H

Sunday 12 July 2020

Appreciate your child to boost their self - esteem / குழந்தைகளைப் பாராட்டுங்கள்.

            Appreciate your child 

குழந்தைகளைப் பாராட்டுங்கள் 

    பாராட்டு, பாராட்டுப்பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம். அதைப்படிக்க இதைத்தொட்டுப் படிக்கலாம் https://pandiarajan1988143.blogspot.com/2020/07/appreciation-to-say.html  

பாராட்டும் குழந்தை 

         பாராட்டிச்சீராட்டி வளரும் குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வளரும். 'அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவுவதில்லை' என்ற பழமொழி பள்ளிகள், வீடுகள் என்று அனைத்து மட்டத்திலும் ஊடுருவிப்பேசப்படுகிறது.                                  இப்பழமொழி தவறாகப்புரிந்து கொள்ளப்பட்டது. அடித்தலை தமது திறமையாக எண்ணிக் கொள்வோரால் பரப்பப்பட்டது தான். 
         இந்தப் பழமொழி உண்மையான அர்த்தம் கட்டங்களை அமைத்திட அஸ்திவாரம் என்னும் அடி உதவுவது போல, நிற்கவும் நடக்கவும் பாதம் என்னும் அடி உதவுவது போல என்பதுதான். 

அடிக்கப்பட்ட குழந்தை     

      சுதந்திரமாக உலாவித்திரிந்த குரங்கைப் பிடித்து அறையில் பூட்டிவிட்டால் கலாட்டா செய்யும். பாத்திரத்தில் நீரை விட்டு மூடியால் மூடிக்கொதிக்க வைக்கும் போதுஒரு கட்டத்தில் மேலே தள்ளும் நீராவி. இது போலதான் அடித்து அடக்கப்படும் குழந்தைகளின் நிலையும். அந்த அடிக்கும் நேரத்தில் அடங்கிவிடுவார்.ஆனால் மீறுவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருப்பார்.

 குழந்தைகளை அடிப்பது ஏன்? 

      படிக்க வைப்பதற்காகத் தன் குழந்தைகளை அடிக்கும் பெற்றவர்களையும் தமது மாணவ மணிகளை அடிக்கும் ஆசிரியர்களையும் நாம் பார்த்திருக்கிறோம். தாம் அடிப்பதற்கு காரணம் குழந்தைகளைத் திருத்தத்தான் என்று சொல்லிக்கொள்வர்கள். 
                    இது ஒருபுறமிருக்க உளவியல் நிபுணர்கள் கருத்து தாம் குழந்தையை விட மேலானவர்களாக, பெரியோராகக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் தான் அவர்கள் அடிப்பதற்கு காரணம்.
          அதிகாரம் செலுத்த வேண்டுமென்ற எண்ணம் சிறு வயதிலேயே மனிதனுக்குள் புகுந்து விடுகிறது. அதிகாரம் செலுத்த இவர்கள் அடியைத்தேர்வு செய்கின்றனர். இதுதான் குழந்தைகளை அடிக்க வைக்கிறது. 

உள்ளத்தை வளர்க்கும் உற்சாக டானிக் 

        வாழ்வில் தம்மை தட்டிக்கொடுப்ப வரையும், பாராட்டுபவரையும் எவரும் எப்போதும் மறப்பதில்லை. இதை இன்று நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அதுபோல் தம்மைப் பாராட்டுபவர் மீது தனி மரியாதை உண்டு. பாராட்டும் குணம் பெற்ற மனிதன் சமுதாயத்தில் மதிக்கப்படுகிறார் இதை நம் பார்க்கலாம்.
       பாராட்டு பெற வேண்டுமென விரும்புவது மனித மனம் மட்டுமல்ல.

பாராட்டுப் பெற்ற நாய்

              ஐந்தறிவு பெற்ற நாய்க்குட்டி கூட நம் தடவிக் கொடுத்தால் நம்மை எங்குபார்த்தாலும் ஓடி வந்து காலை நக்கும். நம்மைச் சுற்றி வாலாட்டி வரும். நம் பாராட்டு நாயை உற்சாகப்படுத்தி உள்ளது. 
       பக்கத்து வீட்டில் வளரும் கிளியை இரண்டு நாட்கள் தடவிக் கொடுத்தால்போதும். மூன்றாவது நாள் நீங்கள் செல்லும்போது உங்களைப் பார்த்ததும் துள்ளி தலையைக் கூண்டைவிட்டு வெளியே நீட்டிக்குதிப்பது நாம் நடைமுறையில் பார்க்கலாம். 
                         இந்தத்தடவி கொடுப்பதற்கும் பாராட்டுவதற்கும் அவ்வளவு சக்தி உள்ளது. இந்தச்சக்தி தரும் செயலை எங்கும் பயன்படுத்த வேண்டும். குறிப்பாகக் குழந்தைகளிடம் பயன் படுத்த வேண்டும். 

குழந்தை வளர்ப்பு பாராட்டு

                         குழந்தைகளைப் பாராட்டுவது அவர்களின் ஆளுமையை வளர்க்கும்.  ஆளுமையை வளர்க்கும் அற்புத டானிக் பாராட்டு தான். 
              குழந்தை வளர்ப்பதில் நம்மில் பலர் பெரிய தவறுகளைச் செய்து வருகின்றோம். விளையாடி வீடு திரும்பும் குழந்தையின் ஆடை அழுக்காக இருந்தால் அவர்களைத் திட்டுகிறோம் அல்லது அடிக்கிறோம். 
                           இப்படி செய்வதை விட்டு விட்டுக்குழந்தையின் தோலைத்தட்டி அட பரவாயில்லையே! நேற்றைவிட இன்று ஆடையில் அழுக்கு குறைவாக உள்ளதே. என்னுடைய செல்லம் தான் கெட்டிக்காரன். நாளைப் பார்ப்போம் அழுக்கு குறைவாக இருக்கும் என்று சொல்லிப்பாருங்கள்                              குழந்தையிடம் நீங்கள் விரும்பும் மாற்றத்தைப் பார்க்கலாம். என்னுடைய செல்லம் கெட்டிக்காரப்பிள்ளை என்ற பாராட்டு குழந்தைகளின் உள்ளத்தை வளர்க்கும் உற்சாக டானிக். 

பாராட்டு குழந்தைகளைச் சிந்திக்க தூண்டும்:

    குழந்தைகளிடம் இயல்பாக இருக்கக் கூடியது இரண்டு குறும்பு, சேட்டை. இன்று பெரியவர்களாக இருக்கும் நாம் கூட அன்று இதைத்தான் செய்திருப்போம்.                                                    குழந்தைகளுக்குப் பிடித்தமான துறைகளைக் கண்டறிந்து நீ பெரிய டாக்டர் ஆவாய், நீதிபதி ஆவாய், இஞ்சினியர் ஆவாய், ஓவியர் ஆவாய் ஆனால் ஒரு குறை. 

   குழந்தைகளை வீட்டில் பாராட்டு                                                                                                                                   

                   இப்படிசண்டை போட்டுக் கொண்டிருந்தால் நீ விரும்புவது போல் வரமுடியாதே என்று கவலைப்படுவதுபோல் சொல்லி பாருங்கள். உடனே குழந்தைகள் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள். நம்விருப்பம் போல் நடக்கத் தொடங்குவார்கள். 

           பள்ளியில் பாராட்டுங்கள் 

         பள்ளியில் மாணவர்கள் செய்து வரும் வீட்டுப்பாடங்களைப் பார்த்து very good, excellent, Good, super, beautiful hand writting, wonderful பாராட்டினால் அவர்கள் இன்னும் நாளைச் சிறப்பாகச் செய்து வரச் சிந்திப்பார்கள். இது நேர்மறையான சிந்தனை. 

         பள்ளியில் பேசக்கூடாது 

          அதற்கு மாறாக உனக்குப்  படிப்பு சுட்டுப்போட்டலும் வராது. உன்னிடம் நல்ல பண்புகள் கொஞ்சம்கூட இல்லை. உன்னால் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்று சொல்லி வளரும் குழந்தைகளுக்கு எதிர்மறையான மனப்பான்மை வளரும்.

 சித்திக்கத்தூண்டும் பாராட்டு                            

              நேற்றைய விட இன்று நன்றாக வாசிக்கிறாய், மற்றவனை விட அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளாய் என்று பாராட்டப் படும் குழந்தைகள் மேலே உள்ளவர்களை விட நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் வளர் கிறார்கள் என்பது உண்மை. பாராட்டுக்கள் குழந்தைகளைச் சிந்திக்க தூண்டுகிறது. 
        நாய்க்குட்டியும் கிளியும் கூடத்தட்டிக் கொடுப்பது பாராட்டு என்னும் உற்சாக டானிக் குடிக்க விரும்பும்போது குழந்தைகள் மட்டும் விரும்பாமல் இருப்பார்களா என்ன?

  பாராட்டு தன்னம்பிக்கை 

          பாராட்டு என்பது தன்னம்பிக்கை என்ற பயிரை வளரச் செய்யும் உயிர் உரம் என்பது உளவியல் நிபுணர்களின் கருத்து. பாராட்டப்படாது இகழப்படும் குழந்தைகளின் மனதில் தாழ்வு மனப்பான்மை கூடுகட்டி வாழ்ந்துவிடும். 
                        விரைவில் பெருகி நோய் கிருமிகள்போல் உடலையும் உள்ளத்தையும் உரு குலைத்து குழந்தையின் எதிர்காலம் இருண்ட காலமாகிவிடும். 
          தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்தால் தோல்வியாளர் என்ற பெயருடனே வாழ்க்கை நடத்துவார்.

ஆசிரியரின் பாராட்டு 

                          பள்ளியில் படிக்கும் மாணவ மணிகளைப் பாராட்டும் போது ஆசிரியர்கள் smart, great answer, well done,  you're super, wow! Good, Brilliant என்ற வார்த்தையைப் பயன்படுத்தி பாராட்டினால் ஆசிரியரை மாணவன் மறக்கமாட்டான். அவர் நடத்தும் பாடங்கள்மீது ஆர்வம் ஏற்பட்டு உற்சாகமாகப் படிப்பான். 

 அலுவலகத்தில் பாராட்டு 

       அலுவலகத்தில் உயர் அதிகாரி அல்லது சக ஊழியர்களிடையே ஒருவர் செய்யும் வேலையைப் பார்த்து Amazing Effort, you're sharp, creat Discovery, thanks for caring, super job, you make me smile என்ற வார்த்தையைச் சொல்லிப்பாருங்கள். அவர் இன்னும் சுறுசுறுப்பாகவும், சிறப்பாகவும் வேலையில் ஆர்வத்துடன் செயல்படுவார்.

Appreciate your child unlimited 


      பெற்றோர்களும், பெரியவர்களும் இனியாவது இலவசமாக வழங்கப்படும் உற்சாக டானிக் பாராட்டினை குழந்தைகளுக்கு
கணக்கின்றி வாரி வழங்குங்கள். குழந்தைகளின் (self esteem) தன் மதிப்பீடு boost பாராட்டு தான். 
                      பாராட்டுங்கள்! 
குழந்தைகளை அளவின்றி பாராட்டுங்கள்!!

பாராட்டுப்பெற தள்ளுபடி விலையில் 

  இது போன்ற கருத்துக்கள் புத்தக வடிவில் படிக்க இதைத்தொட்டுCheck it
 இந்தப் புத்தகத்தைத் தொட்டுப்படிக்கலாம். 

No comments:

Post a Comment

Super useful ideas thank you reading