H

Friday 14 August 2020

நீங்கள் ஆசிரியரா? /Are your teacher?

      நீங்கள் ஆசிரியரா?

ஆசிரியர் 

         ஆசிரியர் பணி அறப்பணி. அதற்கு உன்னை அர்ப்பணி. இன்று நடைமுறையில் பல ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.
         ஊதியத்திற்காகப் பணி புரிவதை விட மன ஈடுபட்டுடன் பணியாற்றி வருகின்றனர். பல்வேறு கல்வியாளர்கள் சொன்னச்சில கருத்துக்கள் படிக்கலாம் வாங்க.

ஆர். கே. நாராயணன் 

         காலையிலும், மாலையிலும் அதே மணிதான் ஒலிக்கிறது. காலையில் கசக்கும் அது பள்ளி முடியும்போது மட்டும் ஏன் இனிக்கிறது. 

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 

     நான் மாணவர்களுக்காக எதையும் கற்றுக் கொடுப்பது கிடையது. அவர்கள் கற்றுக் கொள்ளும் சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதோடு சரி.

கரோலின் டிவிக்

      ஒரு மாணவன் எதையெல்லாம் செய்தால் ஒரு ஆசிரியரான உங்களுக்குப் பிடிக்கும் என்பதைப்போல ஒரு ஆசிரியராக நீங்கள் எதையெல்லாம் செய்தால் தனக்குப் பிடிக்கும் எனக் கருத ஒரு மாணவருக்கும் உரிமை உண்டு. 

பேராசிரியர் யஷ்பால் 

           பள்ளியில் மணி ஒலித்தபின் வகுப்பறை நோக்கி நடக்கும் ஒரு ஆசிரியர் பாடத்தைக் கரைத்துக் குடித்தவராக இருக்கலாம். ஆனால் அவருக்குக் குழந்தை உளவியல் எவ்வளவு தெரியும் என்பது அதை விட முக்கியம்.
       நீங்கள் வகுப்பில் ராம் என்பவருக்கு அறிவியல் போதிக்கும் ஆசிரியர் என்றால் உங்களுக்கு அறிவியல் மட்டும் தெரிந்தால் போதாது. ராம் பற்றியும் தெரிய வேண்டும்.

ஜான் ஹோல்ட் 

         உண்மையான ஆசிரியர்கள் புத்தகத்திலிருந்து பாடம் நடத்துவதில்லை. தங்கள் இதயத்திலிருந்து நடத்துகிறார்கள். 

ஜார்ஜ் பெர்னாட்ஷா 

             எப்போது பள்ளிக்கு விடுமுறை என அறிவித்தால் குழந்தைகள் மனம் வருந்துகிறார்களோ, பள்ளி வேண்டும் என அடம் பிடிக்கிறார்களோ அப்போதுதான் உண்மையான கல்வி நடக்கிறது என்று அர்த்தம்

ஹோரஸ் மன் 

       கற்க வேண்டும் என்ற ஆர்வ உந்துதலை மாணாக்கரிடம் ஏற்படுத்தாமல் போதனை செய்ய முயலும் ஆசிரியர்கள், சூடில்லாத இரும்பினைச் சுற்றியல்கொண்டு அடிப்பவராவார்.

மிஷேல்தெ மோன்த்தேன்

      குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பதில், அவரவர் ஈடுபாட்டையும் அன்பையும் கவர்வது போல் வேறு எதுவும் இல்லை. இல்லாவிடில், புத்தகப் பொதிசுமக்கும் கழுதைகளாகத்தான் , நாம் அவர்களை ஆக்குவோம். 

அரிஸ்டாட்டில் 

       குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுவோர், பெற்றோர்களையும் விட பெருமதிப்புக்கு உரியவர்கள். பெற்றோர் உயிர் மட்டுமே அளிக்கிறார். ஆசிரியர்கள் நல்வாழ்வு வாழும் கலையைக் கற்றுத் தருகின்றனர் 

பிளேட்டோ 

       கட்டாயமாகவும் கடுமையுடனும் மாணவர்களுக்குக் கல்வி போதனை செய்யாதீர்கள். அவர்கள் மனத்தைக் கவர்ந்து கற்பதில் ஈடுபடுத்துவதற்கு தேவையான ஆற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அதிவீரராமபாண்டியர்

     எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார். 
        இங்குள்ள கருத்துக்கள் அனைத்து நான் புத்தகங்களில் படித்தவை மட்டுமே. 

No comments:

Post a Comment

Super useful ideas thank you reading