்தையாகப்பிறக்கிறான். இது ஒரு சாதாரண நிகழ்ச்சி. அவன் குழந்தையாகப்பிறந்து தவழ்ந்து நடந்து மகிழ்ச்சியாக இருக்கிறான். அவன் செய்யும் செயலைப் பார்ப்பவர்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள். 
              அப்படி என்றால் எப்போது அவன் பிரச்சனையைச்சந்திக்கிறான். அவன் உலகத்தைப்புரிந்து கொள்ளும் போதும், வளரும் போதும் பிரச்சனையைச்சந்திக்கிறான். சந்தித்து ஆக வேண்டும் என நிர்பந்தம் ஏற்படுகிறது. 

பிரச்சனையை  தீர்க்க 

               பிரச்சனையை ஒதுக்கி வைத்து விட்டு அதைக்கண்டு கொள்ளாமல் மனிதன் வளர முடியுமா?  அப்படி வருபவன் அரை மனிதனாகத்தான் இருக்க முடியும். 
                 மனிதன் மற்ற எல்லா பிராணிகள் போலவேதான் பிறக்கிறான். ஆனால் மற்ற பிராணிகள் வாழ்க்கை நடத்த மனிதன் அளவு சிரமமும் சிக்கலும் படுவதில்லை. எந்த இடத்தில் இருந்தாலும் சில மணிநேரத்தில் அதைத்தன் இருப்பிடத்தைப் போலவேதான் நினைகிறது(மனிதன் தன்னோடுவளர்க்கும் பிராணிகள் தவிர)
               ஒரு காட்டிலிருந்து மற்றொரு  காட்டிற்கு பிராணிகள் தூக்கி சென்று விட்டனர். சில மணிநேரம் அலைந்து திரிந்து பின்பு பசித்த நேரத்தில் சாப்பிட்டது, தூக்கம் வருகிற போது  தூங்கியது , இனப்பெருக்கம் செய்ய ஒன்று கூடியது, இப்படி வாழ்க்கை கழித்தது. 
              அது போல மனிதனை காட்டில் விட்டால் என்னதான் நடக்கும் யோசிங்கள் நண்பர்களே, பழக்கமான இடம் இல்லாமல் பதறுவான், என்னால் இப்படியொரு கணம் கூட இருக்க முடியாது.
            நடுகாட்டில் நின்று கொண்டு ஆவி பறக்கும் காப்பியை எண்ணி ஏங்குவான்; சுடச்சுட தோசையை நினைத்துக் கண்ணீர் விடுவான் ; இட்லி சாம்பார் இல்லையா எப்படி காலைப்பொழுதுபோகும் ; வெங்காய சாம்பார், வெண்டைக்காய் பொறியல், வாசனை தூக்கும்  மட்டண் ,சிக்கன் சேர்ந்த அரிசி சாதம் நினைத்து நினைத்து உருகி விடுவான். 
                 
       அவன் முன் கடந்த வாழ்க்கை பற்றியே பேசிக் கொண்டு இருப்பதால் என்னலாபம். மற்ற பிராணிகள் இடம் இல்லாதது ஒன்று மனிதனிடம் உள்ளது. அது பகுத்தறிவு, பகுத்தறியும் சக்தி, சிந்தனை செய்யும் மனம். 
          மனிதனின் பிரச்சனைகள் அவன் பகுத்தறியும் தன்மையால் தான் ஏற்படுகிறது. யார் ஒருவர் சிந்திக்கும் திறன் படைத்த பேரறிஞராக விளங்குகிறானோ அவர் தான் அதிகம் கஷ்டம் அடைகிறான்.
         ஆனால் மனிதனாக பிறந்து சந்தர்ப்ப வசத்தாலோ வேறு எப்படியோ  பித்தனாகி  விட்ட ஒருவனை பாருங்கள். அவன் சிந்திக்கும் திறனற்ற அந்தப் பைத்தியம் மகிழ்ச்சியுடன் காலம் கடத்துவான். 
                    பகுத்தறிவுடன் பிறந்தால் பல பிரச்சினைகள் சந்திக்கிறான் என்பதை உணருகிற போது, மனிதப்பிறவியை விட மற்ற பிறவி நல்லது என்று நினைப்பது இயல்பு. 
                 மனிதன் தன்னுடைய பகுத்தறிவை கோணல்வழியில் அன்றி நேர் வழியில் செலுத்தி உலகத்தைப் புரிந்து கொள்ளும் போதுதான் மனிதன் மனிதனாக மாறுகிறார். 
                காட்டில் விடப்பட்ட பிராணிகள் பகுத்தறிவு பெற்று குழப்பம் அடையாமல் பலவிதமான சிக்கலையும் மனதில் போட்டுக்குழப்பி வாழ்க்கையை சிக்கலாக்கி அவதியுறாமல் காலம் கடத்தும். அது போல்மனிதன் நேரடி செயல் செய்தல் பிரச்சனை ஏற்படாது.
                ஒருவர் இடம் மற்றொருவர் பற்றிக் குறை கூற பிரச்சனை ஏற்படும். குறை கூறி என்ன  பயன் ? நேரம் தான் விரயம். 
                நாம் பார்க்கும் அனைவரையும் சந்தேகத்துடன்  பார்த்தால் பிரச்சனை தான். 
              பொருட்கள் வாங்கி வீட்டிற்குள் வரும் முன் அந்தப்பொருட்கள் மீது அவநம்பிக்கை வந்தால் வீட்டில் சென்று பரிசோதிக்கும் வரை மனம் டக் டக் என அடிக்கும்.இது பொருட்கள் மீது வைத்த அவ நம்பிக்கையால் வந்தது.
                நாம் பிறரிடம் உதவி எதிர்பார்த்தாலும் அவருக்கும் நம் உதவ ரெடியாக இருக்க வேண்டும். சுயநலமின்றி வாழுகிற போது பிரச்சனைகள் ஏற்படா. 
              பிறர் மீது பொறாமை கொண்டு பழிவாங்கத்துடித்தால் முதலில் நமக்கு நிம்மதி கெட்டு பிரச்சனை ஏற்படும். 
தன்னை பற்றி அறிமுகமற்ற, தன் மீது அக்கறை அற்ற எவரிடமும் சொல்வது பிரச்சனை ஏற்படுத்தும். எனவே யாரிடமும் எதுவும் சொல்லதே. 
உன்னை விடக்குறைத்து யாரையும் எடை போட்டுவிடாதே !!!
   மற்றவர்களை நம்பும் அளவுக்கு      உன்னையே நீ நம்பு  !!!

1 comment:

Super useful ideas thank you reading