விதியை மதியால் வெல்ல முடியும் / vithiyai mathiyal vella mudiyum
"நேற்றைய விட இன்று வளர்ந்தோம் என்ற நம்பிக்கையே வெற்றி". விதி எனக்குச்சதி செய்து விட்டது எனப் புலம்பிக் கொண்டே இருப்பவர்கள் பலரையும் நாம் பார்த்து இருக்கிறோம். என் தலை விதி இப்படி இருக்கு. அவன் விதி அதனால் தான் பொட்டுனு போனான். அவன் தலை விதி அவனைப்பிடித்து ஆட்டி வைக்கிறது.
விதியின் மீது பழி :
எல்லாம் விதிப்படி தான் நடக்கும் என்று நினைத்து வாழ்க்கை நடத்துபவர்கள் பலர். என் தலை விதி என்று சோகப்பட்டு முயற்சி செய்யாமல் முடங்கிக் கிடக்கின்றனர் பலர். சோம்பலில் வாழ விதியின் பழி போடுகிறார்கள்.
விதி வலியதா? மதி வலியதா?
விதி என்ன அவ்வளவு வலிமையானதா? அதை வெல்ல முடியாதா? என்று கேட்டால், விதியை நிச்சயம் வெல்ல முடியும். அது மட்டுமல்ல அவ்விதியை நமக்குச் சதமாக மாற்ற முடியும். விதியை மதியால்வெல்லும் வழிகள் இதோ
விதியை மதியால் வெல்லும் வழிகள்
விதியை வெல்ல முதல் வழி விடாமுயற்சி. அந்த விடாமுயற்சியும் தொடர் பயிற்சியும் விதியைவெல்ல முடியும். விடாமுயற்சி விதியைவிட வலியது என வள்ளுவர் கூறியுள்ளார். மிகச்சரியான முயற்சியால் அவ்விதியையும் வெல்ல முடியும் என்று திருக்குறளில் எழுதி வைத்து விட்டார். முயற்சி திருவினையாகும், முயற்சி மெய் வருத்தக்கூலி தரும் போன்ற வரிகள் நமக்குத்தெரியும்.
விதியை வெல்லும் வண்டு
மலர்த்தோட்டத்தில் தேனெடுக்க நுழைந்த வண்டு, ஒவ்வொரு மலராக உறிஞ்சிப்பார்த்தபோது, பாதி மலர்த் தோட்டமே தேனற்று மலர்ந்து இருந்தது. வண்டு சோர்ந்ததா? ஓய்ந்ததா? சொந்தஊரில் தோட்டமில்லை என்றாலும், பக்கத்து ஊருக்குப்பறந்து சென்று தேன் எடுக்கும்.
தேன் எடுக்க முன்னூறு மலர்களை உறிஞ்சி, முப்பது சதவீதத்தை உண்டு, எழுபது சதவீதத்தைத் தேன் கூட்டில் சேமித்து வைக்கும்.
இது உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும், சேமிப்புக்கு உதாரணமாகும். நம் உச்சியைப் பிடித்து உலுக்குகிறது அல்லவா.
விதியை மதியால் வென்ற மனிதர்கள்
திக்கு வாயாகவும் ஊமையாகவும் பிறந்த பல்கிவாலா, விதியை எண்ணி நோகாமல் முயன்று முயற்சிகள் பல செய்து மிகச்சிறந்த சட்ட மேதையாக விளங்கினார். அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கன் முதல் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் வரை தங்களின் ஆக்கப்பூர்வமான முயற்சி களால் விதியை வெற்றி சாதனை படைத்தனர். முதல் அடி தோல்வியா? புன்னகைசெய் மூன்றாவது அடி தோல்வியா? கலகலவெனச்சிரி
முப்பதாம் அடி தோல்வியா? நிமிர்ந்து நில் ! ஏன் என்றால் நீ முதல் முறை வென்றவனைவிட சிறந்தவன். முப்பத்து முறை முயற்சி செய்தவன் நீ மிகச்சிறந்தவன்.மனவலிமைஇல்லாதவர் களும், உழைக்காமல் சோம்பலில் மடிபவர்களும் தான் விதியைக் குறை கூறுவார்கள்.
ஆறுதலுக்காக விதி
இயலாமையை மறைக்க விதி என்று கூறிவருகின்றனர். தோல்வியை மறைப்பதற்காக மன ஆறுதல் பெற உருவாக்கப்பட்டது தான் இந்த 'விதி' என்ற வார்த்தை. தன்னுடைய விதியைப்பற்றி தினமும் குறைச்சொல்லி காலம் கடத்தினால் மோசமான வாழ்க்கையை வாழ வேண்டி வரும். நாம் ஒரு காரியத்தில் வெற்றியடைய, தோல்வியடைய விதி காரணம் அன்று.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjU1MvtSf9R53LiWlC94w_gBWxEWy2Qle52NyeR4412gxLLP4SsoK5soD7670JVz3o4QM-YDujHoeR3EUTOVFtJRM4rl73qd86vw-syrmDt0R5XdwsfyN93LMwlDHtTV9kIJ7ObVOekhso/s320/download+%25281%2529.jpeg)
விதியை வெல்லும் எண்ணங்கள்
உன்னுடைய எண்ணங்கள் தான் வெற்றி பெற தூண்டும். நமது மனநிலை பொறுத்துதான் அமையும் என்பார்கள் பெரியவர்கள். நமது மனநிலைக்கு ஏற்றபடி தான் விதியின் செயல்பாடுகள் இருக்கும். ஒருவரின் விதிக்கு அவரே எஜமான்.
" எத்தனை உயரம் இமயமலை அதில் இன்னொரு சிகரம் உனது தலை " என்ற கவிஞரின் மந்திர வரிகள் விதியை வெல்லும் டானிக்.
உறங்குபவனைக் கண்டு துடிதுடித்து; எழாததால் அடித்துக் கொண்டது கடிகாரம் !!
விதியை மதியால் வென்ற சார்லி சாப்ளின்
சப்பைக் கால்களுடன் பிறந்த சார்லி சாப்ளின் தன் விதியை நொந்து வீட்டிலிருக்கவில்லை. விதியையே தனக்கு சாதகமாக்கி வாழ்வின் லட்சியத்திற்கு ஏணிப்படிகளாக மாற்றிக்கொண்டு, பலராலும் கேலியாகப் பேசப்பட்ட தன்னுடைய நடையினாலேயே உலகின் மிகச்சிறந்த நடிகராகப் புகழ் பெற்றார். விதியை தன்னுடைய மதியால் வென்றவர் இவரே.
விதியை வெல்லும் உயிரினங்கள்
ஆறறிவுக்குக் குறைந்த உயிர்கள் கூட இயற்கை விதியை எதிர்த்துப் போராடுகிறது. பறவைகள் கூடுகட்டி வாழ்வதும், எலிகள் வலை தோன்றிக் கொள்வதும், கரையான்கள் புற்று அமைப்பதும் இயற்கை விதியை வென்ற செயல் அல்லவா.
இதைவிட பல கருத்துகளைத் தெரிந்து கொள்ளஇதைத்தொட்டுப்படியுங்கள்.
விதியென்று இருந்திருந்தால் மனிதன் இன்று வரை ஆதிமனிதனாகவே வாழ்ந்து கொண்டிருப்பான். இத்தகைய அறிவியல் ஆராய்ச்சி எப்படி தோன்றி யிருக்கும். எனவே இனி மேல் விதியின் மீது பழிப்போட்டு காலத்தை வீணாக்குவதை விடுங்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwN6J4dw5kEmSMx4j7bfWYrJVPb_hRSCXiTTAORnrl8OiVfnRZ8EZ81USbid9ghiRjJigT5zvspa-bfx0agPA5oxKpXl4mNCqfzDVOjUug0MnNn0vPCzMUKKNL1VYXsbbuPZbwlZrbuC4/s320/OIP+%252812%2529.jpeg)
விதியை மதியால் வெல்லும் வெற்றி வரிகள்
இருட்டிலும் ஒளி இருக்கும்.
விதியிலும் வழி கிடைக்கும்.
விண்மீன்கள் இருட்டில் வழிகாட்டும்.
விடாமுயற்சி விதியை வெல்லும்.
விதியைச்சவாலாக ஏற்போம் !!
சாதனைகள் பல படைப்போம் !!
இந்தப்புத்தகத்தில் பல அற்புதமான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளது.
வாங்கி படிங்க விதியை வெல்லுங்கள்.