NISHTHA TRAINING
NISHTHA பயிற்சி யார் கலந்து கொள்ள வேண்டும் ?
முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நமது அரசு மூலமாக NISHTHA பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் Matric school Teacher (முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும்) கலந்து கொள்ள வேண்டும். NATIONAL INITIATIVE FOR SCHOOL HEADS AND TEACHERS HOLISTIC ADVANCEMENT என்பதன் சுருக்கம் NISHTHA என்று அழைக்கப்படுகிறது. இது தேசிய அளவில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் முழு மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு என்பது தமிழ் விளக்கம்.
NISHTHA TRAINING 2020
இப்பயிற்சி நாளை (16/10/2020) முதல் ஜனவரி15,2020 வரை ஆன்லைனில் நடைபெறும். இப்பயிற்சி 6 கட்டங்களாக நடைபெற உள்ளது.
ஒவ்வொரு கட்டமும் 15 நாட்கள் நடைபெறும் அக்டோபர் 16 முதல் 30 வரை முதல் கட்டம் நவம்பர் 1 முதல் 15 வரை இரண்டாவது கட்டம் நவம்பர் 16 முதல் 30 வரை
மூன்றாவது கட்டமும் டிசம்பர் 1 முதல் 15 வரை நான்காவது கட்டம் டிசம்பர் 16 முதல் 30 வரை
ஐந்தாவது கட்டமும் ஜனவரி 1 முதல் 15 வரை ஆறாவது கட்டம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு கட்டத்திற்கும் மூன்று course உள்ளது. ஒவ்வொரு ஆசிரியரும் மூன்று course களையும் முடிக்க வேண்டும் 15 நாட்களுக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் ஆசிரியர்கள் அந்த பயிற்சியை எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் அனைத்து ஆசிரியர்களும் ஆறு கட்டங்களையும் முழுமையாக பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பயிற்சி நடைபெறும் பொழுது நமக்கு வினா வினாடி வினா போட்டிகள் நடத்தப்படும் ஆறு கட்டங்களும் கலந்து கொண்ட பின்பு course completion certificate வழங்கப்படும். எனவே அனைத்து ஆசிரியர்களும் முழுமையாக இந்த ஆறு கட்டங்களையும் பயிற்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பயிற்சியில் கலந்து கொள்ள என்னசெய்ய வேண்டும்?
இந்த பயிற்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாக அனைத்து ஆசிரியர்களும் தங்களது மொபைல் போனில் diksha ஆப் டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளவும்.
Username, password பார்ப்பது எப்படி?
Emis வலைதளத்தில் சென்று உங்களது பள்ளியின் emis user name, Password சமர்ப்பிக்கவும்.
அடுத்து பள்ளியில் உள்ள staff details சென்று staff login details சென்று user name மற்றும் password எடுத்துக்கொண்டு அதன் மூலமாக பயிற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
NISHTHA TRAINING DIKSHA APP LOGIN செய்தல்:
இதற்கு DIKSHA APP DOWNLOA D செய்து EMIS இல் ஒவ்வொரு ஆசிரியருக்கும் வழங்கப்பட்ட எண்ணை user id யாகவும் அதற்கென கொடுக்கப்பட்ட கடவுச் சொல்லை பயன்படுத்தி படித்து Online லே கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையலிக்க வேண்டும் நீங்கள் படிக்கவேண்டிய பாடங்கள்.
October 16-30
Course 1- கலைத்திட்டம் மற்றும் உள்ளடங்கிய கல்விCourse 2 - தனியாள் - சமூகத்திற்கு உரிய பண்புகளை வளர்த்தலும்
பாதுகாப்பான, ஆரோக்கியமான பள்ளிச் சூழலை உருவாக்குதலும்
Course 3 - பள்ளிகளில் மாணவர்களின் சுகாதாரமும் நலவாழ்வும்
நவம்பர் 1-15
Course 4 கற்றல்-கற்பித்தல் செயலில் பாலின பன்முகத்தன்மையின் பொருத்தப்பாடுCourse 5 - கற்றல் கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டில் தகவல் தொடர்புத் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு
Course 6 - கலையோடு இணைந்த கற்றல்
நவம்பர் 16-30
Course 7- பள்ளி சார்ந்த மதிப்பீடுCourse 8- சூழ்நிலையியல் கற்பிக்கும் முறை
Course 9-கணிதம் கற்பிக்கும் முறை
டிசம்பர் 1-15
Course 10 - சமூக அறிவியல் கற்பிக்கும் முறை (உயர் தொடக்கநிலை)
Course 11- மொழி கற்பிக்கும் முறை
Course 12 - அறிவியல் கற்பிக்கும் முறை (உயர் தொடக்க நிலை)
டிசம்பர் 16-31
Course 13 பள்ளி தலைமைப் பண்பிற்கான கருத்துக்களும் அவற்றின் பயன்பாடுகளும்Course 14 - பள்ளிக் கல்வியில் புது முயற்சிகள்
Course 15 - பள்ளி முன்பருவக் கல்வி
2021 ஜனவரி 1-15
Course 16 - முன்பருவ தொழிற்கல்விCourse 17 - கோவிட் -19 (Covid-19) நிகழ்நிலவரம்: பள்ளிக் கல்வியில் சவால்களை எதிர்கொள்ளல்
Course 18 - உரிமைகளைப் புரிந்துகொள்ளல், குழந்தை பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப்பாதுகாத்தல் சட்டம் (POCSO Act), 2012
No comments:
Post a Comment
Super useful ideas thank you reading